அமரர் பொன் கந்தையா
1. இலங்கையில் தமிழ்ச்சமூகம் பல சிறந்த மார்க்சிய வாதிகளை உருவாக்கியுள்ளது. ஆனாலும் அவர்களில், சென்ற எழுபத்தைந்து வருட சர்வசன வாக்குரிமைக் காலத்தில் அமரர் திரு. பொன்னம்பலம் கந்தையா அவர்கள் மட்டுமே பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அவருடைய வாழ்வையும் தொலை நோக்கினையும் இன்று நாங்கள் நினைவு கொள்கின்றோம். பொன் கந்தையா அவர்கள் ஒக்ஸ்போர்ட், கேம்பிரிச் பல்கலைக்கழகங்களின் சிறந்த முன்னாள் மாணவராக இருந்தவர். அவர் பிரித்தானிய கம்யுனிஸ்ட் கட்சியின் செயலார்வமுடைய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். உலகளாவிய கம்யுனிஸ்ட் இயக்கம் பல விதமான ஒடுக்கு முறைகள், ஏகாதிபத்தியம், உள்நாட்டுப் பெரும்பான்மையதிகாரவாதம், சாதி, இனத்துவ மற்றும் பால்நிலை சார்ந்த தாக்கங்கள் மற்றும் வறுமை கல்வியறிவின்மை போன்ற கேடுகள் ஆகியவை தொடர்பாக கடும் எதிர்ப்பினை காட்டிவந்துள்ள மரபு நீடித்திருந்தது இத்தகைய நிலைப்பாட்டிற்கு இணங்கவே பொன். கந்தையாவும் மற்றைய மார்க்சிஸ்ட்டுகளும் துணிவுடன் பல அரசியல் சமூகச் சார்பான விடயங்கள் குறித்து, சிறுபான்மையினர் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்திய இந்தியத் தமிழர் பிரசாவுரிமையும் வாக்குரிமையும் இல்லாமல் செய்யப்பட்டமை, மற்றும் சிங்களம் மட்டும் உத்தியோக மொழியாகத் திணிக்கப்பட்டது ஆகியவை உள்ளடங்கலாக, எதிர்ப்புப் போராட்டங்களை நடாத்தினர். இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்கள் நடாத்திவந்த மரபின் ஒரு சிறந்த முன்னோடியாக கந்தையா அவர்கள் விளங்கினார். பல்கலைக்கழக மாணவனாக நான் இருந்த காலத்தில் அவருடைய பல சிறந்த ஆழ்ந்த சிந்தனை தூண்டவல்ல கட்டுரைகளையும் பேச்சுக்களையும் ஆர்வத்துடன் வாசித்து ரசித்துள்ளேன். அவருடைய அறிவாற்றல் சார்ந்த திறமையும் தேர்ச்சியும் நூலகவியல், பொருளியல் மற்றும் அரசியல் துறைகளில் இருந்ததைப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தனியுறுப்பினராக, பொது நூலகங்களின் விருத்தி தொடர்பாக ஆராய்வதற்கு அன்னார் ஆணைக் குழுவொன்றுக்கு நியமிக்கப்பட்டவர். அவ்விடயங்கள் தொடர்பாக காத்திரமான, சிறந்த அறிக்கையொன்றைச் சமர்ப்பித்த பெருமையும் அவரைச் சார்ந்தது. அவர்கள் சுகயீனம் காரணமாக காலத்திற்கு முந்தியே, 45 வயதில் 1960 இல் மரணமானது ஒரு பெரும் கவலை தரும் நிகழ்வாகும். அவருடைய வாழ்க்கைத் துணைவி வேதவல்லி கந்தையா ஒரு செயலார்வம் கொண்ட சமூக சேவையாளராக, 80களின் பிற்பகுதி மறைவு வரை, தொழிலாற்றினார்.
2. பொன். கந்தையா அவர்கள் தொடர்ந்திருந்து அரசியல் ரீதியாகச் செயற்பட்டிருப்பின், அவர் நிச்சயமாக ஒரு ஆர்வம் மிக்க சார்பாளராக, வடக்கு கிழக்குக் குறித்து உள்வாரியான சுயநிர்ணய உரிமை பற்றி எடுத்துரைத்திருப்பார். அத்துடன், அறுபதுகளின் நடுப்பகுதியில் தமிழர்களின் மொழியுரிமைகள் தொடர்பாக சந்தர்ப்பவாத நிலைகொண்ட சில மாக்சிஸ்ட் கட்சிகளின் நடத்தை, பல்கலைக்கழக அனுமதியில் 1971 உடன் ஏற்பட்ட மொழி வாரியானÆ இன ரீதியான பாரபட்சமான நடவடிக்கைகள், 1972ஆம் ஆண்டில் பெரும்பான்மையதிகாரவாத அடிப்படையில் உருவாக்கப்பட்ட யாப்பில் தமிழ்த் தலைவர்கள் ஓரப்படுத்தப்பட்டமை, எழுபதுகளின் முற்பகுதியில் நிறைவேற்றிய நிலச் சீர்திருத்தங்களில் இந்திய தமிழ் உழைப்பினர் நலன்கள் புறக்கணிக்கப்பட்டமை, மற்றும் அண்மைக்காலங்களில் நடந்தேறிய பல சோக நிகழ்வுகள் ஆகிய பல விடயங்கள் தொடர்பாக பொன். கந்தையா அவர்கள் வெளிப்படையாக கடுமையான எதிர்ப்பாளரான வகிபாகத்தை எடுத்திருப்பார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இருப்பதற்கு இடமில்லை. பொன். கந்தையா அவர்களின் முன்னாள் தோழர்கள், அவருடைய நினைவு தின வைபவத்தில் சேர்ந்து கொள்வதற்கான அழைப்பினை எனக்கு விடுத்ததற்கும், இச்சந்தர்ப்பத்தில் தேசியப் பிரச்சினை பற்றிய என்னுடைய கருத்துக்களைக் கூறுமாறு கேட்டதற்கும் நன்றியினைத் தெரிவிக்க விரும்புகின்றேன். எனது உரையில், விசேடமாக வடக்குக் கிழக்கில் கருத்தொற்றுமையின் தேவை பற்றிக் கவனம் செலுத்த விரும்புகின்றேன்.
இனக்குழும அடையாளத்தின் அரசியல்
3. காலனித்துவ காலத்திலிருந்து இன்றுவரை, 1971 குடிசன மதிப்பு உள்ளடங்கலாக, கண்டிப்பிரதேச, கீழ்நாட்டுப் பிரதேச சிங்களவர்கள் தனியான, வேறுபட்ட இனத்துவப் பிரிவினராக வகுக்கப்பட்டனர். முதல் முறையாக 1981 குடிசன மதிப்பீடு இவ்விரு வேறுபாடுகளையும் நீக்கி ஒன்றாக, அதாவது, சிங்களவர்கள் என இணைத்தது. கண்டி, கீழ் நாட்டு வேறுபாடு என்பது நாட்டினை சுதந்திரகாலம் தொடக்கம் வரை மற்றும் 1950கள் வரை நிருவாகம் செய்வதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உதாரணமாக, அரசாங்க வருவாய்கள் பெறும் பிரிவுகள் (சநஎநரெந னiஎளைழைளெ) பின்வருமாறு பாகுபடுத்தப்பட்டன: கண்டி, கீழ்நாட்டு அல்லது தமிழ்É அவை மூன்று வேவ்வேறான அரசாங்க வருவாய் தொடர்பான வருவாய்ப் பிரிவுகளின் உத்தியோகத்தர்கள், அதாவது, கண்டிசார்ந்த, கீழ்நாடுசார்ந்த மற்றும் தமிழ் சார்ந்த என்ற சேவையின் ஆளணியினராக ஈடுபடுத்தப்பட்டனர். (தமிழ் என்பது முஸ்லிம், மற்றும் ஊகிப்பாக இந்தியத் தமிழர் என்பவர்களையும் உள்ளடக்கியது) அண்மைத் தசாப்தங்களில், உத்தியோக பூர்வமான, கண்டிசிங்களவர், கீழ்நாட்டுச் சிங்களவர் என்ற வேறுபடுத்தல் மறைந்து விட்டதாகத் தெரிகின்றதுÉ ஆனால் இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், மற்றும் இந்தியத் தமிழர் என்ற வேறுபடுத்தல் இன்னும் கூர்முனைப்புடையதாக இருக்கின்றது.
4. தற்பொழுது, இலங்கைச் சோனகர் மற்றும் இந்தியத் தமிழர் ஆகியோர் இனத்துவ ரீதியில் இலங்கைத் தமிழர்களிலிருந்து வேறுபட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் தமிழர்களாகக் கருதப்படுகின்றனர். (உ10ம் இந்தியத் தலைவர் அப்துல்கலாம் ஒரு முஸ்லீம் தமிழர் என வகைப்படுத்தப் பட்டுள்ளார்) ஆனால், வௌ;வேறு காரணங்களினால் இங்கு அவ்வாறில்லைÉ இவ்வேறுபடுத்தல் தொடர்ந்து செல்ல முடிகின்றது. என்னுடைய எதிர்பார்ப்பு, இந்தியத் தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் காலப்போக்கில் ஒன்றாக இணைந்து கொள்ளலாம்É ஆனால் அது கட்டாயப்படுத்தக்கூடியதல்ல. எப்படியாயிருப்பினும், இம்மூன்று இனக்குழுமங்கள் ஒரு பொதுவான, அதாவது, தமிழ், மொழியினால் இணைக்கப்படுகின்றனர். அத்துடன் இதற்கு மேலும் ஆதாரமாக இருக்கும் இன்னொரு விடயம், இவ்வினத்துவப் பிரிவினர் அதிக இனப் பாரபட்ச அனுபவங்களுக்கு உட்படுத்தப்பட்டமை என்பது. வடக்குக் கிழக்கு பிரதேசத்தில் கருத்தொருமைப்பாட்டிற்கான தேவை எழுகின்றதுÉ அத்தோடு ஒத்திசைவான உறவுகளும் இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களிடையே அவசியமாகின்றன.
