உலகெங்கிலும் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை நிமிடத்திற்கு நிமிடம் துல்லியமாக கொண்டுவரும் ஊடகங்கள் நிறைந்த இன்றைய உலகிலும் நாம் சிந்தையை எட்டாத பல உண்மைகள் மறைக்கப்படும்போது அது தற்செயலானதா அல்லது திட்டமிட்ட செயலா என்பது புரியாமல் தவிக்கின்றோம். அப்படிப்பட்ட ஒரு உண்மை இன்றைய தேடலில் கிடைத்தது.
பிச்சைக்காரர்களே இல்லாதது அந்த நாடு.
இங்கு முழுமையான ஒரு ரொட்டியின் விலை 0.15 (அமெரிக்க) செண்ட் மட்டுமே – இந்திய நாணய மதிப்பில் 68 பைசா.
இல்லம் இல்லாத குடும்பமோ, தனி மனிதரோ ஒருவரும் இல்லை.
வங்கிகளில் கடன் பெற்றால் அதற்கு வட்டி இல்லை. கடனை திரும்பச் செலுத்த குறுகிய கால வரையறையும் இல்லை.
இந்நாட்டினர் திருமணம் செய்துகொண்டால் அரசு அளிக்கும் பரிசு 50,000 டாலர்கள் + வாழ வீடு.
எந்த தொழில் கல்வி படிக்கின்றனரோ அதற்குரிய ஊதியம் மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
வேலை கிடைக்கவில்லையா, வேலை கிடைக்கும் வரை மாதா மாதம் ஊதியம் அளிக்கப்படும்.
அயல் நாடுகளுக்குச் சென்று படிக்க வேண்டியது அவசியமா? உங்களு 2,500 யூரோ செலவிற்கும், வாழ்விடம் + கார் வாங்கிக் கொள்ளவும் பணமளிக்கப்படும்.
இந்த நாட்டில்தான் கார்கள் தயாரிப்பு விலைக்கே உங்களுக்கு விற்கப்படும். வரி, கிரி என்று ஏதுமில்லை.
இந்த நாடு உலக நிதி அமைப்புகள் எதனிடமிருந்தும் கடன் பெற்றிருக்கவில்லை. செலுத்த வேண்டிய கடன் என்று ஒரு பைசாவும் இல்லை.
ஆனால் உலகின் வளர்ந்த பல நாடுகளின் வங்கிகளில் பல நூறு பில்லியன்களில் பணத்தைப் போட்டு வைத்துள்ளது.
தரமான கல்வி எல்லோருக்கும் இலவசம், மருத்துவ வசதியும் இலவசம்.
வியப்பாக உள்ளதா? இந்த நாட்டின் பொருளாதார புள்ளி விவரங்களையெல்லாம் (அதிகாரப்பூர்வமானவை) எடுத்து அலசினால் தலை சுற்றுகிறது. தங்கம் இருப்பு 144 டன்கள். ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருவாய் 45 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் = 100 கோடி) வருவாய் மீதான செலவு 38 பில்லியன் டாலர்கள் மட்டுமே. உபரி பட்ஜெட் வைத்துள்ள உலகின் ஒரே நாடு.
மக்கள் தொகை மிகவும் குறைவு. வெறும் 65 இலட்சம்தான். அயல் நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்பு அளிக்கும் நாடு. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று என்று அறியப்படாதது, ஆனால் மக்களின் தனி நபர் சராசரி ஆண்டு வருவாய் 13,800 டாலர்கள்! உலக வறுமைக் கோட்டுப் பட்டியலில் இந்நாடு 102ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 82வது இடத்தில் உள்ளது. அதாவது பணக்கார நாடான அமெரிக்கா, இந்நாட்டோடு ஒப்பிடுகையில் வறுமையில் வாடுவோர் அதிகம் உள்ள நாடு. இந்த வறுமைக் கோட்டுப் பட்டியலில் இந்தியா 52வது இடத்தில் ‘முன்னணி’யில் உள்ளது! பக்கத்தில் நமது அண்டை நாடான பாகிஸ்தான்.
