லைக்கா லிபாரா ஆகிய இரண்டு தொலை பேசி நிறுவனங்களுமே புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை மையமாகக்கொண்டு வியாபாரத்தை நடத்துகின்றன. இந்த நிறுவனங்கள் சிறிய மூலத்தனத்தில் ஆரம்பிக்கப்பட்டவை, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் லைக்காவின் ஆதரவாளர்களும் சமூக வலைத் தளங்களில் உற்சாகமாகக் கூறுவது போல லைக்கா இன்று செழித்து வளர்ந்து ஆலமரம் போலிருக்கிறது என்பது உண்மைதான். உழைக்கும் மக்களதும், பல்வேறு சிறிய நிறுவனக்களினதும் அழிவின் சாம்பலிலிருந்து தோன்றுவது தான் பல்தேசியப் பெரு நிறுவனங்கள்.
இலங்கை அரசு உட்பட உலகம் முழுவதும் அழிவுகளை ஏற்படுத்தும் அரசுகளின் துணையோம் ஆதரவோடும் கோப்ரட் நிறுவனங்கள் தம்மை மேலும் மேலும் வளர்த்துக்கொள்கின்றன. சாமான்ய மக்களையும் சிறு வர்த்தகர்களைம் வருமான வரி, வியாபார வரி, ஊதிய வரி என்று சுரண்டியழிக்கும் அரசுகள், பல்தேசியப் பெரு நிறுவங்களுக்கு வரி விலக்குப் பெற்றுக்கொடுக்கின்றன. லைக்கா நிறுவனத்தையே இதற்கு உதாராணமாகக் காட்டலாம். நான்கு வருடஙகளாக பிரித்தானியாவில் கோப்ரட் வரி கட்டாமல் ஆளும் கட்சிக்கு மில்லையன்களை வாரி இறைத்திருக்கிறது லைக்கா.
ஆளும் அரசுகளுடனும் அழிக்கும் அதிகாரவர்கத்துடனும் இணைந்து தனது இலாபத்தைப் பெருக்கிக்கொள்வது பல்தேசிய நிறுவனங்களின் இயல்பு.
அவர்கள் வேண்டுமானால் தமிழர்களையும் தமிழையும் தமது லாபத்தை இரட்டிப்பாக்கப் பயன்படுத்திக்கொள்வார்களே தவிர தமிழர்களுக்குச் சேவை செய்ய மாட்டார்கள். அவர்கள் சேவை என்று மக்களுக்கு வழங்கும் எலும்புத்துண்டுகளால் வியாபாரத்திற்கு உரிய ‘சமாதானச்’ சூழலை ஏற்படுத்தி அவர்களை மேலும் சுரண்டிக் கொழுப்பார்கள்.
லைக்கா நிறுவனம் பிரித்தானியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சென்று ஸ்கைனெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பல மில்லியன்களைச் சுருட்டிகொண்டதே மக்களை இதற்குச் சிறந்த உதாரணம்.
லைக்கா லிபாரா போன்ற பல்தேசிய நிறுவனங்களுக்கு தமிழர்கள் சிங்களவர்கள் என்ற வேறுபாடுகள் கிடையாது. அவர்களின் நோக்கம் தமிழ் – சிங்கள அடையாளம் அல்ல. அவர்களைப் ஒரே நோக்கம் இலாபம் சம்பாதித்துக்கொள்வதே. தமிழர்களிலும் அதிகமாகச் சிங்கள மக்களிடம் இலாபம் கிடைக்கிறது என்றால் அவர்களுக்கு சிங்கள மக்கள் தேவைப்படுவார்கள். சிங்கள அதிகாரவர்க்கத்துடன் இணைத்து சிங்கள மக்களைச் சுரண்டுவார்கள்.
இதனால்தான் பிரித்தானிய அதிகார வர்க்கத்துடன் இணைந்து இந்த நிறுவனங்கள் தமது வியாபாரத் தளத்தை விரிவு படுத்துகின்றன. இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்கின்றன.
பல்தேசிய வியாபார நிறுவனங்களிடையே வியாபாரப் போட்டி நிலவுவது வழமை. ஒரு சிறிய உதாரணம்: இலங்கையில் டொமினோஸ் பிட்சா மற்றும் பிட்சா ஹட் போன்ற அமெரிக்க பல்தேசிய உணவு நிறுவனங்கள் முதலிட்டுள்ளன. இந்த இரண்டு போட்டி நிறுவனங்களில் ஏதாவது ஒன்றின் சார்பில் தங்கியிருந்து மற்றதற்கு எதிராகப் போராட்டம் நடத்துவது மக்களுக்கானதல்ல. அது வியாபாரத்திற்கான போராட்டம்.
லைக்காவிற்கு எதிரான கருத்துக்களோடு இன்று மக்களின் அவலத்தில் அரசியல் நடத்திய பிழைப்புவாதக் கும்பல்கள் களத்தில் இறங்கியுள்ளன. இவர்களில் யாரும் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களின் அடியாள் படைகள் போலச் செயற்படுபவர்கள். லைக்காவிற்கு எதிரான போராட்டம் என்பது அவர்களைப் பொறுத்தவரை மற்றொரு வியாபாரம். இக் குமபல்கள் உலகின் பல்தேசிய நிறுவனங்களான லிபாரா, வேதாந்தா, டாட்டா போன்ற ஏனைய நிறுவனங்களுக்கு எதிராகப் போராடத் தயாரா என்பதுதான் கேள்வி.
லெபாராவும் லைக்காவும் சேவை என்ற பெயரில் நடத்தும் உதவித்திட்டங்கள் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரானவர்களால் நடத்தமுடியாது, ராஜபக்சவுடனான உடன்பாட்டின் அடிப்படையிலேயே நடத்தலாம் என்பது மட்டுமே இந்த நிறுவனங்களில் ராஜபக்ச குடும்பத்துடனான தொடர்பிற்கு ஆரம்பப்புள்ளியாகக் கருதலாம்.
லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் மற்றொரு பக்கம் சமூக உணர்வுள்ளவர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. வன்னியில் அழிப்பு நடந்து முடிந்ததும் தென்னிந்திய சினிமாவினதும் தொலைக்காட்சிகளதும் ஆக்கிரமிப்பு வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் வெள்ளம் போல உருவெடுத்தது.
அதிகாரவர்க்கங்களது எதிர்ப்புரட்சியும் பல்தேசிய வர்க்கங்களது பண வெறியும் இணைந்து ராஜபக்ச குடும்ப அரசால் இயலாதவற்றை கலை கலாசார நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நடத்தி முடித்தன. சமூகம் பற்றிய குறைந்தபட்ச சிந்தனையுமற்றவர்களாக வெளியுலகிலிருந்து மறைக்கப்பட்ட மனிதர்களை மிகக்குறுகிய காலத்தினுள்ளேயே தென்னிந்திய சினிமாவும் தொலைக்காட்சியும் உருவாக்கியுள்ளன.
ஆக, பல்தேசிய நிறுவனங்கள் தொடர்பான அரசியல் புரிதலற்று லைக்காவிற்கு எதிரான போராட்டம் என்று மட்டுப்படுத்திக்க்கொள்வது ஆபத்தானது. இதன் பின்புலத்தில் செயற்படுபவர்கள் லைக்காவின் போட்டி நிறுவனங்களைச் சார்ந்தவர்களாகக் கூட இருக்கலாம்.
லைக்காவிற்கு எதிரான போராட்டம் தேவையானதே ஆனால் போராட விளைபவர்கள்
1. பல்தேசிய நிறுவனங்களின் பணச் சுரண்டலுக்கு எதிரானவர்களா?
2. தென்னிந்திய சிரழிந்த கலை கலாச்சார ஆக்கிரமிப்பிற்கு எதிரானவர்களா?
3. ஈழத்தமிழர்களின் முற்போக்குக் கலை கலாசார வளர்ச்சிக்காக உழைப்பவர்களா?
4. பல்தேசிய நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் துணை செல்லும் ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிரானவர்களா?
இவற்றை நிராகரித்து லைக்காவிற்கு எதிராக நடத்தப்படும் எந்தப் போராட்டமும் ஆபத்தானது. அழிவுகளை ஏற்படுத்தும். வியாபாரிகளையும் பிழைப்புவாதிகளையும் வளர்த்துவிடும். இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால் லைக்காவிற்கு எதிராகப் போராடுகிறோம் பேர்வளிகள் எனக் கிளம்பியிருப்பவர்களின் இலாப நோக்கம் வெளிப்படும்.
விடுதலை என்பது லோபி செய்வதன் மூலம் குறுக்கு வழிகளில் பெற்றுக்கொள்ளும் விற்பனைப் பொருள் அல்ல. தமிழரசுக் கட்சி சொல்லித்தந்த அப்புக்காத்து அரசியல் விடுதலைக்கானதல்ல. அமிர்தலிங்கத்தினது உணர்ச்சிப் பேச்சுக்கள் போராட்டத்தை நோக்கமாகக் கொண்டதல்ல. அதே போன்றுதான் சீமானும். சீமான் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தலாம் என்று கனவுகாணும் அதிகாரவர்க்கத்தின் அடியாள்.
பல்தேசிய வியாபார நிறுவனங்களின் நலன்களுக்காகவே வன்னி அழிப்பு நடத்தப்பட்டது. அவர்களே ஆட்சியையும் ஆளும் கட்சியையும் தீர்மானிக்கிறார்கள். இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரவேண்டுமா அன்றி காங்கிரஸ் ஆட்சியில் தொடரவேண்டுமா எனத் தீர்மானித்தவர்களும் அவர்களே. மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் தொடரவைத்தவர்களும் அவர்கள்தான். இவர்களின் இலாபப் போட்டி என்ற சகதிக்குள் ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தை உட்செலுத்திப் பிழைப்பு நடத்தும் ஒவ்வொருவரும் மக்கள் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இது…
//பல்தேசிய வியாபார நிறுவனங்களின் நலன்களுக்காகவே வன்னி அழிப்பு நடத்தப்பட்டது. அவர்களே ஆட்சியையும் ஆளும் கட்சியையும் தீர்மானிக்கிறார்கள்//
புலிகளின் காலத்தில் எவ்வாறு அவர்களின் அனுசரணையின்றி இவ்வாறான சர்வதேச வியாபாரநிறுவனக்கள் தமிழ் அகதிகளால் ஆரம்பிக்கப்பட்டு எது வித அழுத்தங்களிற்கும் உள்ளாகாமல்
வளர்ந்தன வளர்க்கப்பட்டன?
இவர்கள் ஒரே சமயத்தில் ஒருசாரர் இந்தியாவுடனும், ஒருசாரர்
இலங்கையுடனும் கட்ந்த காலங்களில் உறவுகளை வளர்தார்கள்?
தமிழர் என்றால் புலிகள் புலிகள் என்றால் தமிழர் என்ற காலகட்டம்
இருந்த கால்த்தில் இவ்ர்களை எவ்வாறு இருநாடுகழும் அரவணைத்தன?
இந்தியாவும் இலங்கையும் கூட்டாக தமிழரின் உருமைக்கான போராட்டத்தை அழித்தார்கள் என்பது யாவ்ரும் அறிந்த உண்மை.
அவ்வாறு நிலமை இருக்கும்போது இந்த தமிழர்களின் கைகளிலுள்ள
பணத்தின் வலிமை தமிழர்களை எவ்வாறு காப்பாற்ற முடியாமல்
போனது?
பணமில்லாதவன் பிணமென்பார்களே ஆனால் தமிழர்களில் சிலர்
பணமிருந்தும் நடைபிணமாக வாழ்கின்றார்களா?
## தமிழர் என்றால் புலிகள் புலிகள் என்றால் தமிழர் என்ற காலகட்டம்
இருந்த கால்த்தில் இவ்ர்களை எவ்வாறு இருநாடுகழும் அரவணைத்தன? ##
அவ்வாறு சொல்லியவர்கள் புலிகள்தான் . இலங்கை அரசும் , இந்திய அரசும் அதன் ஊதுகுழல் ஊடகங்களும் புலிகள் வேறு , மக்கள் வேறு என அவ்வப்போது கண்டு பிடித்து சொல்லிக்கொண்டிருந்தன .