சுதந்திரத்தின் பின்னரான அரசியல் மாற்றங்கள்
5. இலங்கையின் இனத்துவ மோதலின் மூலக்காரணம் சுதந்திரத்திற்கு அண்மையான காலத்தில், இந்தியத் தமிழர்களின் பிரசாவுரிமையும் வாக்குரிமைகளும் மறுக்கப்பட்டதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து கண்டுகொள்ள முடிகின்றது. அநேகமான இலங்கைத் தமிழ், மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இச்சட்டவாக்கத்தில் உடந்தையாக இருந்துள்ளனர் சிங்கள மார்க்சிஸ்ட்டுகள் இந்தியத் தமிழர்களுக்கு ஆதரவளித்தனர். இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம்களும் இந்தியத் தமிழர்களுடன் மிகக் குறைந்த இன உறவுகளைக் கொண்டிருந்தனர். இ;ந்தியத் தமிழர்கள், தாம் நம்பியிருந்தவர்கள், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் ஏமாற்றிவிட்டனர் அல்லது கைவிட்டனர் எனக் கருதினர். இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும் இந்தியத் தமிழர்களின் முழுமையான, அவர்கள் எங்கு வசிப்பினும், விடுதலையினை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
6. 1956இல் சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக சட்டரீதியான அந்தஸ்த்தைப் பெற்ற பொழுது அதற்கான எதிர்ப்பியக்கம் இரண்டரை தசாப்தமாக பாராளுமன்றத்தில் பிரதிநிதிப்படுத்தாது இருந்த இந்தியத் தமிழர்களின் அரசியல் வலுவிழப்பினால் பலவீனமடைந்தது. வடக்குக்கும் கிழக்கிற்கும் வெளியே இருந்த அநேகமான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்த பொழுதிலும், சிங்களம் மட்டும் உத்தியோக மொழிச் சட்டவாக்கத்திற்கு ஆதரவு வழங்கினர். இது தமிழர்களிடையே முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வினை அதிகமாக விளைவித்தது. இதனைத் தொடர்ந்து சம்ஷ;டிக் கட்சியின் தலைமைத்துவத்தினால் காலம் கடந்து தமிழ்பேசும் மக்களிடையே ஒரு கூட்டிணைவு முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. பல முஸ்லிம் வேட்பாளர்கள் கிழக்குப் பாராளுமன்றத் தொகுதிகளில் சமஷ;டிக் கட்சியின் கீழ் போட்டியிட்டுத் தெரிவுசெய்யப்பட்டனர். ஆனாலும் பல காரணங்களினால், அரசின் பிரித்து ஆட்சி செய்யும் முயற்சிகள் உள்ளடங்கலாக இக் கூட்டிணைவு முயற்சி பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த முடியவில்லை, அது இறுதியில் செயலற்ற குறைந்த தாக்கத்தினையே ஏற்படுத்த முடிந்ததுÉ விரைவில் அது தோல்வியில் சென்றடைந்தது.
7. வடகிழக்கில் உள்ள முஸ்லிம்களும் இலங்கைத் தமிழர்களைப்போல பிரதான விடயங்களாகிய, நிருவாக மொழி, பிரதேசரீதியான பிரச்சினைகளான குடியேற்றம், உள்ளூர் வளங்களின் மீது சுயாதீன உரிமையும் கட்டுப்பாடு என்பவற்றை மிக்க அக்கறையுடன் நோக்கியுள்ளனர். ஆனாலும் இத்தகைய கரிசனைகள் தொடர்பாக தெற்கிலுள்ள முஸ்லிம் தேசிய தலைவர்களினால் போதியளவுக்கு எடுத்துரைக்கப்படவில்லை. தொண்ணூறுகளில் மட்டுமே இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் யு.ர்.ஆ. அஷ;றஃபின் தலைமையில் அமைக்கப்பட்டது. முதன் முறையாக, ஒரு முஸ்லிம் கட்சி 90களில் வடகிழக்கினைத் தழுவி மிகவும் கவர்ச்சியுடைய அதே பிரதேசத்தின் ஒருவரின் அரசியல் தலைமைத்துவத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது மிகவும் காலங் கடந்து நிறுவப்பட்டது. இதற்கிடையே, மோதல் சிங்கள – தமிழ் என்ற இரு மூல நிலைப்பாட்டின் அடிப்படையில் விருத்தியடைந்தது உள்ளூர் போர் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் அரசுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியாக வெடித்தது. (ஆரம்பத்தில் மற்றைய தமிழ் தீவிரவாதப் பிரிவினரின் பங்களிப்பும் கிடைத்தது) அரசுக்கும் எல்.ரீ.ரீ.ஈயினருக்குமிடையே சமாதானப் பேச்சுக்கள் (சனாதிபதி பிரேமதாசாவின் கீழ்) ஆரம்பித்த போதும் அவை முறிவடைந்தன. ஆவை மீண்டும் ஆரம்பித்த பொழுது (சனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்கவினால்) இரு கட்சிகளுக்கிடையேயான பேச்சுக்களாகவே தொடர்ந்தன, மீண்;டும் அவை பயனளிக்கவில்லை.
அதிகாரப் பரவலாக்கலின் அலகு
8. இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்தியத் தமிழர்கள் ஆகியோரிடையே, அவர்களின் வரலாறு மற்றும் அபிலாiஷகள் தொடர்பாக முக்கியமான வேறுபாடுகள் காணப்பட்டுள்ளனÉ இவை குறிப்பாக பிரதேச நோக்குத் தொடர்பாக எழுந்துள்ளன. 2001 இன் நடுப்பகுதியில் மாவட்ட செயலாளர்கள் பிரிவுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற புள்ளிவிபரங்கள் காட்டுவது, வட- கிழக்கின் மொத்த தமிழர்களின் குடிசனத் தொகை: 1,980,400É வடகிழக்குக்கு வெளியேயுள்ள தமிழர்களின் குடிசனத் தொகை: 620,000 (குடிசன மதிப்பு 2001) குடிசனத் தொகையில் ஏறத்தாழ 75 சதவீதத்தினர் வட கிழக்கில் குடியிருப்பவர்களாகக் கருதமுடிகின்றது. இதற்கு வெளியேயுள்ள 620,000 தொகையினர் மற்றும் 800,000 வெளிவாரியாக இடம்பெயர்ந்த தொகையினர் ஆகியோரில் பெருமளவினர் தங்களுடைய ஆரம்ப இடமாகவும் அதற்குச் சேர்ந்தவர்களாகவும் வட – கிழக்கினையே – அவர்கள் இங்கு திரும்பவும் வருபவர்கள் அல்லது வராமல் விடுபவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் – இனங்கண்டுகொள்வார்கள். பெருந்தோட்டங்களில் இந்தியத் தமிழர்கள் வேலைசெய்தவர்களின் வழித்தோன்றல்களாக பெரும்பாலும் வந்திருப்பவர்கள்É ஆனாலும் அவர்களில் சிலர் நிலத்திற்குச் சொந்தமானவர்களாகவும் அல்லது பெருந்தோட்டப் பிரதேசங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களாகவும், வேறும் சிலர் இப்பிரதேசங்களில் எதையாவது தங்களுடைய தொடக்க இடமாகக் கருதியுள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர். இலங்கைச் சோனகர்களின் நிலைமையைக் கவனிக்குமிடத்தில் பிரதேச நோக்கு என்பது கூடுதலாகப் பரந்துள்ள நிலையில், ஏறத்தாழ நாடுமுழுவதையும் அடக்குகின்றது. இலங்கைச் சோனகர்களின் குடிசனத்தில் மூன்றில் ஒரு பகுதியினரே வட – கிழக்கில் வசிக்கின்றனர்É மேலும், அந்த மூன்றில் ஒன்றின் மிகச் சிறிய அளவினரே, அம்பாறை மாவட்டத்திலிருந்து பிரித்தெடுத்த ஒன்றாகச் சேர்ந்துள்ளதான ஒரு முஸ்லிம் பெரும்பான்மை தென் கிழக்குப் பிரதேசம் என்பதில் சேரமுடியும், இதில் அதிகளவான இலங்கைச் சோனர்கள் குவிந்து வாழ்கின்ற பிரதேசங்களாகிய காத்தான்குடி, கின்னியா மற்றும் ஏறாவூர், கிழக்கிலும், முசலி மற்றும் எருக்கலம்பிட்டி வடக்கிலும், விலக்கப்படமுடிகின்றது. மொத்தமாக, இலங்கைச் சோனகரின் குடித்தொகையில் எட்டில் ஒன்று (1Æ8) மட்டும் அத்தகைய ஆலோசனை கூறப்பட்ட தென்கிழக்குப் பிரதேசத்தில் வசிப்பவர்களாக இருக்க முடியும்.
