Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

லைக்காவும் நிழல் உலகமும் – யாமார்க்கும் குடியல்லோம் : இனியொரு

இனியொரு... by இனியொரு...
11/07/2014
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்
பொதுநலவாய மாநாட்டில் லைக்கா விளம்பரத்தோடு மகிந்த
பொதுநலவாய மாநாட்டில் லைக்கா விளம்பரத்தோடு மகிந்த

கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாத கோழைத்தனமான பண வெறியர்களால் இனியொரு (inioru.com) இணையத்தளம் லங்கா நியூஸ்வெப் (lankanewsweb.net) உட்பட வேறும் சில இணையங்கள் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டன. இனியொருவிற்கு எதிரான சைபர் தாக்குதல் இது முதல்தடவையல்ல. குறிப்பாக லைக்கா மோபைல் நிறுவனத்தின் அரசியல் தலையீடு தொடர்பான கட்டுரைகள் வெளிவரும் போதே இத் தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

ராஜபக்ச பாசிஸ்டுகளின் முகவர்கள் போன்று தமிழ் சமூகத்தில் லைக்காவின் செயற்பாடுகள் ஆரம்பித்த போதே அவர்கள் தொடர்பான குறிப்பான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு லைக்கா அனுசரணையாளர்களாகச் செயற்பட்ட பின்னரே ஊடகங்களில் கவனம் லைக்கா நிறுவனம் மீது திரும்பியது. கோப்ரட்வாச் என்ற அமைப்பு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் லைக்காவின் பணம் உட்செலுதப்பட்டதை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு முன்பதாக ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையில் அப்பாவி மக்களின் வரிப்பணத்தில் 100 மில்லியன் டொலர்களை லைக்கா சுருட்டிக்கொண்ட விடயம் 2006 ஆம் ஆண்டிலிருந்தே சன்டேரைம்ஸ் பத்திரிகையில் செய்திகளாக வெளிவந்தமை பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இலங்கையில் ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்த கையோடு கொள்ளையடிக்கப்பட்ட மிகப்பெரும் பணத்தொகை என்பதால் முக்கியத்துவம் பெற்ற அந்தச் செய்திகள் உயர்மட்ட அதிகாரவர்க்க வட்டங்களுக்குள்ளேயே முடங்கியிருந்தது. அதனை தமிழ் மக்களுக்குகுள் கொண்டுசெல்லும் பணியை இனியொரு முன்னெடுத்தது.  இனியொரு மீதான தாக்குதல்களும் மிரட்டல்களும் இதன் பின்னரே வெளியாக ஆரம்பித்தன. லசந்த விக்கிரமதுங்க போன்று தெருவில்வைத்துக் கொன்றுபோடுவது லைக்கா நிறுவனத்தின் நிழல் உலக மையமாகத் திகழும் பிரித்தானியாவில் இலகுவான நடைமுறை இல்லை என்றாலும் அனாமோதயக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

கடந்தவாரம் லைக்காவின் தலையீடு புதிய கட்டத்தை அடைந்தது. ஒரு புறத்தில் இலங்கையில் நாளாந்தம் பசியால் வாடும் உழைக்கும் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதற்கும் மறுபுறத்தில் புலம்பெயர் நாடுகளில் தேசிய முகமூடி அணிந்துகொள்வதற்கும் லைக்கா தேசிய நாடகம் ஒன்றை தனது நிழல் உலக வலையமைப்பிலுள்ள பிரச்சார மையங்களுடன் இணைந்து திட்டமிட்டது.

குறிப்பாக மக்களின் கண்ணீரையும் அவலத்தையும் பாலியல் வக்கிரங்களோடு கலந்து காசாக்கிகொள்ளும் ஊடகங்கள்லைக்காவின் பிரச்சார ஊற்றுமூலங்களாகின. லைக்காவிம் அதன் நிழல் உலக மாபியாக் குழுவும் இணைந்து நடத்திய இந்த நாடகத்தை இனியொரு இணையம் முதலில் தமிழில் வெளிக்கொண்டுவத்ததுடன் நிழல் உலக ஊடகங்களின் செய்திகள் நீக்கப்பட்டன. தமது திட்டம் பிசுபிசுத்துப் போனதை அறிந்த லைக்காவும் அதன் நிழல் உலக மாபியாக்களும் அதிர்ச்சியடைந்தன.