உங்களைப்போன்ற இலங்கை இந்திய அரசுகளின் ஜால்ராக்க்ளோ 2009 இற்கு முன்பு புலிகள் வேறு , மக்கள் வேறு என இந்திய இஅல்ங்கை அரசுகளின் கருத்தையே வாந்தி எடுத்தி வந்திருந்தீர்கள் .
ஆனால் என்ன ஆச்சரியம் 2009 இற்கு பின் அப்படியே உட்டாலங்கடியாக மாறி விட்டது . அதாவது 2009 வரை புலிகள் வேறு , மக்கள் வேறு என சொல்லி வந்த அதே வாயால் கூச்ச நாச்சமில்லாமல் 2009 இற்கு பிறகு புலிகளும் மக்களும் ஒன்று என சொல்ல ஆரம்ப்த்திருக்கிறீர்கள் .
அப்போதுதானே முள்லீவாய்க்கால் படுகொலைகளை நியாயப்படுத்தலாம் .
Hello
You will never change. You will never give any constructive advice. You are dog in the manger. Not only that even after 5 years LTTE gone you put all the blame for your impotence. You blamed them while they were there that is why you could not do. Now you are writing sarcastically. You are more dangerous and no use to community. faceless little people.
நாங்கள் பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிரானவர்கள்தான் கடந்த காலத்தில் அமெரிக்க நிறுவனங்களை முற்றுகையிட்டும் கைதானோம் எங்களுக்கு லைகா லிப்ரா அல்ல எந்த பெருநிருவனமகாக இருந்தாலும் விடுதலைக்கு எதிரானது எனில் எதிர்போம் உரிமைகள் வாதாடி பெருவல்ல போராடி பறிப்பது என் தெரிந்தே போராடுகிறோம் எந்த அரசியல் பொருளியல் காரணங்களுக்காக எமது இனம் அழிக்க பட்டதோ அழிக்க பட்டு கொண்டு இருக்கிறதோ அதே சந்தை பொருளியலை ஆயுதமாக்குவோம் எமது விடுதலைக்கு எதிரான எந்த வணிகமும் தமிழகத்தில் நடக்காத வண்ணம் புறக்கணிப்பு பரப்புரையை மக்களிடம் கொண்டு செல்வோம்
பன்னீர்
பாலசந்திரன் மாணவர் இயக்கம்
நண்பர் பன்னீர் அவர்களுக்கு ,
தங்களது அமைப்பின் பெயரே அதன் நோக்கம் , இலக்கு என்ன என்பதனை தெளிவாக காட்டி நிற்கிறது தமிழ் தேசியத்தினதும் , ஈழத்தினதும் விடுதலையே தங்களது இலக்கு என்பதும் தெ.ளிவாக புரிகிறது . உங்கள் அமைப்பின்நோக்கம் தூய்மையானது தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்களால் போற்றத்தக்கது .
தமிழ் தேசியத்துக்கோ , ஈழ விடுதலைக்கோ ஊறு விளைவிக்கும் எந்த காரணியாக இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமென்பதிலும் உறுதியாக உள்ளீர்கள் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியது.
அந்த வகையில் ஒரு காரணியாக தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஊறு விளைவித்த , விளைவித்துக்கொண்டிருக்கிற காரணியாக பலதேசிய கம்பனிகளை தாங்கள் அடையாளம் கண்டிருந்தால் தாராளமாக அவற்றை எதிர்த்து போராடலாம் .
ஆனால் அந்த போராட்டமானது பலதேசிய கம்பனிகளை மட்டும் எதிர்க்கும் போராட்டமாக மாறி , உங்கள் அமைப்பின் முக்கிய போராட்டமான தமிழ் தேசிய ஈழ விடுதலை போராட்டத்தை பின்னுக்கு தள்ளி விடுமோ என் கிற சந்தேகம் தோன்றியுள்ளது .
உங்கள் அமைப்பின்நோக்கம் தூய்மையானதாக இருந்தாலும் , இந்திய இலங்கை அரசுகளினதும் அதன் புலனாய்வு துறைகளினதும் , அவர்களினால் எம்மிடையே களமிறக்கப்பட்டுள்ள போலி போராட்ட குழுக்களின் மூலம் சில ஊடகங்கள் மூலமும் உங்களை போன்ற அமைப்புகளின் உண்மையான தமிழ் தேசியத்தின்பால் போராடும் அமைப்புகளின் போராட்டத்தை திசை திருப்ப கூடும் .
நான் ஏற்கனவே கூறியது போல் பன்னாட்டு கம்பனிகளுக்கெதிரான தங்களது போராட்டமென்பது செகண்டரி நோக்கமாகத்தான் இருக்க முடியும் . தமிழ் தேசிய விடுதலை , ஈழ விடுதலை என்பதே பிரதானநோக்கமாக இருக்க முடியும் .
ஆனால் இப்போது நடப்பது என்ன உ லக அளவில் வீச்சு கொண்ட ஒரு பன்னாட்டு கம்பனி ஒரு தமிழ் படம் தாயாரிக்கிறதென கூறி அதனை எதிர்ப்பதென அனேகமான ஈழ விடுதலை ஆதரவு தமிழ்நாட்டு அமைப்புகள் அதற்கான போராட்டத்தை கையிலெடுத்திருக்கின்றன .
இந்த ஒரு படத்தை எதிர்ப்பதானால் அந்த பன்னாட்டுநிறுவனம் நட்டமடைந்து காணாமல் போய் விடாது.
தமிழ்நாட்டு மாணவர் அமைப்புகளை இந்த போராட்டத்தின்பால் திசை திருப்புவது ஒரு சதிநடவடிக்கையோ என சந்தெகம் கொள்ள வைக்கிறது.
வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் இலங்கைகெதிரான அடுத்த தீர்மானம் வர இருக்கும் நிலையில் இப்போது போயும் போயும் ஒரு தமிழ் படத்துக்கெதிராக தமிழ்நாட்டு மாணவர் அமைப்புகளை திசை திருப்பு முகமாக சம்பவங்கள்நடை பெற்று வருவது ஏன்?
தங்களது அமைப்பு வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கெதிராக கொண்டு வரவிருக்கும் தீர்மானத்திற்காதரவாக மாணவர்களை திரட்டி போராட போகிறதா ? அல்லது ஒரு தமிழ் படத்துக்கெதிராக மட்டும் போராட போகிறதா ?
அல்லது இரண்டு போராட்டத்தையும் ஒரேநேரத்தில் முன்னெடுக்கப்போகிறதா ?
லிபர , லைக்க மட்டுமல்லாமல் ஏனைய பல்தேசிய கமபிகளுக்கெதிராகவும் தாங்களும் தங்கள் அமைப்பும் போராட வேன்டுமென் கிற கோரிக்கையுடாக இலங்கை இந்திய அரசுக்கலுக்கெதிரான உங்களது போராட்டத்தை தந்திரமாக பன்னாட்டு கம்பனிகளுக்கெதிரானதாக மட்டும் மாற்றி விட மாய வலை விரிக்கப்படுகிறது .
இப்படியானவர்கள் நமக்கிடையே உள்ளார்கள் .
ஜோஸ்யர்கள் , கோடங்கிகள் , உடுக்கடிப்பவர்கள் , பறையடிப்பவர்கள் என பல வடிவத்தில் உலா வருவார்கள் .
ஈழ விடுதலை போராட்டம் இது போன்ற சதி வலைகள் மூலமே எ எற்கனவே தோற்கடிக்கப்பட்டிருக்கிறது .
இந்த கோணத்தில் இந்த பிரச்சனை ஆராய்ந்து பார்த்து உங்கள் எதிர் கால நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
நன்றி..
திமுக,அதிமுக, போன்ற அரசியல் கட்சிகள் எவ்வளவு மோசடிக்குற்ரங்கள் அதன் தலைவ்ர்கள் மீது சாட்டப்பட்டிருந்தாலும் அவ்ர்களை தலைமையிலிருந்து அகற்ரமுடியாத நிலமையிலேயே தமிழகமுள்ளது. இதற்கு காரணம் அதன் ஆதரவாளர்கள்
பலர் பல நிறுவங்களின் உருமையாளர்களாகவும் அதிகார்த்த்தை துற்பிரயோகம் செய்பவ்ர்களாக ஆழும் கட்சிகள் அவ்ர்களிற்கு பாதுகாப்பு
கொடுப்பதுமே காரணம்.
கோடிக்கணக்கான தமிழர்களால் தமிழகத்தில் ஒரு மாற்ரத்தை
கொண்டுவர்முடியாத நிலமை இருக்கும்போது புலம்பெயர்
இலங்கைத்தமிழர்கள் சிலர் அதே தமிழக அரசியல்வாதிகழுடன் சேர்ந்து
தமிழர்களிற்காக பாடுபடுகின்றார்களென்றால் எவ்வாறு நம்புவது.
தமிழர்களின் பெயரைச் சொல்லி, தமிழர்களை எவ்வாறு
ஏமாற்ரி வாழலாம் என்பதைச் சிந்திப்பதை விட இவர்களால்
என்னதான் செய்ய முடியும். இவர்களின் சிந்தனையும் செயலும்
பெற்றுக்கொடுத்த பலனே தமிழர்களின் முள்ளிவாய்க்கால் அழிவு.
இலங்கையில் வாழும் தமிழர்களை அவர்களின் நிலமைக்கும்
சூழ்நிலைக்குமேற்க சிந்த்தித்து செயற்படவிடுங்கள்.
## கோடிக்கணக்கான தமிழர்களால் தமிழகத்தில் ஒரு மாற்ரத்தை
கொண்டுவர்முடியாத நிலமை இருக்கும்போது புலம்பெயர்
இலங்கைத்தமிழர்கள் சிலர் அதே தமிழக அரசியல்வாதிகழுடன் சேர்ந்து
தமிழர்களிற்காக பாடுபடுகின்றார்களென்றால் எவ்வாறு நம்புவது.##
இலங்கை சுதந்திரமடைந்தநாள் தொட்டு கோடிக்கணக்கான சிங்கள பாமர மக்களால் மாற்றம் எதையும் இது வரை கொண்டு வர முடியவில்லை .
ஆனால் உங்களை போன்ற டுபாக்கூர்கள் சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து மாற்றத்துக்கு பாடு பட வேண்டுமென பல ஆண்டு காலமாக சலியாது கூவி வருகிறீர்களே எப்படி ?
##இலங்கையில் வாழும் தமிழர்களை அவர்களின் நிலமைக்கும்
சூழ்நிலைக்குமேற்க சிந்த்தித்து செயற்படவிடுங்கள்.##
அப்படியானால் லைக்காவை மட்டும் எதிர்த்து தமிழ்நாட்டு மாணவர்கள் போராட வேண்டுமென்று கூறுகிறீர்களே எப்படி ?
உங்களது வாதமெல்லாம் லைக்கா ராஜபக்ச அரசுடன் தொடர்பு வைத்திருக்கிறது என்பதுதானே ?
அப்படியானால் அதற்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்த்தமும் இல்லையே அதனை மட்டும் எதிர்த்து தமிழ்நாட்டு மாணவர்கள் ஏன் போராட வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள் ?
//அப்படியானால் லைக்காவை மட்டும் எதிர்த்து தமிழ்நாட்டு மாணவர்கள் போராட வேண்டுமென்று கூறுகிறீர்களே எப்படி ?//
தமிழகத்தமிழர்,இலங்கைத்தமிழர்,சிங்களவ்ர்,முஸ்லிம்கள் யாவரும் ஒன்றாக சேர்ந்து நாட்டின் துரோகிகளிற்கு எதிராக போராடும்கால்த்தில்தான்
பிரச்சினைகழும்தீரும், கறுப்புப்பண்ம், பயங்கர்வாதப்பணம் சுருட்டும் முதலாளிகழும் ஓடி ஒழிக்க இடமில்லாமல் தவிப்பார்கள்.
