ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் 80 களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட உட்பகை காரணமாக அவ்வியக்கத்தின் இராணுவத் தளபதியான டக்ளஸ் தேவானந்த வெளியேறி உருவாக்கிய கட்சியே ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி(EPDP). தனது காலம் முழுவதும் இலங்கையில் மாறிவந்த பேரினவாதக் கட்சிகளின் துணைக் குழுக்களைப் போன்று செயற்பட்ட ஈ.பி.டி.பி இன் பிரதான எதிரி தமிழீழ விடுதலை புலிகள். பல்வேறு கொலை முயற்சிகளிலிருந்து மீண்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி பல கோடி பண வளத்தைக் கொண்டுள்ளது. புலிகளால் பாதிக்கப்பட்டவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கட்சி புலிகளின் அழிவின் பின்னர் எதிரிகளின்றி காணப்பட்டது. இலங்கை இனப்படுகொலை அரசை எதிரிகளாகக் காணாத இக்கட்சி மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கும், அழிப்பிற்கும் துணைபோனது.
எதிரிகள் அற்ற நிலையில் ஈ.பி.டிபி சிதைய ஆரம்பித்துள்ளது. தொடர்ச்சியான மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு புலிகளை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டமுடியாத ஈ.பி.டி.பி சிதைவடைந்துகொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக ஈ.பி.டி.பி இன் அலுவலகங்கள் பல மூடப்பட்டன. அதன் முக்கிய உறுப்பினரும் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் நேற்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவருமான டானியல் றெக்ஷியனை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி கொலை செய்ததாக கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதனையடுத்து, மூவரும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, கந்தசாமி கமலேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டினால் கட்சி, தலைமை, அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், அபிமானிகள் யாவருக்கும் எற்பட்டுள்ள அசௌகரியங்களையும், அவமானங்களையும் களையக்கூடிய வகையில் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.
ஜனநாயகக் கட்சியின் கேள்விக்குறியாகும் உட்கட்சி ஜனநாயகம்…
“ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து வடக்கு மாகாண சபை உறுப்பினரும் எதிர் கட்சித் தலைவருமாகிய கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டுள்ளார்” என பாரம்பரிய ஜனநாயகக் கட்சியினர் உத்தியோகபூர்வமாக… அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தில் அறிவித்துள்ளார்கள்…
இதில் எனது கேள்வி… கொலைக் குற்றம் நிரூபிக்கப் படாத நிலையில்… கொலைக் குற்றச்சாட்டின் காரணமாக…. கொலைக் குற்றவாளியாக இருக்கும்… ஜனநாயகக் கட்சியின் முன்னால் ஆயுதம் தரித்த போராளியும்… பாரம்பரிய அமைச்சர் செல்லும் இடமெல்லாம் கூட சென்று மக்கள் ஆதரவை திரட்டி… தீவகப் பொறுப்பாளராகி… யாழ்.மாவட்டப் பொறுப்பாளராகி… வடமாகாண சபையின் தலைவராக இருக்கும்… முன்னால் நீதியரசர் விக்னேஸ்வரனின் எதிர்க்கட்சித் தலைவராகி… இருக்கும் நிலையில்… ஏன் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்…?
நீதி மன்றத் தீர்பிற்கு முன்… பாரம்பரிய ஜனநாஜகக் கட்சியின்… மத்திய குழு ஏகமனதாக கமல் ஓர் கொலையாளி என்று தீர்மானித்துள்ளார்களா…?
இல்லாவிடில் துப்பாக்கி வைத்திருந்ததற்கு மட்டும் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்…?
நேற்றைய பதிவில் இவரின் நிலை பற்றி ஓர் கேள்வி எழுப்பி இருந்தேன்… ( https://inioru.com/?p=38990#comment-38901 )
கூட்டமைப்பினரோ… ஒரு பக்கத்தில் சிறீதரனையும்… சுரேஷையும்… வைத்து மறுபக்கத்தில் சுமத்திரனையும்… விக்கி மாமாவையும்… வைத்து deal or no deal அரசியல்… முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்யப் புறப்பட்டவர்கள்… அங்கிடுதத்திகளாக…
இப்போ கூட்டமைப்பின் அடுத்த stunt… UN போகப்போகிறார்களாம்…
இதற்கிடையில்… புலியும் இல்லாத நிலையில்… தீவகத்தில் இருந்து… சிறீதர் சினிமாக் கொட்டகை வரை வந்த பாரம்பரிய ஜனநாயகத்தினர் நடுவில்…
இராமநாதன் அங்கஜன் தனிய…
வரும் தேர்தல்களில்… காரைநகர் தியாகராஜா… சுழிபுரம் குமாரசூரியர்… தனியே நின்று போட்டியிட்டு வெற்றியீட்டிடியதை… நினைவில் கொண்டு… UPFA (SLFP) பாரம்பரிய ஜனநாயகத்தினருடன் கூட்டு வைப்பதா தனியாக நிற்பதா… சிந்திக்க வேண்டிய நேரம்…
பாரம்பரிய அமைச்சரும்… வீரசிங்கம் ஆனந்த சங்கரி… அஞ்சாதவாச வரதரின்… சுகு என்று கூட்டி கூட்டம்…
இப்போ கமலுக்கு ஆப்பு என்று எல்லா முயற்சியும்… ஹ்ம்ம்….
தொடர்பான பாரம்பரிய ஊடக அறிக்கை…
http://www.epdpnews.com/news.php?id=22849&ln=tamil