இலங்கை அரசின் சிங்களமயமாக்கல் திட்டத்தின் கீழ் கிழக்கில் நடைபெறுவது போல் யாழ்ப்பாணத்திலும் சிங்கள மக்களைக் குடியேற்ற இலங்கை அரசு திட்டமிடுகிறது. வன்னியில் அரச படைகளால் தமது சொந்த மண்ணிலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் மர நிழலிலும், தெருவோரங்களிலும் குடியிருக்கும் நிலையில் யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்படும் குடியேற்றம் குறித்து அரச சார்பு துணைக்குழுக்களின் கட்சித்தலைவர்களின் கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
யாழ்ப்பாணம் மேட்டுக்குடி சிந்தனையைப் பிரதிபலிக்கும் இவர்கள் கிழக்கில் நாளாந்தம் நடைபெறும் குடியேற்றங்கள் குறித்து மூச்சுக்கூட விட்டதில்லை. கோரமான பாசிச குடும்ப சர்வாதிகார அரசிற்கு மனித முகத்தை வழங்க முற்படும் இலங்கை அரச துணைக் குழுக்கள், இலங்கையில் எதிர்ப்பியக்கங்கள் தோன்றுவதற்கான மிகப்பெரும் தடையக அமைந்துள்ளன.
வடக்கில் சிங்கள மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்.கையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் விபரங்கள் படையினரால் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களைப் பார்வையிடச் செல்லும் செய்தியாளர்கள் கூட படையினரின் அனுமதியினைப் பெற்றே செல்ல வேண்டியுள்ளது.
மீள் குடியேற விரும்பும் சிங்கள குடும்பங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்குமாறு அமைச்சர் தேவானந்தா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் 523 சிங்கள குடும்பங்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் அரசியல்மயப் படுத்தப்படக் கூடாதென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமது அரச விசுவாசத்தை தெரிவிப்பதற்காக சிங்களக் குடியேற்றவாசிகளின் மீது மனிதாபிமானம் காட்டும் அரச துணைப்படைகளும் அவர்களின் நாடுகடந்த அடிவருடிகளும் அரசிற்கு அழுத்தம் வழங்க முனையும் ஏனையோரை அழிப்பதில் அனைத்து வழிகளிலும் முனைப்புக்காட்டுகின்றனர்.
தமிழர்கள் பிணங்கள் நடுத்தெருவில் நாய்கள் புசிக்க வீசியெறியப்ப்பட்ட வேளைகளில் அவர்களுக்கு அரசியல் இருந்தது. அழித்தொழிக்கப்பட்ட தமிழர்களில் எஞ்சியவர்கள் தெருக்களில் அனாதைகளாக, உண்பதற்கு உணவின்றி, உடுப்பதற்கு உடையின்றி, மனிதகுலம் வெட்கித் தலைகுனிய இனச்சுத்திகரிப்பை ராஜபக்ச குடும்பம் மேற்கொள்கின்ற போது இவர்களுக்கு அரசியல் இருந்தது. அது ராஜபக்சவின் அரசியல். மக்கள் விரோத அரசியல்.
சமூகப்பற்றுள்ள மனிதர்களின் மீதான அவதூறு அரசியல். தமது சொந்த நோக்கங்களுக்கான வியாபார அரசியல். சிங்கள் மக்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்படும் போது மட்டும் அரசியல் வேண்டாம் என்கின்றனர். அது அவர்களுக்கு வெறும் செய்தி மட்டும்தான்.
வன்னியில் மக்கள் தெருவோரங்களின் வாழ்க்கை நடத்தும் நிலையை அரசு உருவாக்கியிருக்கும் வேளையில், பெண்களைப் பாலியல் வதைக்கு உட்படுத்தும் நிலையில், அவசர அவ்சரமான சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசியல் பின்ன்ணி இல்லை என்று இவர்கள் கூறிவதன் பின்னால் சமூகவிரோத அரசியல் உள்ளது.
தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சமுக்தி அதிகார சபையின் தலமையக அதிகாரிகள் குழுவொன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளது.
தெற்கில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த சிங்களக் குடும்பங்களுக்கு அரச உதவிகள் கிடைப்பதற்கு பணிப்புரை வழங்கும் டக்ளஸ் தேவானந்தாவாவும், ஆனந்த சங்கரியும், புலம்பெயர் நாடுகளில் வாழும் அவர்களின் நீட்சிகளும், இவர்களின் எஜமானார்களான மகிந்த ராஜபக்ச குடும்ப சர்வாதிகார அரசும் வினாவெழுப்பபபட வேண்டும்.
