ஏகாதிபத்தியம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் உட்பட்டுள்ளது.அமெரிக்கா தனது பெரு இராணுவத்துக்குத் தீனிபோடுவதற்குத் [http://www.zeit.de/2011/32/USA-Weltwirtschaftskrise ]திண்டாடுகிறது.அதைத் தக்கவைப்பதால் நெருக்கடிக்குள்ளாகும் சந்தையைக் காக்க முனைகிறது.
ஐக்கிய இராச்சியத்தின் பெறுபேறாக இணைந்த ஐரோப்பியக் கூட்டமைப்புத் தன்னைத் தக்கவைப்பதில் ஐரோப்பிய மக்களது வாழ்வைப் பலியாக்குவதில் இணைந்த” ஐரோப்பா-யூரோ” எதிர்காலத்து வேலைவாய்ப்பின் அவசியமாக அனைத்து ஜனநாயக அலகுகளையும் நசுக்கிவிடுகிறது[http://www.youtube.com/watch?v=BtInXIHfxeM ].லீசபொன் [http://en.wikipedia.org/wiki/Treaty_of_Lisbon ]ஒப்பந்தத்தின் [ Treaty of Lisbon]பின்னான ஐரோப்பா, உலகம் முழுவதற்குமான நெருக்கடியை உருவாக்குவதில் முன்னணியிலுள்ளது.
இந்தப் புள்ளிகள் ஈரான்வரை மிகப்பெரிய யுத்தத்தைச் செய்துகொள்ளும்வரை[http://www.diametric-verlag.de/iran.pdf ] முடிச்சுகளாக விரிகிறது.
சீன அரச எரிபொருட்கூட்டுத்தாபனம் ஈரானிய முதலீடுகளை மெல்லக் குறைத்துக்கொள்ள[ China drosselt Öl-Investitionen in Iran]முனைகிறது.இது ஈராக்கைத் தனிமைப்படுத்தும் அமெரிக்க முயற்சிக்கு[http://www.spiegel.de/wirtschaft/soziales/0,1518,783962,00.html ] வழிவிடுவதாக இருக்கிறது[Die chinesischen Geschäftemacher drosseln ihr Tempo in Iran offenbar nicht zuletzt auf Druck der USA. Peking versuche, die US-Regierung zu beschwichtigen, sagten Insider gegenüber Reuters].
கூட்டாகக் கொள்ளையிடப்படும் [Beuteverteilung in Paris]
லிபியா யுத்தம், தனது கொள்ளையைப் பங்கு போடுவதில்[http://www.jungewelt.de/2011/09-02/026.php ] பாரிஸ்சில் கூடிக்கொண்டது.ஈராக் யுத்தத்துக்கு எதிராகத் திரண்ட மக்களது புரிதல்,லிபிய யுத்தத்தில் இல்லாதாக்கப்பட்டுள்ளது.இந்தக் கருத்தியில் வெற்றியானது ஈரான் போருக்குத் தயாராக்கப்படும் கருத்தியல் ஆளுமையை ஏகாதிபத்தியத்துக்கு வழங்கிவிடுகிறது.
கடாபிக்கு எதிரானதென்பதில் லிபியாவின் சுயாதிபத்தியம் பலியாக்கப்பட்டதுபோல ஈரானுக்கு எதிரானதென்பதை அஹ்மாடிநெட்சாத்துக்கு[Mahmud Ahmadinedschad]
எதிரானதெனச் சொல்லிக்கொள்ளப்போகும் மையக் கருத்தியலுக்கும் எந்தவித எதிர்ப்பும் இல்லை யென்றாகிறது. ஏகாதிபத்தியத்தின் ஊடாக வலு அவ்வளவு பெரியது.அதன் ஆயுதப்பலத்தைவிட அதன் கருத்தியல் ஆயுதமே மிக வலியது.இதை எதிர்த்து இயக்கமுறும் மாற்றுக் கருத்துவலு மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளாகிறது.