Mr. Paneer,
CocoCola & Pepsi also against for the liberation…
What are you going to do…?
Does it make any sense to anyone here ?
தம்பி நல்லா கொளம்பி போயிருக்காப்பல ?
அன்பர் பன்னீர்,
உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்.
புறக்கணிப்பு பரப்புரை என்பதுக்கும் அப்பால் தமிழகத்தின் சந்தை பொருளியல் முக்கியத்துவத்தை உணர்ந்து உலகளாவியந்தாக்கத்தை உங்களால் உருவாக்க முடியும் எனும் நம்பிக்கையையும் உங்கள் எழுத்து உருவாக்குகிறது என்பதையும் தெரியப்படுத்துகிறேன்
ஸ்கைனெட் என்ற நிறுவனத்தை இராஜபக்ச குடும்பமே முதன்முதலில் நிறுவியது என இனிஒருவும் எழுதியதாக நினைக்கிறேன்.
லைக்கா நிறுவனமே ஸ்கைனெட் நிறுவனத்தை தற்போதைய முன்னிலைக்கு வியாபிக்க உதவியது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து முடிந்த பாடில்லை. அதற்குள்ளேயே சகல பல்தேசிய நிறுவனங்களையும் நோக்கக் கோரும் உங்கள் தீர்க்கதரிசனத்தை மெச்சுகிறேன்.
இலங்கையில் லைக்கா நிறுவனத்தின் மற்றுமொரு முகம்மூடி ஆதவன்நியூஸ்.கொம் இணையத்தளம்
Navalan, you are a liar because the donations do not amount to millions. Why do you live on sensationalizing news with your misinformation? It was estimated as UKP500,000.00 or more since 2011. I agree Lycamobile working with SL Govt is despicable. But is it only them? I know a number of businesses based in the West and owned by our folks are working in tandem with the SL government to take their business there and profit from it. They profit not only from the Tamils but also from the Singhalese too. If they don’t someone else like the Singhalese or even worse some Indians or Pakistanis will do that. In order to criticize them learn to stay with the topic in question. You have digressed into other areas like them not paying the taxes which was completely legal under the tax laws of the UK. I give the news link about the tax accusations here- http://www.huffingtonpost.co.uk/2014/05/29/lycamobile-donations-tories-tax_n_5409793.html . It can apply to many other UK companies too. Asa Bennet has picked them not because it is Lycamobile, he/she has an axe to grind against the Tories. The readers in this forum get carried away with your wild imagination and start crying the sky is falling because of Lycamobile. I hope you will publish my comment for the benefit of the readers here.
சுதர்சன்,
ஒருவன் வரி கட்டாமல் அரை மில்லியனை பழமைவாதக் கட்சிக்கு வழங்கினால் அதன் அர்த்தம் பெருவர்த்தகக் களவு நடைபெறுவதேயாகும். இதைத் தமிழனின் கடின உழைப்பு என போற்றும் மாங்காய் மடயர் சிலர் தோட்ட்ங் கொத்துபவனையோ, மரமேறுபவனையோ, கடலலைகலுடன் தொழிலுக்காக மோதுபவனையோ மதியாத சிறுபிள்ளைத்தனத்தையே காட்டுகின்றனர். சரி வரி கட்டாதே, வெள்ளையன் களவெடுத்ததை மீட்டு வேறொங்கோ போய்ப் புதை ஆனால் களவை களவென்று மதி. கடுமுழைப்பை உழைப்பு என மதி, அதை விட்டு கமரூனை ராஜபக்சவுக்கு எதிராக திருகிவிட்டேன் பார்த்தியா என பொய் கூறும் லைக்காக் கள்ளனின் பெரிய வேறு மாபதக கொள்ளைகளை மறைக்க முற்பட வேண்டாம். நீரும் உம்மைப்போல் மற்ற அரைப்படிப்புக்குத் தவிக்கும் அன்பர்களும் வாசித்தறிய வேண்டிய முக்கிய இணையத் தொடர்பு அடுத்த கருத்தாக வருவதைக் கவனிக்கவும். லைக்கா ரஜபக்சவின் வெற்றி வாகையின் பின் அடிவருடிகளாய் மண்டியிட்ட உமக்கு சாதாரணமாகத் தெரியும் மேற்குலகிலிருந்து நம்நாட்டை சூறையாடும் கும்பலில்லை.
லைக்கா ராஜபக்ச குடும்பத்தின் முதற்கட்ட 2006 ஆம் ஆண்டுப் பெருங் களவான ஸ்கைநெட்நிறுவனத்தினூடு பல மில்லியன்களை வறுமையில் வாடும் மக்கடமிருந்து மேற்குலகுக்கு கடத்தியது. மீண்டுமொருமுறை உமது பிடிவாததுக்காக லா லா லைக்க்காக் கள்ளன் ரா ரா ராஜபக்ச குடும்பத்துக்காகவும் வேறு இன்னமும் இனங் காணப்படாத கொ கொ கொலைகாரக் கும்பல்களுக்குமாக மி மி மில்ல்லியன்களை களவாடியது 2007ல். அடுத்த கருத்தினூடு இணையத்தொடர்பை மூன்ட்ரு முறையேனும் வாசித்து அறிய முடியாவிடின் மட்டுமே தயவு செய்து அடுத்த கேள்வி
If the political donation is illegal the law of the land will take care of it. Even a rookie in Economics knows that past losses can be deducted from current profits to prevent paying taxes on the current profits. Will you pay taxes to govt when you don’t have to? You can set your own rules and say what is right or wrong but that doesn’t become the law of the land. I am not a spokesman for Lycamobile but your kind of lunacy in this debate not going to convince the sensible readers here.