9. பொன்டிச்சேரி மாதிரியம் என்பதைத் தழுவிய ஒரு மாற்று ஒழுங்கு, முஸ்லிம்களுக்கான ஒரு சுய ஆட்சிப் பிரதேசமாக, புவிச்சரித்திர ரீதியில் தொடர்சியற்ற, அனேகமாகத் தனியொரு இனத்தைக் கொண்ட அலகு பற்றிச் சிந்திக்க முடியும். ஆனால் இதனை நிருவாகிப்பது சிக்கல் மிகுந்ததாக இருக்கும்É குறிப்பாக, இனத்துவப் பதட்ட நிலை ஏற்படும் காலங்களில், இனத்துவ ரீதியான எல்லைகளைக் கடந்து செல்லுதல் பிரச்சினைக்குரியதாக இருக்கலாம். முழுவதும் தனியொரு இனக்குழும அலகு இனங்களுக்கிடையே ஒத்திசைவினை வளர்ப்பதற்கு உதவியாக இருக்காது. பொன்டிச்சேரி எவ்வளவுக்கு வளம் பெறமுடிந்தது என்பது, அங்கு இனத்துவரீதியில் பல இடங்களில் பரந்துள்ள சிறு அலகுகளிடையே இணைப்பு முறிக்கப்படுவதாக இல்லைÉ அத்துடன் அவ்வலகுகள் பதிக்கப்பெற்ற பிரதேசங்களில் வரலாற்று முரண்பட்ட நிலைகளும் காணப்படவில்லை. தென் இந்தியாவில், பொன்டிச்சேரியின் நியாயப்பாடு, சில வரலாற்று ரீதியான மற்றும் இனத்துவச் சார்பான (பிரெஞ்சு) மரபுகளைப் பாதுகாத்துப் பராமரித்துவருவதுடன், பண்பாட்டு ரீதியாக முழுப் பிரதேசத்தினையும் வளப்படுத்துவதும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன. ஓப்பீட்டு ரீதியாக, தொடர்ச்சியில்லாத வட – கிழக்கின் சிறு அலகுகள், முழுவதும் இனக்குழும முறையில் எல்லைகள் வகுக்கப்பட்டு இருப்பதும், இனத்துவ மோதல் குறித்த பதிலிறுப்புகளாகவும் அமைவது தொடர்ந்து மோதல்களின் நிலை பேறாக்கத்திற்கும் மற்றும் முரண்பாடுகள் மேலும் வலுவடையச் செய்வதற்கும் பொறுப்பாக இருக்க முடியும். இப்பின்னணியில், பாதுகாப்பு, அரசியல் ஒத்திசைவு, மற்றும் சமூக – பொருளாதார ஊடாட்டம் மற்றும் மக்களின் நலன் ஆகியவை குறித்து எடுக்கப்படும் இத்தகைய முயற்சி விரும்பத்தகாத எதிர்விளைவுகளைக் கொண்டுவரலாம்.
10. இலங்கைத் தமிழர்களின் அபிப்பிராய நிலைப்பாடு பெரும்பாலும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு ஆதரவையும் வழங்குகின்றதுÉ ஆனால் கிழக்கிலுள்ள் அதிகமான முஸ்லீம்கள் இரு மாகாணங்களையும் நிருவாக ரீதியில் வேறாக்குவதை விரும்புகின்றனர். ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லீம் இளைஞர்கள், குறிப்பாகக் கிழக்கிலிருந்து தமிழ்த் தீவிரவாதிகளுடன் சேர்ந்திருந்தனர். ‘ஆனால் 1990இல் நடந்தவையினைத்’ தொடர்ந்து வெறுப்பினால் அவர்கள் விலகினர் முஸ்லிம்களுடைய கடந்த கால மிக மனக்கசப்புடைய அனுபவங்களின் பின்னணியில், சிங்கள பெரும்பான்மையதிகாரத்தைக் குறித்து அச்சம் கொள்ளுமிடத்திலும், அதேயளவுக்கு அல்லது இன்னும் கூடுதலாக தமிழ் பிரதேச வாதத்தின் மேலாதிக்கத்தை அச்சத்துடன் நோக்குபவர்களாக உள்ளனர். ஆனால் வடக்கிலுள்ள முஸ்லீம்கள், ஏற்கனவே முழுவதான இனக்குழுமத் துடைத்தெடுத்தலின் (நுவாniஉ ஊடநயளெiபெ) பெருமளவான பாதிப்பினை அனுபவித்தவர்கள், இதில் மிகக் குறைந்தளவே நிலைமைமாறியுள்ளது அதிகளவுக்கு, மேலும், இரு மாகாணங்களின் நிருவாக வேறாக்கலினால், பலவினமடைகின்றனர். கிழக்கிலுள்ள தமிழர்களும், முஸ்லிம்களும், யாழ்ப்பாணத்தவர்களின் மேலாதிக்கத்தின் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதாக எண்ணுமிடத்திலும், நிருவாக வேறாக்கலினால் சிங்களவர்களின் விரைவுப்படுத்திய குடியேற்றம் ஏற்படலாம் எனவும், அது அவர்களுக்கெதிராக இனத்துவ நிலையின் நிலுவைப்பாட்டைப் பாதகமான வழியில் மாற்றலாம் என்ற அச்சுறுத்தலையும் எதிர்நோக்குகின்றனர்.
11. வட கிழக்கினைச் சேர்த்துப் பார்க்குமிடத்தில் அப்பிரதேசத்தில் முஸ்லீம்களின் சதவீதம் (18மூ) தமிழர்களின் நாடு முழுவதிலுமான சதவீதத்திற்குச் சமனாகின்றது. தமிழர்கள் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் முக்கியமாகக் கூறவேண்டிய கருத்து இருப்பதைப்போல முஸ்லீம்களுக்கும் ‘வட – கிழக்குப்’ பிரச்சினையின் தீர்வு பற்றி முக்கியமாகக் கருத்துத் தெரிவிக்கும் உரிமை உள்ளவர்கள். கிழக்கு முஸ்லீம்களின் ஆதரவையும், கிழக்கில் சிங்கள மக்களின் இணக்கத்தினையும் -வட கிழக்குப் பிரச்சினையின் தீர்வுகுறித்து – பெறுவதற்கான முதல் நிலையான தொடக்க முனைவும், பொறுப்பும் தமிழ் தலைமைத்துவத்திடம் சேருகின்றது. எத்தகைய தீர்வொழுங்கு இது தொடர்பாக ஏற்படுகின்றதோ அதற்கான ஏற்பிசைவினை எல்.ரீ.ரீ.ஈ யிடம் பெற்றபின்னரே இது குறித்து தடங்கலில்லாத வகையில் வட – கிழக்கின் கருத்தொற்றுமை அந்தஸ்து என்பதை அடைய முடிகின்றது.
12. அதிகாரப் பரவலாக்கத்தின் பிரதேச அலகு நிலைபேறுடையதாக இருப்பதற்கு அதனுடைய பருமன் முக்கியமானதாக இருத்தல் வேண்டும்É அத்துடன் அது, அங்கு வசிக்கும் எல்லோருடைய நிலையான வாழ்விடமாகவும் இருப்பதும் அவசியம். இவ்வகையாக வட – கிழக்குப் பிரதேசத்தை ஒரு அடிப்படைநிலையில் தமிழ்த்தாயகமாகப் பார்ப்பது, அதிகாரப்பரவலாக்கம் குறித்து ஒரு பொருத்தமான அலகாகக் கொள்ள முடியாது. இப்பிரதேசத்தின் ஆட்சியின் கட்டமைப்பை வகுத்து கொள்ளுமிடத்து அதற்குள் சேருகின்ற முஸ்லிம் மற்றும் சிங்ளக் குடிசனத்தினர் சமமான முறையில் நடாத்தப்படுவதாக அவர்கள் கருத வேண்டும். உப பிரதேசங்கள், பிரதேசத்திற்கும் மற்றும் மாநகரம்Æநகரம்Æகிராமம் ஆகியவற்றிற்கும் இடைப்பட்டவை, அதிகளவான சுயாட்சி அதிகாரத்தைக் கொண்டவையாக இருப்பது, (உள்ளூர் பொலிஸ் பாதுகாப்பு உட்பட), இன்று உள்ளுராட்சிச் சபைகளுக்குக் கிடைப்பவற்றிலும் கூடுதலான அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமையலாம். தனியான இனத்துவ ரீதியான பிரதேசங்களும், உப பிரிவுகளும் நடைமுறையில் பொருத்தமானவையல்ல, அவை விரும்பத்தகுந்தவையுமல்ல. உப பிரதேசங்களின் பிரதேச ரீதியான தொடர்ச்சியின் தேவைகளைக் கருதி அனுமதிக்கக்கூடிய அளவில் ஒத்த இனக்குழும மக்கள் ஒன்று சேர்வதற்கான வகையில், எல்லை வகுக்கப்படலாம். இனக்குழு மக்ககளிடையே அதிகாரப் பகிர்வுப் பொறிமுறைகளும் பாதுகாப்புகளும் ஒவ்வொரு மட்டத்திலும் தேவைப்படுகின்றன. இனத்துவ ரீதியாகக் கலந்திருக்கும் இடங்களில் இனத்துவ முறையான பங்களவுகள் நிர்ணயித்தல் பத்துவருடங்களுக்காவுதல் தேவைப்படும். பாதுகாப்பு, ஒழுங்குகள் உள்ளடக்கிய ஏற்பாடுகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்;ட பிணக்குகளைத் தீர்ப்பதற்கான செயற்படு முறைகள் ஆகியவை விருத்தி செய்யப்பட்டு நிறுவப்படுதல் வேண்டும். நாட்டின் மற்றைய பிரதேசங்களிலும் எந்தவிதமான உப பிரதேசங்களை அமைத்துக் கொள்வதற்கான ஒழுங்கமைவு செய்யப்படுதல் தேவைப்படும்.