வன்னியில் விலங்குகள் போல வாடும் மக்களுக்கும், கிழக்கில் அனாதரவாக விடப்பட்ட குடும்பங்களுக்கும் ஏன் இதே கவனிப்பும் உதவிகளும் வழங்கப்படக் கூடாது எனக் கோரவேண்டும். அதற்கான அழுத்தங்கள் இலங்கையிலும் இலங்கைக்கு அப்பாலும் பிரயோகிக்கப்பட வேண்டும். அழுத்தங்கள் பிரயோகிக்க முனையும் புலம் பெயர் தமிழர்களை ‘அரசியல் வேண்டாம் உதவி தேவை என்று’ குற்ற உணர்வுக்கு உள்ளாக்குபவர்கள் அரச அடிவருடிகள் என அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
-விஜிதா
யாழ்பாண மேட்டுக்குடியென பொருத்தமில்லாத ஒரு விடத்தை இழுக்கும் இவர் தான் தலித்என்பதை அடையாளம் காட்டுவதற்கு இங்கு அதை இழுக்கிறாரா அல்லது அது ஒரு புதுபசானா என்பது எனக்குப் புயவில்லை. எந்த அனுமதியும் இல்லாது இலங்கையில் எங்கும் குடியேறி உள்ள தமிழர்களைப் பற்றி அறியாத தவளையாக இனவெறியைக் கக்கும் அதே அழிவுத் தேசிய இனவெறியை துக்கி பிடிக்கும் இவர்களுக்கு மனிதபிமானம் பேச என்ன அருகதை இருக்கிறது? மனிதத்துக்காக கவலைப்படுபவன் சிங்களவன் தமிழன் என்று கவலைப்படமாட்டான். புலிகளால் விரட்டப் பட்டவர்கள் திரும்பி வந்தால் அதுக்கு பொய் சாயம் பூசமாட்டான். உரிமைக்காக கண்ணீவிடும் இவர்கள் எல்லாம் துரதேசத்தில் இருந்து தூக்கம் வரமால் வந்து எதையாவது எழுதுபவர்கள் அல்லவா?
Hey, dont talk bullshit. The tamils were not settled in other parts of the country (excluding northeast) with army and police giving protection. have you forgotten what happened in tirnco? from 3% sinhala population in 1950’s to 30% now. they were all settled with army and police protection by the government to change the demography. go and wask your brain in beira lake.
ராசய்யா நீங்கள் ஓபாமாவே? அவை எப்பவும் M…..f,, என்றூ சொல்வது மாதிரி உமக்கும் சொல்ல வெணூம் போல கிடக்கு.எம் ஊருக்கு வந்திருக்கும் விருந்தினரை வரவேற்பது நமது மண்ணீன் மரபு.அந்த குழந்தைகளயும்,பெண்களயும் பார்த்தும் நமக்கு மனசு வரவில்லை என்றால் நாம் மனிதராய் இருப்பதிலும் அர்த்தம் இல்லை.
Ooii thamilmaaran, they are not invited guests. do you know the phrase “thirantha veeddukkul vantha naai”. they are not guests they are government sponsored invaders. we didnt go to the south as government sponsored and protected invaders. figure out the differences in your brain or else get it washed as i suggested.
சற்றூ முன்னர் கிடைத்த தகவல்= நெருங்கிய நண்பரும் முன்னாள் யாழ்ப்பாணம் சின்னக்கடை மீன் வியாபாரியுமான சின்னான் நந்தா அலைபேசி எடுத்தார் டக்ளஸ் தலித் இல்லையாம்.பாசையூரும்,குருநகரும் எப்போதும் அடிபட்டுக் கொண்டிருப்பதால் அதை ஓரே ஊராக்கியது இந்தச் சின்னானின் மகன் நந்தாதான் என்பதும் முக்கியச் செயதி.கதை விடுவதில் கில்லாடிதான் போங்கள்.