##ஒருவன் வரி கட்டாமல் அரை மில்லியனை பழமைவாதக் கட்சிக்கு வழங்கினால் அதன் அர்த்தம் பெருவர்த்தகக் களவு நடைபெறுவதேயாகும். ##
ஒருவன் ( லைக்கா) மட்டுமல்ல எல்லா முதலாளித்துவ கம்பனிகளும் சரி வர வரி கட்டாமல் ஆளும் கட்சி , எதிர்க்கட்சி இரண்டுக்குமே நிதி கொடுத்து வருகின்றன . பழமை வாதக்கட்சிக்கு மட்டுமல்ல , தொழில் கட்சிக்கும் கூடத்தான் .
இங்கிலாந்தில் தொழில் கட்சி தொழில் சங்களின் சந்தா பணத்திலிருந்து நிதியை ஒரு கையால் பெற்றுக்கொண்டு மறு கையால் முதலாளிகளிடமிருந்தும் பெருமளவில் நிதி பெற்று வருகிறது.
இது ஏனைய ஐரோப்பியநாடுகளிலும் , அமெரிக்க , கனடா , மற்றும் இலங்கை , இந்திய , பாகிஸ்தான் , சீனா , ஜப்பான் , போன்ற ஆசியநாடுக்ளிலும் நடைபெற்று வருவதுதான் .
ஆனால் இங்கு உங்களைப்போன்றவர்களும் , சில தமிழ் ஊடகங்களும் லைக்கா என் கிற ஒரு கம்பனியை மட்டும் தனிமைப்படுத்தி ஏதோ அந்த ஒரு கம்பனிதான் இத்தைகைய செயலில் ஈடுபடுவதாக பம்மாத்து காட்டுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .
இதற்கு நிச்சயமாக உள்னோக்கம் இருக்கிறதென்பதை கட்டுரைகளிலும் , அதன் பின் வரும் பின்னூட்டங்களிலிருந்தும் நன்றாக அறிய முடிகிறது.
லைக்கா இலங்கையில் வியாபரம் செய்வதற்கு முன்னரே ஐரோப்பாவில் வெற்றி வாகை சூடி விட்டது .
ஆம் அத்தனையும் உண்மை,ஆனால் அத்தனை கம்பனிகளோ தனி
மனிதா்களோ தங்கள் சுயநலத்திற்காக ராஐபக்ஸ கும்பலை காப்பா
ற்ற முனையலாம் அதையிட்டு அலட்டிக்கொள்வதா அல்லது ஒரு
தமிழ் அகதி எந்தக்காரணத்தையிட்டு அகதியானாரோ அதையே
காட்டிக்கொடுக்கும் செயலில் இறங்குவதே இங்கு பிரச்சனை இதை
உங்களால் புாிந்துகொள்ள முடியாவிட்டால் சும்மா கொக்காிக்காது
இருங்கள்.
லைக்காவோ,லிபாரோவோ எந்தவொரு அடிப்படை கட்டுமானங்களையும்
கொண்ட கம்பனிகள் கிடையாது இவைகள் கட்டுமானங்களைக்கொ
ண்ட கம்பனிகளில் ஒட்டி இருக்கும் குருவிச்சைகளாகும் இவைகளி
ன் பெறுமதி என்பது இவைகளில் இணைந்திருக்கும் வாடிக்கையாள
ர்களின் தரவுகளேயாகும் இந்த தரவுகளை எந்தநேரத்திலும் யாருக்கு
ம் விற்கலாம் அத்தோடு லைக்காவின் மதிப்பீடு ஒரு பில்லியன்
பவுண்ஸ் கூட இல்லை இலங்கை போன்ற நாடுகளில் இது பொிய
தொகை ஆனால் இங்கு அப்படியல்ல.
For your information, a company can be valued in different ways. One such method used by investors is the projected cash flow. Based on this these two companies can be valued very high. The old method of using assets and liabilities to value a company will not reveal the real value. If we go by your theory even MS or Oracle aren’t companies with any value, they do not carry much assets with them. This applies to many companies in the service industry too.
in 2007
$100m, according to reports in the Sunday Leader newspaper
http://www.corporatewatch.org/news/2013/nov/12/tory-donor-lycamobile-linked-sri-lankan-presidents-family-businesses
100மில்லியன்ல எத்தனை சைபர் இருக்கெண்டு தெரியுமா? தப்பு தப்பா இங்க எழுதிக்கிட்டு. நான்நான் அந்த கட்சிக்கு குடுத்த பனம் எம்மளவு எங்கிறன் நீர் என்னடான்னா லைகா கொன்ரக்றுக்கு 100மில்லியன் குடுத்தன்ங்க எங்குறீர்.
Folks I am glad you published it and it gives me confidence in your fairness. Thank you.
செப்டெம்பரில் ஜெனீவாவில் வாய்மொழி மூல அறிக்கைதான் வருகிறது.
அடுத்த வருடம் மார்ச்சில் தான் அறிக்கை வரும். இதில் திசைதிருப்பல் எங்கே இருக்கிறது?.
சும்மா வாயில் வருவதையெல்லாம் எழுதக் கூடாது.
இது என்ன அடி முடி இல்லா விளக்கமில்லா அலம்பலோ என்று தெரியவில்லை ஆனால் 2015 மார்ச்சில் தான் ஜெனீவாத் திருவிழா. எனக்குத் தெரிந்த மட்டில் பறையொலி இம்முறை நோக்கமில்லா முசுப்பாத்திக் கும்மாளமாகவோ லைக்கா லெபாரா திருவிழா ஆதரவு என முண்டியடித்து கொடிபிடிப்பாகவோ இல்லாமல் தமிழரின் சுயநிர்ணய உரிமையை பறைசாற்றுவதாக அமையும்.
இங்கு எவர் ஜெனீவாவில் எத்தினத்தில் எக்காரணம் கொண்டு எவ்வெப்போது பறை முழங்க வேண்டும் என நிர்ணயிக்க முற்படவில்லை.
