ஈழப் போராட்டத்தின் ஆரம்பம் தொட்டே லும்பன்களின் ஆதிக்கமும் செல்வாக்கும் போராட்ட அமைப்புக்களுள் நிறுவனமயமாகியிருந்ததை அவதானிக்கலாம். உதிரிப்பாட்டளிகள் என்பதன் குறுகிய சொற்தொடரே லும்பன்கள். கார்ல் மார்க்ஸ் ஜேர்மனியச் சொல்லான Lumpenproletariat என்பதை முதலில் அறிமுகப்படுத்துகிறார். ஒழுங்குபடுத்தப்பட்ட உழைப்புடன் தொடர்பற்ற, வர்க்க உணர்வை நோக்கி நகராத உழைக்கும் வர்க்கத்தின் பகுதிகளை ஆரம்பத்தில் அவர் அவ்வாறு அழைத்தார்.
1848ஆம் ஆண்டு பிரான்சில் லூயி போனபார்த்தின் அதிகாரம் இவ்வகையான லும்பன்களை ஆதாரமாகக் கொண்டது என கார்ல்மார்க்ஸ் கூறுகிறார். சதிப்புரட்சியினூடாக ஆட்சியை கையகபடுத்திய நெப்போலியன் பொனபார்த்தையும் லும்பன் சமூகத்தின் பிரதிநிதியாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
பின்னதாக ஆஸ்திரிய லும்பன்களின் ஆதிக்கம் குறித்து கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். தவிர, நாபோலில் 1848 நெருக்கடிகளின் ஏற்பட்ட போராட்டங்களில் லும்பன்களின் பாத்திரம் குறித்து ஏங்கல்ஸ் விபரிக்கிறார்.
லும்பன்கள் என்ற சோற் தொடர் இன்று மார்க்சியர்கள் தவிர்ந்த சமூகவியலாளர்களாலும் ஏறக்குறைய ஒரே உள்ளர்த்ததில் பிரயோகிக்கப்படுகின்றது.
லும்பன்கள் உற்பத்தியோடும், உழைப்போடும் நேரடியாகத் தொடர்பற்ற ஒழுங்கற்ற உழைப்பில் அவ்வப்போது ஈடுபடுகின்ற சமூகமாகக் காணப்படும். உழைப்பைப் பொறுத்தவரை இவர்களின் பாத்திரம் இவ்வாறு அமைந்திருக்க, லும்பனிசத்தின் அரசியல் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளிலிருந்து பின்னவீனத்துவம் வரை நீண்டு செல்கிறது. அதிகாரவர்க்கம் இவர்களை இலகுவில் பயன்படுத்திக் கொள்கிறது.
கார்ல் மார்க்சின் கூற்றுப்படி, லும்பன்கள் புரட்சியிலோ, போராட்டங்க்ளிலோ ஈடுபடுவதற்கான எந்த நோக்கங்களையும் கொண்டிருக்க மாட்டார்கள், எபோதும் தமது நாளாந்த வாழ்க்கைக்காக் அதிகார வர்க்கத்திலும், முதலாளித்துவ அமைப்பிலும் தங்கியிருகும் நிலையே காணப்படுவதால் சமூக மாற்றத்தில் விருப்புடையவர்களாக காணப்பட மாட்டார்கள் என்கிறார்.
ஈழப் போராட்டம் என்பது யாழ்ப்பாண சமூகத்தை மையப்படுத்தியே உருவாகியிருந்தது. யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தின் பிரதான தொழில் சேவைத்துறையாக அமைந்திருந்தது. அலுவலக நிர்வாகத்தினர், கணக்காளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டவல்லுனர்கள் என்ற நிர்வாக மற்றும் சேவைத்துறை சார்ந்த தொழில்களைச் சார்ந்திருந்த யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் அத்துறைகளுக்கே உரித்தான மன உணர்வையும் கொண்டிருந்தது.
வடபகுதியின் மொத்த சனத்தொகை இலங்கையின் சனத்தொகையில் 7 வீதமாகவே மட்டும் காணப்பட்ட நிலையில் பல்கலைக்கழக அனுமதியில் 28 வீதமான அனுமதியை இவர்களே பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் 1971ம் ஆண்டு சிரிமாவோ பண்டாரனாயக்க அரசு ஆட்சிப் பொறுப்பிலிருந்த காலப்பகுதியில் பல்கலைகழக நுளைவிற்காக மொழிவாரித் தரப்படுத்தல் முறையை அறிமுகப்படுத்தியது. இதனூடாகத் பல்கலைகழக அனுமதி பெற தமிழர்கள் 250 புள்ளிகளைப் பெறவேண்டிய அதே நிலையில், சிங்கள மாணவர்கள் 229 புள்ளிகளைப் பெற்றாலே போதுமானது என்ற நிலை உருவானது.
1974ஆம் ஆண்டு இத் தரப்படுத்தலானது மொழிவாரித் தரப்படுத்தல் என்ற நிலையிலிருந்து பிரதேசவாரியானதாக மாற்றப்பட்டது. அதன் பின்னதாக 7 வீதமான யாழ்ப்பாணத் தமிழர்களே பல்கலைக்கழக அனுமதி பெறக்கூடிய நிலை உருவானது.
பல்கலைகழகக் கற்கையோடிணைந்த சேவைத் துறையையே மையாமகக் கொண்டிருந்த யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தின் வாழ்நிலை இப்போது கேள்விக்குள்ளாகிறது. இவ்வேளைகளிலேயே இலங்கை அரசிற்கு எதிராக மாணவர் பேரவை, இளைஞர் பேரவை போன்ற அமைப்புக்கள் உருவாகின்றன. தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அவையே ஊற்றுமூலமாக அமைந்தன.
மத்தியதரவர்க்கத்தின் மேலணிகளைச் சார்ந்த இளைஞர்கள் இவ்வகையான தேசிய உணர்வினைக் கருத்தியல் தளத்தில் வளர்த்தெடுக்க, மறுபுறத்தில் அதன் கீழணியினர் செயற்பாட்டுத்தளத்தை உருவாக்கினர். தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழப் புரட்சி அமைப்பு போன்றன இவ்வாறான பின்ன்ணியில்ருந்தே உருவாகின்றன.
பல்கலைகழக அனுமதியற்று வேற்று உழைப்பில் ஈடுபட விரும்பாத இளைஞர்களும், இதன் பாதிப்பினூடாக உருவான ஒரு பகுதி கீழ் மத்தியதர இளைஞர்களும் தேசியப் போராட்டத்தை உருவாக்குகின்றனர்.
இந்த இளைஞர்கள் வர்க்கங்களுள் உள்ளடக்க முடியாத உற்பத்தியோடு தொடர்பற்ற லும்பன் மனோபாவத்தைக் கொண்டிருந்தனர். இதன் வழியே உருவான விடுதலை இயக்கங்கள் தத்துவார்த்த அரசியல் பார்வையற்ற லும்பன் மனோபாவத்தைக் கொண்டனவாக அமைந்திருந்தன.
இலங்கை அரசின் ஒடுக்குமுறை அதிகரிக்க 80 களில் சில இடதுசாரி சிந்தனைகளையும், அரசியல் பார்வையும் கொண்ட விடுதலை அமைப்புக்கள் உருவாகின. புரட்சிக்கான புறச் சூழல் கனிந்திருந்த இந்தச் சந்தர்ப்பத்தை இந்திய அரசு தலையிட்டு போராட்ட சூழலை முற்றாகச் சீர்குலைத்து அழித்த வரலாறு மறுபடி மறுபடி பேசப்படுகின்ற ஒன்று.
எது எவ்வாறாயினும் லும்பனிசம் என்பது முள்ளி வாய்க்கால் வரை ஆதிக்கம் செலுத்தி அழிந்து போனது.