இதன் பின்னர், தெருக்களிலும் தொலைபேசியிலும் அனாமோதைய மிரட்டல்கள் நிழல் உலகின் மின்னஞ்சல்கள் போன்றன இனியொரு உட்பட பல்வேறு ஊடகங்கள் மீது உளவியல் யுத்தம் போன்றே நடத்தப்பட்டன.

மரண பயம், மன உளைச்சல், நாளை என்ன நடக்குமோ என்ற அச்சம் போன்றவற்றை ஏற்படுத்துவதன் ஊடாக யாரோ தனக்கு எதிரானவர்களை அழிக்க முற்படுகிறார்கள் என்பது தெளிவாகியது. இலங்கையிலும் உலகம் முழுவதிலும் மக்களுக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் ஊடகவியலாளர்களின் வலியையும் மகிழ்வையும் அனுபவிக்கக் கூடியதாக இருந்தது. இலங்கையில் மட்டும் இருந்திருந்தால் இதுவரையில் மரணச்சடங்கை நடத்தியிருப்பார்கள்

தாக்கப்பட்ட இணையங்களை ஆராய்ந்தால் அவை அனைத்துமே லைக்கா தொடர்பாக பதிவுகளை வெளியிட்ட மறுகணமே தாக்கப்பட்டுள்ளன.

லைக்காவின் நிழல் உலக வலையமைப்பில் புலம்பெயர் ஊடகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்வாங்கப்பட்டுள்ளன. லைக்காவின் பணத்தை வாங்கிக்கொண்டு தமது இணையங்களின் தொங்கு தசைகள் போன்று விளம்பரங்களை வெளியிடும் ஊடகங்கள் லைக்கா என்ற பல்தேசிய நிறுவனத்தின் தொங்கு தசைகளே.

இலங்கையில் ஊடகவியளார்கள் கடத்தப்படுகிறார்கள் என்று ஓநாய்கள் போல கண்ணீர்வடிக்கின்ற இந்த ஊடகங்கள் இனியொருவும் ஏனைய ஊடகங்களும் தாக்கப்பட்ட போது லைக்காவின் பணத்திற்காக வீணீர்வடித்தார்களே தவிர ஊடக ஒடுக்குமுறையை ஒளித்து நின்று வேடிக்கைபார்த்தார்கள். இச்சம்பவத்தை அறியாத பல ஊடகங்களையும், அவதானித்துக் கொண்டிருந்தவர்களையும் இங்கு குறிப்பிடவில்லை.

அதே வேளை புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் கலாச்சாரச் சிதைப்பில் ஈடுபட்டு இளைஞர்களின் சமூக உணர்வைத் அழிக்கும் மஞ்சள் ஊடகம் ஒன்று லைக்காவின் நிழல் உலக முகவராகச் செயற்படுவது ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டதை பிறிதொரு விரிவான கட்டுரையில் இனியொருவில் பங்களிக்கும் அனைவருக்கும் அறியதருகிறோம்.

தாக்குதல் நடத்தப்பட்டதும் லங்காநியுஸ்வெப் ஆசிரியர் சட்டரீதியான நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். தவிர, இணையத்தளம் முடக்கப்பட்டதும் அதன் செயலியை மீட்படதற்காக பல்வேறு நிறுவனங்களை அணுகிய போதும் சிதைக்கப்பட்ட பகுதிகளை மீட்க முடியாது என்றனர். இனியொருவில் பங்களிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தானாகவே தொடர்புகொண்டு தான்னால் முடியும் என்றார். அவரது தளராத முயற்சியால் செயலி மீண்டும் இயங்கவைக்கப்பட்டது.

