Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

லைக்கா, சந்திரசேன, இலங்கை அரசு:அருவருக்கும் பணச்சுரண்டல்

இனியொரு... by இனியொரு...
05/02/2014
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

kapila_mobitelகபிலா சந்திரசேன என்ற பெயர் இலங்கையின் ராஜபக்ச குடும்ப வியாபாரத்தில் பிரபலமானது. சந்திரசேன 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறீலங்கன் ஏயல் லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரியாக(CEO) நியமிக்கப்பட்டார். அதே வேளை மகிந்த ராஜபக்ச மக்களின் பணத்தில் உருவாக்கிய மிகின் ஏயர் இனதும் நிர்வாக அதிகாரியானார்.

ராஜபக்சவின் சொந்தத் தொகுதியான ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள விமான இறங்குதளத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மிகின் லங்கா பல மர்மங்களைக் lycaflyகொண்டது. கடந்து வரவு செலவுத்திட்டத்தின் போது மிகின் லங்கா 3.2 பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளதாக அறிவித்தது.
மிகின் லங்கா மட்டுமன்றி இலங்கையில் மல்ரி மில்லியன் டொலர் அரச நிறுவனங்களின் இழப்புக்களின் பின்புலத்தில் சந்திரசேனவின் பங்கு காணப்படும். இந்த இழப்புக்களின் மறுபகத்தில் பிரித்தானியாவில் தலைமையகத்தைக் கொண்ட லைக்கா நிறுவனத்தின் பங்களிப்பையும் காணலாம்.

மிகின் லங்கா தனது இழப்புக்களை அறிவிக்கும் அதே வேளை 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் லைக்கா பிளை என்ற நிறுவனம் Level 6, East Tower, World Trade Center,Colombo Level 6, East Tower, World Trade Center,Colombo 1 (Number of Company: PV 96006 ) என்ற முகவரியில் கொழும்பில் ஆரம்பிக்கப்படுகின்றது.

மிகின் லங்காவைத் தவிர ஹம்பாந்தோட்டை விமான இறங்குதளத்தில் இனம் தெரியாத வேற்று நாட்டு விமானங்கள் தரையிறங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரசேன, லைக்கா, இலங்கை அரச கூட்டிணைவில் வேறு உயர்மட்ட தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்த தகவல்கள் எதிர்காலத்தில் வெளிவந்தாலும் வியப்படைவதற்கில்லை.

எது எவ்வாறாயினும் சந்திரசேன ஏயர் லங்காவின் பிரதம நிர்வாக அதிகாரியாகவிருந்த காலப்பகுதியில் லைக்கா பிளை நிறுவனம் சிறிலங்கன் ஏயர்லைன்சின் பிரித்தானியாவிற்கான பிரதான முகவர் நிறுவனமாக மாற்றமடைகின்றது.

இலங்கை அரசாங்கம் பிரதான பங்குகளைக் கொண்டிருக்கும் சிறீலங்கா ரெலிகொம் இன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக சந்திரசேன பதவிவகித்த காலப்பகுதியிலேயே மகிந்தராஜபக்சவின் மைத்துனர், லைக்க மொலைல் ஆகியன இணைந்த போலியான ஒப்பந்தங்களை சிறீலங்கா ரெலிகொம் உருவாக்கிக்கொண்டது. இப்போது இந்த ஒப்பந்தத்தின் ஊடாக வழங்கப்பட்ட சேவையினால் மக்களின் வரிப்பணத்திலிருந்து பல மில்லியன்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறீலங்கா ரெலிகொம் அறிவித்துள்ளது.
இந்த இழப்பில் சில மில்லியன்கள் லைக்காவும் ராஜபக்ச குடும்பமும் சந்திரசேனவும் பெற்றுக்கொண்டதாக லங்கா வெப் நியூஸ் என்ற இணையம் தெரிவிக்கிறது. தவிர, இலங்கையில் கைத் தொலைபேசிச் சேவையிலுள்ள மற்றொரு பல்தேசிய நிறுவனமான ஹச் ரெலிகொம் இலங்கை அரச தொலைபேசிச் சேவையான மொபி ரெல்லிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஹச் ரெலிகொம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு தனது பங்குகளை மொபிரெல்லிற்கு விற்பனை செய்தாலும் மொபிரெல் அதனை 132 மில்லியன் டொலர்களுக்கு வாங்க உத்தேசித்துள்ளது. கேட்ட தொகையிலும் அதிக தொகையை விலையாகக் கொடுக்கும் இந்த வியாபாரம் மக்களின் வரிப்பணத்தில் நடைபெறுகிறது.மிகுதி 32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹச் ரெலிகொம்மிற்கு வழங்கப்படாது, சில தனிநபர்களின் சட்டைப்பைக்குள் முடங்கிவிடும்.