அதே லும்பனிசத்தின் கூறுகள் இன்று புலம் பெயர் நாடுகளில் தமது வேர்களைப் படரவிடுகின்றன. புலம் பெயர் நாடுகளில் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடியின் பின்னான வேலையில்லாத் திண்டாட்டம் இதற்கு ஊக்கியாகத் தொழிலாற்றுகின்றது. இந்த நாடுகளைப் பொறுத்தவரை நிறுவன மயப்படுத்தப்பட்ட தொழில் வளர்ச்சியின் உதிரி வேலையாட்களாவே பெரும்பாலான அகதிகள் அதிகாரவர்க்கத்தால் பயன்படுத்தப்ப்டுகின்றனர்.
இவ்வாறான தொழிற்துறை தொழிற்சங்கப் போராட்டங்களிலிருந்து அன்னியப்பட்ருப்பதால் அவர்களின் லும்பன் மனோபாவம் அதிகரிக்கிறது. சிலர் சில்லறை வியாபார நிறுவனங்கள் போன்ற சுய தொழிலை உருவாக்கிக் கொள்ள ஏனையோர் புலம்பெயர் மண்ணோடு ஒட்டிக்கொள்ளாத பரிதாபகரமான வாழ்க்கை நடத்துகின்றனர்.
இவ்வாறான சூழலில் இலங்கை ஐரோப்பிய மற்றும் இலங்கை அரச அதிகாரங்கள் இவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றன. பலர் உளவாளிகளாக மாறிவிடுகின்றனர். உள் நோக்கம் கொண்ட பல உளவு அமைப்புக்கள் உருவாகின்றன.
இவ்வமைப்புக்களின் நோக்கங்கள் 80 களில் இந்திய அரசு பிரயோகித்த சீரழிவு வழிமுறைகளுக்கு எத்ந்த வகையிலும் குறைவானதல்ல. அதிகார வர்க்கங்களின் உளவு அமைப்புக்களின் பிரதான செயல்முறைகளில் மிகப் பிரதானமான கூறு அரசியல் கருத்துக்களை உருவாக்க முயலும் நபர்களைக் குறிவைப்பதாகும். லும்பன்களும் லும்பனிசமும் இச்செயன்முறைக்கு மிகப்பொருத்தமானவர்கள்.
இன்று இவர்களின் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளை அடையாளம் கண்டுகொள்வது மிக இலகுவானது. இவை பல்வேறு அரசியல் தளங்களில் இயக்கப்பட்டாலும் இவர்களிடையே பொதுவான போக்கை இனம்கண்டுகொள்ளலாம்.
1. அரசிற்கு எதிரான பொதுவான சுலோகங்களை முன்வைத்தாலும் குறிப்பான சம்பவங்களில் அரசு சார்பு நிலையை முன்வைப்பார்கள்.
இலங்கை அரசு போன்ற பாசிச அரசுகளைப் பலவீனப்படுத்தும் எதிர்ப்பியக்கங்களைப் சீர்குலைப்பது இவர்களின் செயற்பாடுகளில் ஒன்றாக அமையும். குறிப்பான சந்தர்ப்பங்களில் நட்பு சக்திகளிடையே பிளவுகளை உருவாக்கல், எதிர்ப்பியங்களை மக்களுக்கு எதிரானவையாக முன்வைத்தல் என்பன போன்ற அழிவரசியலை இனம்கண்டுகொள்ளலாம்.
2. பாத்திரப் படுகொலை(Character assassination) .
புரட்சிகரக் கருத்தை உருவாக்கும் முன்னணி உறுப்பினர்கள் மீதான வசைபாடல்களும் அவதூறுகளும் இதன் ஆரம்பமாக அமையும். எதிராளியாக அவர்கள் கருதும் இந்த முன்னணி உறுப்பினர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் வரை எந்த உறுதியான ஆதரமும்மின்றி முன்வைத்துப் பிரச்சாரம் மேற்கொள்வர். இவ்வாறான குற்றச்சாட்டுக்களை பொது ஊடகங்கள், இணையத்தளங்கள், தொலைபேசிப் பிரச்சாரங்கள் போன்றவற்றினூடாக மேற்கொள்வர். இதனூடாக இக் குற்றங்களை மேற்கொண்டோர் கருத்துக் கூறுவதற்கே தகுதியற்றவர்கள் என்பதை முன்வைப்பர். கருத்து மக்களைப் பற்றிக்கொள்ளும் நிலை உருவாகும் வேளைகளில் இவ்வாறான பிரச்சாரங்களை உளவாளிகள் மேற்கொள்வர். லும்பன்களான உளவாளிகள் கூட புரட்சிகர அரசியல் கருத்துக்களை முன்வைத்து அவர்களின் எதிராளியை எதிர்கொள்ளும் அனைத்துத் தந்திரோபாயங்களையும் பிரயோகிப்பர்.
மக்கள் பற்றுள்ள இடது சாரி புரட்சியாளர்கள் மத்தியில் இவ்வாறான அவதூறு அரசியலும் பாத்திரப்படுகொலை முயற்சியும் வெற்றிபெறுவதில்லை. இடதுசாரி அரசியலின் விமர்சன முறை என்பது தனிநபர்களதும் குழுக்களதும் வர்க்க சார்பு நிலையைப் பகுத்தறிவதும் அவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதுமே. இவ்வாறான பாத்திரப்படுகொலை முயற்சிகளும் அவதூறுகளும் இன்று எம்மத்தியில் பரவலாகக் காணப்படுவது போன்ற, நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்கள் முற்றாக அழிக்கப்படாத பிந்தங்கிய காலப்பகுதியில் வாழ்ந்த மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்றோர் மீது முன்வைக்கப்பட்ட போதும் அவர்கள் அதிகாரவர்க்கத்தின் அவதூறுகளின் பின்னணியிலிருந்த வர்க்க அரசியலையே இனம்காட்டினார்கள்.
3. உள்ளடக்கமற்ற வெற்றுச் சுலோகங்கள்.
லும்பன் அரசியல் அதிகாரவர்க்கம் சார்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும். இவர்கள் புரட்சி, ஜனநாயகம், தேசியம் போன்ற சுலோகங்களை அவற்றிற்குரிய அரசியல் உள்ளடக்கமின்றி முன்வைப்பர். உலகின் அரசியல் புறநிலை, வர்க்க அமைப்புக்களிடையேயன முரண்பாடுகள் போன்ற அனைத்து சிக்கலான விடயங்களைக் கூட அதிதீவிரப் புட்சிச் சுலோகங்களுள் அடக்கி அவற்றின் உண்மையான உள்ளடக்கம் குறித்துப் பேசுவோரை தனிமைப்படுத்தி அதிகாரவர்க்கத்திற்கு சேவையாற்ற முனைவர்.
4. குழுவாதமும் தூய்மைவாதமும்.
இயல்பாக குண்டர் படைகளின் தலைவர்கள் முதலில் தம்மைத் தூய்மையனவர்கள் என்ற விம்பத்தை ஏற்படுத்துவர். லும்பன் அரசியலிலும் இந்தவகையான போக்கு சர்வ சாதாரணமானதே. தம்மைப்பற்றித் தாமே பிரச்சாரங்களை மேற்கொள்வர். தாம் நேர்மையாவர்கள், அப்பளுக்கற்றவர்கள், தூய்மையானவர்கள், விமசனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் போன்ற கருத்துக்களை முன்வைத்து தமக்குக் கீழ்ப்படியும் குழுவொன்றை ஏற்படுத்திக்கொள்வர். தமது குழு சார்ந்தவர்களைத் தவிர்ந்த ஏனைய அனைவரையும் அரசியல்ரீதியாகவோ, சாரீரரீதியாகவோ அழித்தொழிப்பதற்குரிய உரிமையை இதனூடாக அவர்கள் கோருவர். இதற்காக தமது கடந்தகால, நிகழ்கால அரசியல் வாழ்வை மிகப்படுத்தியும், பொய்யான தகவல்களூடாகவும் சாகசங்கள் நிறைந்ததாக புனைவர். தாம் சார்ந்த குழுவினரும் எந்த மறுப்புமின்றி ஏனைய அரசியல் கருத்துக்களை அழிப்பதற்குரிய அத்தனை பலத்தையும் தலைமைக்கு வழங்குவர். இறுதியில் இந்த அழிப்பிற்காக அதிகாரத்தின் அடியாட்களாக மாறிவிடுவர்.