தாக்குதல் நடத்தப்பட்ட முதல் நாளே ஒரு பேப்பர் தனது இணையத்தில் செய்திவெளியிட்டது. தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தது. ஒரு பேப்பர் குழுவிலிருந்த பலர் தொடர்ந்து இனியொருவை தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். சிலர் இணையத்தை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

தமிழ்நெட் ஆங்கில இணையத்தின் பிரதம ஆசிரியர் கருத்துச் சுதந்திரத்தைப் பல்தேசிய நிறுவனங்களுக்கு விலைபேச முடியாது என்று தொலைபேசியில் தெரிவித்தார். அன்று நள்ளிரவுக்கு சற்றுப் பிந்திய பொழுதில் தமிழ் நெட் இனியொரு மற்றும் லங்காநியூஸ்வெப் மீதான தாக்குதல்கள் தொடர்பாக அரசியல் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

லைக்காவின் நடவடிக்கைகள் தொடர்பாக மட்டுமன்றி, ஏனைய பல்தேசிய நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், இலங்கை அரச பாசிஸ்டுக்களின் அடியாள் படைகள், ஏகாதிபத்தியங்களின் ஐந்தாம் படைகள் போன்ற அனைத்து சமூகவிரோதச் செயற்பாடுகள் தொடர்பாகவும் இனியொருவில் கடந்தகாலத்தில் அரசியல்ரீதியாக பல்வேறு பதிவுகள் வெளிவந்துள்ளன.

இந்த நிறுவனங்களில் பின்புலத்திலுள்ள மக்கள் விரோத அரசியல் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை தனது பணியாகக் கொண்டிருந்தது. லைக்கா மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலுள்ள மற்றொரு மல்ரிமில்லியன் பல்தேசிய நிறுவனமான லிபாரா தொடர்பாகவும் நேரடியாக எழுதியது இனியொரு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உண்மைகளிருக்க லைக்காவின் நிழல் உலக வலைப்பின்னலில் சிக்கியிருக்கும் புலம்பெயர் மஞ்சள் ஊடகம் இனியொரு லிபாராவிடம் பணம் வாங்குவதாக அனமோதய மின்னஞ்சல்களை அனுப்ப ஆரம்பித்தது. புலிகளின் ஆதரவாளர்களாவிருந்தால் கலாச்சாரத்தைச் சிதைப்பதும், லைக்கா போன்ற ராஜபக்ச குடும்பத்துடன் வியாபாரம் நடத்தும் நிறுவனங்களுடன் கூட்டுவைத்துக்கொள்வதும் தவறில்லை என்றது. ஆயிரமாயிரம் மக்களதும் போராளிகளதும் தியாகங்களை லைக்கா போடும் எலும்புத்துண்டுகளுக்கால விலைபேசி வாலட்டுவதை தேசியம் என்கிறது.

புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியலை மேலும் மேலும் அனாமோதய நிழல் உலக அரசியலாக்கும் நிலை ஆபத்தானது. வெளிப்படையான மக்கள் சார்ந்த அரசியல் இன்றைய எமது அவசரத் தேவை.

ஈழ மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கன போராட்டம் என்பது லைக்கா – லிபாரா என்ற பல்தேசிய நிறுவனங்களின் பிடிக்குள் இறுகியுள்ளது. இதுவரை அழிவுகள் புலம்பெயர் நாடுகளிலிருந்தே ஆரம்பித்தன. அதே செயல்முறை இன்றும் தொடர்கிறது. புலம்பெயர் அப்பாவி உழைக்கும் மக்களின் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தும் பல்தேசிய நிறுவனங்கள் ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தை ராஜபக்ச பாசிசத்தின் அடிமைகளாக மாற்ற முயல்கின்றன.

இனியொரு மீது ஆயிரம் தடவை தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது மீண்டும் முளைவிடும். மிரட்டல்களும், அவதூறுகளும், மரண அச்சுறுத்தல்களும் மேலும் எங்களைப் பலமடையச் செய்கின்றன. கருத்துக்களை சாமனிய மக்களை நோக்கிக் கொண்டுசெல்வதும், மக்களை அணிதிரட்டுவதும் போராடுவதும் மட்டுமே இன்று எமக்கு முன்னால் உள்ள ஒரே வழி என்று மீண்டும் உணர்த்திய லைக்காவிற்கும் அதன் நிழல் உலக மாபியாகளுக்கும் நன்றிகள்.

