அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் பசிபிக் கட்டளையகம் ஆசிய நாடுகளை மையமாகக் கொண்டு உலகின் அரைவாசிப் பகுதிக் கடற்பரப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு செயற்பட்டுவரும் இராணுவ அமைப்பாகும். இலங்கையில் பசிபிக் கட்டளையகத்தைச் சேர்ந்த இராணுவத்தின் ஒரு பகுதி நிலைகொண்டுள்ளது என்ற சில நாட்களின் முன்னர் இனியொருவில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கும் மேலாக வன்னியில் சாரிசாரியாக மனிதப்படுகொலைகள் நடைபெறுவதற்கு அமரிக்க அரசின் பசிபிக் கட்டளையகத் தலைமையகம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது. அதற்கான ஆதாரத்தை கொழும்பிலிருந்து வெளியாகும் தி ஐலன்ட் என்ற ஆங்கிலப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அதுவும் இலங்கையில் நோர்வே நாட்டின் அனுசரணையுடன் சமாதான ஒப்பந்தம் நடைபெற்ற காலமான 2002 ஆம் ஆண்டு இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. அமெரிக்க அரசின் செல்லப்பிள்ளையான நோர்வே அரசும் அதன் பிரதிநிதிகளும் ஏன் புலிகளின் உள்ளிருந்தவர்களுமே 2002 ஆம் ஆண்டிலிருந்தே இனச்வழிப்பை ராஜபக்ச பாசிஸ்டுக்களோடு இணைந்து திட்டமிட்டிருக்கலாம்.
அமெரிக்க அரசின் புதிய வெளிவிகாரக் கொள்கைக்கு ஆசிய திரும்பல் புள்ளி என்ற கருத்து ஆதாரமாக அமைந்தது. ஒபாமா நிர்வாகத்தில் வெளிவிகாரத் துறையக் கையாண்ட ஹில்லாரி கிள்ங்டன் பின்வருமாறு கூறுகிறார்:
‘ஈராக் புயல் ஓய்ந்துவிட்டது, ஆப்கானிஸ்தானிலிருந்து அமரிக்கா தனது துருப்புக்களை விலக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் அமரிக்கா ஒரு திரும்பல் புள்ளியில் நிற்கிறது. அந்த இரண்டு நாடக அரங்குகளில் மகத்தான எமது வளங்களைச் செலவு செய்துள்ளோம். எதிர்வரும் பத்து வருடங்களில் நாம் ஒழுங்குபடுத்தப்பட்டும், கம்பீரமாகவும் எமது வலுவை எங்கு பயன்படுத்துவது என்பதைத் திட்டமிட வேண்டும். அப்போது தான் அமரிக்காவின் நலன்களையும்,
பெறுமானத்தயும், தலைமையையும் நாம் உறுதிசெய்யமுடியும். எதிர்வரும் பத்தாண்டுகளில் ஆசிய பசிபிக் பிராந்தியத்துல் பொருளாதார, தந்திரோபாய, ராஜதந்திர மற்றும் ‘வேறுவழிகளில்’ எமது முதலீட்டை மேற்கொள்வது அமரிக்க ஆட்சிக் கலையைக இருக்கவேண்டும்.’
இலங்கையில் சீனாவின் கடற்பிராந்தியத் தலையீட்டை முற்றாக நிறுத்துவதற்கும் தமது இராணுவத் தலையீட்டை அதிகரிப்பதற்கும் அமெரிக்க அரசு அழுத்தங்களை வழங்கி வருகிறது. இலங்கை ஒரு பகுதியை அமெரிக்க அரசிற்கு விற்பனை செய்தும், இன்னொரு பகுதியை இந்தியா சீனா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்தும் தனது ஆட்சியை நடத்திவரும் மகிந்த ராஜபக்சவின் அரசு இன்று மீள முடியாத சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்டுள்ளது.
அமெரிக்க அரசு இலங்கையில் ராஜபக்சவை நீக்கிவிட்டு தனது ‘ஜனநாயக மனிதாபிமான’ முகத்தைக் கட்டியெழுப்பி புதிய ஆட்சியாளர் ஒருவரினூடாக இராணுவமயமாக்கலை எதிர்ப்பின்றி நடத்த முடியும். இதுவரைக்கும் அமெரிக்க அரசின் கோர முகத்தை மறைப்பதற்குத் துணைபோன புலம்பெயர் மற்றும் தமிழக பிழைப்புவாதிகளின் வாயை அடைப்பதற்கும் இது பயன்படும்.