தமிழ்த் தேசியத்தின் தொடக்கம்
13. தமிழ்ப் பிரிவினைவாதமும் வன்முறைத் தீவிரவாதமும், தற்போதுள்ள யதார்த்த நிலையினைப் பெருமளவுக்குப் பிரதிபலிக்கின்றனÉ இவை சென்ற மூன்று தசாப்தங்களில் ஏற்பட்ட மாற்றங்களாகக் காணப்படுகின்றன. தமிழர்களின் முந்திய தலைமுறையினர் மகாத்மா காந்தியின் இலட்சியங்களினால் தூண்டுதலளிக்கப்பட்டனர். இதனால் தமிழ்ப் பிரதேசங்களில் வன்முறையின் அளவு குறைந்தே காணப்பட்டது. காந்தியின் இலட்சியங்களின் செல்வாக்கின் முக்கியமான வெளிப்பாடாக ‘யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்’ விளங்கியது. இது யாழ்ப்பாணத்தின் அரசியல் சூழ்நிலையில் இரண்டு தசாப்தங்களில், 1910 ஆண்டளவிலிருந்து மேலாதிக்கம் செலுத்தியது. இவ்வமைப்பின் குறிக்கோள்களும் இலட்சியங்களும் யாழ்ப்பாணத்து மக்களைப் பெரிதும், கவர்ந்ததுடன், நாட்டின் அனேகமாக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஈடுபட்ட அக்காலத்து செயற்பாட்டாளர்களையும் பெரிதும் கவர்ந்தனÉ இவை இன்று யாழ்ப்பாணத்தில் நிலவுகின்ற பெறுமானங்களுடன் ஒப்பிடுமிடத்து பெருமளவுக்கு வேறுபட்டிருந்தன என்பது தெளிவாகின்றது. யாழ்ப்பாணத்து வாலிபர் காங்கிரஸ் அதனுடைய அரசியல் பிரச்சாரத்தில், விரைவான சுதந்திரம், சர்வசன வாக்குரிமை பெறுதல், காந்திய ஒழுக்க நெறிக்கும் அகிம்சைக்கும் ஆதரவு, சாதிமுறைக்கு எதிர்ப்பு, இனரீதியான தேர்தல் தொகுதிகளை எதிர்த்தல் மற்றும் பாடசாலைகளில் சிங்களத்திலும் தமிழிலும் கற்பித்தல் ஆகிய விடயங்களை வலியுறுத்திய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தலைவர்கள், தெற்கிலுள்ள அரசியல் தலைமைத்துவத்துடனும் மற்றும் இந்தியாவில் காந்திய இயக்கத் தலைவர்களுடனும் நெருங்கிய அரசியல் தொடர்புகளை பேணி வந்தனர் (நேசையா, 2001 ப.13)
14. பிரித்தானிய தொழிற்கட்சி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ‘டொனமூர் ஆணைக்குழு’ முக்கியமான, பரந்த விதமான செயல் விளைவு கொண்ட சீர்திருத்தங்களைச் செய்துள்ளது. இவற்றில் முக்கியமானவை, சர்வசன வாக்குரிமை, இனரீதியான தேர்தல் தொகுதிகளின் நீக்கம், மற்றும் டொமினியன் அந்தஸ்த்தினை நோக்கிய அரசியல் முன்னேற்றம் ஆகியவை இடம்பெற்றன. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் நிலைப்பாடு, டொமினியன் அந்தஸ்த்துப் பற்றிய சிபார்சு மிகக்குறைந்ததாகவும் காலம் தாழ்த்தி வந்துள்ளது எனவும் கருதப்பட்டதால் டொனமூர் சீர்திருத்தங்களைத் தழுவிய 1931ஆம் ஆண்டுத் தேர்தலைக் காங்கிரஸ் பகிஷ;கரித்ததுÉ பதிலாக, உடனே சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தெற்கிலுள்ளவர்கள் பலர், குறிப்பாக மாக்சிஸ்ட்டுகள், யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் நிலைப்பாட்டைப் பாராட்டினர்É ஆனாலும், பிரதான அரசியல் நீரோட்டத்திலுள்ள சிங்களத்தலைவர்கள் குறிப்பிட்ட நிலைப்பாடு கூடுதலான தளநிலை மாற்றத்தை வேண்டிநின்றதாகக் கருதினர். வடக்கிலும், தெற்கிலும் உள்ள பழமை வாதிகள் டொனமூர் சீர்திருத்தங்களை எதிர்த்தனர் முன்பு காட்டிய காரணத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர், அதாவது, இச்சீர்திருத்தங்கள் அதிகமானவையெனவும், காலத்திற்கு மிக்க முன்பதாகவும் இருப்பதாகக் கூறினர். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தேர்தலைப் பகிஷ;கரித்துச் செயற்பட்டதனால், வடக்கிலுள்ள பழமைவாதிகள் புதிதாக அமைக்கப்பட்ட அரசசபைக்கு (ளுவயவந ஊழரnஉடை) தேர்தல் மூலம் செல்ல முடிந்தது. இதுவும், நாடுமுழுவதும் இனரீதியான அரசியல் 1930களுக்குப் பின்னர் வளர்ந்ததும் சேர்ந்து, அரசியலில் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தளர்வுற்று படிப்படியாக மறைந்ததற்குக் காரணங்களாக இருந்தன.
15. 1950 களின் நடுப்பகுதியில், சிங்களம் மட்டும் உத்தியோக மொழிச்சட்டம் ஆக்கப்பட்டதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட விரிவகல்வான, பாரபட்சமுடைய வழிமுறைகளின் தாக்கங்களே தமிழ்த் தேசியம் வலுப்பெற்றதற்கும் ஒரு திடமான அரசியல் வடிவத்தினை அடைவதற்கும் பொறுப்பாக இருந்துள்ளன. (நேசையா 2001 பம் 13-17). தொடக்கத்தில் தமிழ்தேசியத்தின் திசைப்படுத்திய நோக்கு, விட்டுக்கொடுக்காத சமஷ;டி அல்லது கூட்டாட்சி இலக்கு பிரிவினைக்கு எதிரான, நிலையாக இருந்தது. 1970களின் முற் பகுதிவரை, ஒவ்வொரு அரசியல் தேர்தலிலும் பிரிவினையை ஆதரித்து நின்ற ஒவ்வொரு வேட்பாளரும் உறுதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இது தொடர்பாக மாற்றம், எழுபதுகளில் ஏற்பட்டது. இம்மாற்றத்துடன் தொடர்புடையதாக, 1971 இல் இருந்;து பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் அதிகமாகக் குறைக்கப்பட்டமை, மற்றும் 1972 அரசியல் யாப்பு பெரும்பான்மையதிகாரத்தின் வெளிப்பாடாக நிறைவேற்றப்பட்டமை முக்கியத்துவம் கொண்டன. 1975ஆம் ஆண்டில் காங்கேசன்துறைப் பாராளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றியடைந்த பொழுது ளு.து.ஏ. செல்வநாயகம் வெளியிட்ட, எதிர்கால அரசியல் போக்கை மாற்றியமைக்கத்தக்க திருப்பு முனையாக அமைந்த, அறிவித்தல் பின்வருமாறு:
சென்ற இருபத்தைந்து வருடங்களாக நாங்கள் எங்களது அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கு ஐக்கிய இலங்கை என்ற கட்டுகு;கோப்பிற்குள் சிங்களவர்களுடன் சமத்துவமான அடிப்படையில் எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளோம். அடுத்தடுத்து வந்த சிங்கள அரசாங்கங்கள், சுதந்திரத்திலிருந்து கிடைத்த அதிகாரத்தினை எங்களுடைய அடிப்படை உரிமைகளை மறுப்பதற்குப் பயன்படுத்தியதுடன், நாங்கள் ஒரு கீழ்ப்படுத்திய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். என்னுடைய மக்களுக்கும், நாட்டுக்கும் அறியப்படுத்துவது என்னவென்றால், இத்தேர்தலில் கிடைக்கப்பட்ட முடிவினை தமிழ் ஈழத்தேசம் ஏற்கனவே தமிழ் மக்களிடம் அளிக்கப்பட்ட இறைமையைப் பயன்படுத்தி, மக்கள் விடுதலையை அடைவதற்கான கட்டளை உரிமையாகக் கருதுகின்றேன். (நேசையா 2001 ப 16)
இனப்படுகொலைகள். உள்ளூர்ப்போர் மற்றும் இனக்குழுமத் துடைத்தெடுத்தல்
16. பின்தொடர்ந்த பொதுத்தேர்தல் இனத்துவமோதலின் தீவிரமான கட்டத்திற்கு வழிவகுத்தது. ஒரு புறத்தில், முதல் முறையாக, தமிழ்த் தேர்தல் தொகுதி பிரிவினை வாதத்திற்கு ஆதரவான வேட்பாளர்களைப் பாராளுமன்றத்திற்குச் தெரிவு செய்தது. மறுபக்கத்தில், புதிய அரசாங்கம் தேர்தலுக்குப் பின்னான இனப்படுகொலைச் செயல்களைத் தொடக்கிவிட்டது, அத்துடன் 1972இல் பெரும்பான்மை அதிகாரத் தாக்கத்தினை உறுதிப்படுத்திய இயல்புடைய ஒரு புதிய அரசியல் யாப்பினைக் கொண்டு வந்த முயற்சி முக்கியமானது. நன்கு கூட்டிணைவான, ஒழுங்கு செய்யப்பட்ட, பரவலான இனத்துவ துடைத்தெடுத்தல் செயல் நடவடிக்கை 1983இல் நடைமுறையில் இடம்பெற்றது. இது, 1977இல் நடந்தேறிய சிதறலான முறையில் மேற்கொள்ளப்பட்ட இனத்துவத்துடைத்தெடுப்பின் நடவடிக்கையினத் தொடர்ந்த செயலாகின்றது. அக்காலத்திலிருந்து இச் செயல்கள் வேறு பிரிவினரினால் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் ஆகியோரைப் பாதித்த வகையில் நடைபெற்றன. ஒக்டோபர் 1990இல், வடக்கிலுள்ள முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்டது, 1983ற்குப்பின்னரான மிகப் பெரியளவிலான இனத்துவத் துடைத்தெடுத்தல் செயலாகின்றது.