சும்மா கிடக்கும் வீடுகளீல் அவர்கள் இருந்து விட்டுப் போகட்டும், சும்மா கிடக்கும் மண்ணீல் அவர்கள் வாழ்ந்து விட்டுப் போகட்டும்.நம் மண்ணூக்கு வந்திருக்கும் அந்த மனிதர்கள பாருங்கள்,குழந்தைகளூம், பெண்களூம்.நாங்கள் பாசம் காட்டுபவர்கள்,உறவு பாராட்டுபவர்கள். நம்மை நாம் எல்லோருக்கும் முன்மாதிரி ஆக்குவோம்.
யாழ்ப்பாணத்தில் மீளக் குடியமர சிங்களக் குடும்பங்கள் வருகை
யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறு வதற்காக மேலும் 300 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் இன்றும் நாளையும் யாழ் நகருக்கு வருகை தரவுள்ளதாக யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.அத்துடன் கடந்த 1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த 6 ஆயிரத்து 500இற் கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னிலங்கையின் பல பகுதியிலும் வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பலாலியில் உள்ள இராணுவ முகாமொன்றில் கோப்ரல் தர பதவி யில் கடமையாற்றுவதாக தன்னை அறிமுகப்படுத்திய லதித் பிரியந்த விக்கிரமசிங்க என்ற குடும்பஸ்தரே மேற் கண்டவாறு தகவல் வழங் கினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
1983 ஆம் ஆண்டிற்கு முன் னர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் பேக்கரி, மேசன், வியாபாரம் உள்ளிட்ட தொழில்களில் நாங்கள் ஈடுபட்டு வந்தோம்.1983 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வாக்களித்தோம் அத்துடன் யாழ்.சிங்கள மகாவித்தியாலயம் மற்றும் தமிழ்ப் பாடசாலைகளில் கல்விகற்றோம். எனினும் 1983 ஆம்ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து சென்ற நாம் அனுராதபுரம் சேனபுர முகாமில் தங்கியிருந்தோம்.
இதன்போது கூலித்தொழில், வியாபாரம் உள்ளிட்ட தொழில்களுக்காக குருநாகல், மாத்தளை, மாத்தறை, காலி உட்பட பல மாவட்டங்களுக்குச் சென்றோம். கடந்த 27 வருடங்களாக படையினரும் பொலிசாரும் எங்களை யாழ்ப்பாணத்தவர் (தேசிய அடையாள அட் டையிலுள்ளவாறு ) எனக் குறிப்பிட்டு தமிழ் மக்களைப் போன்றே சந்தேகத் துடன் பார்த்தனர்.
குறிப்பாக அனுராதபுரம் விமானப் படைத்தளத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தாக்கியளித்த போது படையினர் எம்மை துருவித்துருவி விசாரணை செய்தனர்.தினமும் மூன்றுவேளை எமது வீடுகளுக்கு வந்து விசாரணை நடத் தினர். விடுதலைப்புலி தற்கொலைப் படையினருக்கு நாங்கள் தான் சகல வசதியும் செய்து கொடுத்த தாக படையினர் குற்றஞ்சாட்டினர்.
கடந்த 21 வருடங்களாக இராணு வத்தில் கடமையாற்றும் என்னை இராணுவ உயர்மட்டம் சந்தேகத்துடனேயே பார்த்தது.இவ்வாறான பிரச்சினைகள் காரணமாகவே தமிழ் மக்களுடன் ஒற்றுமையாக எமது சொந்த மாவட்டத்தில் வாழ்வதற்காக நாம் இங்கு வருவதற்கு முடி வெடுத்தோம் என்றார்.
எனது பேரனார் பேக்கரி நடத்தினார்:
எனது தந்தையின் தகப்பனார் ஏ.எம்.அபயசேகர மாட்டீன் யாழ். புகையிரத நிலையத்திற்கு முன்பாக பேக்கரி நடத்தினார் என்கிறார் எச்.கே.செளந்தலா என்ற குடும்பப் பெண். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஏ.எம். அபயசேகர மாட்டீனுக்கு 18 பிள்ளைகள் அதில் ஒருவர் எனது தந்தையார்.
நான் பிறந்தது யாழ்ப்பாணத் தில். கல்விகற்றது யாழ்.சிங்கள மகா வித்தியாலயத்தில் நாங்கள் தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்து சென்று பல கஷ்டங் களை அனுபவித்தோம். எனவே தான் தமிழ் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக எமது சொந்த ஊரில் குடியமர்வதற்கு வந்துள்ளோம் என்றார்.