இவை லும்பன் அரசியல் குழுக்களின் சில பண்புகள் மட்டுமே. இவை போன்ற வேவ்வேறு வகைப்படுத்தல்களைக் காணலாம். இவர்களின் வர்க்க சார்புனிலை என்பதிலிருந்து லும்பன்கள் மத்தியில் மாற்றங்களை எதிர்பார்க்கவியலாது எனினும், அவர்களின் ஆதிக்கம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் குழப்பகரமான சூழல் ஆபத்தானது. தவிர, அதிகாரவர்க்கம் சார்ந்தே எப்போதும் லும்பனிசம் அமைந்திருக்கும்.
இவ்வாறான லும்பன் அரசியல் குழுக்கள் பருமனில் மாறுபடினும் பண்பில் மாற்றமடைவதில்லை. பரந்துபட்ட அரசியலில் அவர்கள் செல்வாக்குச் செலுத்தும் வரை அவர்கள் குறித்த அபாயம் வெளித்தெரிவதில்லை. எது எவ்வாறாயினும், அபாயகரமான லும்பன்கள் எதிர்கொள்ளப்படுவதற்கேற அரசியல் வகுக்கப்பட்ட வேண்டும்.
உற்பத்தியில் நேரடியான பங்காற்றல் இல்லாத -‘உதிரி’ பாட்டாளிகளான- ,’லும்பன்’ [LUMPEN ] என்று விளிக்கப்படுபவர்கள் , யார் என்பதனை,சற்று விளக்கமாக கூறவேண்டும். அரசியல் கருத்தியலில், அவர்கள் எவ்வாறு ஆளுமை செலுத்துகின்றார்கள் ? போராட்டங்களைத் தலைமை ஏற்கும் நிலைக்கு அவர்கள் வருவதன் காரணிகள் என்ன? உணர்ச்சிமய அரசியலை சாதகமாக பயன்படுத்தும், ஆற்றலை எந்தச் சக்தி இவர்களுக்கு வழங்குகிறது?
மத்தியதர வர்க்க இளையோரை, லும்பன் மனோபாவம் கொண்டவர்கள் என்று கணிப்பிட முடியுமா?
அரசியல் உள்ளடக்கத்தோடு புரட்சிகர கருத்துக்களை முன்வைப்பவர்கள் ,நடைமுறை வாழ்வில், பேச்சுச் சித்தாந்திகளாக [ சிலர் ]இருக்கும்போது, அந்த வார்த்தைகளை வைத்து அதிகார வர்க்கத்தினருக்கு முண்டு கொடுக்கும் ‘லும்பன்கள்’, மேல் எழுவார்கள் .
இன்னமும் மிக ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய கட்டுரை இது. நல்ல ஆரம்பம்.
//இயல்பாக குண்டர் படைகளின் தலைவர்கள் முதலில் தம்மைத் தூய்மையனவர்கள் என்ற விம்பத்தை ஏற்படுத்துவர். லும்பன் அரசியலிலும் இந்தவகையான போக்கு சர்வ சாதாரணமானதே. தம்மைப்பற்றித் தாமே பிரச்சாரங்களை மேற்கொள்வர். தாம் நேர்மையாவர்கள், அப்பளுக்கற்றவர்கள், தூய்மையானவர்கள், விமசனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் போன்ற கருத்துக்களை முன்வைத்து தமக்குக் கீழ்ப்படியும் குழுவொன்றை ஏற்படுத்திக்கொள்வர். தமது குழு சார்ந்தவர்களைத் தவிர்ந்த ஏனைய அனைவரையும் அரசியல்ரீதியாகவோ, சாரீரரீதியாகவோ அழித்தொழிப்பதற்குரிய உரிமையை இதனூடாக அவர்கள் கோருவர். இதற்காக தமது கடந்தகால, நிகழ்கால அரசியல் வாழ்வை மிகப்படுத்தியும், பொய்யான தகவல்களூடாகவும் சாகசங்கள் நிறைந்ததாக புனைவர். தாம் சார்ந்த குழுவினரும் எந்த மறுப்புமின்றி ஏனைய அரசியல் கருத்துக்களை அழிப்பதற்குரிய அத்தனை பலத்தையும் தலைமைக்கு வழங்குவர். //இ
இதை வாசிக்கும் போஒது புலம் பெயர் நாடு ஒன்றில் வெளியாகும் இணையம்நினைவுக்கு வருகிறது. இணையத்தள நிழல் உலகமும் லும்பனிசத்தை வளர்க்கிறது.
அய்யா, இந்த கட்டுரையோடு இனியொரு அடிக்கடி சொல்லும் இலங்கை அரசிடம் மில்லியன் கணக்கில் பணம் வாங்கும் லும்பன்களையும் அம்பலப்படுத்தி இருக்கலாம். ஏனென்டால் காசு விசயம் என்டால் கட்டாயம் தெரிந்திருக்கும்.
“அபாயகரமான லும்பன்கள் எதிர்கொள்ளப்படுவதற்கேற்ற அரசியல் வகுக்கப்பட்ட வேண்டும்.” என்ற
கோரிக்கை ஏற்று கொள்ளக்கூடியது.
“உள்ளடக்கமற்ற வெற்றுச் சுலோகங்கள்.” – லும்பன் அரசியல் அதிகாரவர்க்கம் சார்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும். இவர்கள் புரட்சி, ஜனநாயகம், தேசியம் போன்ற சுலோகங்களை அவற்றிற்குரிய அரசியல் உள்ளடக்கமின்றி முன்வைப்பர். ஆமாம் அநேக ஈழப் விடுதலை போராட்ட அமைப்புகள் இதனைத்தான் கொண்டிருந்தன. கந்து வட்டிக்காரர்கள் போன்று மக்களிடம் பணங்கறந்து உலப் பணக் காரர்கள் போல் வலம் வருவதோடு மாத்திரம் அல்ல எந்த அரசு தமிழ் மாக்களுக்கு எதிராக கூட்டு படுகொலை செய்ததோ அந்த அரசோடு சேர்ந்து இலங்கையில் கூட்டு முதலீடு செய்கின்றனர்.
நானும் யாழ்பாணத்தின் மத்தியதர வர்க்கம் தான் ஆனால் அனைத்து யாழ் மத்திய தர வர்க்கத்தையும் லும்பன் வர்க்கமாக பார்க்க முடியுமா? தெரியவில்லை! இருப்பினும் கட்டுரையாளரின் சுட்டி காட்டுதலில் உண்மையில்லாமல் இல்லை. பல்கலை கழக தரப் படுத்தலில் இடம் கிடைக்காத பல யாழ்ப்பாண இளையர்கள் ஏன் யுவதிகள் கூட முத்தையன்கட்டு, முரசுமோட்டை, மல்லாவி, ஒட்டுசுட்டான் போன்ற இடங்களுக்கு சென்று காடு வெட்டி விவசாயம் செய்திருகின்றனர். இன்னும் சிலர் லண்டன் இந்தியா போன்ற நாடுகளுக்கு சென்று உயர் கல்வியை தொடர்ந்து இருக்கின்றனர். எனவே போராடத்தில் சம்பந்தத பட்ட அனைவரையும் லும்பன்களாக கணிக்க முடியாது. இருப்பினும் ஈழத் தமிழர்களின் அரசியல் ஆயுத போராட்டத்தில் பல லும்பன்கள் இருந்தனர். இந்த லும்பன்களை சிங்கள மக்கள் மத்தியில் பிரபலாமாக பேசப்படும் மாதன முத்தாவுடனும் ஒப்பிட முடியும். தமிழர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்ற உப்புச் சப்பற்ற கருத்தை கூறிய தமிழ் அரசியல் பரம்பரையில் இருந்து வந்தவர்கள் அல்லவா நாம்!, அதனை தந்தையின் அரசியல் தீர்க்க தரிசனம் எனக் கூறும் மடையர்களும் நம் மத்தியில் தான்!.