இணையம் இயக்கமற்றிருந்த காலங்களில் ஊடகச் சுதந்திரத்திற்காகக் குரல்கொடுத்த அனைத்து ஊடகங்களுக்கும், அமைப்புக்களுக்கும், தனிநபர்களுக்கும் இனியொரு தனது நன்றியைத் தெரிவிக்கிறது.

யாமார்க்கும் குடியல்லோம்…..

இனியொரு….

இணையத் தாக்குதல் மீதான கண்டனங்கள்:

http://tamilnet.com/art.html?catid=13&artid=37466

http://www.orupaper.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/

http://www.srilankamirror.com/news/17762-3-websites-hacked-after-lyca-expos

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இந்திய இனக்கொலை இராணுவமும் அடிமை கருணாவும்

இந்திய இனக்கொலை இராணுவமும் அடிமை கருணாவும்

Comments 5

  1. Parai player says:
    11 years ago

    ஒரு திருத்தமும் சென்னையிலிருந்து தொடர்புடைய ஒரு செய்தி மூலமும்

    // லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு முன்பதாக ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையில் அப்பாவி மக்களின் வரிப்பணத்தில் 100 மில்லியன் டொலர்களை லைக்கா சுருட்டிக்கொண்ட விடயம் 2006 ஆம் ஆண்டிலிருந்தே சன்டேரைம்ஸ் பத்திரிகையில் செய்திகளாக வெளிவந்தமை பலரது கவனத்தையும் ஈர்த்தது.

    இதில் சண்டேலீடர் எனும் லசந்த விக்கிரமதுங்க நடாத்திய சண்டேடைம்ஸ் என மாறியுள்ளது.

    சென்னையிலிருந்து வெளிவரும் வீக்கண்ட் லீடர் (நான்கு ஆசிரியர்களில் ஒருவர் நடிகை குஷ்பு) நேற்றைய பதிப்பு லைக்காவின் ராஜபக்ச குடும்பத்துடனனான களவை ஆங்கிலத்தில் ஒரு சீரான செய்திப் கோப்பாக மேலதிக செய்திகளுடன் வெளியிட்டுள்ளது:-
    http://www.theweekendleader.com/Headlines/2988/special:-lyca-network-and-rajapaksa-connections-.html

  2. Parai player says:
    11 years ago

    லங்காநியூஸ்வெப் இணையதளம் இன்னும் மீண்டதாகத் தெரியவில்லை. ஆனால் மேலுள்ள தமிழ்நெட் இணைப்பினூடு முகநூல் பதிவு ஒன்று அதிர்ச்சி தரும் செய்தியொன்றைக் காவுகிறது.
    https://www.facebook.com/lnwsrilanka/photos/a.537673663004452.1073741828.391467310958422/599116513526833/?type=1&theater
    சிறிது இணையத் தேடலின் பின்னர் லங்காநியூஸ்வெப் ஜானகி விஜேரத்ன என்றொருத்தியை பெயர் குறிப்பிட்டு 2005 ஜனாதிபதி தேர்தலுக்கு பசில் ராஜபக்ச-இற்கு 200 மில்லியன் ரூபாய் அவளினூடு வழங்கப்பட்டது எனும் பாரிய குற்றச் சாட்டை லைக்கா களவு விவகாரத்தில் முன் வைத்துள்ளது.
    ஜானகி விஜேரத்ன என்பவளை உற்று ஆராய்ந்தால் அவள் தற்போது பரப்ளூ (Barablu) எனும் லைக்கா-உடன் இணைந்த இணையத்தொலைதொடர்பு நிறுவனத்தின் ஸ்ரீலங்கா நிர்வாகியாகச் செயற்படுவது தெரிகிறது.
    ஆனால் ஜானகி விஜேரத்ன என்றொருத்தி 2006-ல் லைக்கா-உடன் குடும்பத் தொடர்புடைய (சகோதரன் பாஸ்கரன்-ஊடாக; சென்னையில் நடத்திய செய்தியாளர் மாநாட்டு பேய்க்காட்டலில் லைகாவின் சுபாஸ்கரனுக்கு பக்கத்தில் அமர்ந்து ஞானம் அறக்கட்டளை சார்பாக மட்டும் தன் தலையை போடுவது போல் தோற்றிய) முண்டியோ (Mundio) எனப் பெயர் கொண்ட பிரித்தானியாவில் பதியப் பட்ட ஐந்து நிறுவனங்களின் ஒரு முகாமையாளிச்சியாக சிறிது காலம், 2006 இறுதிவரை, செயற்பட்டமை தெரிய வருகிறது.
    பாஸ்கரன் (சுபாஸ்கரன் அல்ல) அல்லிராஜா 2012 வரை இந்நிறுவனங்களின் இன்னொரு முகாமையாள. லங்காநியூஸ்வெப் ஜானகி விஜேரத்ன என்பவளை எந்த அல்லிராஜா-உடன் இணைத்து எழுதியுள்ளது என்பதில் சிறு தவறு இருக்கலாம். ல அல்லது முழுவிபரங்களும் ஆராயப்படாமலும் இருக்கலாம்.