தமிழ் மக்களுக்கு முதலில் தீர்வு:
யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள டபிள்யூ.ஏ.மல்காந்தி தெரிவிக்கையில் நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு கடந்த திங்கட்கிழமை வந்தோம். மூன்று தினங்களாகியும் இதுவரை ஒரு அரச அதிகாரியும் எமக்கு உதவி செய்யவில்லை.ஆனால் எமக்குத் தெரிந்தவர்கள் மற்றும் அருகிலுள்ள தமிழ் மக்களே மூன்று தினங்களும் சாப்பாடு தந்து உதவினார்கள்.
எனவேதான் நாம் அரசாங்கத்தைக் கேட்கிறோம் தமிழ் மக்கள் படும் கஷ்டங்களுக்கு முதலில் நிரந்தரத் தீர்வை வழங்குங்கள். அத்துடன் எங்களையும் யாழ்ப்பாணத்தில் எந்த இடத்திலாவது வாழ்வதற்கு இடம் தாருங்கள்.எங்களுக்கு கே.கே.எஸ் வீதி நாச்சிமார் கோவிலடியில் சொந்த வீடு உள்ளது. எனினும் அங்கு தமிழ் குடும்பங்கள் உள்ளன. எனவே அவர்களை இனி அங்கிருந்து அகற்ற வேண்டாம். எங்களுக்கு அரசகாணியை ஒதுக்கித் தாருங்கள் என அரசாங் கத்தை கேட்கிறோம் என்றார்.
அங்கே அவர்களைக் கூட்டிச் சென்றது அரசாங்கம் குடியேற்ற முற்படுவதும், உணர்ச்சி நாடகம் நடத்துவதும் அரசாங்கம் தான் நண்பரே! இதே போல பல சம்பவங்கள் கிழக்கில் நடந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் வந்ததும் துள்ளிக் குதிக்கிறோம். சரி இப்போதாவது விழித்துக்கொள்வோம். எதிரிகளைப் பற்றிச் சிந்திப்போம். வெளிநாடுகளில் இருக்கும் உங்களுக்கு இனவாத அரசாங்கத்தால் மக்கள் படும் வேதனை தெரியாது. அரசாங்கத்தோடு சேர்ந்து கொண்டாடுவதற்காக நீங்கள் என்னவும் செய்யத் தயார். மூஸ்லிம்களும் கூட இப்போது அரசாங்கத்தின் அக்கிரமத்தை உணர்கிரார்கள்.
“யாழ்பாண மேட்டுக்குடி” என்பதில் பொருத்தமில்லாமல் என்ன இருக்கிறது? ‘
தலித்’ அல்லாத எல்லாரும் மேட்டுக் குடிகளா, என்ன?
அரசாங்கத்தை அண்டிப் பிழைக்கிற கூட்டத்துக்குத் தமிழ் ஏழைகள் பற்றி எள்ளளவு கவலையேனும் இருந்தால் சொல்லுங்கள்.
நடக்கிற அநியாயத்தைப் பற்றிப் பேசும் போது “புலிக் கதை” கதைப்பது மட்டும் பொருத்தமான பேச்சா?
இலங்கை சாதி அமைப்பின்படி சைவவேளாளரே மேட்டுக்குடியாகவும் மற்றவர்கள் அண்டிப் பிழைக்கும் தலித்துக்களாகவும் பார்க்கப்படுகிறது.
இல்லை என தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார் சயிக்கிள் கடைச் சாந்தன்.லண்டன்ல வந்து டோல்ல காசு சேர்த்து இப்ப தேசம் என்ற விற்பனை அங்காடி வைத்து தமிழருக்கு விசம் விற்கிறார்,அவர் சொல்வது உண்மையாய் இருக்கும்.
அது மேட்டுக்குடி என்ற சொல்லின் தவறன பாவானை.
மேட்டுக் குடி என்பது ஏழைகளைக் குறிக்க இயலாது.