இணையத்தளங்கள் புலம்பெயர் லும்பன்களை வளர்த்துவிடுகின்றன என்பது உண்மைதான். யாருக்கும் பயப்படாமல் குண்டர் போல எல்லாம் செய்யலாம். சில நாடுகளில் இணைய லும்பன்கள் டிபர்மேசனுக்காக சட்டத்தின் பிடியில் சிக்கி உள்ளார்கள். தமிழர்கள் மத்தியில் இன்னும் அது வந்தபாடில்லை.
புரட்சிகரக் கருத்தை உருவாக்கும் முன்னணி உறுப்பினர்கள் மீதான வசைபாடல்களும் அவதூறுகளும் இதன் ஆரம்பமாக அமையும். எதிராளியாக அவர்கள் கருதும் இந்த முன்னணி உறுப்பினர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் வரை எந்த உறுதியான ஆதரமும்மின்றி முன்வைத்துப் பிரச்சாரம் மேற்கொள்வர். இவ்வாறான குற்றச்சாட்டுக்களை பொது ஊடகங்கள், இணையத்தளங்கள், தொலைபேசிப் பிரச்சாரங்கள் போன்றவற்றினூடாக மேற்கொள்வர். இதனூடாக இக் குற்றங்களை மேற்கொண்டோர் கருத்துக் கூறுவதற்கே தகுதியற்றவர்கள் என்பதை முன்வைப்பர். கருத்து மக்களைப் பற்றிக்கொள்ளும் நிலை உருவாகும் வேளைகளில் இவ்வாறான பிரச்சாரங்களை உளவாளிகள் மேற்கொள்வர். லும்பன்களான உளவாளிகள் கூட புரட்சிகர அரசியல் கருத்துக்களை முன்வைத்து அவர்களின் எதிராளியை எதிர்கொள்ளும் அனைத்துத் தந்திரோபாயங்களையும் பிரயோகிப்பர்.
உருப்படியாக போராட்டத்திர்க்கு எந்த உதவியும் செய்ய மாட்டீர்கள் , வெளியில் இருந்து கருத்து சொல்வீர்கள் , உண்மையான செயலில் இறங்கி இழப்புக்களை சந்திதவனிற்க்கு உங்களைப்போன்ற கருத்து கந்தசாமிகளை பிடிக்காமல் இருப்பதில் என்ன தவறு ? ஒரு உரிமை போராட்டம் நடக்கும் போது அதற்கு தோள் கொடுப்பதை விட்டு விட்டு உங்களீற்க்கு என்ன மாற்று கருத்து ? எல்லோர் கருத்தையும் தலைவன் கேட்டு இருந்தால் போராட்டம் தொடங்கிய அன்றே முடிந்திருக்கும் . முள்ளீவாய்க்கால் தோல்விக்கு பின்னர் உங்களை போன்ற கருத்து கந்தசாமிகள் சொல்லும் வியாக்கியானம் என்ன என்றால் புலிகளீன் அரசியல் திறமின்மை தான் அவர்களீன் அழிவிற்கு காரணம் என்பது , விடுதலை விரும்பும் தமிழர் எல்லோரிற்கும் தெரியும் அந்த தோல்விக்கு 90%காரணம் நம்பிக்கை துரோகம் என்று
போராட்டம் தொடங்கிய அன்றே முடிந்திருந்தால் இவ்வளவு அழிவும் இல்லாது தவிர்த்து இருக்கலாம். இப்போதும் ஏதும் சாதிக்கவில்லையே.
போராட்டதை தொடங்காமலே இருந்திருந்தால் இலங்கை இன்றூ சிங்கப்பூராக இருந்திருக்கும்.போராட்டத்தை தொடங்கித்தான் என்ன கண்டோம் கடைசியில் சிங்களவன் காலில்தானே விழுந்தோம்.ஜீ.ஜி.பொன்னம்பலம் சேனநாயக்க காலில் விழுந்தார் நாம் மகிந்தாவின் காலடியில் விழுந்தோம் இன்னும் எழுந்து இருக்க முடியவில்லை.
தமிழர் இல்லாத சிங்க(பூ)ஊராக இருந்திருக்கும். பிரபாகரனின் ‘அமைச்சரவையில்’ சோதிடரும் இருந்திருந்தால் அவரும் மகிந்தவைபோல சோதிடம் பார்த்து அரசியல் செய்திருப்பார். கிழக்கில், வடக்கில் மழை பெய்யாவிட்டிருந்தால் இவ்வளவு அழிவும் வந்திருக்காது.
அமைச்சரவைச் சோதிடர் இப்போது வந்திருக்கலாம் ஆனால் சேர் பொன் இராமநாதனைக் கவிழ்த்ததில் இருந்து இன்றூ கேபி வழியாய் புலிகள ஒழித்ததுவரை சிங்களம் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் அசைக்க முடியாததாகவே இருக்கிறது.அய்யா அமிர்தலிங்கம் வழியில் இப்போது சம்பந்தம் அய்யாதான் இருக்கிறார் (நான் அரை அவியல் அய் தி சம்பந்தரைச் சொல்லவில்ல
திருத்திச்சொல்லுங்கள் த.மா. போராட்டம் அதுஇது என்று அலைந்த்ததிற்குப் பதிலாக சைவப்பற்றை வளர்த்திருந்தால் தமிழ்மக்களுக்கு சீக்கிரமாக முக்தி கிடைத்திருக்கலாம்.
கண்கெட்ட பின்னே சூரிய உதயம்.
//லுன்பன்களை எதிர்கொள்வதற்கேற்ற அரசியல் வகுக்கப்படவேண்டும்//.நாம் முகம் இல்லாதவா்களாக(Anonymous) வந்து இப்படி ஆக்கங்களும் அதற்கு கருத்துக்களும் கூறிவிட்டு சென்றுவிட்டால் எப்படி? எந்த வகையில் மேற்கூறியது சாத்தியமாகும்??.
விடுதலை விரும்பும் தமிழர் எல்லோரிற்கும் தெரியும் அந்த தோல்விக்கு 90மூகாரணம் நம்பிக்கை துரோகம் என்று
“சரியாக
சொன்னீர்கள். நம்பிக்கை துரோகத்திற்கு காரணமே அரசியற் திறனின்மைதான்.
எண்பதுகளில் அரசியல் பேசவும் அதில் ஈடுபடவும் எந்த தயக்கமும் இருக்கவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையை பார்தால் யாரை நம்புவது யார் சொல்வது சரி என குழுப்பமே ஏற்பட்டுள்ளது. இப்போது மிகுந்த மனத்துணிவும் மிக நுண்ணிய அறிவும் எமக்கு தேவைப்படுகின்றது. கட்டுரை சிந்தனையை ஊக்குவிப்பதாக உள்ளது.
நம்பிக்கை துரோகம் என்று
?
இந்த லும்பன்களில் நீங்கள் சேர்ந்து கூட்டம் போட்ட B.T.F அடங்குமா? அல்லது அவர்கள் முற்போக்கு சக்திகளா?
விளைக்குட்டி,
லும்பன்கள் தொடர்பான கணிப்பீட்டிற்கு வருவதற்கு உங்கள் கேள்வி பயனுடையதாக அமையும் என எண்ணுகிறேன். புலிகள் இயக்கம் மட்டுமல்ல ஏனைய அனைத்து இஅயக்கங்களின் ஆரம்பம் லும்பனிசம் பிரதான பகுதியாக அமைந்தது என்பது உண்மை. பின்னதாக தேசியவாத சக்திகள் இவற்றில் இணைந்து கொண்டனர். அவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டனர். பிரிஎப் ஐப் பொறுத்தவரையும் இது ஓரளவு பொருந்தும். அவர்களின் வர்க்க சார்பு நிலையைப் பொருத்தவரை ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவம் சார்ந்தவர்கள் என்பதே இங்கு முதன்மையானது. ஆக, அதன் கீழணிகள் வென்றெடுக்கப்பட வேண்டும். சரியான வழிமுறைக்கான விஞ்ஞான பூர்வமான அணுகுமுறைகளுக்கு அவர்கள் அறிமுகப்பட வேண்டும்.
