தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் வேணவாக்களைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். 2009 இற்கு முன்னர் எமது தாயகத்தில் நடந்த இரண்டு (1989, 2008) மாகாண சபைத் தேர்தல்களை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் புறக்கணித்திருந்தன. 2012இல் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டது. எதிர்வரும் செப்டம்பர் 21 அன்று நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது.
தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்த நாம் 13ஆவது திருத்தத்தை தமிழர்களின் பிரச்சனைகளுக்கான ஒரு அரசியல் தீர்வல்ல என உறுதியாக கருதுகின்றோம். அது அரசியல் தீர்விற்கான ஆரம்பப் புள்ளி தானும் இல்லை என்பதே எப்போதும் எமது நிலைப்பாடு. கட்சிகளை முன்னிலைப்படுத்தும் அரசியலைக் கடந்து, தமிழர் தரப்பு அரசியல் தொடர்ந்தும், இருப்புக்கான தேசிய அபிலாiஷகள் மற்றும் கொள்கை வழிப்பட்டதாக அதனூடான விழிப்புணர்வையும் மக்கள் எழுச்சியையும் நோக்கியதாகவே இருக்க வேண்டும், அதற்காக செயற்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.
எனினும் வட மாகாணசபைத் தேர்தலில் அரசு சார்பு கட்சியொன்று ஆட்சியமைக்கின்ற சூழ்நிலையைத் தவிர்க்கும் பொருட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை இத் தேர்தலில் தெரிவிப்பது அவசியம்தான் என நாம் கருதுகின்றோம்.
தமக்கெதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களிற்கு எதிராகத் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக தமிழ் மக்கள் தேர்தல்களில் பங்குபற்ற வேண்டும் என்பதனால் நாம் மக்களை இத் தேர்தலில் பங்குபற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
எமது நிலம், பொருளாதாரம், கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு போன்ற தமிழரின் தனித் தேசத்திற்குரிய கூறுகள் யாவற்றையும் அழிக்கும் சிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இனவழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தோடு ஒத்தியங்கும் கட்சிகளைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என நாம் வேண்டுகிறோம். தொடரும் இனவழிப்பின் ஒரு அங்கமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களைக் காவு கொண்ட இந்த இனப்படுகொலை அரசிற்கோ அதனது கொள்கைகளுக்கோ வக்காலத்து வாங்கும் கட்சிகளுக்கோ மக்கள் வாக்களிப்பது வரலாற்றுத் தவறாகிவிடும்.
‘அபிவிருத்தியையே தமிழ் மக்கள் கோருகிறார்கள் உரிமைகளையல்ல’ எனக்கூறி தமிழ் மக்களது உரிமைகளை மறுதலிக்கின்ற காட்டிக்கொடுப்பு அரசியலை நாம் தொடர்ச்சியாக நிராகரித்தாக வேண்டும்.
இன்று அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படும் அபிவிருத்திகள் எல்லாமே எமது தேசத்தின் சுயாதீனமான இருப்பிற்குச் சவால் விடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. சிங்கள தேசம் தமிழ்த் தேசத்தின் பொருளாதாரத்தைக் கபளீகரம் செய்யும் வகையிலான அபிவிருத்தியே தமிழ்த் தேசத்தில் இடம்பெறுகின்றது. தமிழ் மக்களது இயலுமைகளை வளர்த்தெடுக்கும் வகையிலான, தமிழ் மக்களை பலமான சமூகமாக வளர்த்தெடுக்கும் அபிவிருத்தி இங்கு இடம்பெறவில்லை என்பதனைக் கவனிக்க வேண்டும். அரசும் அதன் ஆதரவாளர்களும் எம்மிடமிருந்து பறித்தவற்றை மீளத்தருவதற்கும், அழித்தவற்றை மீளக்கட்டித்தருவதற்கும் விலையாக தமிழரின் ஆன்மாவாகவும், இருப்புக்கு மூலாதாரமுமாக உள்ள தேசிய அபிலாiஷகளை எம்மை கைவிடச் சொல்கின்றனர்;. ஆகவே வாக்களிக்கும் தகுதியுள்ள அனைத்துத் தமிழ் மக்களும் அரசின் நிகழ்ச்சித் திட்டத்தை நிராகரிக்கும் ஆயுதமாக தமது வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவது அவசியமானதாகும்.