ஐயா,ராம்மு!///இலங்கையில் எங்கும் குடியேறியுள்ள தமிழர்களைப் பற்றி அறியாத////யார் அறியாமல் பேசுவது?தமிழர்கள் இலங்கையெங்கும்”தன்னிச்சையாகவே”குடியேறினார்கள்!இவர்கள் போல் பெட்டி,படுக்கை,தட்டுமுட்டுச் சாமான் களுடன் போய் அரசாங்கம் எங்களை இன்ன,இன்ன இடத்தில் குடியேற்ற வேண்டுமென்று தொடரூந்து நிலையங்களிலும்,பேரூந்து நிலையங்களிலும்,வீதியோரங்களிலும் போய் நிற்கவில்லை!சிங்கள மக்கள் வடக்கில்,கிழக்கில் முன்னைய காலங்களில் இருந்தது என்னவோ உண்மை தான்!ஆனால் இப்போது வந்திருப்போரில் மிகச் சொற்பமானவர்களே உண்மையில் இங்கிருந்தவர்கள்!உள்ளூராட்சி,மாகாண சபை தேர்தல்கள் அண்மிக்கும் இந்நேரத்தில் எவரோ ஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே இவர்கள் வந்திருப்பதாகத் தெரிகிறது!மற்றும்படி குடாவில் போர்?!முடிந்த பின் தேனும்,பாலும் ஆறாக ஓடுகின்றதென்றா வந்திறங்கியிருக்கிறார்கள்?சிங்களவர்கள் புலிகளால் விரட்டப்பட்டதாக உங்களுக்கு யார் சொன்னது?உங்கள் சுய விருப்பின் பேரில் சொல்கிறீர்களா?வந்திருப்போரே புலிகளை இதில் இழுக்கவில்லை!நீங்கள் ஏன் புனைகிறீர்கள்?மனிதாபிமானம் பற்றிப் பேச உங்களுக்கோ,சங்கரிக்கோ,தேவையில்லானந்தாவுக்கோ என்ன அருகதை இருக்கிறது?யாழில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே குடியேற்றங்கள் இடம்பெற்ற பகுதிகள் தெரியும்,அந்தக் குடியேற்றங்கள் கூட அரச காணிகள் அல்ல!தனியாரின் காணிகள் !காணி உச்ச வரம்புச் சட்டத்தின் மூலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு காணியற்றோருக்கு குடியிருக்க மட்டும் வழங்கப்பட்டவை!அவை,மணியந்தோட்டம்,அரியாலை கிழக்கில் பூம்புகார்,நாவற்குழி தொடரூந்து நிலையத்தை அண்டிய பகுதி,யாழ் நகரின் நாவாந்துறைப் பகுதி ஆகியன!மேலும் வந்திருப்போர் வாடகைக்கே குடியிருந்ததாகவே சொல்கிறார்கள்!ஒரு சிலருக்கு மணியந்தோட்டப் பகுதியில் காணி வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது!நாங்கள் உரிமைக்காக தூர தேசத்திலிருந்து கண்ணீர் வடிக்கிறோம்,எங்கள் பிள்ளைகளுக்கும் இன விடுதலை பற்றிய அறிவுமுண்டு!ஏனெனில் அவர்கள் ஜன்நாயக நாட்டில் பிறந்தவர்கள்!உங்களையும்,என்னையும் போல் அடிமைத் தளையில் சிக்கிப் பிறந்தவர்கள் அல்ல!நீங்கள் ஏதோ ஜனநாயக நாட்டில் பிறந்தவர் போல் பில்டப் கொடுக்கிறீர்கள்!வாழ்க வளமுடன்! நக்கிப் பிழைத்து!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாமும் கள்ளப் பாஸ்போட்டுடன் இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்த போது இங்குள்ளோர் தமது பிரச்சனைகள விட்டு நம்து குழந்தைகளயும், பெண்களயும் பார்த்து பரிதாப்பட்டார்களே தவிர கோப்பப்படவில்லை………………தமிழராகிய நாம் தனித்துவமானவர்கள்.நமது பண்பாடு மேம்பட்டது கோபப்படாது சிந்திப்போமானால் தமிழராய் வாழும் நம் மகத்துவம் புரியும்.தமிழும்,சைவமும் சாதியவாதம் என மாயாவாதம் செய்தலை விட சைவத்தை புரிந்தால் கார்ல் மார்க்ஸ் காட்டும் சமத்துவம் புரியும்.
ஏ.எம். அபயசேகர மாட்டீனுக்கு 18 பிள்ளைகள், சரி சராசரி எட்டுப் பிள்ளைகள் ஒரு குடும்பத்திற்கு என்று வைத்துக்கொண்டாலும் 6500 குடும்பத்திற்கும் மொத்தமாக 52000 சிங்களவர் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கவேண்டும். என்னே மாயை!