இனியொருவோ நானோ எப்போதும் இது போன்ற அமைப்புக்களை தீவிரமாக விமர்சிக்கும், அம்பலப்படுத்தும் அரசியலையே முன்வைக்கிறோம். பிரிஎப் ஐ ஒரு கூட்டத்திற்கு அழைப்பதும், பொதுத் தளத்தில் அவர்களை விமர்சனத்திற்கு முகம்கொடுக்கச் செய்வதும் தேவையானது! பீரிஎப் இன் கருத்த்துக்களோடு உடன்படுவது ஆபத்தானது!!
இங்கு இவ்வாறான சமூகப்பற்றுள்ள வேலைகளை முன்னெடுக்கும் போது பீரிஎப் உடன் கூட்டுச் சேர்ந்த புலிப் பினாமிகள் என்றும், குறுந்தேசிய வாதிகள் என்றும் சேறு பூசிவது லும்பன்களின் இயல்பு. உள்ளடக்கம்ற்ற குற்றச்சாட்டு. பீரிஎப் உடன் சார்ந்த அணிகளை வென்றெடுக்கும் அரசியல் தவறானது என நீங்கள் நாகரீகமாக விமர்சித்தால் அது மக்கள் பற்றுள்ள காத்திரமான கருத்தாக அமையும். அதைவிடுத்து அவதூறுகளைப் பரப்பினால் அது லும்பனிசமாக மாற்றமடையும். திறந்த விவாதத்திற்கு நான் என்றும் தயார். நீங்கள் தயாரானால் முன்வாருங்கள்.
நம்பிக்கை துரோகம் என்று
?”
கப்பல் வருமென்று காத்திருந்த நம்பிக்கை தான். வேறொன்றுமில்லை.
கப்பல் கதைகளை நம்பி கருத்து சொல்பவர்களை என்ன செய்யலாம்? இவர்கள் அம்புலிமாமா கதைகளை உண்மை என்றுநம்பும் மன பக்குவம் உள்ளவர்கள் ,
இது நீங்கள் விரக்தியில் கூறும் வார்த்தை. வடமராச்சி லிபரேஷன் ஆபரேஷன் நடவடிக்கை முற்றுகையில் அகப் பட்டவர் மிகவும் ஆபத்தான நிலைமையில் தப்பிவந்தவர். கப்பல் வரும் எனக் காத்திருந்தார் என்பது கொச்சை படுத்தும் பிரச்சாரம். இருப்பினும் இறுதி நேரம் அவ்வாறான வழிமுறை ஒன்றை தேர்ந்தது எடுப்பது தான் வழிமுறையாக இருந்தால் அதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் அவ்வாறான நிலைமை வரை சென்றதுதான் ………………………… பல கேள்விகளை எம்மில் எழுப்பி உள்ளது.
மக்கள் விடுதலைக்காக புறப்பட்ட ஒரு இயக்கம் 30 வருடங்களாக சமா் புரிந்தது மட்டுமல்ல எத்தனை வகையான அனுபவங்களை பெற்றிருக்கவேண்டும் அப்படிப்பட்டவா்கள் ஒரு வளி சிலவேளை பிளைத்தால் அடுத்தவளி என்ன என்று முடிவெடுக்காமல் கண்மூடித்தனமாக இருந்து அளிந்துபோனது அவமானமே நம்பிக்கைத்துரோகம் என்று பிதற்றுவது குழந்தைத்தனமானது.
அச்சுவேலியில் ரஐீவ் காந்தி காப்பாற்றினார் இரணைமடுவில் கருணா காப்பாற்றினார் முள்ளிவாய்க்காலில்???
முள்ளீவாய்க்காலில் கடவுள் காப்பாற்றத்தவறீ விட்டார் காலன் வெற்றீ பெற்றூ விட்டான் சாப்டர் குளோஸ்.இனியாவது குழந்தத் தனமாக எழுதாது சிந்தியுங்கள்.
அடுத்தவழியாக அவர்கள் கெரில்லா போர் முறைமைக்கு போகவில்லையே என்பது எனது மனவருத்தமே. இதனை அவமானம் என்று சொல்லமுடியாது குமார்.
ஆம் ராகவன்,//வேதனையானது// என்று கூறுவதே சரியானது.
ஒரு “போராளி”(?) மக்களின் எதிரியாகிய அன்னியக் கப்பலை வரும் என எதிர்பார்த்து அந்த வழியை தேர்ந்தெடுப்பதா? மக்களை நம்பாமல் எதிரியை நம்புவதா?
மக்களூம் கவிழும் கப்பலில்தானே இருந்தார்கள்.எல்லாத் திசைகளூம் அடைபட்டு எதிரியின் திசையில்தான் வெளீச்சம் தெரிந்தது அங்கு மனிதர் இருப்பார்கள் என நினைத்தார்கள் ஆனால் இருந்ததோ கொடிய விலங்குகள்.இந்த மனித தர்மம் மீறீய விலங்குகள நம்மால் கண்டிக்க முடியவில்லை ஆனால் விழலுக்கு நிறத்த நீராய் விசர்க்கதை கதைக்க மட்டுமே முடிகிறது, மனிதரா நாம்?
கோசலன்! நீங்கள் குறி சொல்லத் தேர்ந்தெடுத்த கார்ல் மார்க்ஸை,வரலாறு குப்பைத்தொட்டியில் போட்டு விட்டதை,அறிய முடியாத அவல நிலையில் இருக்கிறீர்கள்.
‘ஒரு விசையுந்தியில் எதிரும்புதிருமாக வெடிக்கலாம்’ என்கிற யதார்த்தமற்ற படமும்,எழுத்தும் உங்களைப் போன்ற சொந்தச் சிந்தனையற்றவர்களுக்கு, சொர்க்கந்தான்.
போராட்டஉயிர்ப்பு,எப்போது ஆரம்பித்தது கூடத் தெரியாத ‘லும்பன்கள்’,கொம்பன்களாகி;
யாருக்காகவோ,அவதிப்பட்டு, அதிகமாய் தின்று, வாந்தி எடுப்பது போன்ற வலுவிழந்த எழுத்துகள் தொடராகவே வருகின்றன..
நெருஞ்சி,
நீங்கள் ஒரு வகையில் 80 இற்கும் 90 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். உலகப்பொருளாதார நெருக்கடியின் பின்னர் 2009ம் ஆண்டு உலகில் விற்பனையில் முன்னணி வகித்த நூல் கார்ல் மார்கிசின் டாஸ் கப்பிரல். 2008 உலகில் மிகவும் மதிக்கப்படும் ஆய்வாளராக கார்ல் மார்க்ஸ் கருதப்படுவதாக நியோயோர்க் டைம்ஸ் அறிவிக்கிறது. பிரித்தானிய ஆக் பிஷப் கார்ல் மார்க்ஸ் சொன்னது சரி என்கிறார். ஐரோப்பாவில் தீவிர வலது சாரியாகக் கருதப்பட்ட நிகொலா சார்கோசி மார்க்சைச் படிக்க வேண்டும் என்கிறார். உலக மயமாதலின் சிற்பிகளில் ஒருவர் எனக் கருதப்படும் ஸ்டிகிளிட்ஸ் கார்ல் மார்க்சின் ஆய்வுமுறை மட்டும் தான் சரியானது என்கிறார். 30 வருடப் போராட்டம் தமிழர்களை எவ்வளவு பின் தங்கிய நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றது என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணமோ?
கோசலன்! தமிழர் போராட்டம் முப்பது வருடத்திற்குட்பட்டதல்ல.
அறுவது வருடங்களுக்கு மேற்பட்டது. இவ்வாறான சிறிய விடையத்தையே புரிந்துகொள்ள முடியாதவர்கள்,’மூலதனம்’ பற்றி பேச முற்படுகிறீர்கள்.
