மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் அரசியல் ஆலோசகருமான பசில் ராஜபக்ச இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பின்போது, வடக்குகிழக்கு மக்கள் காணி அதிகாரத்தை கோரவில்லை என்றும் அவர்கள் காணி இல்லாதவர்களுக்கே காணிகளை கோருகின்றனர் எனவும் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தருவதற்கு முன்வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல, பொலிஸ் அதிகாரங்களை வடக்குகிழக்கு மக்கள் கோரவில்லை என்றும், அவர்கள் கப்பம் மற்றும் குற்றங்களில் இருந்து தம்மை பாதுகாக்கவே பொலிஸ் பாதுகாப்பையே கோருகின்றனர் என்றும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், இந்த கருத்துக்கள் அரசாங்கத்தினுடைய கருத்துக்கள் அல்ல. தமது சொந்தக்கருத்துக்கள் என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
கப்பம் மற்றும் குற்றச் செயல்களை இலங்கை அரசும் அதன் துணைக்குழுக்களுமே ஊக்குவிக்கின்றன என்று கூற பசில் மறந்துவிட்டார்.








தாங்கள் ‘தமிழர்கள்’ என்று சொல்லவில்லைஎன்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழும் ஒரு அரசகரும மொழியாக பேச்சளவில் இருப்பதால், தமிழர்கள் என்று சும்மா சொல்வதாகவும் பசில் ராஜபக்ச கூறுவார்.