Wednesday, March 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

வன்னிப்போர்ப் பகுதியில் மிகப் பெரிய அளவிலுள்ள சவக்குழிகள்: சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு.

இனியொரு... by இனியொரு...
08/13/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

போருக்குப் பின்னர் இறுதிப்போர் நடந்த பகுதிக்குள் யாரையும் அனுமதிக்காமல் இரகசியமாக அந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் இலங்கை அரசாங்கம் ஈடுப்பட்டிருந்தது. புலிகளின் ஆயுதங்களை தேடி எடுப்பதாக அவ்வப்போது  செய்திகளையும் சில புகைப்படங்களையும் வெளியிட்டாலும், பல்லாயிரக்கணக்கான மக்களை கொண்று குவித்து அவர்களை அடையாளம் தெரியாத வகையில் ராட்சத புதைகுழிகளில் புதைத்தது இப்போது தெரியவந்திருக்கிறது.

 மே மாதம் அளவில் கொல்லப்பட்ட மக்கள் முள்ளிவாய்க்கால் தொடர்பாக புதிய படங்களை வெளியிட்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, வன்னியில் ஆயிரக்கணக்கான ராட்சத புதை குழிகளில் மக்கள் இவ்விதமாய் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று புகைப்படங்களையும் வெளியிட்டுருக்கிறது.

வன்னிப்போர்ப் பகுதியில் ஆயிரக்கணக்கான சவக்குழிகள் இருப்பதை இந்த செய்திப் படங்கள் காட்டுகின்றன. அந்த இடங்களில் ஆயிரக்கணக்கான  மக்கள்  உயிரோடோ அல்லது கொன்றோ புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் மூலம் இலங்கை ராணுவம் கனரக ஆயுதங்களைக் கொண்டு  மக்களை கொன்று குவித்திருப்பதும் புலனாகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில், 7000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் அதை விட மிகப் பெரிய அளவில், பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளை இலங்கைப் படைகள் கொன்று குவித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

இந்த நிலையில், வன்னிப் போர்ப் பகுதியில் மிகப் பெரிய அளவிலுள்ள சவக்குழிகளின் செய்மதிப் படங்களை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது.

மொத்தம் மூன்று பெரிய சவக்குழிகள் இதில் காணப்படுகின்றன. ஆனால் மொத்தம் 1,346 சவக்குழிகள் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி எடுக்கப்பட்ட செய்மதிப் படத்தில் எந்த சவக்குழியும் இல்லாமல் இருந்தது. ஆனால் மே 24ம் திகதி எடுக்கப்பட்ட செய்மதிப் படத்தில் 342 சவக்குழிகள் முளைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தச் சவக்குழிகள் அப்பாவி மக்கள் புதைக்கப்பட்டார்களா அல்லது விடுதலைப் புலிகள் புதைக்கப்பட்டார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

இந்த செய்மதிப் படங்களை அமெரிக்க மேம்பட்ட அறிவியல் கழகம் ஆய்வு செய்து முடிவுகளைத் தெரிவித்துள்ளது. புதிதாக கிடைத்துள்ள செய்மதிப் படங்களில் சுமார் 17 இடங்களில் மோர்ட்டர் தாக்குதல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

அத்தனையும் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிகளாகும். மேலும் இந்த இடங்கள் பாதுகாப்பு வலையப் பகுதிகளாக இலங்கை அரசாங்கததினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளாகும்.

இந்தப் பகுதிகளுக்கு வருமாறு அப்பாவி மக்களை இலங்கை அரசும், ராணுவமும்தான் அழைத்திருந்தன. ஆனால் இங்கு வந்து சேர்ந்த மக்களைத்தான் ராணுவம் கொடூரமாகக் கொன்று குவித்தது.

புதிய செய்மதிப் படங்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் நிர்வாகிகளில் ஒருவரான கிறிஸ்டோப் கோயட் கூறுகையில், இலங்கை ராணுவம் அப்பாவி மக்களை பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து அங்கு தாக்குதல் நடத்தியிருப்பது தற்போது உறுதியாகிறது என்றார்.

இந்த நிலையில், இலங்கைப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது உண்மையற்றது, ஏற்றுக் கொள்ளமுடியாதது, ஒருதலைப்பட்சமானு என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் அது போர்ப் பகுதி, விடுதலைப் புலிகள் மோர்ட்டர் தாக்குதல்களில் ஈடுபட்டு சொந்த மக்களையே கொன்றனர். அவர்கள்தான் இந்த சவக்குழிகளை தோண்டியிருக்க வேண்டும் என்றார்.

போர் முடிந்து 3 மாதங்களைத் தாண்டியும் கூட இன்னும் சர்வதேச மனித உரிமை அமைப்பினரையோ, சர்வதேச பத்திரிக்கையாளர்கள், உள்ளூர் பத்திரிக்கையாளர்களையோ, செஞ்சிலுவைச் சங்கத்தினரையோ போர் நடந்த வன்னிப் பகுதிக்கு அனுமதிக்காமல் இலங்கை அரசாங்கம் தடுத்து வருகிறது.

தற்போது கிடைத்துள்ள புகைப்படங்கள் மூலம் மிகப் பெரிய அளவிலான மனித உரிமை மீறல், மனிதாபிமான மீறல் நடவடிக்கைகள் நடந்திருப்பதாக அனுமானிக்க முடிகிறது. எனவே சுயேச்சையான விசாரணை ஒன்று சர்வதேச அளவில் நடைபெற வேண்டியது அவசியம் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

எனினும், ஏ.பீ வெளியிட்ட இந்த செய்தியை சர்வதேச மன்னிப்புச் சபை மறுத்துள்ளதாகவும் இவ்வாறான செய்தி எதனையும் வெளியிடவில்லை எனவும் அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இந்தியா: மத சுந்திரத்துக்கு எதிரான நாடுகளின் பட்டியலில்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In