எங்;கள் வாக்குகளை அறிந்தவர் ஊரார், உறவினர், நண்பர் என்ற காரணுங்களுக்காகவோ அல்லது அபிவிருத்தி, அனைவரும் சமம் என்ற மாயாமாலங்களில் மயங்கியோ அரச மற்றும் அரச ஆதரவுக்கட்சிகளுக்கு வழங்கி வீணடிக்கக்கூடாது
நிரந்தர தீர்வு ஒன்றுக்கு வழியேதும் காணாமல் எம்மீது திணிக்கப்படும் தேர்தல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பில் முன் யோசனையுடனும் தூர நோக்குடனும் செயற்படுவது இற்றைக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலின் முன்னகர்வுக்கு மிகவும் அத்தியாவசியமானது. எமது உரிமைக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை தறுக்கணிக்கக் கூடிய மாகாண சபை முறைமைக்கான தேர்தல் தொடர்பில் நாம் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். குறிப்பாக மாகாண சபை முறைமைக்கும் அரசியல் தீர்வுச் செயன்முறைக்கும் இடையிலான உறவு நிலை தொடர்பில் கூட்டமைப்பு தெளிவான நிலைப்பாட்டை தமது தேர்தல் அறிக்கை மூலம் முன்வைக்காமை எமக்குக் கவலையளிக்கின்றது. குறிப்பாக சமஷ;டியை நோக்கிய நகர்வில் மாகாண சபையில் பங்குபற்றுவது முதற்படியாக இருக்கும் என்ற த.தே.கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையின் பகுதிகளை மக்களையும் சர்வதேசத்தையும் தவறாக வழிநடத்தும் ஒரு ஆபத்தான – பிழையான செய்தியாக நாம் கருதுகின்றோம்;. 13ஆம் திருத்தத்திற்குள் எமது தேசிய அரசியலை முடக்கும் தமிழ்த் தேசிய நலன்களுக்கு எதிரானவர்களின் முயற்சிகளுக்கு த.தே. கூட்டமைப்பின் இத்தகைய நிலைப்பாடு வலுச்சேர்த்து விடுமோ என அஞ்சுகின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து, பின் உங்கள் விருப்பு வாக்குகளை வழங்கும் போது தமிழ்த் தேசிய அரசியலின் பால் உண்மையான பற்றும் உறுதியும் கொண்ட த. தே. கூ. வேட்பாளர்களைத் தெரிவு செய்து வழங்குவதும் எமது மிக முக்கிய கடமையாகும்.
அமையவிருக்கும் மாகாண சபையிடம் எவ்வித நிரந்தர அதிகாரங்களும் இல்லை என்பதைத் தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தேர்தல் காலத்தில் மாகாண சபை மூலமாக செய்யக் கூடியவை தொடர்பில் வேட்பாளர்களால் முன்வைக்கப்படும் அதிகப் பிரசங்கித்தனங்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
ஆளுநரை மாற்றுவதாலோ அல்லது 13ம் திருத்தத்தில் உள்ளதாகக் கூறப்படும் அதிகாரங்களை முழுமையாகப் பெற்றுக்கொள்வதாலோ தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்திசெய்துகாள்ள முடியாது. தொடரும் இன அழிப்பிலிருந்து பாதுகாப்பேதும் பெற்றுக்கொள்ளவும் முடியாது என்ற உண்மையை நாம் மறக்கக்கூடாது.
வட மாகாண சபையில் போட்டியிடுவதற்கான நோக்கம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க மாகாண சபை ஓர் ஆரம்பப் புள்ளிதானும் இல்லை என்பதனை நிரூபிப்பதற்காகவாகவும் இருக்க வேண்டும். வடமாகாண சபையில் வெற்றி பெற்றவுடன் குறிப்பிட்ட கால வரையறையுடனான மாகாண சபைக்கான வேலைத் திட்டத்தினை வரைந்து, அதனைப் பகிரங்கமாக முன்வைத்து, அவ் வேலைத்திட்டத்தின் கணிசமான பங்கு நிறைவேற்றப்பட முடியாதவிடத்து தொடர்ந்து த.தே.கூ மாகாண சபை நடவடிக்கைகளில் பங்கெடுப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதை தமது தந்திரோபாயமாக வைத்திருக்க வேண்டும் என கூட்டமைப்பிடம் நாம் வலியுறுத்துகின்றோம்.