இவர்கள் அன்று வந்தார்கள் வேலை தேடி இன்று வருகிறார்கள் காணி வீடு சொத்துத் தேடி.
1983 இல் அடித்து, எரித்து, ஓடோட கலைத்துக் கொலைசெய்து வீடு, வாசல், சொத்து, சொந்தம் எ ல்லாம் இழந்து அகத்திலும் புறத்திலும் வாழும் தமிழர் திரும்பிப்போய்க் கேட்டால் கொடுப்பாரோ விஜயனின் பரம்பரைமார்?
20 வருடங்களுக்குமேல் சொந்த இருப்பிடம் இழந்து யாழ்ப்பாண குடாநாட்டில் அகதியாக வாழும் இலட்சட்திற்கும்மேலான தமிழரைத் தெரியுமா கண்மூடி கதையளக்கும் விண்ணரே! அதிஉயர் பாதுகாப்பு வலயம் இவர்களுக்கில்லை இனி. இன்றும் இனியும் வரப்போகும் சிங்கள “சகோதரருக்குத்தான்.”
திட்டமிட்டு வரும் இடம்பெயர்வுகளும் குடியேற்றங்களே! இந்த குறிப்பிட்ட சிங்கள மக்களை ஒருங்கிணைத்தவர்கள் யார்?
இந்த நேரத்தில் வடக்கிலிருந்து தமிழரின் ஏகப் பிரதிநிதிகளால் விரட்டப் பட்ட முஸ்லிம்களையும் நினைவு கூருவது பொருந்தும்.
ஒரு அநியாயத்தை இன்னொன்றிலிருந்து விலக்கிப் பர்ர்ப்பது இயலாது.
எல்லார்க்கும் நியாயம் பற்றி இனியாவது சிந்திப்போம்.
இலங்கையில் எங்கு சென்றாலும் தமிழர்கள் வாழ்வதை பார்க்கலாம். ஆனால் சிங்களவர்களை அப்படிப் பார்க்க முடியாது. இலங்கை வாழ் தமிழர் – சிங்களவர் – இசுலாமியர் – பறங்கியர் – மலேயர் (இந்துநேசியர்) அனைவரும் தாம் விரும்பிய பகுதிகளில் வாழலாம்.
தமிழர்கள் புலம் பெயர்ந்து வந்த போது எவரும் காணி – நிலம் – சொத்து – வாங்கி வரவில்லை. ஒரு சொப்பிங் பேக்கோடு வந்தவன் > அந்த நாட்டு குடியுரிமையும் பெற்று காணி – நிலம் – சொத்து சுகத்தோடு தமது பிள்ளைகள் சனநாயக நாட்டில் பிறந்தவர்கள் என சனநாயகம் பேசுகிறார்கள். இப்படி பேசுவோருக்கு இந்த நாட்டில் ஒரு தொப்புள் கொடி உறவுதானும் இருந்ததில்லை. அதிகம் வேண்டாம் > இலங்கையிலிருந்து இந்தியா வந்த இலங்கை தமிழர் எப்படி வாழ்கிறார்கள் என்று எண்ணினாலே போதும்? விடை கிடைக்கும். இலங்கையில் பிறந்த அனைவருக்கும் இலங்கை தாய்நாடு. அவர்கள் விரும்பிய எங்கும் போகலாம் – வரலாம் – இருக்கலாம். இந்நிலை உருவாகும் போது மக்களிடம் அந்யோன்யம் அதிகரிக்கும். புரிந்துணர்வு உண்டாகும். பிரச்சனைகள் எழாது.
ஒரு இனம் அல்லது ஒரு குழு ஒரே இடத்தில் இருக்கும் போது அங்கே குழுவாதம் உருவாகும். சிங்கையை உருவாக்கிய லீ > அனைத்து மக்களையும் கலந்து வாழும் நாட்டை உருவாக்கினார். அது இனங்களிடையே ஐக்கியத்துக்கு வழி கோலியதே தவிர > அழிவுக்கு வழி கோலவில்லை.
