இலங்கை ராஜபக்ச பாசிசம் இனவழிப்பை மூடிமறைப்பதற்காக பல சர்வதேச தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றியமை தெரிந்ததே. மேற்கு மற்றும் ஆசியப் பொருளாதரப் போட்டியின் இன்னொரு பகுதியாகவும் இது அமையலாம் கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த வகையில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தை வடகிழக்கிலிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சகல பணிகளையும் இடைநிறுத்திக் கொள்ளுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் காலக்கெடு எதனையும் அரசாங்கம் விதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செஞ்சிலுவைச் சங்கத்தை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அதே வேளை இந்திய துணைத் தூதரகமும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் வடகிழக்கில் நிலைகொள்கின்றன.
யுத்தகாலத்தில் தொடர்பாடல்கட்கு மிகவும் உறுதுணையாக இருந்த சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தை அவமாணப்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. அதற்காக அவர்கள் இலங்கையின் இறையாண்மையில் சேதம் விளைவிக்காமலும் தமது பணிகளைத் தொடர வேண்டும்.
ராஜபக்சவிற்கு இல்லாத கரிசனை உங்களுக்கு! இலங்கைக்கு எங்கே இறையாண்மை? குத்தகைக்குவிட்டு சிலகாலம் ஆகிவிட்டது.
செஞ்சிலுவைச் சங்கம் இலங்கையின் இறையாண்மையில் குறுக்கிட்டதாகப் –போர் முடியும் வரையும் பின்னரும்– இலங்கை அரசாங்கம் வரன்முறையான ஒரு குற்றச்சாட்டையும் பதியவில்லை.
மாறாக அதன் ஊழியர்கள் இருவர் கடத்தப்ப் பட்டுக் கொல்லப்(?) பட்டனர். இதுவரை நம்பகமான விசாரணை இல்லை.
“கொலைகாரன் தன் நிழலுக்கும் அஞ்சுகிறான்”??.
அழையா விருந்தாளீகள் அலட்டுவதோடு அல்லாமல் ஆப்பு வைக்கவும் முயன்றால் அவர்களூக்கு எக்ஸ்ஸீட்டைக் காட்டுவதே வழக்கம்.