அதே வேளை த.தே.கூட்டமைப்பு தனக்குக் கிடைக்கும் வாக்குகளை மக்கள் ஆணையாகக் கருதி தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்கான வெளிப்படுத்தல்களை செய்யக்கூடிய ஒரு அரசியல், சமூக வெளியை உருவாக்கி, அவர்களுக்கு பக்கபலமான நிறுவனமாக இயங்க வேண்டுமென நாம் த. தே. கூட்டமைப்பிடம்; கோரி நிற்கின்றோம்.
எமது அரசியல் தீர்வுக்கான அடுத்த கட்டப் போராட்டம் மாகாண சபை முறைமையிலிருந்து பிறப்பெடுக்கமாட்டாது. தமிழ் மக்களை ஒரு பொறுப்பான அரசியல், சமூக அணி திரட்டலுக்கு உட்படுத்துவதிலும், தமிழ்த் தேசத்தின் சமூகக் கட்டுமானங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், சர்வதேச பூகோள அரசிலைச் சரியாகக் கையாளும் முறையிலுமே எமது அரசியல் தீர்வுக்கான போராட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது. த. தே. கூடட்மைப்பு இத் தேர்தலில் தமக்கு மீண்டும் தமிழ் மக்கள் வழங்கும் ஆணை தமிழர்களுக்கான இத்தகைய ஒரு அரசியல் வெளியை மாகாணசபை முறைமைக்கு வெளியில் உருவாக்குவதற்கான ஆணையென்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த வெளியை மக்களுக்கு வழங்கி மக்கள்திரள் அரசியலை கட்டி எழுப்புவதுதான் த.தே. கூட்டமைப்பின் முதன்மைப் பணியாக இருக்க முடியும்.
தமிழகமும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இன்று ஈழத்தமிழர்களின் பலமாக இருப்பவர்கள். எம்மீது உண்மையான கரிசனை உள்ளவர்களும் இவர்களுள் உள்ளார்கள்;. இன்று எமது இருப்புக்கு சிறிய அளவிலேனும் கிடைக்கின்ற பாதுகாப்புக்கு காரணமான உலகினது பார்வையை எம்மீது திருப்பி வைத்திருப்பவர்கள் இவர்கள். நாங்கள் விரும்பியும் பேச முடியாது மௌனிகளாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் போது எமது அபிலாiஷகளைப் பேசுபவர்கள் அவர்கள். அவர்களுக்கு உரிய நன்றிகளுடனும் கௌரவத்துடனும் அவர்களையும் இணைத்துக்கொண்டு எமது அரசியலைப் பலப்படுத்தக்கூடிய வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டியது த. தே. கூட்டமைப்பின் முக்கியமான பணியாகும். மாறாக இந்த உறவை பலவீனப்படுத்தக் கூடாது. இதன் மூலமே அவர்களது உண்மையான கரிசனைக்கும் எமது உரிமைக் கோரிக்கைகளுக்கும் எம்மால் வலுச்சேர்க்க முடியும் என்று நாம் நம்புகின்றோம்.
எமது தமிழ்த் தேசிய அரசியல் அபிலாiஷகளுக்கு எதிரானவர்களுக்கும் உரிமைகளைக் கேட்டதற்காக எமக்கு அவலங்களைத் தந்தவர்களுக்கும் அவர்களுக்கு துணை போனவர்களுக்கும் எதிரான உங்கள் எதிர்ப்பு வாக்குகளைப் பதிவு செய்யும் வகையில் 2013 செப்டம்பர் 21 சனிக்கிழமை அன்று நாம் அனைவரும் வாக்களிப்பில் பங்குபற்றி தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிப்போம் என உறுதி கொள்வோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைத் தேர்தலுக்கான முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் சமீபத்தில் தெரிவித் திருக்கும் கருத்து இலங்கையில் இன்று நிலைகொண்டுள்ள இன ஐக்கியத்தையும், சமாதானத்தையும் சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறதென்று புத்திஜீவிகளும், அரசியல் அவதானி களும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
எமது மக்களுக்கு தேவையில்லாத இராணுவம் எங்கள் மக்களை அடக்கி ஆள்வதற்காக இங்கு இருக்க முடியாது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் எனது கட்சிக்கு மக்கள் ஆணை கிடைத்தால் நாம் இராணுவத்தினரை எமது பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுவோம் என்று விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல அவர் இன்னுமொரு பாரதூரமான கருத்தையும் தெரிவித்திருக்கிறார். மாகாண சபைச் சட்டங்களின் அடிப்ப டையில் மாகாண சபைகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். இவ்வாறு வழங்காமல் விடுவது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் எமக்கு அதிகாரங்களை வழங்க மறுத்தால் தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலை உருவாகலாம் என்றும் தெரிவித்திருக்கும் திரு. விக்னேஸ்வரன் இதுபற்றி நாம் சர்வதேச சமூகத்திற்கு அறிவிப்போம் என்றும் கூறினார்.
