வங்கியைப் பாதுகாப்பதற்காக வங்கியில் மக்கள் பாதுகாத்த பணத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைப்படி சூறையாடிய சைப்பிரஸ் அரசாங்கம் வழங்கிய இந்த ஆண்டின் அதிர்ச்சிக்குப் பின்னர் அமரிக்க வங்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. அமரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றின் இணையம் கடந்த 249 மணி நேரங்கள் அதாவது 6 வாரங்கள் திறக்கமுடியாத நிலையிலுள்ளது. கடந்த பல வருடங்களாக சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக வங்கிக் கணக்குகளை இணையங்கள் வழியாக பெற்றுக்கொள்ளுமாறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அமரிக்க ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவர்கள் இணையங்கள் வழியாகவே வங்கிக்கணக்குகளை அணுகி வருகின்றனர்.
JP Morgan Chase என்ற வங்கியின் கணக்குகளில் அதன் வாடிக்கையாளர்கள் நுளைந்த போது அவர்களின் எந்தப் பணமும் இருக்கவில்லை. அனைவரின் கணக்குகளிலும் $0.00 என்ற தொகையே காணப்பட்டது.
இந்த வங்கியின் இணையத்தளமும் ஏனைய சில வங்கிகளின் இணையங்களும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது பின்னதாக தெரியவந்தது. உலகின் பேட்டை ரவுடி என மார்தட்டிக்கொள்ளும் அமரிக்காவின் நிதி மூலதனமும் அதன் தொழில் நுட்பமும் இந்த அளவிற்குப் பலவீனமானது என்பதை அமரிக்க மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.
வங்கியில் வைப்பிடப்பட்ட பணம் அரசுகளாலும் பெரு முதலாளிகளாலும் சூறையாடப்படுவது பொது வழமையாகிவிட்ட நிலையில், சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக வங்கிகளே மக்கள் பணத்தைக் கொள்ளையிட வாய்ப்புக்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.