அடே முட்டால் முனுசாமிகளா, லைக்கா- லிபாரா பிரச்சனை எனக்கு வேண்டாம் இளைய தளபதி டம்மிபீஸ் விஜய் தம்பி தான் வேணும் என்று சீமான் அடிச்ச பல்டிக்கும் நீங்கள் தான் துணை. இப்போதைக்கு லிபாராவை விட்டுடூட்டு லைக்காவை வழிக்கு கொண்டுவாருங்கோ. பிறகு லிபாரவைப் பார்ப்பம். லைக்காவின்ர லங்கா டீலை லிபாரா அம்பலப்படுத்துவது கிடையாது. அதுபோல லிபாராவின்ர டீலை லைக்க கதைப்பது இல்லை. இந்த ரெண்டும் பேசிப்பறஞ்ச்சு தான் வேலை குடுக்கினம் கண்டியளே!
Loosers like you are envious of the finanacial success of Tamils who have worked hard to bring their comapnies to this level. You can scream as loud as you want to but the Tamil people are not the dumb nuts you want them to be to listen to you.
They are Tamils and worked hard so no problem being donkeys for them even if they take off your underwear. Is that you meant?
What is your problem? You are not a Tamil anyway.
When debating something learn to stay with the subject. I didn’t know that you have appointed yourself as the sole authority in detremining who is a Tamil here. May be you need to see a doc soon before it get real bad.
சுவிஸ் நாட்டில் 2009 மேக்கு முன் பகுதியில் வசூலிக்கப்பட்ட மில்லியன் கள் தமிழ்ருடையதுதான். இன்னமும் கடனை திருப்பி கட்டிக்கொண்டுதானிருக்கின்றார்கள். வாங்கியவர்கழும் அங்குதான் வாழுகின்றார்கள். சேர்க்கப்பட மில்லியன் கள் எங்கே? யார் கையில்அந்த மாய மனிதர்கள் சந்திர மண்டலத்திற்கு போய்விட்டார்களா? அல்லது பூமியில்தான் வாழ்கின்றார்களா? அவர்களையும் தேடி பிடித்துவந்து அவர்களின் திறமைகளையும் வெளிக்கொண்டுவருவது தமிழ்ர்களாகிய எஙகளது கடமையல்லவா?
உங்கள் திறமையைத்தான் நிறையத்தடவை பார்த்து விட்டோமே ?
ஒரே ஒப்பாரிதான் , அழுகாச்சி காவியம்தான்.
2009 முன்பு வரை புலிகளுக்கு நிலத்திலும் சரி புலத்திலும் சரி மக்கள ஆதரவில்லை என கூவி வந்தீர்களே ?
மக்கள்ஸ் ஆதரவில்லாமல் எவ்வாறு புலிகளால் மில்லியன் கணக்கில் பணம் திரட்ட முடிந்தது ?
True… Not only in Swiss…
Also, here in Canada…
லக்கா,லெபரா இரண்டினதும் ஆணி வேர் சுவிஸ் நாட்டில்தான் இரண்டும்
ஒரே கொடியில் ஒன்றாக வள்ர்ந்தவ்ர்கள்தான்.
So What ?
லைக்கா தமிழன் – திட்டாதீர்கள்
லிபாரா தமிழன் – திட்டாதீர்கள்
கருணாநிதி தமிழன் – திட்டாதீர்கள்
ஜயலலிதா தமிழிச்சி – திட்டாதீர்கள்
டக்ளசு தமிழன் – திட்டாதீர்கள்
கே.பி தமிழன் – திட்டாதீர்கள்
கருணா தமிழன் – திட்டாதீர்கள்
தயா மாஸ்டர் தமிழன் – திட்டாதீர்கள்
ஐயோ லிஸ்டு நீளமப்பா…
##தமிழகத்தமிழர்,இலங்கைத்தமிழர்,சிங்களவ்ர்,முஸ்லிம்கள் யாவரும் ஒன்றாக சேர்ந்து நாட்டின் துரோகிகளிற்கு எதிராக போராடும்கால்த்தில்தான்
பிரச்சினைகழும்தீரும், கறுப்புப்பண்ம், பயங்கர்வாதப்பணம் சுருட்டும் முதலாளிகழும் ஓடி ஒழிக்க இடமில்லாமல் தவிப்பார்கள்.##
அவ்வாறேதான் தமிழர்களின் இனப்படுகொலையை வெளி உலகத்துக்கு கொண்டு வந்து அதனை உலகை ஏற்க வைப்பதற்கு தமிழர்கள் அனைவரும்நாடு கடந்து உணர்வால் ஒன்று பட்டு போராடுகிறார்கள் .
30 வருடமாக நாடுகளையும் கடந்து ,ஏமாற்றி யது போதும் இனியாவது
பகைமையையூட்டி தமிழர்களை பலிகொடுக்காமல் இருந்திதீர்களானாலே
போதும்.
இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காமல் எந்த இணக்கப்பாடும் சாத்தியமில்லை .
மற்றப்படி காலங்காலமாக உங்களைப்போன்ற அடிவருடிகள் எப்போதெல்லாம் இனவெறி அரசுகளுக்கு இக்கட்டு ஏற்படுகிறதோ அப்போவெல்லாம் இணக்கப்பாடு ,ஒற்றுமை என பசப்ப ஆரம்பித்து விடுவீர்கள் .
சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த போகாத ஊருக்கு வழி காட்டுவதைத்தான் இலங்கை போலி இடது சாரிகளும் , உங்களைப்போன்ற இன வெறி அரசுகளுக்கு ஜால்ரா போடும் போலி வர்க்கப்போராளிகளும் (?)
செய்து வருகிறீர்கள் .
இதில் வேடிக்கை என்னவென்றால் இது ஒரு போதும்நடைபெறப்போவதில்லை என்பது இத்தைகையவர்களுக்கு ந ன் கு தெரியும் .
