யாழ்ப்பாண குடாநாடு மற்றும் வன்னியில் இராணுவத்தினரின் பிரசன்னமானது மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படையினர் நிலைநிறுத்தப்படும் நடவடிக்கையானது இன்றியமையாதது எனவும் சில தரப்பினர் இதனை தங்கள் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால அரசாங்கங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதனால் பாரிய பின்விளைவுகள் ஏற்பட்டதாகவும் அதே தவறை தாமும் செய்ய விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்கக் கூடிய சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ ஆட்சியையும் இனச்சுத்திகரிப்பையும் நடத்திவரும் இனக்கொலையாளிகளான ராஜபக்ச குடும்பம் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கிறோம் என்று ஒரு தேசிய இனத்தையே இல்லாதொழிக்கின்றன.