இதனை ராஜபக்ச அரசு தெரிந்துவைத்திருப்பதாலேயே அமெfரிக்கா அனைத்து ஆதரவை வழங்கினாலும் சீனாவையும் அரவணைத்துக்கொள்கிறது. பொதுவாக உள்நாட்டு அரசியலில் கருத்துரீதியாகத் தலையிடாத சீனா பொருளாதார இராணுவத் தலையீடுகளை நடத்துவதிலேயே ஆர்வம் கொண்டுள்ளது. ஆக, ராஜபக்ச அரசு ஒரு புறத்தில் சீனாவிற்கும் மறுபுறத்தில் அமெரிக்காவிற்கும் தனது நாட்டை சுரண்ட அனுமதித்துள்ளது.
ராஜபக்ச அரசு அமெரிக்க அரசிற்கு நாட்டைச் சுரண்டுவதற்கும் இராணுவமயமாக்குவதற்கும் ஏகபோக உரிமைய வழங்குமானால் அமெரிக்க அரசு வாலைச் சுருட்டிக்கொண்டு இருந்துவிடும். புதிய ஆட்சித் தலைவரை உருவாக்குவதை விட ராஜபக்சவை வைத்திருந்தால் மட்டுமே போர்க்குற்றங்களைக் காட்டி மிரட்டமுடியும். அதுவே இன்று நடைபெற்ற்க்கொண்டிருக்கிறது.
அமெரிக்க அரசிற்கோ சீனாவிற்கு தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களிலிலோ அன்றி ஏனைய மக்களின் நலன்களிலோ எந்த அக்கறையும் கிடையாது.
போர்ப் பிராந்தியாமாக ஆசியாவை மாற்றுவதற்கு இலங்கையை ஒரு தளமாகப் பயனபடுத்துவதே அவர்களின் நோக்கம்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்ட கொத்துக்குண்டுகளை இலங்கையில் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய அமெரிக்காவின் அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே தி ஐலண்ட் நாளிதழில் கோத்தாபய ஆதரவு ஊடகவியலாளரின் ஊடாக தனது நட்பு அரசான அமெரிக்கவைக் காட்டிக்கொடுக்க இலங்கை அரசு முயற்சிக்கிறது. எது எவ்வாறாயினும் அமெரிக்கா தலையிட்ட அனைத்து நாடுகளிலும் இரத்தத்தையும் சதையையும் எலும்புத் துண்டங்களையுமே கண்டிருக்கிறோம்.
இலங்கையில் அமெரிக்காவிற்கு வழியைத் திறந்துவிட்டது இலங்கை அரசாங்கமே. இந்தவிடயத்தில் இலங்கை அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கியது புலம்பெயர் மற்றும் தென்னிந்தியப் புலிசார் அமைப்புக்களே.
தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஏகாதிபத்தியங்களுக்கும் எதிரான மக்களின் போராட்டம். சிங்கள் உழைக்கும் மக்களின் துணையோடும், உலகம் முழுவதும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஆதரவோடும் இலங்கை அரசிற்கு எதிரான பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் மீட்சிபெற வேண்டும்.
தி ஐலண்டில் வெளியான ஆதாரம்:
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=95664
இலங்கை அமெரிக்காவின் உத்வியுடன் இராணுவ மயமாவதற்கான ஆதாரம்:
அமெரிக்கா இன்று நேற்றல்ல… புலிகளை வளர்த்தவர்களும் இவர்களே…
இவர்கள் தமிழர்கட்கு… சிங்களவர்கட்கு… ஆதரவானவர்களும் இல்லை… எதிரானவர்களும் இல்லை…
இவர்களின் நோக்கமே வேறு…
இங்கு பாருங்கள்… தமிழ்நாட்டில் புதுப்படம் தயாராகிறது…
என்ன படம் என்று பாருங்கள்…http://www.youtube.com/watch?v=zMSGyI7UiKI
பிரித்தானியாவில் இருந்து இயங்கிய தனியார் இராணுவ பயிற்சி நிறுவனமொன்று, 1980-களின் முற்பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கு சிறப்பு பயிற்சிகொடுக்க பிரிட்டிஷ் அரசு அனுமதி அளித்திருந்ததாக அண்மையில் வெளியாகியுள்ள அரச ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னதாக, பிரிட்டனின் எஸ்ஏஎஸ் என்றசிறப்பு இராணுவப் படையணியின் முன்னாள் அதிகாரிகளைக் கொண்ட இந்த தனியார் பயிற்சி நிறுவனம் இந்திய இராணுவத்திற்கும் பயிற்சி அளித்திருந்ததாக ஆவணங்கள் வெளியாகியிருந்தன.
அதே காலப்பகுதியிலேயே, இந்தியாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான தாக்குதலின்போது இந்தியப் படையினர் சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருந்தமையால் இந்த ஆவணங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
அதேபோல், இலங்கை இராணுவத்துக்கும் பிரிட்டனின் முன்னாள் எஸ்ஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு பயிற்சிகளை அளித்துள்ளதாக பிாிட்டிஷ் அரசின் ஆவணங்கள் கூறுகின்றன.