நாங்கள் தமிழீழ விடுதலையையும் தமிழ் தேசியத்திற்க்கும் போராட்ட களத்தில் இருக்கிறொம் இவற்றில் எமது இலக்கு தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பே தீர்வு என்று நாங்கள் போராடும் காலகட்டத்தில் அந்த பயணத்திற்கு தடையாய் பெரும் நிறுவனங்கள் வந்து நிற்க்கும் பொது அது எதிரியோடு கூட்டு வைக்கும் பொது அதை எதிர்கின்றோம் அப்படிதான் ஏர்டெல் முதலியவற்றை எதிர்த்தோம் லைக்காவை எதிர்கின்றோம் கடந்த மார்ச்சில் அதற்க்கு முந்தய மார்சில் உள்ளாட்டு விசாரணை இருப்பக்க விசாரணை நல்லிணக்கம் என விடுதலைக்கு எதிரானவற்றை தமிழருக்கான நீதியாக அமெரிக்கா திணித்தபோது அதை எதிர்த்தோம் ஈழ விடுதலை எதிர்க்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருட்களை தமிழகம் புறக்கணிக்கும் என்றும் kfc முற்றுகை போராட்டம் அமெரிக்க கோடி எரிக்கும் போராட்டம் என முன்னெடுத்தோம் எங்கள் இலக்கு தவறவில்லை
கோக் பேசியை எதிர்பிர்களா என கேட்கும் தோழருக்காக கடந்த காலத்தில் நாங்கள் அதையும் செய்து இருக்கின்றோம் எங்கள் தாமிர பரணியை உரியும் கொக்கை நாங்கள் விரட்டி அடிப்போம் நாங்கள் கட்டமைக்க முயலும் தமிழ் தேசியத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இருக்கும் நாங்கள் ஏக்கதி பத்திய எதிர்ப்பை கற்றது .குளிருட்ட பட்ட அறைகளில் இருந்து கொண்டு வார்க்க்போராட்டம் பற்றி விவாதித்து கொண்டு இருப்பவர்களிடம் இருந்து அல்ல கொன்ட கொள்கைக்காக கடைசி வரை நின்று மடிந்த போராளி புலிகளிடமும் அவர்கள் வீர வரலாற்றில் இருந்து மட்டுமே
பன்னீர்
பாலசந்திரன் மாணவர் இயக்கம்
Sir,
May I know, where is this ‘Balachandran Student Movement’…?
So, now there is no KFC outlets in TamilNadu…?
I don’t know no one is selling or drinking Coca-Cola or Pepsi-Cola in TamilNadu…
But Sir, here I see in a movie they are drinking these American drinks…
Oh… may be they had the shooting in other states… Ok!
What about Dominos Pizza, Pizza Hut…?
Oh… I forgot the American ‘Ford’ car company in Maraimalai Nagar, Chennai…
Cognizant, Dell & Merill in Ciombatore…
Ohh… Caterpillar…
Sir, here the CM of TamilNadu said something about US investment & relationship on May 20, 2012 (if u don’t know about this read under the headline of ‘US committed to help TamilNadu develop’ it from May 21st dated Hindustan Times).
Sir, may be after this they closed all these American companies in TamilNadu… Good!
May be after this only Cat leader Seeman had alliance with Jeya Amma…
All for good…
Keep it up…
Any ‘Nike’ shoe still there…?
Oh… I forgot other American ‘Rayban’ sunglasses…
இந்திய மத்திய அரசும் , மானில அரசுகளும் அத்தகைய பன்னாட்டு கம்பனிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதனால்தான் அதை எதிர்ப்பதற்காக இந்த அமைப்புகள் தோன்றி போராடி வருகின்றன.
என்னமோ மத்திய மானில் அரசுகளை பாலசந்திரன் அ மைப்புதான் வைத்திருப்பது போல் கேள்வி மேல் கேள்வியாக அடுக்கி வருகிறீர்கள்
25 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா திறந்த பொருளாதாரம் ஆகிவிட்டதும் , இப்போது உலகமயமாக்கலின் ஒரு முக்கிய அங்கம் என்பதையும் மறந்து விட்டு அதை எதிர்த்து போராடுவதக கூறிக்கொள்ளும் மானில அளவிலுள்ள ஒரு சிறிய அமைப்பை கேள்வி மேல் கேள்வியாக கேதும் தைரியைத்தை தான் என்னவென்று சொல்வதுன் ?
Here I didn’t say,
Mr. Paneer Olympic say that, their ‘Balachandran Student Movement’ “protest against KFC, Airtel, Coke & Pepsi”
And they burned US flag…
Now KFC branch opened in Jaffna & people are lined up for this…
I think Mr. Panner will answer for this…
Is that all the US brands that you are aware of ? And Inioru this is worthwhile information to publish 🙁
ஒவ்வொரு பன்னாட்டு கம்பனியாக தனித்தனியாக எதிர்த்து ஒன்றும் ஆகப்போவதில்லை . இந்த பன்னாட்டு கம்பனிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து உள்ளே வரவிட்டு இன்று வரை பல சலூக்கைகளை அள்ளி வழங்கும் மத்திய மாநில அரசுகளையே எதிர்க்க வேண்டும்.
பால சந்திரன் படுகொலை பற்றிய புகைப்படங்கள் வெளியானபோது தமிழக மாணவர் அமைப்புகள் மத்திய அரசுக்கெதிராக கிளந்தெழுந்து போராட்டங்களில் ஈடுபட்டபோதுநத மாணவர் போராட்டங்களின் கவனத்தை திசை திருப்புமுகமாகவும் ,நீர்த்து போகச்செய்யும் முகமாகவும் சில அமைப்புகளினால் அந்த போராட்டங்கள் பன்னாட்டு கமனிகளுக்கெதிரானதாக மாற்றப்பட்டு இந்திய மத்திய அரசுக்கெதிரான போராட்டம் மழுங்கடிக்கப்பட்டதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
ஒரு பிரபாகரன்.ஒருபாலச்சந்திரன் பெயரை முன்வைத்து இவ்ர்களிற்காக உலகிலுள்ள தமிழர் அனவரையும் அணிதிரட்டுவதே தமிழ் பயஙரவாதம்.
இதன் மூலம் பயன் பெறுவது தமிழரின் பெயரால் தமிரை ஏமாற்ரி
வாழும் திருட்டுக் கூட்டம்தான்.
Yes Mannan,
This is a ‘Pillaippu” for these people…
Now everybody talking about these Seeman…
Few years before I told about him…
I think in inioru or Athirady I wrote about him…
(that time in Tamil)
My guesses mostly never went wrong…
(from 1982)
I don’t have to proof all these here…
But whoever was with me they know…