கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு குடியேற்றங்களை நடத்தி தமிழ், முஸ்லிம் மக்களை சிறுபான்மையினராக மாற்றி வருவதற்கு இணையான திட்டத்தை வடக்கில் அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. வடமாகாணத்தில் குறிப்பாக வன்னி பெருநிலப்பரப்பில் தமிழர்களை சிறுபான்மையினராக மாற்றிவிடும் கைங்கரியத்தில் அரசாங்கம் முனைப்புடன் செயற்படுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழர்களை பொறுத்தவரையில் இந்த அரசாங்கத்திற்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒரு முகத்தை வைத்துக்கொண்டு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர். அடுத்த முகத்;தை வைத்துக்கொண்டு தமிழர்களின் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக இருக்கின்ற தமிழர் தாயகம் என்ற தளத்தை தகர்க்கும் காரியங்களை கச்சிதமாக செய்கின்றனர். இந்த இரண்டாம் முகத்தை அம்பலப்படுத்தும் சாத்வீக போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய தமிழ் கட்சிகளும் இவ்வாரம் வவுனியா நகரில் ஆரம்பித்திருக்கின்றன. இ;ந்த சாத்வீக செயற்பாட்டிற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை உறுதியுடன் வழங்குகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தெகிவளை பகுதியில் இடம்பெற்ற ஒரு அசம்பாவித சம்பவம் காரணமாக திங்கட்கிழமை வவுனியாவில் நடைபெற்ற சாத்வீக உண்ணாவிரதத்தில் நேரடியாக கலந்துகொள்ள என்னால் முடியாமல் போய்விட்டது. உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளும்படி எமக்கு அழைப்பு விடுத்திருந்த சகோதரர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு இது பற்றி நான் அறிவித்துள்ளேன்.
தமிழ் மக்களின் நியாயமான தேசிய அபிலாசைகளை வென்றெடுக்கவும், அரசாங்கத்தின் இரண்டாவது முகத்தை அம்பலப்படுத்தவும் வடகிழக்கின் தமிழ் தலைமைகளால் நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் நாம் உறுதியுடன் துணைநிற்போம். உரிமைக்கு குரல் கொடுக்கவும், உறவுக்கு கைக்கொடுக்கவும் ஜனநாயக மக்கள் முன்னணி ஒருபோதும் தயங்காது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய தமிழ் கட்சிகளும் ஒன்றுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. தமிழர்களின் நிலங்களும், வீடுகளும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்படவேண்டும். உள்நோக்கம் கொண்ட காணிப்பதிவு நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் ஆகிய தமிழர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருவாரியாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களின் காணி நிலங்களை சிறுக, சிறுக அரித்து அபகரித்துக்கொள்வது பெரும்பான்மைவாத அரசாங்கங்கள் தொன்று தொட்டு கடைப்பிடிக்கும் கொள்கையாகும். தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம் அல்லது மாகாணம் எஞ்சியிருந்தால்தானே தமிழர்களும், முஸ்லிம்களும் தேசிய உரிமைக் கோரிக்கைகளை முன்வைப்பார்கள். அந்நிலைமையை மாற்றிவிட்டால் உரிமைக் கோரிக்கைகளுக்கு இடமிருக்கவே முடியாது என்பதுவே இனவாதிகளின் திட்டமாகும். சுவர் இருந்தால்தானே, சித்திரம் வரைய முடியும். எனவே சுவரையே இடித்து தள்ளிவிட்டால், சித்திரத்திற்கு இடமிருக்காது என்ற கபடமான இனவாத நோக்கில் அரசாங்கம் செயற்படுகின்றது. இதையும் நாங்கள் சகித்துக்கொள்வோமேயானால் எதிர்காலத்தில் எதுவும் மிஞ்சாது என்பதை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழக்கூடிய சூழலை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் உண்மையிலேயே விரும்புகின்றதா என்பதற்கான பதிலை இன்று நாம் தெரிந்துகொள்ள விரும்புகின்றோம்.
கருத்துந்ன்றாகத்தான் உள்ளது ஆனால் இந்தநிலைமைக்கு தமிழர்களை கொண்டு வந்தவர்கள் , புலிகல் என்பதனையும் சொல்லவேண்டும், இல்லையேல் எப்போதேநல்ல தீர்வு வந்திருக்கும், இப்போது காலம் கடந்து விட்டது, த்னி மானிலம் தமிழர் பிரதேசம் என்பது இனி மெல்ல மெல்ல மறையும், எல்லா புகழும் தேசிக்காய் தலைவனுக்கே
சபாஷ்,வீரன்!ம்…ம்…ம்………….அப்புறம்?
கார்த்திகை 26 உங்கள் தேசிக்காய் தலைவர் வந்து அப்புறம் சொல்வார், அதுவரை பொறுத்திருங்கள்
என்ன இன்னும் தூக்கமா,
கேள்வி: : சர்வதேச நெருக்கடிக் குழு போன்ற அமைப்புகள் ஏன் எல்.ரீ.ரீ.ஈ புரிந்த அட்டூழியங்களைப் பற்றி மௌனம் சாதிக்கின்றன மற்றும் இப்போது அரசாங்கத்துக்கு எதிரான யுத்தக் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை இன்னும் மிக உயர்ந்த குரலில் எழுப்பி வருகின்றன? அரசாங்க தரப்பினருக்கு மட்டுமே பொறுப்புகூறும் கடப்பாடு உள்ளதா, அதேவேளை அரசாங்கமொன்றில் பங்கு கொள்ளாதவர்கள் பாரியளவில் மனித உரிமை மீறல்களைப் புரிந்து விட்டு தப்பிக்க முடியும் எனக் கருதலாமா?