    ஜானகி விஜேரத்ன பசில் ராஜபக்ச-உடன் எப்படித் தொடர்பு வைத்தவள் என்பது ஒரு முக்கிய கேள்விக்குறியாக இருக்க அவள் ராஜபக்ச அரசின் துணைப் போரக்குற்றவாளனும் இனவழிப்பாளர்களுமானுமாகிய வாயைத்திறந்தால் பொய் கொட்டும் தேசிய பாதுகாப்பு ஊடக அமைச்சன் கெஹெலிய ரம்புக்வெல எனும் மாபாதகனுடன் நெருங்கிய தொடர்புடையவள்.

    ஆதாரம்:-
    http://companycheck.co.uk/director/911220787

    http://companycheck.co.uk/company/05889001/MUNDIO-MOBILE-NETHERLANDS-LIMITED/directors-secretaries
    …

  3. Dr, Sri S, Sriskanda says:
    11 years ago

    It was great to have gotten the glimpse of the Lyca Man M. Subachanthiran.

  4. sumerian says:
    11 years ago

    சகோதர ஊடகம் மீதான தாக்குதலினை கண்டிக்காத தமிழ் தேசிய ஊடகங்கள் அனைத்தும் அவமானச் சின்னங்களே. இதில் சுபாஸ் புலனாய்வுப்பிரிவால் கைது என செய்திவெளியிட்ட லங்காசிறி, அதிர்வு, தீபம் போன்ற ஊடகங்கள் பின்பு தமது செய்தி தவறு என்று குறிப்பிடக்கூடவில்லை. மக்களை மாந்தைகளாக்கும் தேசிய அசிங்கங்கள்.

  5. mannan says:
    11 years ago

    இலங்கைத்தமிழரின்  உருமைக்கான  போராட்டத்தினை பயங்கரவாதமாக
    மாற்றியவர்கள்யார்?    புலிகளின்  ஆயுதபலத்தை  இலங்கையில்  அழிப்பதற்கு இலங்கை  இந்திய மேற்குலக  அரசுகழுடன்  கூட்டாக  இணந்து  செயற்பட்டவர்கள் யார்?   இலங்கைத் தமிழர்களின்  உதவிகளின்றி துரோகச்  செயல்களின்றி  சாத்தியமாக  இருந்திருக்குமா?

    இந்த பல்தேசிய நிறுவனங்களின்  கோட்டைகளிற்குள்  ஏதும்  பயங்கர ரகசியங்கள்   மறைந்துள்ளனவா?  எதற்காக  கோபப்படுகின்றார்கள்
    பயப்படுகின்றார்கள்.

    நிறைகுடம்  தளம்பாது என்பார்கள்.  இனியொருவினால்  யாராவது
    பயப்பட்டால்  அவ்ர்களின் பின்னால்  களவும் பொய்யும் ஏமாற்றும்
    துரோகச் செயல்கழும்  நிரைந்துள்ளதே  என்பது அர்த்தமாகின்றது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...