தெரிந்துகொள்வோம்… இந்த நாட்டின் பெயர் லிபியா!
சுதந்திரம் (இண்டிபென்டண்ட்) என்ற சொல்லிற்கு சுயச் சார்பு என்ற பொருளானால் அது 100 விழுக்காடு பெற்றுள்ள கடன் சுமையற்ற, தன் காலில் நிலையாக, இன்று நேற்றல்ல, 40 ஆண்டுகளாக காயமற்று, நொண்டாமல் நலமாக இருந்து வந்துள்ளது லிபியா!
இதன் அதிபராக இருந்துவரும் கர்னல் முவாம்மர் கடாஃபி பதவியை விட்டு இறங்கவேண்டும் என்று கோரி அந்நாட்டில் நடைபெற்றுவரும் ‘ஜனநாயக எழுச்சி’தான் செய்தியாக இதுநாள் வரை வந்துள்ளது. ஆனால் அந்நாட்டின் உள்நாட்டு நிலை இதுதான் என்பது இப்போதுதான் ஊடகங்களில் வரத் தொடங்கியுள்ளது!
உலகின் எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடு அல்ல லிபியா. அது 18வது இடத்தில் உள்ளது, உலகின் மொத்த கச்சா உற்பத்தியில் 2% மட்டுமே லிபியாவின் பங்கு. அது நாள் ஒன்றிற்கு அதிகபட்சமாக 1.8 மில்லியன் பீப்பாய் கச்சாவை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தது. ஆனால் மற்ற நாட்டு கச்சாவை விட லிபியாவின் கச்சா தரமானது என்பதால் ஐரோப்பிய சந்தையில் அதற்கு வரவேற்பும் அதிகம், விலையும் அதிகம்.
எனவே கச்சா ஏற்றுமதியின் மூலம் அதற்கு கிடைக்கும் வருவாயை அது மிகத் தாராளமாக தன் மக்களுக்கு வாரியிறைத்துள்ளது. இதன் நிரூப்பிக்கக் கூடியதாக இருக்கிறது ஐ.நா.வின் புள்ளி விவரங்கள். ஆப்ரிக்க நாடுகளிலேயே லிபியாதான் மனித வள மேம்பாட்டு குறியீட்டில் முதல் நிலையில் உள்ளது. சராசரி வாழ்நாள் 78 ஆண்டுகள். லிபியாவில் அளிக்கப்படும் கல்வியும், மருத்துவ வசதிகளும் மிகத் தரமானவை.
தனது நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு கச்சா உற்பத்தியை அதிகப்படுத்துவது (நாளுக்கு 3 மில்லியன் பீப்பாயாக உற்பத்தியை அதிகரிப்பது) உட்பட பல முன்னேற்றத் திட்டங்களுக்காக எகிப்து, டுனிசியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் திறன் பணியாளர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்பு அளித்துள்ளது. உலகின் பெரு நிறுவனங்கள் பலவற்றிற்கு திட்டங்களை முழுமையாகக் கையாளும் சட்ட ரீதியான சுதந்திரத்தை தந்துள்ளது.
FILE லிபியா எனும் நாடு பற்றி மேற்கூறப்பட்ட விவரங்கள் யாவும் சுதந்திரமான பன்னாட்டு ஆய்வுகளின் புள்ளி விவரங்கள் என்பதை கருத்தில்கொள்க.
கர்னல் கடாஃபி அந்நாட்டின் அதிபராக பல பத்தாண்டுகளாக நீடிக்கிறார் என்பதைத் தவிர, அங்கு அரச ஒடுக்குமுறை இருந்ததாக கடந்த மார்ச் மாதம் வரை செய்திகள் கூட ஏதுமில்லை. பிறகு திடீரெ‘ஜனநாயக எழுச்சி’ வெடித்ததன் பின்னணி? ஜனநாயக எழுச்சியா? மேற்கத்திய சதியா?
நன்றி : வெப்துனியா – தமிழ்