பதில்: சர்வதேச நெருக்கடிக் குழு எல்.ரீ.ரீ.ஈ புரிந்த அட்டூழியங்களைப் பற்றி மௌனம் சாதிக்கின்றது எனக்கூறுவது சாதாரணமாக உண்மையில்லை. நெருக்கடிக் குழுவின் ஆதி முதலான அறிக்கையிலிருந்தே எல்.ரீ.ரீ.ஈ யினரின் குற்றங்களைப்பற்றி தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நவம்பர் 2006ல் வெளியிட்ட எங்களது முதலாவது அறிக்கையான “சமாதான முயற்சிகளின் தோல்வி” என்பதில் நாங்கள் எல்.ரீ.ரீ.ஈ மாற்றுக் கருத்துள்ளவர்களை தொடர்ந்து கொலை செய்து மௌனமாக்கி வருகிறது. சிறுவர் போராளிகளை படையில் சேர்க்கிறது மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஒரு ஏகாதிபத்திய ஆட்சி நடத்துகிறது என்றெல்லாம் எழுதியிருந்தோம்.
சமாதான நடவடிக்கைகளின்போது எல்.ரீ.ரீ.ஈ யினரின் மோசமான மனித உரிமை மீறல்களை, நோர்வே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்கள் என்பனவனற்றால் நிறுத்தியிருக்கக் கூடிய முயற்சிகளை செய்யத் தவறிவிட்டன என்று நாங்கள் மிகக் காரசாரமாக விமாசித்திருந்தோம். இந்த விமர்சனம் எங்களது 2007 ஜூனில் “ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் நெருக்கடி” என்கிற அறிக்கையில் திரும்பவும் எழுப்பப் பட்டிருந்தது. அதில்; “எல்.ரீ.ரீ.ஈ வேண்டுமென்றே இராணுவத்தினரை தூண்டிவிடும் வகையில் தாக்குதல்களை நடத்துவது மற்றும் சிங்களப் பொதுமக்கள் அதேபோல மாற்றுக் கருத்துள்ள தமிழர்கள் ஆகியோர்மீது நடத்தும் வன்முறையான அடக்குமுறைகள் மற்றும் பலவந்தமாக சிறுவர்களையும் வயது வந்தவர்களையும் படையில் இணைப்பது”என்பனவற்றைப் பற்றி நாங்கள் விரிவாக ஆராய்ந்திருந்தோம். மே,2007ல் வெளியான “யுத்தத்தின் இடையில் அகப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம்கள்” எனும் அறிக்கையில் எல்.ரீ.ரீ.ஈ 1990 களில் வடபகுதி முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றியது, மற்றும் கிழக்கில் முஸ்லிம்களை கொலை செய்தது போன்றவற்றை மிக விரிவாக விவாதித்திருந்தோம். எங்களது ஜனவரி, 2008 அறிக்கையில் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு “ஒரு சுதந்திர தமிழ் நாட்டுக்கான கோரிக்கையை பகிரங்கமாகவே கைவிடும்படியும் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், கட்டாய ஆட்சேர்ப்பு, பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் அரசியல் மாற்றுக் கருத்துள்ளோர் மீதான ஒடுக்குமுறை, என்பனவற்றை நிறுத்தி சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் என்பனவற்றை முழுதாக மதித்து நடக்கும்படி” நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மார்ச் 2009ல் நாங்கள் எல்.ரீ.ரீ.ஈ யினரை சரணடையும்படியும் மற்றும் சண்டையின் இடையில் அகப்பட்டுள்ள பொதுமக்களை சுதந்திரமாக செல்வதற்கு அனுமதிக்கும்படியும் அழைப்பு விடுத்திருந்தோம். ஜனவரி 2010ல் “எல்.ரீ.ரீ.ஈயினரின் தோல்வி மற்றும் தமிழரின் அரசியல் வாழ்க்கையின் மீது அது ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாட்டுக்கு ஏற்பட்டுள்ள முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. மற்றும் மாற்றங்களை வரவேற்கிறோம்” என்று எழுதியிருந்தோம். எங்களது மே 2010ல் யத்தக் குற்றங்கள் பற்றிய அறிக்கையில், எல்.ரீ.ரீ.ஈ யினரின் அட்டூழியங்களையும் மற்றும் யுத்தக் குற்றங்களையும் பற்றி விவாதித்திருந்தோம். ஸ்ரீலங்கா சம்பந்தமான எங்களது பதின்மூன்று அறிக்கைகளையும் வாசிக்கும் எந்தவொரு நேர்மையான வாசகராலும் எல்.ரீ.ரீ.ஈ யினரின் அட்டூழியங்கள் மற்றும் இதர குற்றங்கள் சம்பந்தமாக நாங்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தோம் எனச் சொல்ல முடியாது