வங்கிகளில் சேமிப்புப்பணம் செய்த பணம் பத்திரமாக உள்ளது என்றும் அதனால் சேமிப்புப்பணம் செய்தவர்கள் எந்தவித பீதியும் அடைய வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தைரியம் கொடுத்துள்ளது.
அமெரிக்க வங்கிகள் திவாலாகி வருகின்றன. அமெரிக்க நிர்வாகம் நதி உதவி கொடுத்தும் வங்கிகள் திவாலாகுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் அமெரிக்க பொருளாதாரமே சரிந்துவிட்டதோடு இந்தியாவையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்திய வங்கிகளில் சேமிப்புப்பணம் செய்துள்ளவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்தியாவிலும் வங்கிகள் திவாலாகிவிட்டால் நமது சேமிப்புப்பணம் பணம் கிடைக்காமல் போகலாமே என்ற கலக்கத்தில் சேமிப்புப்பணம்தார்கள் உள்ளனர். இந்த கலக்கத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் இந்திய பங்கு சந்தைகளும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்க வங்கிகள் எந்தநிலையில் உள்ளன என்பதை ஆய்வு செய்ய அமெரிக்கா சென்றிருக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் நேற்று வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் வங்கிகளில் சேமிப்புப்பணம் பணம் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. அதனால் சேமிப்புப்பணதார்களும் வாடிக்கையாளர்களும் எந்தவித அச்சமோ அல்லது கலக்கமோ அடையத் தேவையில்லை. இந்தியாவில் நிதித்துறையில் அதிக அளவு பணம் புழக்கத்திற்கு விடும்படி சென்டர்ல் வங்கி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் சேமிப்புப்பணம்தாரர்கள் எந்தவித கலக்கமும் அடையத்தேவையில்லை என்று கவர்னர் சுப்பராவ் கூறினார்.
இந்தியாவின் வங்கிமுறை ஸ்திரமாகவும் வலுவாகவும் உள்ளது. அதனால் எந்தவித பீதியும் அடைய வேண்டாம். நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதன் அடிப்படையில் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். இந்திய வங்கிகள் ஸ்திரமாகவும் வலுவாகவும் நிதி சிறப்புடையதாகவும் உள்ளன என்றும் சுப்பாராவ் மேலும் கூறினார்.