‘மூலதனம்’ புத்தகத்தை வாசித்தீர்களா என்றால் விடை எதுவாகவிருக்கும் என்பது புதிரல்ல.
முதலாளித்துவம் பெருமைப்பட்டுக் கொள்கிறதை,ஆதாரம்காட்டி எழுத,உங்களுக்கு வெட்கமாகப்படவில்லையா?
ஒடுக்கப்பட்டவனின் அரவணைப்பில் மதமும்,ஒடுக்குபவனின் ஆகர்சிப்பில் மாக்சிசமும் தவழுவதை நீங்கள் அவதானிக்கவில்லையா?
சிவப்பு மட்டைகள் உலகில் வெளுப்பேறி கிடப்பது தெரிய மறுக்கிறதா?
கிட்லரினுடனான சரசமும்,பின் கிட்லருக்கெதிரான அமெரிக்க பிரித்தானிய சல்லாபமும்,சிவப்பு வரலாறு எதைக் காட்டுகிறது? பைபிளை பிடித்தபடி தெருக்களில் அலைகிறவனுக்கும்,சிவப்புக் கொடிகளுடன் ஊர்வலம் போனவனுக்கும் நரகந்தான் முடிவாக இருப்பது,ஒளிவுமறைவின்றி இல்லையா?
உலகமயமாதலில் உறிஞ்சுகிற தொழிலாளர் வர்க்கமும்,
உறிஞ்சப்படுகிற தொழிலாளர் வர்க்கமும் ஓரணியில் வராதபடியான மரபணுக்கள், மேவி நிற்பது நிஜமில்லையா?
கல்லறையைத் தோண்டி கருத்தியலாடும் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கும், இன்னொரு கல்லறையைத் தோண்டி,நீங்கள் எழுதுவதற்கும் என்ன வித்தியாசம்?
தெருப்புழுதி காலில்படாத தேசாந்திர வாழ்வில் இருந்தவர்கள்,திக்கற்ற மக்களை திசை திருப்பப் பார்ப்பது தீராத வியாதிதான்.விவாதங்கள் புரிந்துணர்வை,ஒருங்கமைப்பை உருவாக்காது விடின் அது விதண்டாவாதம்.இனி நான் தொடர விரும்பவில்லை.
பிற்குறிப்பு: “30 வருடப் போராட்டம் தமிழர்களை எவ்வளவு பின் தங்கிய நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றது என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணமோ?” என்பது நீங்கள் எழுதிய “பாத்திரப் படுகொலை” தொடர்பானதா?
தெருப்புழுதி காலில்படாத தேசாந்திர வாழ்வில் இருந்தவர்கள்,திக்கற்ற மக்களை திசை திருப்பப் பார்ப்பது தீராத வியாதிதான்.விவாதங்கள் புரிந்துணர்வை,ஒருங்கமைப்பை உருவாக்காது விடின் அது விதண்டாவாதம்.-
உண்மையான வரிகள் நன்றி நெருஞ்சி
. சில மனிதர்களீடம் மனசாட்சியை எதிர்பார்ப்பது மடைமை
லும்பன் என்கிற வார்த்தை பிரயோகம் கால்மாக்ஸ் என்கிற மேதாவிக்கு மனிதகுலத்தில் அக்கறை கொண்ட இந்த மகானுக்கு மட்டுமே சொந்தமானவை. அதுபோக லும்பன் என்கிற வார்தை சொல் பிரயோகம் பத்தொன்பதாம் நுhற்றாண்டுக்கு உரியவை. லும்பனுக்கு உரிய முழு அர்த்தையும் யாரும் முழுமையாக புரியn வேண்டுமானால் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தில் மில்லினராக வாழ்க்கை நடத்திக் கொண்டு அரசியல் கருத்துகளை பொழிந்து கொண்டிருப்பவர்களை விசாரிப்பதை விட பார்த்தாலே போதுமானது. இது இலங்கையில் தேசியகூட்டமைப்பாகவும் புலம்பெயர்யுலகத்தில் மில்லினர்களாகவும் காட்சி தருகிறார்கள். இவர்களே! லும்பன்கள்.தற்போதைக்கு இது போதுமானது என நினைக்கிறேன். ஆனால் லும்பன்களை பற்றி கேள்வி எழுப்புவதும் விவாதிப்பதும் காலத்தின் கடமை.நெருஞ்சி போன்றவர்களின் மட்டமான அறிவுக்கு உட்பட்டதல்ல
சந்திரன் ராஜா,
எந்த வார்த்தையும் யாருக்கும் சொந்தமானதல்ல! அவை இந்தச் சமூகத்திற்குச் சொந்தமானது. அதீதப் புலியெதிர்ப்பை அரசியாலாக்குவது அதிகாரவர்க்கம் சார்ந்தது. ஒவ்வொரு பிரச்சனையிலும் விஞ்ஞானபூர்வமான பகுப்பாய்வைக் கையாளுங்கள். பல விடயங்கள் தெளிவாகும்.
புலியெதிர்ப்பு என்பது என்ன? ஒரு தனிமனிதனின் கட்டளைக்கு அடிபணிவதும் எல்லாவித கொலைகளை அங்கீகரிப்பதும் தமிழ்சமூகத்தின் பழைமைவாத போக்குகளை கண்மூடித்தனமாக அரங்கேற்றுவதை ஆமாப் போடுவதை எதிர்பது தானே புலியெதிர்பு என்பது. இதில் எங்கேயாவது மத்தியதுவ ஜனநாயகத்தை காண முடியுமா? கட்சிகோட்பாட்டை கண்டு கொள்ள முடியுமா?? இதை எதிர்க்காமல் இலங்கைதழுவிய ரீதியில் யாராவது தொழில்சங்கத்தையோ விவசாயசங்கங்களையோ ஏற்படுத்த முடியுமா? றாயாகரனின் வறட்டுதனமான தத்துவத்திற்குள் தாங்கள் இழுபட்டு போகவேண்டாம் என நினைக்கிறேன். தற்போது இருக்கிற தமிழ்தேசியகூட்டமைப்பும் புலம்பெயர் மில்லியனர்களும் சமூகத்தை சாட்டித்தானே உருவானார்கள்… இல்லை. அதில் ஏதாவது மாற்றுக் கருத்து தங்களுக்கு உண்டா? இருந்தால் விளம்புங்கள். அறிய ஆவலாக இருக்கிறேன். றயாகரனுக்கு உரிய காமடி உடன் வராதீர்கள்.
யாரோ மில்லியனர்களாக மாறி விட்டதின் அங்கலாய்ப்பில்,ஆதங்கத்தில்,பழம் நூற்றாண்டைத்தேடி,புறம்போன கருத்துகளால்,மகிந்தராசாக்கு,மாக்சைத் துணைக்கழைக்கும் சந்திரன்ராசாவே!
கால்காசுக்கு அண்ணாந்துதான் கால்மாக்ஸ்(மேதாவி) என்பவனும்,
மூலதனம் என்று முக்கிப்பிளந்தானோ.
நீங்கள் ஆவி பறி போன மேதைதான்.ஏனெனில் லும்பனை வைத்தே,இங்கே வம்பளந்து பார்க்கிறீர்கள்.
புலிக்கு காசு சேர்த்து கொடுத்ததாய்,தேசத்தில் கணக்கு விட்டு,தெருவுக்கு வந்த பின்னர்,இனியொருவிலாவது இங்கிதமாய் பேசுங்கள்.
இழப்பதற்கேதுமற்றோர் சினப்பதற்கான தருணம்
இனியொரு தொலைவில் இல்லை.