17. என்னுடைய உரையின் விடயம் வட – கிழக்கின் கருத்தொருமைப்பாடு பற்றியது என்பதால், தமிழ்பேசும் மக்கள் வட – கிழக்கிற்கு வெளியே தமிழ் மொழியில் உத்தியோக பூர்வ அலுவல்களைச் செய்யும் முயற்சிகளில் பரவலாக அனுபவிக்கப்பட்ட பாரபட்ச நிலைமைகளை இங்கு மேலோட்டமாக மட்டும் கூறமுடியும். உதாரணமாக, பதுளை மாநகரத்தின் குடிசனத்தில் 26.2 சதவீதம் தமிழ் பேசும் மக்களைக் கொண்டது, ஆனால் இந்த நிலையில் மாநகரச்சபையின் 450 உத்தியோகத்தர்களில் ஒருவரே தமிழ்தெரிந்தவர். கண்டி மாநகரத்தில் தமிழ் பேசுவோரின் விகிதாசாரம் 25.7 சதவீதம், ஆனால் அங்கு பதிவாளர் காரியாலயத்தில் வேலை செய்யும் 60 பேரில் ஒருவரும் தமிழ் தெரிந்தவர்களாக இல்லை. இரத்தினபுரி மாநகரத்தில் தமிழ் பேசுவோர்கள் 13.3 சதவீதம் ஆனால் உயர் நீதிமன்றத்தின் காரியாலய உத்தியோகத்தர்களில் ஒருவர் கூட தமிழ் தெரிந்தவராக இல்லை. கொழும்பு மாநகரத்தில் தமிழ்பேசும் மக்களின் சதவீதம் 36.7 சதவீதம்É அப்படியிருந்தும் முழு உத்தியோகத்தர்களில் 1 சதவீதத்திற்கு குறைவானவர்களே தமிழ் தெரிந்தவர்கள் (குஊநுஇ 2006). பின் தசாப்தங்களில், நிலைமை, முன்னேறவில்லை, பதிலாக மோசமடைந்தது.
சுயநிர்ணய உரிமை தொடர்பான பிரச்சினைகள்
18. முக்கிய விடயமாக கவனிக்க வேண்டியது ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணயÆ தன்னாட்சி உரிமை. இதன் பின்னணியில், டிசெம்பர் 5, 2002 இல் முன்வைக்கப்பட்ட ஒஸ்லோ (ழுளடழ) பிரகடணம் ஒரு முக்கியத்துவமுடைய திருப்பமாகின்றது. இது, பிரதானமாகக் 1985இல் தமிழ் அரசியல் கருத்தொருமைப்பாட்டின் வெளிப்பாடாக திம்புவின் மூல விதிகளாக (வுhiஅpர Pசinஉipடநள) முன்வைக்கப்பட்டதைத் திருத்தி செம்மைப்படுத்திய அறிவித்தலாக வெளியிடப்பட்டது. இரு சாராரும், குறிப்பாக எல்.ரீ.ரீ.ஈ. எதிர்பாராத விதமாக முன்பு இல்லாத வகையான நிலைப்பாட்டை, சமாதானம் நல்லிணக்கம் குறித்து, வெளிப்படுத்தினர்É ஆனாலும் இரு தரப்பினரும் பின்னராக ஏற்றுக்கொண்ட பொறுப்புகளிலிருந்து விலக முயன்றுள்ளனர். சமாதான விரும்பிகளாகிய நாங்கள், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச சமூகம், உள்ளடங்கலாக அரசாங்கத்தினையும் எல்.ரீ.ரீ.ஈயினையும் நன்குணர்ந்து வரையப்பட்ட ஒஸ்லோ அறிவித்தல் தொடர்பாக அதனுடைய பொறுப்புகளை இறுக்கமாக கடைப்பிடிக்கச் செய்வதில் தவறியுள்ளோம். அதனுடைய சாராம்சம் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
உள்வாரியான சுயநிர்ணய உரிமை, வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பிரதேசத்தில் ஒரு சமஷ;டி அமைப்பைத்தழுவிய, ஐக்கிய இலங்கைகளுள் எல்லாச் சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை ஆகியவற்றை உள்ளடக்கிய தீர்வாக முன்வைக்கப்பட்டது……. அதிகாரப் பங்கீடு முறையில், மையத்திற்கும் பிரதேசத்திற்கும் இடையேயும், மற்றும் மையத்திற்கு உள்ளாகவும் பிரதான இடைத்தைப் பெறுகின்றது….. மனித உரிமைகள் ….. சட்டமும், ஒழுங்கும் மற்றும் பெண்களின் தேவைகளின் முன்னுரிமை வழங்கல் என்பவையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன… சிறுவர்கள் தங்களின் குடும்பங்களுக்கு அல்லது மற்றைய பாதுகாவலர்களுக்குச் சேர்பவர்கள்É சிவிலியன் நோக்கிலும் சரி படைச்சேவை ரீதியிலும் சரி அவர்கள் வேலைத் தளத்திற்குச் சேர்பவர்களல்லர்….. சமாதான முறைவழியில் அதனுடைய ஒரு பகுதியாக, எல்லா விதமான அபிப்பிராய நிலைப்பாடுகளுடனும் கலந்து பேசுதலும் முக்கியமாகின்றது.
கருத்தொருமைப்பாடு ஏற்படுவதில் தடைகள்
19. பொதுவாக, பல இனங்கள் வாழும் நாடுகளில் மிகக் கூடுதலான எண்ணிக்கையான இனக்குழும சிறுபான்மைச்சமுகம் (எங்களுடைய சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்கள்) அரசைப் பொறுத்து அதிகமான அரசியல் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது. ஒரு சில குறுகிய காலப்பகுதியை விட, இலங்கைத் தமிழரின் தலைமைத்துவம் முக்கியமான அளவில் நாட்டின் அமைச்சர் அவையில் பிரதிநிதித்துவம் இல்லாதிருந்தது. அத்துடன் சுதந்திரத்திற்குப் பின்னான காலத்தில் ஆக்கப்பட்ட அரசியல் யாப்புகளில் தமிழ்த் தலைமைத்துவம் பங்கெடுக்கவில்லை. முஸ்லிம்களும், இந்தியத்தமிழர்களும் தேசிய கொள்நெறி மீதும் உயர்மட்டத் தீர்மானம் எடுத்தலிலும் அரசாங்கத்திற்கு உள்ளேயிருந்து தங்களது செல்வாக்கினை ஏற்படுத்தினர்É வேறாக, இதனை இலங்கைத் தமிழர்கள் வெளிநின்று செய்ய முயற்சித்தனர். எல்லாச் சிறுபான்மை மக்களின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக முன்னேற்றத்தினை அடைந்து கொள்வதற்கு இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள், மற்றும் இந்தியத் தமிழர்கள் ஆகியோரிடையே கூட்டான முயற்சி தழுவிய செயல் நடவடிக்கை தேவைப்பட்டுள்ளதுÉ இதற்கு சரியான திசைப்படுத்தலும் ஒழுங்கமைவும், பொதுக்குறிக்கோள்கள் தொடர்பான உடன்படிக்கைக்கு மேலாகச் செல்லவேண்டியது முக்கியம். ஆனால் இது இலகுவாக நிறைவேற்றப்படுவதல்ல.