32 மில்லையன் ஊழல் பணம் மக்களின் பணம். இதனை ராஜபக்ச குடும்பத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதாக சந்திரசேன தெரிவித்துள்ளதாக லங்கானியூஸ்வெப் தகவல் சொல்கிறது.

தவிர மொபிரெல்லுடன் லைக்கா நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட உள்ளதாகவும், இப்போது மொபிரெல்லின் தலைவாரகச் செயலாற்றும் சந்திரசேனவிற்கு லைக்காவில் முக்கிய பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும் இதே இணையம் தெரிவிக்கிறது.

ஆவணத் தரவுகளின் அடிப்படையில் 2006 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசுடன் வியாபாரத் தொடர்புகளை லைக்கா குழுமம் பேணி வருகிறது.

பல்தேசிய வியாபார நிறுவனங்களின் அருவருக்கத்தக்க பணவெறிக்கு எல்லைகள் இல்லை. தேசங்களைக் கடந்து தமது வெறியாட்டத்தை நடத்தும் இந்த நிறுவனங்கள் தமிழ்- சிங்கள வேறுபாடுகளற்று மக்களைச் சுரண்டுகின்றன. தமது சுரண்டலுக்கு இனவெறி தேவைப்பட்டால் அதனைத் தூண்டிப் பயன்படுத்திக்கொள்ளும் இந்த வியாபாரிகளின் விருப்பு வெறுப்பு எல்லாமே மூலதனச் சுரண்டல் மட்டுமே. லைக்கா என்பது ஒரு உதாரணம் மட்டுமே. மக்களின் போராட்டம் என்பது பல்தேசிய நிறுவனங்களையும் அவற்றால் ஒழுங்கு படுத்தப்படும் அரசுகளையும், ஏகாதிபத்தியங்களையும் சார்ந்து நடப்பதல்ல. அவற்றிற்கு எதிராக நடைபெற வேண்டியது

புலம்பெயர் நாடுகளில் லைக்காவிற்கு எதிரான தரவுகளை அதன் போட்டி நிறுவனங்களை வளர்ப்பதற்காகவும், அவை வீசியெறியும் எலும்புத்துண்டுகளைச் சுவைப்பதற்காகவும் ‘தேசிய வியாபாரிகள்’ பயன்படுத்திக்கொள்கின்றனர். இங்கு நிலைமை முற்றிலும் வேறானது. பல்தேசிய நிறுவனங்கள், ஏகபோக அரசுகள் என்றால் என்ன ? அவற்றின் பொதுவான போக்கு என்ன?? என்ற அரசியல் நிலைபாட்டிலிருந்தே தேசிய விடுதலைப் போராட்டம் என்பதன் அரசியல் கோட்பாடு கூட கட்டியெழுப்பப்பட இயலும்.

-அருவன்

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்
லைக்கா, லெபாரா, சங்கதி, ஈழமுரசு

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சென்னையில் தொடரும் குண்டுவெடிப்பு அச்சுறுத்தல்:சந்தேகத்திற்குரிய பின்புலம்

Comments 2

  1. Senthil says:
    12 years ago

    கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற , சிறிலங்கா சரியான இடமென்று நம்பப்படுகிறது உண்மையா?

    • Mannan says:
      12 years ago

      பல  திடீர்  கோடீஸ்வரர்களின்  பின்னணியில்  உலகின்  பல பாகங்களில்
      சிறு சிறு  நிறுவனங்கழும்   பெரும்  நிறுவனங்கழும்   ஆரம்பிக்கப்பட்டு
      நஸ்டம் காட்டப்பட்டு மூடப்பட்ட்டுள்ளன.  இவையெல்லாம்    பயங்கரவாதம்,போதைப்பொருள்மாபியாக்கள், பொதுமக்களின்  (அரசின்) சுரண்டல் பணம், இப்படியான  கறுப்புப் பணஙகளை  சலவை செய்வதற்கு  பயன்படுத்தப்பட்ட  தந்திரங்களேயாகும்.

      மேற்குநாடுகளில்  பிரதமராக  இருப்போரையும்  கண்டறிந்து தண்டனை
      கொடுக்கக் கூடியதாக  மக்களிடம்  சக்தியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில்    கொலைகுற்ரவாளிக்ழும் அதற்கு  உடந்தகையாக
      இருந்த்வர்கழும் கூட   பணச்சலவை   செய்ய  தகுந்த  இடமாகிவிட்டது.

      இதற்கு காரணம்  மக்களின்  நலம்கருதாது   பெயரும் புகழும்,செல்வமும்
      குடும்பப்  பெருமையுமே   உள்நோக்கமாகக்  கொண்டுள்ள தமிழ்,சிங்களஅரசியல் வாதிகழும்  இவர்களின்   உதவியுடன்  வாழும்  மாபியாகழுமேயாகும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...