இலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான பிரகடனத்தை மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இதன்படி, தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாகாணசபை இணந்த பிரதேசங்களாக 2006ம் ஆண்டுவரை காணப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் ஜே.வி.பி தொடுத்த வழக்கினைத் தொடர்ந்து இது இரண்டாகப் பிளக்கப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையில் கிழக்கில் தேர்தல் நடத்திய பின்பே வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும். கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்கள் சிறுபான்மையாக்கப்பட்ட பின்னர் இது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையில் காணி மற்றும் போலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கானது. இதன் அடிப்படையில் வடக்கில் இலங்கைப் பாசிச அரசு அதிகாரத்தைக் கையகப்படுத்தினால் திட்டமிட்ட சிங்கள பௌத்த குடியேற்றங்கள் தடையின்றி நடைபெறும். கிழக்கில் அதிகாரம் அவர்களின் கைகளிலேயே உள்ளது.
1987-ம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்படி, வடக்கு-கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் கடைசியாக 1988-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
அப்போது இந்திய அரசின் அனுசரணையோடு முதலமைச்சரான வரதராஜப் பெருமாள் இந்தியாவிற்கு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் தப்பிச் செல்லும் முன்பதாக தமிழீழப் பிரகடனம் மேற்கொண்டார். அதனால் அப்போது ஆட்சியிலிருந்து அதிபர் பிரேமதாசவால் மாகாண சபை கலைக்கப்பட்டது. இந்த அரசியல் நாடகத்தின் பின்னர் மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இப்போது வடக்கில் நடைபெறும் தேர்தல் கிழக்கைப் பிளந்து நடைபெறுகிறது.
சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை அழிப்பதற்காக இலங்கையில் திணிக்கப்பட்ட ஒப்பந்தம், பாசிச அரச அதிகாரதின் கீழ எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்படுகிறது.
ஆளும் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகத் தேர்வுகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்திற்கும், அது நடத்தும் இனச்சுத்திகரிப்பிற்கும் ஆதரவாக முன்னை நாள் புலிகள் தலைமை மட்ட உறுப்பினர்கள் பலர் இலங்கை அரசால் களத்தில் இறக்கப்படுள்ளனர்.
இலங்கை அரசு தலையாட்டிகளையே தேர்தல் களத்தில் இறக்கப்படவுள்ளனர் இதில் யார் சிறந்த தலையாட்டி என்பதை நிறுனையம் செய்யப்போகும் பெரினவாத அரசின் வள்ளமை தற்போது கிழக்கு முதலமச்சர் தெரிவில் இருந்தே யாம் அறிவோம் 13 திருத்தத்தை மாத்தினால் என்ன ….மாத்தவிட்டால் தான் என்ன ….பெரினவாத அரசின் சூல்ச்சியை முறியடிப்பதாக இருந்தால் காணி அதிகாரமும்.போலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கானது.இதற்கு தகுதி எதிர் அனியிடம் இருந்தால் நல்லது .நல்ல தில் உள்ள நபர் இருக்க வேண்டும் .அவர் யார் என்பதை எதிர் அனியினர் தெரிவு செய்வார்களா என்பது…?
I heard that over the Radio last night. Thank you Mr. President. Dr. Shiranthi Bandaranaike was married to a Mr. Pradeep Kariyawasam.
Oh yeah ? You were at the wedding my friend ??