22.03.2009.
வங்கதேச நாடாளுமன்றத்துக்கு 45 பெண்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த 45 இடங்களுக்கும் மொத்தம் 45 பெண்கள் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான வியாழக்கிழமை வரை வேறு எவரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சார்பில் 36 பேரும், முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி சார்பில் 5 பேரும், ஜாதியா கட்சி சார்பில் 4 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள் ஆவர். நியமன உறுப்பினர்களான இவர்களுடன் சேர்ந்து வங்கதேச பாராளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 345 ஆக உயர்ந்துள்ளது.
45 புதிய உறுப்பினர்களும் இன்னும் ஓரிருநாளில் பதவியேற்கவுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு எண்ணிக்கை 100 ஆக உயர்த்தும் திட்டமும் வங்கதேச அரசிடம் உள்ளதாகத் தெரிகிறது.
கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 4-ல் 3 பங்கு இடங்களில் வெற்றி பெற்றது.