இந்தியா காந்தி அதிருப்தி…
More news… & in Audio… http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/01/140117_britainsrilankahariharan.shtml
You do great Alex Ravi. Te he British SAS – Special Air Services – was the template for many things in many parts of the world.
Yes Dr, ஒரு சில நாடுகளின் ஆளுமைக்காகவும்… (இதை சிலர் பெரும் தேசிய வணிகம் என்றும்… சொல்வார்கள்) ஆயுத விற்பனைக்காகவும்… அமையாக இருக்கும் நாடுகளினுள் உட்புகுகிறார்கள்…
உதாரணத்திற்கு அமைதியாக தமக்கொருவான பாரம்பரிய கலாச்சார விழுமியங்களோடு இருந்த ஆப்கானிஸ்தானில்… கனிமன்களுக்காக சென்ற இரசிய படைகள் ஆளுமை கொள்ள… அவர்களை வெளியேற்ற அமெரிக்க அரசாங்கம் முஜாஹிதீன் என்ற புரட்சிப் படைய உருவாக்க… அப் புரட்சிப் படையோ அமெரிக்க ஆதரவுடன் ருசிய படைகளை வெளியேற்றியபின்… வளர்த்த கடா மார்பில் பாய்வது என்ற பாதிரி… அதே புரட்சிப் படைகள் ஜனாயக விழுமியங்களுக்கு எதிராகவும்… அமெரிக்காவுக்கு எதிராகவும்… தமது ஆயுதங்களை திருப்ப… அமெரிக்க படைகள் தாம் வளர்த்தவர்களையே மக்களோடு… மக்களாக… குண்டு போட்டு அழிக்க… இன்றும் தினமும் நடக்கும்… தற்கொலைக் குண்டு வெடிப்புகளும்… கொலைகளும்…
இதே மாதிரி… ஈரானிற்கு எதிராக… மேற்க்கத்திய நாடுகளினால் இரசாயன ஆயுதங்கள் உட்பட ஆயுதங்கள் விற்கப்பட்டு பலம் பொருந்திய நாடாக உருவாக்கப்பட்ட… இராக்கிற்கு எதிராக… இஸ்ரேலை குளிர்மைப் படுத்தவும்… தாம் கொடுத்த இரசாயன ஆயுதங்கள் தமக்கு எதிராக திரும்பினாலும் என்ற பயத்தினாலும்… “அவ் ஆயுதங்கள் எங்கே…?” என்று கேட்டு…அதே மேற்க்கத்திய நாடுகளின் துணையுடன் அமெரிக்கா குண்டு மாரி பொழிதளுடன்… படையெடுத்து… அமைதியாக இருந்த… அல்குவைடா போன்ற தீவிரவாதிகளின் ஊடுருவல் இல்லாமல் இருந்த… உலகின் பழமை வாய்ந்த… பல கலாச்சார பாரம்பரியங்களையும்…. பாரசீகம்…. என்ற நாகரீகத்தையும் கொண்ட பாக்தாத்தை நீர்மூலமாக்கியது மட்டுமல்லாமல்…. இன்று முழுநாட்டையும் ஓர் சர்வதேச கொலைக்களமாக மாற்றியுள்ளார்கள்…
அதே நேரம் இன்றைய நிலையில் ஓர் பகுதியினர் ஈராக்கிய நாட்டின் ஓர் பகுதியை தம் வசமாக்க… தற்போதைய ஈராக்கிய அரசாங்கம் அமெரிக்காவிடம் உதவி கேட்க்க… “இது உங்கள் பிரச்சனை… நீங்கள் தான் தீர்க்க வேண்டும்…” என்று கூறிவிட்டார்கள்…
இதுதான் இன்றைய உலக நிலை…
நாமும் விதிவிலக்கா… இந்தியா இந்திய சமுத்திரத்தில் முக்கிய பங்கு வகித்தது…
எனது பாடசாலைப் பருவத்தில் இருந்து பார்த்துக் கொண்டு வருபனவற்றை பலவற்றை மீட்டிக் கொண்டு செல்லலாம்…. In the Russian-American cold war time பாகிஸ்தானின் முன்னால் இராணுவ தளபதியும்… ஜனாதிபட்துயுமான ஜியா குள் கக் முக்கிய அமெரிக்க-பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் சென்ற விமானம் வானில் வெடித்து… சகலரும் உயிர் இழந்தது…
இந்திய இராணுவம் சீக்கிய பொற்க்கொவினுள் சென்ற பொது… இங்கிலாந்தின் Special Air Servic
e or SAS இந்திய இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க… (Golden Temple SAS claims overlooked in India – http://www.bbc.co.uk/news/world-asia-india-25741861 ) இங்கிலாந்திலும் காலிஸ்தானிய தன்னாட்சி குழுவினர் தமககேன்றொரு passport… currency கூட அச்சடித்திருந்தார்கள்…
இது உருத்திரகுமார் கூட்டம் அமெரிக்காவில் கொடி பிடிக்க… அமேரிக்கா புலியை அழிக்க உதவி செய்தது மாதிரி…
இந்கிலாந்து சென்ற ஜனாதிபதி மகிந்தவிற்கு புலிக்கூட்டம் புலிக் கொடியுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ய இங்கிலாந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதம் விற்பது மாதிரி…
இதைத்தான் கூறுவது… “தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுவது”
This is world politics…
We all trapped in world politics…
But, we can’t say “noting in our hand”
When we unite no one can’t come between us
I mean whole nation
நாம் பொறுமையாக… ஒற்றுமையாக இருந்தால் மற்றவர்கள் எப்படி உட்புகமுடியும்…?
