மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% சதவிகித இட ஒதுக்கீட்டை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பை வன்னியர் அமைப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
ஆனால், அதே நேரம் மிகவும் பிறபடுத்தப்பட்ட பிரிவினரில் வரும் நூற்றுக்கணக்கான சாதியினர் வரவேற்று இருந்தனர். எங்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை எடுத்து வன்னியர்களுக்கு மட்டும் ஒதுக்கியது அநீதியானது எப்படி மதுரை உயர்நீதிமன்றத்தில் வாதாடி வென்றோமோ அதே போன்று உச்சநீதிமன்றத்திலும் வாதாடுவோம் என்றனர். அந்தக் குழுவினர் உச்சநீதிமன்றத்தில் ஹேவியஸ் மனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். இந்த வழக்கில் அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவுகளும் பிறப்பிக்கக் கூடாது என மனுத்தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருக்கிறது.இது தொடர்பாகப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,
‘வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்ததை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும்.உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து 10.5% இட ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் இடம் கிடைத்தவர்களுக்கான நிலை தெரியவரும். பல்வகை தொழில்நுட்ப கல்லூரி தேர்வுகள் டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கும்” என்று அவர் கூறினார்.