கடந்து சென்ற நுhற்றாண்டை அறியாமலா புதிய நுhற்றாண்டை எதிர் கொள்ளப் போகிறீர்கள்? தொழில்சங்களை புலிச்சங்சங்கங்கள் ஆக்கிய காலங்களை மறந்து விட்டீர்களா? எந்த நிலையில் இருந்தாலும் தொழில்சங்களின் செயல்பாட்டை மறுப்பவனும் மறுதலிப்பனும் ஒரு கேடுகெட்ட பிற்போக்குவாதியே! உங்களுக்குரிய இடமும் அதுவே. தொழில்சங்கமே தற்காலத்திற்குரிய மாற்றுக் கருவி. இதில் பிரபாகரனையும் தேடிமுடியாது. மகிந்தாவையும் தேடமுடியாது. இந்த குறைந்த ஆரம்ப அறிவையாவது முதலில் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கற்பனைவாத எழுத்து தமிழ்நாட்டு சினிமாவுக்கு மட்டுமே சிலவேளைகளில் கவிதை எழுத பொருந்தும். தொழிலாளிவர்க்கத்துகல்ல.
பல்வேறு பட்ட பின்னூட்டங்கள் இங்கு வந்திருகின்றன அவை இருக்கட்டும் கோசலன் உங்கள் கட்டுரையில் உண்மைகள் இருக்கலாம், விவாதங்கள் இருக்கலாம் அதுவுமிருக்கட்டும் என்னில் எழும் கேள்வி என்னவெனில், நாம் அனைவரும் கட்டுரைகளையும் பின்னூடங்களையும் இட்டுவருகின்றோம் இதன் சமூகப் பெறுமதி என்ன? அல்லது சமூக பயன்படு திறன் என்ன? தமிழர்களின் சமூக விடுதலையில் இதன் தாக்கம் என்ன? நிகழ்கால நெருக்கடியில் அல்லது அனர்த்தங்களில் இருந்து இதன் மூலம் எவ்வாறு எமது சமுகத்தை பாதுகாக்க முடியும்? என்பதே!
S.G.Raghavan,
கருத்து மக்களைப் பற்றிக்கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என்பதை நாம் கேட்டிருக்கிறோம். புரட்சிக்கான சூழல் கனிந்திருக்கும் கருத்துக்களை உருவாக்கியவர்கள் அதிகாரவர்க்கத்தின் ஆளுமைக்கு உட்பட்டே செயற்படுவதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. நாசிகளின் ஜேர்மனிக்குப் பின்னர் கருத்தை உருவாக்குவது ஏகதிபத்தியங்களின் நிகழ்ச்சி நிரலிற்கு உட்பட்டே செயற்பட்டுத்தப்பட்டிருக்கின்றது. 2010 இற்கு அடுத்துவரும் பத்தாண்டுகள் கருத்துப்போராட்டத்திற்கான வெளியைத் தோற்றுவித்திருக்கிறது. மக்கள் நண்பர்களையும் எதிரிகளையும் நேரிடையாகக் காண்கிறார்கள். முரண்பாடுகள் தெளிவாகத் தெரிகின்ற உலக ஒழுங்கை சந்திக்கிறோம்.
எமது சமூகச் சார்பு நிலையிலிருந்து உருவாக்கப்படும் கருத்துக்களின் சமூகப் பெறுமானம் மாற்றங்களை உருவாக்குவதை நாம் நேரிடையாகக் காண்கிறோம்.
சரணடைவும் விட்டுக்கொடுப்புமற்ற, சிந்தனை மாற்றத்தை உருவாக்கும் போராட்டம் இன்று அவசியமானது. சமூகப்பற்றுமிக்க ஒவ்வொரு மனிதனும் தன்னாலியன்ற பங்களிப்பை இந்தத் தளத்தில் வழங்கினால் இன்ன்னும் சில வருடங்களில் புதிய முன்னோக்கிய மாற்றங்களைச் சந்திக்கலாம்.
B.T.F கூட்டிற்கு திறந்த விவாதம். அய்யா உங்களை யார் கீழணிகளை வெல்ல வேண்டாம் என்று சொன்னது. ஆனால் அதற்கு B.T.F உடன் கூட்டு வைத்து கொண்டா வெல்ல வேண்டும். உங்கள் கருத்துக்களை பொதுவெளியில் வையுங்கள், கீழணிகளில் உள்ள விமர்சனங்களை ஏற்று கொள்ள கூடியவர்கள் அதை கண்டு கொள்வார்கள். மக்களை பலி கொடுத்தவர்களுடன் கூட்டாம்.நல்லா சொல்றாங்கய்யா விளக்கம்.
பிரிஎப் போன்ற அமைப்புக்களின் வர்க்க சார்புநிலையையும் அவர்களை எதிர்க்க வேண்டும் அல்லது எதிர்க்கிறேன் என்று சொன்ன பின்னும் கூட்டு வைக்கிறேன் என்று அவதூறு ஏன் ? நீங்கள் லும்பன் சமூகத்தின் வெளிவிவகார அமைச்சரோ?
இனி விளைக்குட்டி என்பவரின் கொமன்டைப் போட்டதால் இனியொருவை லும்பன் கூட்டம் என்று கூற இன்னொரு லும்பன் சமூகமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது!
அதீத புலியெதிர்பு என்பதை விட அதீத கற்பனை என்பதே தங்களுக்கு பொருந்தக்கூடியது கோசலன்.
மக்கள் மக்கள் என்று வாய் நாற வார்த்தை ஞாலம் போடும் ஜாம்பவாங்களே, மக்களுக்கு நான் கடந்த காலத்தில் என்ன செய்தேன் அவர்களின் நலத்துக்கு என்று உங்களின் மனசாட்சியை ஒரு தரம் தொட்டு கேட்டுப்பாருங்கள் அதன் பின் அவர்களின் கரிசனை தொடர்பில் தகமையிருந்தால் கருத்துக்கூறுங்கள். ஆடு நனையிதென்று ஓநாய்கள் எல்லாம் ஓலமிடக்கூடாது.
விஞ்ஞான முடிவுகள் எல்லாம் முடித்த முடிவுகலல்ல. கார்ல் மாக்ஸ் எனும் மேதை பற்றி எழுந்தமானமாக விமர்சிப்பதும் சரியானதுமல்ல. அதே நேரம், அவர் கருத்துக்கள் எல்லாம் அவர் காலத்தில் இருந்து இக்காலத்துக்கும் சரியாகப்பொருந்தும் என்பதுமில்லை. புலிகள் பற்றி புழுத்துப்போன கதைகளையே சில புடலங்காய்கள் உதிர்த்து வருகின்றன. இப் புடலங்காய்கள் எல்லாம் முத்திப்போன கிழட்டு காய்கள் போல் தெரிகின்றது அதாலதான் புலிகள் பற்றிய சரியான புரிதல் அவைகளுக்கு இன்னும் இல்லை. வளரும் போதே அவைகளை கல் கட்டி நீர் பாச்சி நன்கு கவனித்திருந்தால் இவ்வாறு சுருண்டு தொங்கும் நிலை அவைகளுக்கு வந்திருக்காது. திடமான விதையில் இருந்தே நலமான பயிர் விளையும். சொல்லுக்கு முன் நற்செயல் இருக்கட்டும் அல்லது சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்.
தமிழா, நீ எழுதி எழுதியே இளைத்து விட்டாய் கருத்துக் கூறி கருத்துக் கூறியே களைத்து விட்டாயடா. இருந்தாலும், ம்.. ..தொடங்கடா அடுத்த தலையங்கத்தை.
உனது கூழ்முட்டை ஞானத்திற்கு எதுவும் எறப்போவதில்லை அரிச்சந்திரா! இருந்தும் தொடர்ந்து அள்ளிவீசிக் கொண்டேயிருங்கள் உங்கள் கருத்துக்களை. மக்டொலாஸ்சுகள் தானே இவ்வுலகத்தில் பெருகியிருகின்றன.
யாருடனும் ஒருமையில் கதைத்து எனக்கு பழக்கமில்லை. ஏதோ தவறுதலாக “உனது” என்ற வார்த்தை வந்து விட்டது.தவறுக்காக மன்னிப்பு கேட்கிறேன்.
அரிச்சந்திரா,
சில கேள்விகள் பதில் சொல்லுங்கள்:
1. புலிகள் முக்கியமா மக்கள் முக்கியமா?