20 முதலாவது, ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்ட எல்.ரீ.ரீ.ஈயினரும் மற்றும் பல இலங்கைத் தமிழர்களும், போராட்டத்தில் மற்றைய பிரிவினரைவிட, கூடுதலாகப் பங்களிப்பைச் செய்துள்ளனர் என்பதால், பேச்சு வார்த்தை முறைவழியும், தீர்வு வழிகளின் விபரங்களும் யதார்த்த நிலையினைப் பிரதிபலிக்க வேண்டும் எனக் கருதியுள்ளனர். ஆனால் மறுபுறத்தில், மற்றவர்கள். அப்படியான ஒரு வேறுபடுத்தலுக்கு இணங்கமாட்டார்கள். இரண்டாவது, பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், வேறு மாற்று வாய்ப்பு நிலைகள் என்னவாகும்? ஒரு சாராரைக் குறித்து (குறிப்பாக எல்.ரீ.ரீ.ஈ) அவர்கள் மீண்டும் உள்நாட்டுப் போரை மாற்றுவழியாகக் கருதுபவர்கள்É மற்றவர்கள் தொடர்பாக இது ஒரு தாங்கிக்கொள்ளக்கூடிய நிலையல்ல. இன்னொரு சிக்கலும் ஏற்பட இடமுண்டு. மோதல் சென்று கொண்டிருந்த வழியில், பயங்கரமான இனக்குழும துடைத்தெடுத்தல் நிகழ்வுகள் சிறுபான்மை சமூகங்களிடையே நடந்தமை (வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது உள்ளடங்கலாக), இரு சமூகங்களுக்குள்ளேயும் மற்றும் இரு சமூகங்களுக்கிடையேயும் சகோதரத்துவ வன்முறை ஏற்பட்டமை, மற்றும் எல்.ரீ.ரீ.ஈ தமிழ் சிவிலியன்கள் ஆகியோருக்கு எதிரான அரச படைகளின் பயங்கர இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ், மற்றும் முஸ்லிம் பிரிவினர் உடந்தையாக இருந்துள்ளனர் என்ற சந்தேகங்கள் ஆகியவை சூழ்நிலையினைக் கடினமாக்கின. இத்தகைய அட்டூழியங்கள் காரணமாக இன்னும் கூடுதலான அட்டூழியச் செயல்கள் தொடரலாம் என்ற ஐயுறுநிலை மற்றும் அதனால் விளைவிக்கப்படும் மனக்கசப்பு ஆகியவை கூட்டு நடவடிக்கைக்குத் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. அரசின் ‘பிரித்து – ஆளும்’ நடவடிக்கைகளினால் மனவெறுப்பும் சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.
21. இன்னொரு பிரச்சினை பிரதிநிதித்துவம் பற்றியது. எல்.ரீ.ரீ.ஈயினர் வட – கிழக்கு முழுவதிற்குமாக அல்லது முழு தமிழ் மக்களுக்குமாக பேசலாமா? போர் நிறுத்த உடன்படிக்கைக்கு மேலாக, பிரதேச சுயாட்சி மற்றும் வேறு விடயங்கள் குறித்து உரையாடல் நடாத்துவதற்கு, ஒரு மூன்றாம் தரப்பினர், அதாவது, முஸ்லிம்கள், மற்றது இன்னொரு நான்காம் தரப்பினராகிய இந்தியத் தமிழர்கள் ஆகியோரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. ஆனால், பேச்சுவார்த்தை நடாத்துகின்ற இரு சாரார், முஸ்லிம்கள் பேச்சுக்களில் தனியான ஒரு அலகாகச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டியுள்ளனர். அரசும், மற்றும் விடுதலைப்புலிகளும் முஸ்லீம்களை அரச குழுவின் ஒரு கூறாக சேர்த்துக் கொள்வதை விரும்புகின்ற நிலைப்பாட்டின் தன்மை , ஆச்சரியமூட்டுகின்றது. இதிலிருந்து வட- கிழக்கு முஸ்லீம்களின் நலன்கள் வட கிழக்குத் தமிழர்களுடனல்லாது கூடுதலாக அரசின் நிலைப்பாட்டுடன் இணைந்ததாகக், கருதலாமா?
22. தனியொரு புறம்பான முஸ்லிம் குழு பேச்சு வார்த்தையில் இல்லாதது குறித்து வேறு பிரச்சினைகளும் எழுகின்றது. இரு சாராருக்குமிடையேயுள்ள முரண்பாடுகள் பூச்சிய தொகை முடிவுக்குள்கொண்டுவரும் இயல்புகளைக் காட்டுகின்றதுÉ பலவீனமுடைய சாரார் கூடுதலாக இழப்புகளை அடையும் நிலைக்குத் தள்ளப்படலாம். மேலும் ஒவ்வொரு தரப்பினரும் முன்னதாகவே வாய்ப்பைக் கைப்பற்றித் தாக்கும் தந்திரோபாயத்தைக் கடைப்பிடிக்கும் நிலையில் இருக்க முடிகின்றது. இதனை மீண்டும் மீண்டும் கண்டுள்ளோம். இதற்கு வேறுபட்டதாக மூன்று தரப்பினருக்கிடையே ஏற்படும் முரண்பாடு, ஒவ்வொரு தரப்பினருக்கும் கூட்டுப்பங்களிப்பு உறவை வளர்ப்பதற்கும், ஆக்கபூர்வமான தீர்;வுகளை வகுத்துக் கொள்வதற்கும், வன்முறையான மோதல்களைத் தவிர்;த்;துக் கொள்வதற்கும் தூண்டுதல்களை வழங்குகின்றது. எங்களிடையே இரு தரப்பு முரண்பாடுகள் மற்றும் இரு தரப்பினர்கிடையே பேச்சு வார்த்தைகள் குறித்த ஒரு நீண்ட வரலாறு உண்டு. இவற்றின் விளைவு அடுத்தடுத்து வந்த இனப்படுகொலைகள் மற்றும் உள்நாட்டுப் போர்கள் என்பவை இடம் பெற்றுள்ளன. இப்பின்னணியில் மூன்று தரப்பினரிடையே பேச்சு வார்த்தை முறை ஒவ்வொருவருக்கும், வேரூன்றிய நலன்களை மறுபடியும் நடக்கும்போரை விரும்புகின்றவர்களைத்; தவிர, முன்னேற்றமான முடிவுகளை தரலாம்.
23. கூட்டு செயல்முயற்சிக்கு மாற்று நிலையாகக் கிடைப்பது முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத, அண்மைக்காலங்களில் தொடர்ந்து சென்றுள்ள நிலை, அதாவது, போர் இல்லாதநிலை, சமாதானம் இல்லாத நிலை என்பவையும் அவை முறிந்து முழு அளவிலான நேரடிப் போர் காலத்துக்குக் காலம் ஏற்படுவதும் (ஈழப்போர் 4 தற்பொழுது எதிர்நோக்கப்படுகின்றது) அனுபவங்களாக இருந்துள்ளன. கூட்டுச் செயல் நடவடிக்கையின் தந்திரோபாய வழியானது, மூன்று சமூகங்களும் இலங்கைத் தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் இந்திய தமிழர்கள், சமூக, அரசியல் ரீதியாக வேறுபட்டிருப்பினும் பல பொதுவான நலன்களில் பங்குகொள்கின்றனர். இவற்றைவிட இலங்கையின் முழுக் குடிசனத்தையும் இணைக்கும் மற்றைய நலன்களும் தெரிந்தவையே. விடுதலைப் புலிகளினால் தொடரப்பட்ட ஆயுதந்தாங்கிய போராட்டம் அரசியல் ரீதியாக முக்கியமான முன்னேற்றத்தைக் கொண்டுவந்திருப்பினும், அவை பெருமளவான பாதிப்புகளையும் விளைவித்துள்ளன. எப்படியாயினும், ஆயுதப்போராட்டத்தினால் அடைந்து கொள்ள முடிந்தவையும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை என்பதும் அறிய முடிகின்றது பல பெறுபேறுகள், சனநாயக முறை வழிகளில் ஈடுபாடு கொண்டுள்ள அரசியல் கூட்டிணைவான முயற்சிகளினால் அடையப்படலாம்.
நிலப்பிரச்சினை
24. உள்நாட்டுப் போரினால் ஏற்பட்டுள்ள அழிவுகளில் காட்டுவளங்களின் மீது ஏற்பட்டுள்ள பாதிப்பும் முக்கியமாகின்றது. காடுகள், ஒரு நூற்றாண்டிற்கு முன்பாக தீவின் 80 சதவீதத்தைக் கொண்டிருந்தனÉ இன்று அவை 20 சதவீதமாகவே காணப்படுகின்றன. இருக்கின்ற காடுகளைப் பாதுகாத்தல் (போதியளவுக்குச் செய்யப்படவில்லை) மற்றும் புதிய நிலங்களில் மர நடுகையும் (போதியளவுக்கு நடைபெறவில்லை) உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டன இது, காட்டு வளம் தொடர்பான பாதகமான போக்குகளை விரைவுப்படுத்தியுள்ளது. அதிகளவான எண்ணிக்கையில் பனை மரங்கள், தென்னை மரங்கள் மற்றும் மரங்கள் நெடுந்தூரப் பீரங்கித் தாக்குதல்களினால் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், திட்டமிடப்பட்டும் அவை பாதுகாப்புக்கருதி வெட்டப்பட்டுள்ளன (குறிப்பாக தெருவோரத்தில் நின்றவை, மறைந்திருந்து வரும் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு) அல்லது காவலரண்களை அமைப்பதற்குப் பயன்படுத்துவற்காகவும், அல்லது எரிபொருளாக, வேறு எரிபொருள் மூலங்கள் இல்லாமையினால், உபயோகிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன. வட- கிழக்கில் அதிகமான பகுதிகளில் புதிய காடுகளை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் பாதுகாப்புக் காரணங்களினால் இல்லாமல் போய்விட்டன.