புலம் பெயர்ந்தவர்களை > இவர்கள் வாழும் நாட்டில் பெரும்பாலும் இரண்டாம்தர பிரசையாக நடத்திலதில்லை. ஒரு உடுப்போடு வந்தவனுக்கு துணி கொடுத்தார்கள் – உண்ண உணவு கொடுத்தார்கள் – வாழ பிச்சை பணம் ( சோசல் காசு) கொடுத்தார்கள் – படிக்க கல்வி கொடுத்தார்கள் – வைத்திய செலவு கொடுத்தார்கள் – இலவசமாக அனைத்தையும் கொடுத்தார்கள். அந்த நாட்டு குடியுரிமை கொடுத்தார்கள். எல்லாவற்றையும் வாங்கிய இவர்கள் > இலங்கையில் பிறந்த ஒருவனுக்கு இலங்கையில் அவன் விரும்பிய இடத்தில் வாழ்வதை தடுக்க > இங்கிருந்து சனநாயகம் பேசுகிறார்கள்? உங்களுக்கு ஒரு நியாயம்? அடுத்தவனுக்கு ஒரு நியாயம் ? நல்லாயிருக்கு. வாழ்க சனநாயகம்.
மாயா,
தமிழர்கள் வாழ்வது இயல்பான இடப் பெயர்வுகளால், சிங்களவர்கள் குடியேற்றப்படுவது வன் முறையான திட்டமிட்ட குடியேற்றம். அவர்களின் நோக்கம் தமிழர்களின் செறிவையும் பிரதிநிதித்துவத்தையும் அழிப்பதே. இது தெரியாமலா கதைக்கிறீங்க?
டாநாட்டில் சிங்கள மக்களின் பிரச்சினைகளை குறுகிய, சுயலாப அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்டனம்! (News)—————————————————–யாழ்.குடாநாட்டில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்ற மக்களுக்கும் அதேநேரம் மீள் குடியேறியுள்ள மக்களுக்கும் குடியேறுவது தொடர்பில் காணிப் பிரச்சினைகள் தொடர்ந்து நிலவிவரும் நிலையில் குடாநாட்டில் காணிகளது உரித்து தொடர்பில் விரைவில் காணிக் கச்சேரி ஒன்றை நடத்த வேண்டியுள்ளதாகவும் இதன் பின்னரே மீள் குடியேறவுள்ள ஏனைய மக்கள் தொடர்பில் ஆராய முடியும் என்றும் தற்போது மீளக் குடியேறும் நோக்கில் யாழ்.வந்திருக்கும் சிங்கள மக்கள் இங்கு தாங்கள் வாழ்ந்ததற்குரியதாக சமர்ப்பித்திருக்கும் ஆவணங்களை ஆராய்ந்து பார்க்கும் முகமாக யாழ்.அரச அதிபரிடம் வழங்கியுள்ள நிலையில் இம் மக்களது பிரச்சினை குறித்து ஒரு தீர்மானத்திற்கு வர தனக்கு மூன்று மாத கால அவகாசம் தேவை என்றும் பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று காலை யாழ்.புகையிரத நிலையக் கட்டிடத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் அவர்கள் அங்கு தங்கியிருக்கும் அம் மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தாங்கள் ஐம்பது அறுபது வருடகாலமாக யாழ்.குடாநாட்டில் பல்வேறு இடங்களில் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்ந்து வந்ததாகவும், தாங்கள் தனிச் சிங்கள மக்கள் அல்ல என்றும் தங்களுள் தமிழ் மக்களும் உறவுகளாகக் கலந்திருப்பதாகவும் தெரிவித்த அம் மக்கள் தங்களை தமிழ் மக்களுடன் மீண்டும் இணைத்துக் கொள்ள உதவுமாறு கேட்டுக் கொண்டதுடன் இன்றும் கூட தமிழ் மக்களே தமக்கு உணவு முதற்கொண்டு பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகவும் அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தனர்.
இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வாடகை அடிப்படையில் குடியேற விரும்புபவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டியதுடன் யாழ்.குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற அனைத்து மக்களும் மீளக் குடியேறி, சகோதரத்துவத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்பதே இங்குள்ள தமிழ் மக்களதும் தனதும் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.