Related links… news…
UK to investigate possible SAS role in Golden Temple attack
http://in.reuters.com/article/2014/01/14/britain-india-golden-temple-idINDEEA0D08O20140114
Sikh with Khalistan passport
https://www.google.ca/search?q=khalistan+passport&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=-_faUp-lC9S62gXijIDYBw&ved=0CC0QsAQ&biw=1280&bih=550
https://www.facebook.com/SikhLionrajKaregaKhalsaOnWorld/posts/161978973948969
எழுதிக் கொண்டே போகலாம்…
கிளிண்டன் பாகிஸ்தான் செல்லு முன் இந்தியாவில் நிற்கும் போது காஷ்மீரில் அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்டமை…
இலங்கை கிரிக்கட் வீரர்கள் சென்ற பேரூந்து பாகிஸ்தானில் வைத்து தாக்கப்பட்டமை…
ஒரே நேரத்தில் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இஸ்ரேல் பயிற்சி கொடுத்தது…
அனுராதபுர புத்த மடாலய தாக்குதல்.. ராஜீவ் கொலை…
இப்படிப் பல…
ஆட்டுவிப்பார் யாரோ… ஆடுவது யாரோ… என்றாலும் பறுவாயில்லை… இது மனித அழிவில்லவா…? ஹ்ம்ம்…
அலெக்ஸ் ரவி பிரபாகரன் போய்விட்டார் அவர் இருக்கும் வரை அவற்றை கமக்கட்டு மயிரை சொறிஞ்சியள், இப்ப உரித்திர குமாரன்டைய சொறிய வெளிகிடுறியள்,
So உங்களுக்கு சொந்தமா ஒண்டும் இல்லை போல இருக்கு. தமிழ் மக்களுக்கு ஏதேனும் புரட்சிகரமாக செய்ய முடிஞ்சால் செய்யுங்களன். இப்பத்தானே புலி பாசிசம் இல்லை, புலிகளின் ஜனநாயக மறுப்பு பற்றிய பயம் இல்லை. இந்த சூழலையுமா தாங்கள் பயன் படுத்தமுடியாது.
SAS இலங்கைக்கு பயிற்சி அளித்தது பழங்கதை 1985 – 1986 களில் நடந்த இவ்விடயம் அப்போதைய பத்திரிகைகளில் வந்த விடயம். ஒரு விடுதலை இயக்கம் தாம் நடத்திய தாக்குதலில் பலாலியில் சில வெளிநாட்டு படையினரும் கொல்லப் பட்டதாக கூறியிருந்தது.
J.R மொசாத், SAS கூலிபடைகளுடன் கூட்டு வைத்திருந்ததும் தமிழர்களை அழிக்க பேயுடனும் கூட்டு வைப்பேன் எனக் பகிரங்கமாக கூறியதும் அக்காலத்து பழைய செய்தி.
Guys. Ragavan and Alex Ravi. President Ranasighe Premadasa dealt with Velupillai Prabaharan. So, two Dravidian Assistant Superintendants of Police recruited in 1997 and 1999. That is all to it. End of the beginning and the beginning of the end.
புதிய செய்திதான் என்னவெண்டு சொல்லுங்க்களன் சாமி கேப்பம்
புதுசா சொல்றத்துக்கு ஒன்றுமில்லை.
அதான் பழைய சமையலையே சூடாக்கி பரிமாற வேண்டியிருக்கிறது.
இது கூடவா புரியாது ?
புரியாது புரியாது வாழ்கையின் ரகசியம் புரியாது முடிந்தததை நினைத்தால் பயனேது