லிபிய முன்னாள் அதிபர் கடாபி நேட்டோ ஆக்கிரமிப்புத் துணைப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடாபி ஆதரவு படையினர் வலுவாக இருந்த ஷிர்தே பகுதிக்குள் புகுந்த நேட்டோ துணைப்படையினர் பெரும்பாலான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கடாபி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறைந்திருந்த மாளிகைக்குள் புகுந்த புரட்சி படையினர், கடாபியை துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாகவும், இதில் அவரது இரண்டு கால்களும் காயமடைந்ததாகவும் அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு சில மணி நேரங்களில் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியிட்டுள்ளது. கடாபியின் இழப்பு அரபுலகில் அமரிக்க ஐரோப்பிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான உணர்வை அதிகரிக்கும் எனக்கருதப்படுகின்றது.
ஈரானிய அதிபர் தவிர வேறு எவரும் கண்டனம் தெரிவிக்கப் போவதில்லை!அரபுலகில் பாதிக்கு மேல் அமெரிக்க விசுவாசிகள் தானே?
ஈரானிய அதிபர் தவிர வேறு எவரும் கண்டனம் தெரிவிக்கப் போவதில்லை”
அடுத்து அவர்தானே!?
அமெரிக்க பிரித்தானிய பிரான்ஸ் நலன்களுக்காக அதிபர் கடாபி அழிக்கப் பட்டார் என்பது தான் வருத்தம் தரும் செய்தி. வழமையான முரட்டுதனத்துடன்
செய்தி வழங்குவது இரண்டாவது கவலைக்குரிய செய்தி.
சகல ஊடகங்களிலும் லிபியாவின் புரட்சிபடை என வர்ணிக்கப்பட்ட ஏகாதிபத்திய கைகூலிகளும் அதன் தாசர்களும் இனி லிபியா பாட்டாளிவர்க்கம் இந்த கூலிப்படையின் ஆட்சியில் எதையும் கண்டு கொள்ளப் போவதில்லை என்பதுதே இன்றைக்கு அறிவிக்கும் செய்தியாகும்.
பொன்னையே பொருளையோ பிறந்தநாட்டில் இருந்து கொண்டோடாது அந்த மண்ணிலேயே ´வீரமரணமடைந்தவனுக்காக தலைவணங்குவதும் அல்லாமல் அஞ்சலியும் செலுத்துகிறேன்.
It is very shame to USA., UK & France in the contemporary history.
ஏகாதிபத்தியவாதிகள் எந்த வகையில் கணக்கு முடிக்க காத்திருப்பார்கள் என்பதை சா்வாதிகாரிகள் அறியாமலே வாழ்ந்து அவலமாக இறந்து போவது அதிசயமான ஒன்றாகவே உள்ளது.கடாபி காலத்திற்கு காலம் மேற்குலகுடன் நட்பையும் பகையையும் தேடிக்கொண்ட ஒருவா்,சொந்த குடும்ப நலன்களை இட்டு ஒப்பந்தங்களை மேற்குலகுடன் தேவையானபோது செய்தே வந்துள்ளார் அதே வேளை மேற்குலக நாடுகளும் தமது நலன்களுக்காக அவரை பயன்படுத்த தவறவில்லை,ஆனால் இப்போது லிபிய மக்கள் மாற்றம் வேண்டும் என்று கேட்டவேளை குண்டுமழை பொழிந்தால் அதை மன்னிக்கமுடியாது இதோ இதுதான் முடிவு இதில் இருந்து எதிர்கால சா்வாதிகாரிகள் கற்றுக்கொள்ள நிறைய விடயம் உண்டு. இருந்தாலும் தீா்ப்பு வழங்கியவிதம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.
ஈரானிய அதிபர் தவிர வேறு எவரும் கண்டனம் தெரிவிக்கப் போவதில்லை”
அடுத்து அவர்தானே!?////அவ்வளவு எளிதில் “அது” முடியாது!மன்னர் “ஷா”வை ஏலவெ வீழ்த்திவிட்டு,இப்போது அங்கு”ஜனநாயக”அரசு அல்லவா ஆட்சிபீடம் ஏறியிருக்கிறது?மேலும்,ஈரானுடன் மோதினால்,முதலில் காணாமல் போகப்போவது,”இஸ்ரேல்”என்னும் 1948-ல் உருவாக்கப்பட்ட நாடு தான்!அதன்பின் ஈரான் வீழ்ந்தாலென்ன,எழுந்தாலென்ன?