2. 35 வருசமாக புலிகள் கருத்தை அழித்து மக்களை மந்தைகள் போல வைத்திருந்ததைக் கூட நாம் கண்டுகொள்ளவில்லை ஆனால் அழிவில் முடிந்த போராட்டத்தைப் பற்றி பேச இன்னும் தடை விதிக்கிறீரா?
3. .//தமிழா, நீ எழுதி எழுதியே இளைத்து// கருதுக் கூறுகின்ற தமிழனை மண்டையில் போட்ட புலி, புளட், ஈபி, டக்ளாசு எல்லாரையும் மன்னிக்கலாமா? 5.//புலிகள் பற்றிய சரியான புரிதல் அவைகளுக்கு// அப்ப புலிகள் மற்ற இயக்கங்களையும் கருத்துக் கூறியவர்களையும் என்று 47 ஆயிரம் தமிழர்களை அழித்துள்ளார்கள். அப்படி இப்பவும் அழித்து சிங்களவனுக்கு துணை போவதா?
சந்திரன் ராசா, தங்களின் ஒப்புக்கு போர்த்திய ஜனநாயக பிணவாடை புராணத்தை நிற்பாட்டுங்கள். ஜனநாயகம் பாதி சோசலிசம் பாதி இரண்டும் கலந்த கலவை நான் என்பது போல் உள்ளது உங்கள் ஒப்பாரிகள். அரை வேக்காட்டுத்தனமான அறிவை வைத்துக்கொண்டு ஆலாப்பறக்கவேண்டாம். தத்துவங்களும் கொள்கைகளும் மேன்மையானவைகள்தான் ஆனால், அதனை எவன் சரியாக கொண்டுசெல்லுகின்றான்? பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை மறந்து ஆட்சி பீடங்களுக்கு ஆலவட்டம் பிடிக்கும் வாடிக்கையையே வைத்திருக்கின்றன. ஜனநாயக என்பதும் இப்போது வலுவுள்ளவனின் கவுட்டுக்குள் கிடக்கும் சொத்தாகவே இருக்கிறது. பொழுது போகவில்லையாயின் முதலில் அங்கு சென்று ஒட்டடை அடித்துவிட்டு வாருங்கள் பின்னர் மற்றைய ஓட்டைகளை ஒட்டுவது பற்றி யோசிப்போம்.
kams-in, புலிகளை விட மக்களை விட நாடே முக்கியமானது. நாட்டை அடைவதற்கு முயன்றே நாங்கள் நாய்களால் நாய்களாய்க்கிடக்கின்றோம். புலிகள் என்பவர் புவிக்கு அப்பால் இருந்து புஸ்க விமானத்தில் வந்தவர்களல்ல புலிகள் முக்கியமா மக்கள் முக்கியமா? என்ற கேள்வியைக் கேட்பதற்கு. மக்களுக்குத்தெரியும் புலிகளைப்பற்றியும் புனுகுப்பூனைகளைப்பற்றியும். நம்மவர் அழிவுகளை நாம் யாரும் விரும்பி வரவேற்பதில்லை. ஆனால், போராட்ட வரலாறுகளில் அழிவுகள் தவிர்க்க முடியாதவைகளாகவே உள்ளன அதற்காக போராட்டங்கள் முடிவதில்லை. சரி என் கருத்தை விடுவோம் நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் காந்தியாக மாறி கச்சை கட்டிகொண்டு போராடப்போகின்றீர்களா? அல்லது அமிர்தலிங்கத்தின் ஆடைகளை அணிந்து கொண்டு மேடையேறி முழக்கப்போகின்றீர்களா? மண்டையில் போட்ட மண்டையில் போட்ட என்று எத்தனை நாளுக்குத்தான் கருமாந்திரம் பிடித்த கருகிய பூக்குப்பைகளை கொண்டையில் சுற்றிக்கொண்டிருக்கப்போகின்றீர்கள். கருத்துக்கள் எங்கிருந்து யாருக்காக என்ன நோக்கத்துக்காக வெளியிடப்பட்டது என்பதைப்பொறுத்தே அன்று மண்டைக்குள் கருவிகள் உறுமின. இனியாவது …..
“புலிகளை விட மக்களை விட நாடே முக்கியமானது”
மக்களை விட நாடே முக்கியமானது என்பது ஆள்வோரின் வாய்ப்பாடு. நாடு என்பது ஆள்வோரின் எல்லையினால் குறிக்கப்பபடுவது. மக்களிற்காகத்தான் நாடு – மக்களே நாடு – என்பதே புரட்சிகர – மக்கள் நலன் சார்ந்த – வாய்ப்பாடு.
நாட்டிற்காக மக்களாயின் இலங்கையிலிருந்து கொண்டு தமிழீழம் கேட்டதும் தவறாகி விடும்.
என்று மக்களிடமிருந்து நாடு வேறுபடுத்தப் படுகிறதோ அன்று அரசும் நாடும் ஒன்றாக்கப் படும். அரசுக்கெதிரான போராட்டங்கள் தேசத்துரோகமாகக் கணிக்கப்படும்.
நடிகர் கமலகாசன் கறூப்புச்சட்டை அணீந்து தமிழனுக்கு நாமம் போட்டாலும் அவனை தலையில் வைத்துக் கொண்டாடுகிறது ஒரு கூட்டம் `ஃஎர்67890-4321`
“கருத்துக்கள் எங்கிருந்து? யாருக்காக?! என்ன நோக்கத்துக்காக வெளியிடப்பட்டது? என்பதைப்பொறுத்தே அன்று மண்டைக்குள் கருவிகள் உறுமின?????……. இனியாவது ….. ” அரிச்சந்திரன், விடுதலை இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட சக அமைப்புகள் அல்லது தனி நபர் படுகொலைகள் முழுவதுமே தவிர்த்திருக்கப் படவேண்டியவை இதனை எவ்வகையிலுமே நியாயப் படுத்தமுடியாது.
புலிகள் செய்ததில் தவறு உண்டு இனிவரும் காலங்களில் அவை நிகழாது இருக்க வேண்டும், நிகழ்ந்ததுக்காக மன்னிப்பு கோருதல், தவறை தவறு ஒத்துக்கொள்வதில் மனித விழுமியமே மேலோங்கும். இதனை செய்து கொண்டு ஆரோக்கியமான கருத்தாடலுக்குள் மக்களை அழைத்துச் செல்வதில் தான் ஒரு விவேகமுள்ள, சமூகப் பற்றுள்ள விடுதலை வீரனுக்கு அழகு.
நாடை பெற்று விடவேண்டும் என்ற வெறியில் மக்களை இழந்து விட்டோம் மக்கள் இல்லாத நாடு வெறும் இடுகாடு. புலிகளைவிட மக்களை விட நாடே முக்கியமானது என்பதை மாற்றி அதில் இருக்கும் உள்ளடக்கமாக, புலிகள் உள்ளிட்ட அனைத்து மக்களும் நாட்டில் பூரண உரிமைகளுடன் வாழும் தேசம் ஒன்று தேவை எனக் குறிப்பிடும் படி வேண்டுகிறேன். பல ஆண்டு விடுதலைப் போராட்டம் அரைவேக்காட்டுதனமான மக்களையா உருவாக்கியது? ஏன் எல்லோரும் அரைவேக்காடு அரைவேக்காடு என மற்றவர்களை கழுத்தில் பிடித்து தள்ளிவிடுகிறீர்கள். தமிழ் மக்கள் அனைவரும் ஒரு அரைவேக்காட்டு அரசியலை கொண்டிருந்தார்கள் என்பது உண்மை. அதுதான் நாம் திக்கு திசை தெரியாத காட்டில் நின்று ……………………………
ஐயோ ஐயோ ராகவன், புட்டு என்றால் புட்டுக்காட்டினால் தான் புரியும் என்கிறீர்களே நான் எங்கு போய் முட்டிக்கொள்ள நாடு என்றால் நீங்கள் குறிப்பிட்டவைகளும் அடங்கும்.