இவ்விதம் ஆயுதப் போராட்டம், பயங்கரவாதம் மற்றும் பிரிவினை வாதத்திற்கு தூபமிடக்கூடிய வகையில் திரு. விக்னேஸ்வரன் அரசியல் மேடைகளில் பேசுவது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் மக்களிடையே வலுப்பெற்றுள்ள நல்லிணக்கப்பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை வாழ் தமிழ் மக்கள் இன்று சமாதானம், அபிவிருத்தி, தங்களுக்கு தேவையான வாழ்வாதாரம் மற்றும் அமைதியான வாழ்க்கையையே விரும்புகிறார்கள். மீண்டும் எல்.ரி.ரி.ஈ பயங்கர வாதிகளின் கீழ் தாங்கள் அனுபவித்த துன்பகரமான வாழ்க் கையை அவர்கள் வெறுக்கிறார்கள்.
எமக்கு சமாதானம் தான் அவசியம். சமாதானத்தை சீர்குலைக்க முயற்சி எடுக்கும் அனைவரையும் நாம் எதிரிகளாகக் கருதி விரட்டி அடிப்போம் என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் குறிப்பாக வட மாகாணத்தில் யுத்தத்தினால் கடந்த 30 ஆண்டு காலம் துன்பம் அனுபவித்த மக்கள் இருந்து வருகிறார்கள்.
இந்த மனோநிலையில் உள்ள அப்பாவி வட மாகாண தமிழ் மக்களிடம் விக்னேஸ்வரனின் இந்த வீராவேசத்துடனான பேச்சு என்றும் எடுபடப் போவதில்லை. தமிழ் மக்களுடன் ஒற்றுமையாக சகோதர பாசத்துடன் வாழவேண்டும் என்று விரும்பும் தென்னி லங்கையைச் சேர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மனதில் விக்னேஸ்வரன் தெரிவிக்கும் கொடிய கருத்துக்கள் பெரும் மனச்சஞ்சலத்தை ஏற்படுத்துவதையும் எவராலும் தடுக்க முடியாது.
சமாதானம் திரும்பிய வடமாகாணத்தில் அநாவசியமாக இராணு வத்தை தொடர்ந்தும் வைத்திருப்பது தவறு இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றும் அதிகாரம் மக்களுக்கு இருக்கிறது. இராணுவம் எங்களை அடக்கி ஆள இங்கே இருக்க முடியாது. நாம் அதிகாரத்துக்கு வந்தால் இராணுவத்தை வெளியேற்றுவோம். இதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க மறுத்தால் நாம் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சென்று முறையிடுவோம் என்று திரு. விக்னேஸ்வரன் தெரிவிக்கும் கருத்து உண்மையிலேயே சமாதானத்தை விரும்பும் மக்கள் மனதை துன்புறுத்துவதாக அமைந்துள்ளது.
யுத்தம் முடிவடைந்து 4 ஆண்டு காலத்தில் வடமாகாணம் இந்த அளவிற்கு அபிவிருத்தி அடைந்து நல்ல வளமான பிரதேசமாக மாறி இருப்பதற்கு இராணுவத்தினரின் மகத்தான பங்களிப்பே காரணமாகும். இராணுவத்தினர் முன்வந்து ரயில் பாதைகளில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை 2 ஆண்டுகளுக்குள் முற்றாக அகற்றாமல் இருந்தால் இன்று கிளிநொச்சி வரை ரயில் சேவையை நீடித்திருக்க முடியுமா?
எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுக்கு பயந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு 2009ம் ஆண்டு மே மாதத்தில் அரச தரப்புக்கு தப்பி யோடிவந்த அப்பாவி தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர்களா அபயமளித்தார்கள்?
அவர்களுக்கு குடிப்பதற்கு சுத்தமான நீரையும், உணவையும், உடைகளையும் தங்கியிருப்பதற்கு வசதியான இருப்பிடங்களையும் இராணுவத்தினர் தான் அன்று பெற்றுக் கொடுத்தார்கள். அதனால் தான் உள்ளூரில் இடம் பெயர்ந்த சுமார் 3 இலட்சம் மக்கள் பாதுகாப்பாக இருந்து இன்று மீண்டும் தங்கள் சொந்த ஊர்களில் குடியேறி நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் இன்றைய தலைவர்களின் சுயநலப் போக்கை அவதானித்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தென்னிலங்கையில் நிரந்தரமாக வாழ்ந்து கொண் டிருக்கும் சீ.வி. விக்னேஸ்வரனை தமிழ்தேசியக் கூட்டமைப்பு தங்களின் முதன்மைவேட்பாளராக தெரிவு செய்ததன் மூலம் வடபகுதி மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்கள். வடக்கில் விக்னேஸ்வரனை விட கல்விமான்களோ, அறிஞர்களோ, பண் பட்ட அரசியல் வாதிகளோ, சமூகத் தலைவர்களோ இல்லையா? என்று ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது கேள்வி எழுப்பினார்.
இதேவேளையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச் சரான நிமல் சிறிபால டி சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டைப் பிரிப்பதற்கு அடித்தளமாக அமைவதாக இருந்தால் அதனை சீராக்கும் மருந்து அரசாங் கத்திற்கு இருக்கிறது என்று கூறி இவ்வித பிரிவினைவாத முயற் சிகளை அரசாங்கம் அடக்கிவிட தயங்காது என்பதை எடுத்துரைத்துள்ளார்.
Mr. C. V. Vigneswaran do not need the Army. Major General Neil Dias once said that Lord Buddha did not have an army. He was once a Commander at Vavuniya garrison. It became par with Palaly in the past 39 years.
வரூம் ஆனா வராது…. என்பது போல அறிக்கை உள்ளது. கூத்தமைப்போ உரிமைகளை வடக்கு மாகாண சபையால் பெற்றுக்கொள்வோம், ராஜபக்சவோடு சேர்ந்த்து வேலை செய்வோம் என்று கூறிவருகிறது.நீங்களோ அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வாக்குப் போடு எஙிறீர்கள்,,,, எங்கையோ உதைக்குதே!
உண்மை இது தான், டக்கி வடக்கில் பலமாக இருப்பது மகிந்தவுக்கு விருப்பமில்லை. இந்த்த பம்மாத்து தேர்தலில் டக்கியை பலமிழக்கச் செய்து கருணா போல சுதந்த்திரக் கட்சியோடு இணைத்துக் கொள்ள மகிந்த விரும்புகிறார்.
விக்கி ஆட்சிக்கு வந்தால் தான் தமிழ் நாட்டையும் புலம் பெயர் குழுவையும் வாயை மூடுங்கள் என்று சொல்ல முடியும். சில கட்டடங்களை கட்டியே மக்களை ஏமாற்றுவார். தற்செயலாக விக்கியோ அன்றி கூட்டமைப்பில் யாராவதோ முரண்டு பிடித்தால் விஞ்ஞாபனத்தைக் காட்டி சபையை மூடிவிடுவார்கள்.
எது நடந்ததோ அது திட்டம் போட்டேநடந்தது. எதுநடக்க இருக்கிறதோ அதுவும் திட்டம் போட்டே நடக்கிறது. அல்லா… யேசுவே….
We have prepared for history subject TEST,but the teacher didn’t like it,wants us to sit the Economics multiple choice test .where choices are wrong answers for History subject and Economics as well, PLZ refer:history book.
ie: choices are limited / imposed on us. unlucky STUDENTS, have to select TNA for this test.