25. குறைந்தது ஆறு தசாப்தங்களாக, பிரதானமான இனக்குழுமசார்பாகச் சச்சரவுடைய விடயமாக இருந்தது, நிலக்குடியிருக்கையும் அதன் மீது கட்டுப்பாடு வைத்திருத்தலும். பல தென்பகுதிகளில் விவசாயச் சமூகத்தினரிடையே அதிகமாக நிலமில்லாமை இருந்து வந்துள்ளது. குடியேற்றத்திட்டங்களுக்கு உகந்த நிலங்கள் வட கிழக்கிலும் மற்றும் வேறு பல பிரதேசங்களான மொன்றாகலை, வட மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் காணப்பட்டுள்ளன. மொத்தமாக நோக்குமிடத்து, குடிசன அடர்த்தி கிழக்கிலும் மற்றும் வடக்கின் பெருநிலப்பரப்பிலும், மற்றைய மாகாணங்களை விட, குறைவாகவே உள்ளது. குடியேற்றத் திட்டங்கள் பயிர்செய்யக்கூடிய நீர்ப்பாசன வசதியுடன் மற்றும் தேவையான துணை வசதிகளுடன் – நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்களுக்கு – குடியேற்றத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வந்துள்ளன. இவ்வழியாக அவர்களின் வாழ்க்கை நிலையினையும் மற்றும் சமூக – பொருளாதார நிலைமைகளையும் மாற்றுவதே பிரதான நோக்கமாக பல தசாப்தங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல சூழ்நிலைகளில் அதிக எண்ணிக்கையுடைய சிங்கள விவசாயக்குடும்பங்களை, முன்னர் தமிழ் அல்லது முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டனர். இனத்துவ ரீதியான இயல்புகளையும் இக்குடியேற்றங்கள் இவ்விடங்களில் மாற்றியுள்ளன. இதனால் பாதகமான விளைவுகளும், தொடக்க நிலையிலிருந்து, தமிழ், முஸ்லிம் குடியிருப்பாளர்களிடையே, பாடசாலைகளில் வசதிகள் கிடைத்தல், பொதுச் சேவைகள் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக இனத்துவ சீர்குலைவுக் காலத்தில் ஏற்பட்டுள்ளன.
26. நாட்டின் வட – கிழக்குத் தவிர்ந்த பிரதேசத்தில் குறிப்பாக அக்கறைகாட்டுகின்ற விடயம் பயிர்செய்கைக்கான நிலம் பற்றியதாகும். வட – கிழக்குப் பிரதேசத்தில் குடிசனத்தின் அடிப்படையில் ஆளொன்றுக்கான பயிர்செய்கை நிலம் ஒப்பீட்டளவில் பெரிதாக இருப்பது காண முடிகின்றது, இந்த வேறுபாடு கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். சுதந்திரத்திற்கு முன்னான காலத்திலேயே குடியேற்றத்திட்டங்கள் திட்டமிட்ட முறையிலும் அல்லது அப்படியில்லாத வகையிலும், தமிழர்களின் அல்லது முஸ்லிம்களின் அதிகமான பெரும்பான்மைப் பிரதேசங்கள் சிங்களப் பெரும்பான்மை இடங்களாக மாற்றப்படுவதற்கு வழிவகுத்தன (இதனால் பல பாதகமான விளைவுகள், தமிழர்களின் அல்லது முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம், ஆட்சியின் நிருவாக மொழி, நிருவாகம் மற்றும் பொலிஸ், தொடர்பாக இனக் குழுமச்சார்பான உள்ளமைவு, பாடசாலைகளில் போதனா மொழி ஆகிய விடயங்களில், தோற்றுவிக்கப்பட்டுள்ளன) பல இடங்களில், தமிழர்களின் மற்றும் முஸ்லிம்களின் வழித்தோன்றியவர்கள், முன்பு அவ்விடங்களில் அவர்களின் முன்னோர்கள் வசித்தவர்கள், ஓரப்படுத்தப்பட்டுள்ளனர்É மற்றும் இன அமைதி குலையும் நேரங்களில் பாதுகாப்பற்றவர்களாக இருந்துள்ளனர். அப்படியான சில கிராமங்களில் மக்கள் முழுமையாக குடியெழுப்பி வெளியேற்றப்பட்டுள்ளனர்É அவ்விடங்களில் வேறு ஆட்கள் அங்கு குடியேறியுள்ளனர். இத்தகைய நிகழ்வுகளும் ஒரு யதார்த்த நிலையாகக் கண்டு கொள்ள முடிகின்றது, அதுவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும். இன்னும், மூன்றாவது யதார்த்தமொன்றும் குறிப்பிடப்படுதல் வேண்டும். தென்னிலங்கையில் பல பகுதிகளில் இந்திய தமிழ் விவசாய வேலையாட்கள் அதிகளவுக்கு நிலமில்லாதவர்கள். அவர்களில் பலர் வடகிழக்குக்குச் சென்றுள்ளனர், ஒரு சிலர் நிலம் பெற்றுள்ளவர்களாக உள்ளனர்É ஆனால் இப்பொழுதும் அனேகமானவர்கள் நிலமற்றவர்களாக வாழ்கின்றனர். எல்லா இடங்களிலும் மற்றை சமூகத்தவர்கள் நில ஒதுக்கீட்டில் முன்னிடம் பெறுகின்றனர். ஏற்கனவே குறிப்பிட்ட நான்காவது யதார்த்தநிலை, காட்டுவளம் அதிகளவு குறைந்து வருவதனால், சுற்றுபுறச் சூழல் சம்பந்தமான பாதகமான விளைவுகள் பெரும் கரிசனைக்குரிய விடயமாக, உள்ளூர் ரீதியிலும், தேசிய மட்டத்திலும் காணப்படுகின்றது.
27. குடியேற்றங்களுக்கான நிலத்தின் பற்றாக்குறை மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளதுÉ வட கிழக்கின் எல்லைப் பிரதேசங்களில், அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திட்டங்கள் மற்றைய மாகாணங்களின் வேறு இடங்களில் உகந்த நிலம் இருந்துள்ளபோதும், அமைக்கப்பட்டுள்ளன. வட – கிழக்கில் நிலம் சிறிதளவு குடியேற்றத்திட்டங்களின் தேவைகள் கருதி, பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, ஒதுக்கப்படுதல் வேண்டும். வௌ;வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்படும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான சிங்களவர்கள், இந்தியத்மிழர்கள் நிலத்தட்டுப்பாடு ஏற்படும் தென்பகுதிப் பிரதேசங்களிருந்து வருபவர்களாக இருத்தல் வேண்டும். இதனால் இவ்விடங்களின் இனத்துவத் தன்மையினை மாவட்டத்தில், மற்றும் பிரதேசப் பிரிவுகளில் மாற்றுவதான விளைவுகள் ஏற்படுவது தவிர்க்கப்படுதல் வேண்டும். குடியேற்றங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள அதிமான திருப்தியின்மை நிலையினைப் பெரிதளவுக்கு குறைக்கப்படுவதும், அத்துடன் அதிகளவான சூழல் சார்ந்த நன்மைகளைப் பெறுவதற்கும், வட – கிழக்கில் பெரிய அளவான பகுதிகள் காட்டுவள ஒதுக்கல்களாகச் செய்யப்பட்டால், எல்லாக் குடியேற்றத்திட்டங்களிலிருந்து விலக்கப்படவும் முடிகின்றது. பெரிய அளவில் காட்டுவள விருத்தி நாடு முழுவதற்கும் பிரதேசத்திற்கும் நன்மைகளை வழங்க முடிகின்றது.
சகோதரத்துவ அரசியல் வன்முறை
28. வட- கிழக்கில் குடிசனத்தில் வேறுபட்ட தன்மை மற்றும் சென்ற சில தசாப்தங்களின் துயர நிகழ்வுகள் ஆகியவற்றின் பின்னணியில் எவ்வாறு கருத்தொருமைப்பாட்டைக் கொண்டு வருவது? இது ஒரு கடினமான விடயம். தற்கொலைக்கு சமமான சகோதரத்துவ வன்முறைகளில் காரணமாக நிலைமை மேலும் சிக்கலாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சகோதரத்துவ வன்முறைகள், தவறான வழிப்படுத்தலினால் செயற்பாட்டாளர்களினால் பல அடக்கு முறைக்கெதிரான போராட்டங்களில், அவ்வழிதான் வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான முறையாகக் கையாளப்பட்டுள்ளது. கொள்நெறிகள், தந்திரோபாயங்கள், தனிமனிதர்கள் தொடர்பாக அல்லது வேறு விடயங்கள் பற்றி எழுகின்ற வேறுபாடுகளை உரையாடல் மூலம், போராட்டத்தில் பங்குகொள்பவர்களிடையே தீர்த்துக்கொள்வது பொருத்தமானதுÉ பதிலாக, ஒருவரை மற்றொருவர் வன்முறை யூடாகத் தீர்த்துக்கட்டுதல் சரியான வழியல்ல. சகோதரத்துவ வன்முறை போராட்டத்தில் ஈடுபடுவோரிடையே ஏற்படும் பொழுது, மேலும் பிரிவுகளை உண்டாக்குவதுடன், பதில் வன்முறையினை விளைவித்து போராட்டத்தினைப் பலவீனப்படுத்துகின்றது. ஆட்களை ஒழித்துக்கட்டுவதால் அல்லது சமூகங்களை வெளியேற்றுவதால் ஏற்படும் மனக்கசப்பு நிலை தொடர்ந்து செல்ல முடிகின்றது. இதற்குச் சான்றாக இலங்கைத் தமிழ்ப் பிரிவினர்களிடையே நடந்த சகோதரத்துவ வன்முறைகள் 80களின் பிற்பகுதியிலும் மற்றும் 90களின் முற்பகுதியிலும் ஏற்பட்டனÉ மற்றும் இடையிடையே ஏற்படும் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிரான இனக்குழுமத் துடைத்தெடுப்புகள் 80 களிலும் அதற்குப் பின்னரும் நடந்தவற்றையும் எடுத்துக்கூறலாம்.
29. கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதை அனுமதிக்கும் ஒரு பண்பாடு மற்றும் வேறுபாடுகளை நன்று உரையாடல் செய்வதும் வேறு வெற்றியளித்துள்ள போராட்டங்களின் பிரதான இயல்புகளாகக் காணப்பட்டுள்ளன (உதாரணம், ரஷ;யப்புரட்சியும் பிரெஞ்சுப்புரட்சியும், தொடக்கக் கட்டங்களில், தென் ஆபிரிக்காவில் இன ஒதுக்கல் அமெரிக்க சிவில் உரிமை இயக்கம் – சென்ற நூற்றாண்டின் மூன்றாம் கால் நூற்றாண்டு, மற்றும் விடுதலைÆசுதந்திரம் தொடர்பான இந்தியாவின், மற்றும் கியூபாவின் இயக்கங்கள்) இவற்றுக்குப் பதிலாக வன்முறை, மாறுபாடு அனுமதிக்காமை ஆகியவை, ஒற்றுமையினை நிலை நாட்டுவது தேவையானது எனக்கருதினாலும், அவை சர்வாதிகாரத்தைத் தோற்றுவிப்பதற்கும், மேலும் அடக்கு முறை அதிகரிப்பதற்க்கும் வழிவகுக்கலாம். (உதாரணம், காலப்போக்கில் முன்னாள் ரஷ;ய சோசலிசக் குடியரசு, பிற்கட்டங்களில் பிரெஞ்சுப் புரட்சி மற்றும் இந்தியாவில், பாரதீய ஜனதாக்கட்சி (டீதுP) யின் ஆட்சிக்குப் பின்னாக இனங்களுக்கிடையே மோதல்கள்). மேலே குறிப்பிட்டவையில் இறுதியாக ஏற்படக் கூடியது, எண்ணிக்கையிலும் தரத்திலும் இயக்கத்தின் எதிர்காலப் பலத்தின் வலிமை குறைகின்றதுÉ சக்திகளின் நிலையின் சமன்பாட்டில் பாதகமான சாய்வுத் தன்மை ஏற்படமுடிகின்றதுÉ அதனால் மேலும் பெரும்பான்மையதிகார அடக்கு முறையின் அதிகரிப்புக்கு வழிகோலுகின்றது.
30. அரசின் அடக்கு முறைக்கெதிராக தமிழ்த் தலைவர்கள் தங்களுடைய போராட்டத்தினை ஆரம்பித்து நடாத்திவந்த காலத்தில் அவர்களுக்கு இருந்த தார்மீக நன்மதிப்பும், வன்முறைப் பண்பாடு காரணமாக குறிப்பாக, எல்லா இனக்குழும சிவிலியன்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை நடவடிக்கைகளினால், இழக்க நேரிட்டது. சிவிலியன்களுக்கு எதிரான நேரடியான வன்முறை நடவடிக்கைகளும், சனநாயக மற்றும் மனித உரிமைகள் நியமங்கள் தொடர்பாகப் பாராமுகமாக இருந்து வந்த நிலை, அரசின் வன்முறைக்கும் சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக நடாத்தப்படும் போராட்டத்தின் நியாயத்தன்மையின் பெறுமதியினைக் குறைக்கின்றது. சிறுவர்களைச் சேர்ப்பதும் அவர்களைப் போராளிகளாக உபயோகிப்பதும், சகோதரத்துவ வன்முறைகள் மற்;றும் கொலைகள், சித்தரவதை, மற்றும், மனிதப்பண்பற்ற ஈனச்செயல், மாறுபாடு அனுமதியாமை மற்றும் கருத்து வேறுபாடு அடக்கப்படுதல் ஆகியவற்றுக்குப் பல்வேறு தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் பொறுப்பாக இருந்துள்ள காரணத்தால், உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் அதிகளவான ஆதரவை இழக்க நேரிட்டது. அரசசார்பற்ற நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், புதினப் பத்திரிகைகள், பல்கலைக் கழகங்கள் பாடசாலைகள் மற்றும் வேறு நிறுவனங்கள் ஆகியவை வட கிழக்கில் தொழிற்பட்டு வந்த நிலையில் அவற்றின் சுயாதீனத் தன்மை, நேர்மை, முழுமை என்பவற்றை கீழறுத்துப் பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சிகள் எதிர்மாறான விளைவுகளைக் கொண்டுவருகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் உடனடியான சில பயன்களைத் தரக்கூடியவையாக இருப்பினும், அவற்றின் சமூகத்தின் மீதான நீண்ட கால தாக்கம் அதிகமாகப் பாதகமானவையாக உள்ளன. எதிர்மாறாக, பெறுமானங்களையும் மூலவிதிகளையும் தொடர்;ந்து நிலையாகப் பின்பற்றி வருவதால் போராட்டங்கள் முக்கியமான, காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடிகின்றது. மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் (ஆயசவin டுரவாநச முiபெ) நெல்சன் மன்டெலா (நேடளழn ஆயனெநடய) ஆகியோருடைய வெற்றிகரமான போராட்டங்கள் இதனை வலியுறுத்துகின்றன.
31. பிரதேச ரீதியான சிறுபான்மையினரின் உரிமைகள் அவைபற்றிய உணர்வுகள் ஆகியவை பற்றி கரிசனையுடன் நடந்துகொள்ளுதல் வேண்டப்படுகின்றது. சிங்கள மக்களிடையே இன்று கூடுதலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவது, (அரசாங்கம் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லையெனினும்), கூட்டாட்சிÆசமஷ;டி முறை மற்றும் இனங்களுக்கிடையே அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுத்தல், ஆகியவை தேசிய ஒருமைப்பாட்டையும் முழுமைப்பாட்டையும் மீளப் பெறுவதற்கு தேவையானவை என்பது. அதற்குப் பதிலிறுப்பாக, இலங்கைத் தமிழர்கள் அதிகாரம் பகிர்ந்து கொள்ளுதலை பிரதேசரீதியான தலை நகரத்தில் (திருகோணமலை) மற்றும் இப் பிரதேச சுயாட்சி, குறிப்பாக பிரதேச சிறுபான்மையினர் அதிகமாக இருக்கும உபபிரதேசங்கள் தொடர்பாக ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையேற்படுகின்றது. இனக்குழும வன்முறை, இனக்குழும அடக்குமுறை மற்றும் இடப்பெயர்வு ஆகியவற்றுக்கெதிராகப் பிரச்சாரம் செய்பவர்கள், மற்றைய சமூகங்கள் தொடர்பாக இனக்குழும வன்முறை, இனக்குழும துடைத்தெடுத்தல், இனக்குழும அடக்குமுறை மற்றும் சிவிலியன்களின் இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்காவிடில் அவர்களின் எதிர்ப்பியக்கமும் நியாயப்பாடு இழந்ததாகப் போய்விடும். நாகரிகமான முறையான அரசியல் பண்பாடு தேவையாக்குவது எதையென்றால், நாங்கள் எல்லா விதமான மனித உரிமைகளின் மீறல்களுக்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தல் அவசியம்É அத்துடன், பெண்கள் மற்றும் சிறுவர்கள், மற்றும் இடர்நேர்வுகளுக்கு ஆளாகும் குடிசனத்தின் பிரிவினர் ஆகியோரின் உரிமைகள் மற்றும் நலன்கள் என்பவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுதலும் வேண்டப்படுகின்றது. மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் வேறுபடுத்திய அடிப்படையில் போராட்டத்தை நடாத்துவது பொருத்தமற்றது மற்றும் நியாயமற்றது.
32. இவ்வுரையினை நிறைவுசெய்யும் பொழுது, கூறுவது, நாங்கள் ஒரு மிகவும் கடினமான நிலையில் இருக்கின்றோம். அச்சந்தர்ப்பத்தில், அமரர் பொன். கந்தையா அவர்கள் ஆழமான, விட்டுக்கொடுக்காத அர்பணிப்புடன், சமத்துவம், மனித உரிமைகள், இனத்துவ ஒத்திசைவு, மற்றும் உள்வாரியான சுயநிர்ணய உரிமை ஆகியவை தொடர்பாக அரசியலில் போராடியவர் என்பதையும், அவைகளினால் நாமும் உள்ளூக்கம்பெற்று அவற்றின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வரையில் நடந்துகொள்வது பொருத்தமானது. எனக்குக் கிடைத்த இந்தச் சிறப்புரிமையளிப்பில் கலந்து கொண்டு நானும் அன்னாரின் வாழ்வையும் தொலைநோக்கினையும் பாராட்டுவதில் பெரும் மகிழ்வடைகின்றேன்.
-பொன் கந்தையா அவர்களின் நினைவு தினப் பேருரை 22.10.2006
உசாத்துணைகள் :
Department of Census and Statistics
2002. “Statistical Abstract”
Foundation for Co-Existence (FCE)
July 2006. “Language Discrimination to Language Equality”
Hasbullah S.H.
August 2004. “Report on a Dialogue between Tamil – Muslim Women: Project on re – establishing and strengthening Tamil – Muslim relations in Northern Province”
October 2004. “Regain the Glory of Mannar through Tamil – Muslim amity: A situation report”
Nesiah, Devanesan
December 1998 “an Audit on the use of Tamil as an official Language in provinces outside the North – East. “Marga Institute and Official Languages commission 2001 “Tamil Nationalism,” Marga Monograph Series on Ethnic Reconciliation
Pathmanathan. S
1999 “Tamil Identity History and Histography” seminar on History, Identity and Historgraphy. December.
மொழியாக்கம் : சிவா