கடந்த கால கசப்புணர்வுகளை ஒரு கெட்ட கனவாக மறந்து விட்டு எமக்கான எதிர்காலத்தை ஒளிமயமானதாக ஆக்கிக் கொள்வதில் அனைவரும் ஒத்துழைப்புடன் வாழ வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்ததுடன் தற்போது சிங்கள மக்களில் பலருக்கு இங்கு காணிகள் இருந்திருக்கவில்லை என்ற விடயம் உறுதியாகியுள்ள நிலையில் இவ் விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து பார்க்க தனக்கு கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்தார்.
இம் மக்களது பிரச்சினையை ஒரு சிலர் குறுகிய சுயலாப அரசியலாக்குவதற்கு முயற்சிப்பதை வன்மையாகக் கண்டித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒருநாடு ஒரே மக்கள் என்ற அடிப்படையிலேயே நாம் இப்பிரச்சினையை நோக்குகின்றோம் என்றும் எனவே இவ்வாறான மனிதாபிமான விடயங்களை தயவு செய்து எவரும் குறுகிய சுயலாப அரசியலுக்காகப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
//ஒருநாடு ஒரே மக்கள் என்ற அடிப்படையிலேயே நாம் இப்பிரச்சினையை நோக்குகின்றோம் // டக்ளஸ்
நானும் இலங்கையின் ஒரு மூலையில் தான் வாழ்கிறேன். இது ஒருநாடு ஒரு மக்கள் அல்ல. அடக்கப்படும் தேசிய இனமும் அடக்கும் அரசையும் கொண்ட நாடு.
நீங்கள் ராசபக்சவின் குடைக்குள் வாழும் போது அடக்குபவனும் அடக்கப்படுபவனும் ஒரு மக்களாகத் தான் தெரிவர். இப்படிச் சொல்ல உங்களுக்கு அருவருப்பாக இலையா?
//இம் மக்களது பிரச்சினையை ஒரு சிலர் குறுகிய சுயலாப அரசியலாக்குவதற்கு முயற்சிப்பதை வன்மையாகக் கண்டித்த அமைச்சர் டக்ளஸ்// எது குறுகிய சுயலப அரசியல்? வன்னியில் ஆயிரக்கனக்கில் கொல்லப்பட்ட வேளையில் மகிந்தவுக்கு ஆதரவு கொடுத்ததா? கிழக்கில் ஆமிக்காரரோடு வந்து மக்களை அடித்து விரட்டிய போது பேசாமல் இருந்து கலாச்சார நிகழ்ச்சி நடத்தியதா? இப்படி எத்தன சம்பவங்கள்! சிங்கள மக்கள் அடாவடித்தனமாக காணிகளைப் பறிக்க வரும் போது மட்டும் குறிகிய லாபமா? நீங்கள் டக்ளஸ் ஆளா?
அனுராதபுரம் வசுவாக்குளம் போன்ற இடங்களில் வாழ்ந்த தமிழ் மக்களை ( 83ம் ஆன்டு அடித்து விரட்டி அந்தமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து வாழ்ந்து கொன்டிருக்கின்ற சிங்கள்வர, அந்த இடங்களை எங்கள் அடிமை அமைச்சர் மீட்டுத்தருவாரா??
அடிமை அமைச்சர் இதுவரை எத்தனை வேட்டி மாற்றீ இருப்பார் ஆனால் சால்வை போடாத தமிழ் அமைச்சர் இவரால் காலி, அனுராதபுரம், பொலனறூவை என வாழ்ந்த சைவத் தமிழரது வீடுகள திரும்ப வாங்கித் தர முடியுமா?தமிழரைக் கால்நடைகளாகவே நினைக்கும் கோத்தபாயா போன்றோரால் முடியுமா?பேச்சுவார்த்தைக் காலத்தில் புலிகள் இதைக் கேட்டார்களா? இனவெறீ பாராட்டும் சிங்கள் பெளத்தம் தூசி தட்டப்பட வேண்டும்.
தமிழ்மாறன் கூர்ந்து கவனியுங்கள் மேலேயுள்ள படத்தில் டக்கிழசு பெருமாழ் தோழில் சால்வை போட்டிருப்பதுப்போலத்தான் தெரிகின்றது,
இலங்கை கொமன்வெல்த் கேம்ஸீல் இன்றூ காலை தங்கம் வென்றீருக்கிறது.மல்வராய்ச்சி எனும் முப்பது வயதுக்காரர் வேல்ஸ் காரரை வென்றீருக்கிறார்.குத்துச் சண்டக்கான மெடல் இது.