CM nominee Wigneswaran wants India to take part in Commonwealth Heads of Government Meeting…
While leaders of political parties in Tamil Nadu have been strident in their demand that India boycott of the Commonwealth Heads of Government Meeting(CHOGM) in Colombo in November, former Sri Lankan Supreme Court judge C V Wigneswaran, chief ministerial candidate of one of the key parties in the fray in the Northern Province council elections, has called for the country’s participation.
“I am not for this business of boycotting,” Wigneswaran told TOI in an exclusive interview in Jaffna on Thursday. Campaigning for the elections to three provincial councils – Northern, Central and North-Western – scheduled for September 21 ended on Wednesday.
“We must have the courage of conviction to tell the Sri Lankan governmentthat it has done this and this and what does it got to say… It is better you say it at the CHOGM rather than keep away,” he said. Pointing out that Tamils lost the Eastern Province due to their leaders keeping away from the election, Wigneswaran said, “I am not a politician. I don’t look at these things in the same way as politicians do”. Accusing Tamil Nadu politicians of playing with the Tamils issue by treating it “like a tennis ball”, Wigneswaran said India owed it to the Lankan Tamil community to help revive democratic institutions. “We especially need the support of south India”.
While confident that his Tamil National Alliance(TNA) would get a majority in the elections, being held after 25 years, Wigneswaran, however, feared there would be attempts by the Sri Lankan army to prevent people from casting their votes. “Our difficulty is not in getting a majority. We have to contend with the army…They would probably allow people whom they think might vote for the government and prevent the others,” he said. As a judge he had heard election petitions about “such things” happening in this part of the country, he said. “Otherwise, we are fairly confident that 80 to 90% of the people are with us”.
The former judge said there was great expectation among the people that something might come out of this election. “So, it is essential that there should be a good turnout.
Depending on the turnout, it would be possible for us to make out the wishes and aspirations of the people. We are fairly confident there would be a good turnout,” he said. On development projects being taken up by the government in the war-torn areas, Wigneswaran said, “It is mere propaganda. Roads and other infrastructure projects are just showpieces. The roads have been put up with the help of foreign collaborations and donations. They have been most beneficial for the army to keep the electorate under control.”
He said the problems of war widows and internally displaced people, housing and other issues are yet to be addressed. On criticism by the ruling alliance UPFA that the TNA’s manifesto promoted separatism, he said, “There is a misunderstanding. The government is unnecessarily creating trouble. We are for a democratic institution based on federalism within the boundaries of Sri Lanka”.
On allegations that he had glorified the LTTE and its leader Velupillai Prabhakaran and addressed him as ‘Maveeran’ (great warrior) in his election campaign, Wigneswaran said, “It is all perception. If you are going to call him a terrorist, should I also not address those who are being now hauled up in the international forum for war crimes as terrorists?” The TNA leader said Keppetipola Disawe, who was considered by the British as a dangerous criminal, has roads named after him and statues built for him. “Prabhakaran was a freedom fighter. He may have been brutal, but so is the government,” he said.
http://timesofindia.indiatimes.com/world/south-asia/Lanka-Tamil-partys-CM-nominee-wants-India-to-take-part-in-Commonwealth-Heads-of-Government-Meeting/articleshow/22785679.cms
Election results are in. Sakthi and Sooriyan F.M.
DR. SRI !! hot news/breaking news :SJV Chelvanajagam is passed away?
Thevan, Samuel James Velupillai Chelvanayam. You must have heard and seen the way Ealaventhan once pronounced iiit here at Batticaloa. 1977.
மாவட்ட ரீதியாக விபரங்கள் அறிய…
http://www.slelections.gov.lk/2013PPC/nppc.html
Alex Eravi// thank you for your links. you try your best to to link up. it would be very much appreciated if you could contribute your own views/comments or counter views. thanks again. Ie : I’m asking you to stop this linkings, and contribute your views. or atleast add your views after the link would help us to see your angles. with respect.. thevan
நன்றி!
தற்போது எனது முகநூலிலும் எனது பதிவுகளை பதிகிறேன்.
இங்கு நான் செய்திகளை வாசிக்கும் போது தொடர்புடைய செய்திகளை உடன் பகிறுகிறேன். தொடர்ந்து எனது கருத்துக்களையும் பகிர்வேன்.