வன்னியில் கடைசி மணித்தியாலங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். வன்னிக் களநிலவரம் குறித்து இன்று காலை வழங்கிய தகவலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் அனைத்து மக்களும் இறந்துகொண்டிருகின்றார்கள். இரண்டு கிலோமீற்றர் அகல நீள நிலப்பரப்புக்குள் கடுமையான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
எல்லா இடமும் பிணக் குவியல்கள். எல்லா மக்களையும் வெளியேறவிடாது சிறீலங்காப் படையினர் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் அனைத்து மக்களையும் ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் நேரடியாக செல்வராஜா பத்மநாதனூடாகத் தொடர்பு கொண்டு வெளியேற்றுமாறு கேட்டிருந்தோம்.
முல்லைத்தீவில் உள்ள இரண்டை வாய்வாக்கால் மற்றும் வட்டுவாகல் ஊடாக காயமடைந்துள்ள 25 ஆயிரம் மக்களை வெளியேற்று நாம் அனுமதிக்கின்றோம் அவர்களை வெளியே எடுத்துச் செல்லுமாறு கூறியிருந்தோம். அதனை அவர்கள் கேட்கவில்லை. அந்த 25 ஆயிரம் மக்களும் இறந்துவிட்டனர்.
இதனைவிட 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் இறந்துகொண்டிரும் இருக்கிறார்கள்.
இரண்டு கிலோமீற்றர் நிலத்துண்டுக்குள் அனைத்து பக்கத்திலும் இருந்து ஆட்டிலறி உட்பட உக்கிரமான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
சண்டை முனையில் நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம். இறுதிவரைக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். தொடராக நாங்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் எங்களுடைய மக்கள் இறந்துகொண்டிருகிறார்கள். அனைத்துலகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முதல்நாள் தொடக்கம் அனைத்துலக சமூகத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அந்த 25 ஆயிரம் மக்களையும் எடுக்கக் கூறி.
இப்போது 25 ஆயிரம் வரையிலான மக்கள் காயமடைந்துள்ளனர். இதனைவிட அனைவரும் ஏனையவர்கள் பதுங்கு குழிக்குள் இருக்கிறார்கள். அவர்களை பதுங்கு குழிக்குள் இருத்தி வைத்திருக்கிறோம்.
”ஐ” பதுங்கு குழிக்குள் மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். கடைசி மணித்தியாலங்கள் இடம்பெற்றுக்கொண்டிருகிறது.