வடக்கில் ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாகவும், இதனால் பல்வேறு சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ஆனந்த சங்கரி, ஜனாதிபதிக்கும் ஊடகங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஆயுதக் குழுக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளமை அதிருப்தி ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு அவசியமென்றால் அரசாங்கப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், அரசியல் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் காரணமாக சுதந்திரமாக எவரும் சாட்சியமளிக்க முன்வருவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தைத் தவிர வேறு எந்தக் குழுவும் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை எனவும், தமிழர் விடுதலைக் கூட்டணி யாரைச் சுட்டுகின்றதென்பது புரியவில்லை எனவும் ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது.
யாழில் ஒரே மேடையில் தோன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மகிந்த இராஜபக்ஷவும் அதே அரசாங்கத்தில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அம்மைச்சராக பதவி வகிக்கும் “ஜனநாயாக” கட்சி எனக் கூறப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் முன் தோன்றி எதிவரும் தேர்தலில் தாம் இணங்கி…… அங்கி…… இணக்க அரசியல் செய்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் வாக்கு கேட்டும் நிலையில் அதே நேரத்தில் அன்று இரவே யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கான வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்புகையில், அதிகாலை 1.30 மணியளவில் அதே வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் ராமநாதன் அங்கயன் குழுவினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாக யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். (இவ் யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவும் வெற்றிலை சின்ன கூட்டிலேயே போட்டிபோட்டு மேயர் ஆகியவர் என்பது குறிப்பிடத்தக்கது).
மேலும் யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களின் அறிக்கைப்படி:
யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கான வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்புகையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் (அதாவது நேற்றைய தினம் 01) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.
ராமநாதன் அங்கயன் குழுவினர் தன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கும் அதேவேளை, தனது கணவர் மற்றும் வாகன சாரதி ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் யோகேஸ்வரி பற்குணராஜா குறிப்பிட்டார்.
இதன்போது தனது வாகனக் கண்ணாடிகள் அடித்து சேதமாக்கப்பட்டதாகவும் எனது தலை முடியைப் பிடித்து வெளியே இழுத்த இராமநாதன் தங்களுடைய வாகனத்தில் என்னை ஏற்ற முயன்றார். அவர்களின் பிடியிலிருந்து தப்பியோடிச் சென்ற நான் மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் அடைக்கலம் புகுந்து அங்கிருந்தவாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தகவல் கொடுத்தேன்.
உடனடியாக அமைச்சர் அவர்கள் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார். அதன் பின்னர் அங்கிருந்த அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். தங்கள் வாகனத்தைத் தாங்களே பிஸ்டலால் சுட்டுவிட்டுத் தீயிட்ட அங்கஜனின் குழுவினர் அதன் பின்னரே அங்கிருந்து தப்பியோடினர்.
இதன் பின்னர் நான் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளேன்.
இதிலிருத்து என்ன தெரிகிறது இவர்கள் தங்களிர்கேயே ஒற்றுமை இல்லாமல் இணங்கி… இணங்கி…. குத்வேட்டுபடுபவர்கள், கார்களைக் கொளுத்துபவர்கள், ஓர் பெண்ணின் தலை முடியைப் பிடித்து வெளியே இழுத்து தங்களுடைய வாகனத்தில் என்னை ஏற்ற முயன்றவர்கள் (அதுவும் யாழ் மாநகரசபை மேயர்), சாதான மக்களை எப்படி நடத்துவார்கள்?
இதற்கு முன்பு இதே நிகழ்ச்சி அமரர் மகேஸ்வரனின் மனைவிக்கு காரைநகர் வலந்தலைச் சந்தியில் டக்கிளசு தேவானந்தாவின் ஜனநாயாக கட்சியினரால் நடந்தது என்பதும் நினைவு கூறப்பட்டது.
இணைய செய்தி வாசியும் வாசகர்களே வாக்களிக்கப்போகும் உங்கள் தாயக உறவுகளை அறிவுறுத்துங்கள்!
இந்நேரத்தில் வாக்காளாராகிய நிங்கள் சிந்திக்கும் நேரம்!
இப்படிப்பட்டவர்கட்கு வாக்களிக்கப்போகின்றீர்களா?
எல்லாவற்றிற்கும் மனித நேயமும்; மனிதாபிமானமும் வேண்டும்!
– அலெக்ஸ் இரவி
மேலும் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் மீதான தாக்குதல் பற்றிய விபரத்திற்கும், அம்மைச்சரின் வண்ட்வாலங்களிர்க்கும் முன்னைய செய்தியையும் பின்னூடங்களையும் வாசிங்கள்:
https://inioru.com/?p=11903
பலவாறான அரசாங்கச் சார்புக் குப்பைகள் வேண்டாம் என்பது சரி.
இவ்வளவு காலமும் தமிழ் மக்களை இந்தியா, அமெரிக்கா, தமிழீழ்ம் காட்டி எமாற்றிய அயோக்கியக் கூட்டத்துக்கு வாக்களித்து என்ன கிடைக்கும்?
இன்னமும் தங்கள் பிழைகளை ஏற்க மாட்டார்கள். தங்கள் திட்டங்களைச் சொல்ல மாட்டார்கள். இவர்களை என்ன செய்வது?
கறித்தூள்!
அ
ரசாங்கம் மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்டது. மக்களைப்பாதுகாப்பதும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபடுவதுதான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மகான்க ளின் கடமை. அதை விட்டு மற்றநாடுகள் போல் அல்லது மற்ற இயக்கங்கள் போல் நீங்களும் செய்வதெனில், உங்களுக்கெல்லாம் எதுக்கடா அரசாங்கம்?
mariyathamilan:
தாங்கள் என்னவாக மாறினீர்களோ தெரியவில்லை.
உங்கள் இடுகை அது உருப்படியான மாற்றம் எனக் காட்டவில்லை.