கடந்த காலத்தில்-இருஷ்சிய உடைவுக்கு முன் அமெரிக்கா செய்த அரசியல்-போர் நடவடிக்கைகள் ஒற்றைத்துருவத்திலிருந்து செய்யப்பட்டதல்ல.அங்கே, இரண்டு துருவங்களாக மூலதனச் சழற்சியும் அது சார்ந்த அரசியல்-ஆதிக்கமும் இயங்கியது.எனினும்,சோசலிச நாடுகளது இறையாண்மையைப் பல வழிகளிலும் தோற்கடித்த அமெரிக்க மற்றும் மேற்குலகங்கள் 90 களின் மத்தியிலும்,2000 த்தின் ஆரம்பம்வரை இந்த ஒற்றைத் துருவ அரசியல்-பொருளாதார ஆதிக்கத்தைச் சுவைத்துத் தமது இராணுவ மேலாண்மையை உலகெங்கும் நிலைநாட்டின.குறிப்பாக,ஈராக்கில்,அவ்கானிஸ்த்தானில்.ஆனால்,இது நிலைத்திருக்கும் வாய்ப்பை அவை தமது அரசியல்-பொருளாதாரப் பலத்தின்வழியாகத் தக்கவைக்கும் சூழலொன்று 2002 ஆம் ஆண்டுக்குப்பின் மெல்ல இல்லாதாகிறது.என்றபோதும்,லிபிய யுத்தத்தின் பின்இதில் மீனவும் மாற்றங்கள் நிகழ்கிறது.சீனா தொடர்ந்து தன்னை இராணுவரீதியாகப் பலப்படுத்துவதும்[http://www.spiegel.de/wissenschaft/technik/0,1518,782440,00.html ] இதன் தொடர்ச்சியே.சீனாவனது மிக நுணுக்கமாகத் தனது கையையே நம்ப முனைகிறது.இந்தக் கூட்டுக்களையும்-ஒப்பந்தங்களையும் அது இரண்டாம் பட்சமாகவே கணிப்பதில்”சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம்”கூட நிலைமைக்கொப்ப ஒரு பொருட்டல்ல.
இருஷ்சியா-சீனாவுக்கிடையிலான நேட்டோவுக்கு மாற்றான[ Shanghai Cooperation Organization (SCO)] சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம் 2002 ஆம் ஆண்டு சென் பீட்டர்பேர்க்கில் ஆரம்பித்துக் கைச்சாத்தாகியபின், இன்னொரு வார்சோ அணியாக[http://en.wikipedia.org/wiki/Shanghai_Cooperation_Organisation ] இந்தச் சங்காய்க் கூட்டு உருவாகிறது.இத்தகைய தருணத்தில் அமெரிக்கச்சார்பு நாடுகளது தலைமைத் தேசமான அமெரிக்காவினது ஒற்றைத் துருவ அரசியல் மெல்லச் சிதறுகிறது.அதுமட்டுமின்றிக் கடந்தகாலத்து சோசலிச-முதலாளிய முகாங்களெனும் இருபெரும் எதிரெதிர் நிலையைக்கடந்து, முதலாளித்துவ முகாம் இரு துருவங்களாக உலகை வேட்டையாடப் பிரிந்தன.இவற்றுள் மிகவும் மூலப்பொருள்கள் நிரம்பியதும்,சந்தையில் மலிவாக உற்பத்தியைச் செய்யக்கூடியதும்,இராணுவ-மனிதவலுவில் பலம்கூடியதுமாக இந்தச் சங்காய்க் கூட்டே இன்று உருவாகியுள்ளது.எனினும்,இந்தக் கூட்டின் பிரதான இரு தேசங்களும்(இருஷ்சியா-சீனா)அமெரிக்க,ஐரோப்பியத் தேசங்களது சந்தையிலும்,அந்த வலையத்தின் தொழிற்சாலைகளது வெளி உற்பத்திதத் தேவைகளிலுமே தங்கியுள்ளன.இதன்பொருட்டு இந்தச் சங்காய்க்கூட்டுக்கூட வெறும் காகிதப் புலியாகவே காலப்போக்கில் மாறிவிடும்.
என்றபோதும்,ஐரோஆசியன் வலயத்தில் இருஷ்சியாவினது இறையாண்மை மற்றும் செல்வாக்குட்பட்ட பிரதேசமாக கஸ்பிஸ் எண்ணையூற்றத் தேசங்கள் இருக்கின்றன.என்னதாம் ஜோர்சியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் நேட்டோ உள்வாங்கினாலும், அஃது இருஷ்சிய இராணுவ ஆதிக்கத்திலிருந்து தப்பிடவிட முடியாதளவுக்கு அதன் தரைத்தோற்றம் இருக்கிறது.இதையுறுதிப்படுத்த 2008 இல் நடந்த யுத்தம்தாம் ஒசித்தியாவைக் காக்கும் இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தம்.அவ்வண்ணமே,சீனாவினது மிகப்பெரும் மனித ஆற்றல் அத்தேசத்தை உலகு தழுவிய உற்பத்தித்திறனுடைய தேசமாக மாற்றியுள்ளது.இது,சீன உற்பத்தி மற்றும் அதன் நிதியாதார வலுவோடு அமெரிக்க ஆதிக்கம் நிலவிய அனைத்து மண்ணிலும் சீனாவையும் அதன் ஆதிக்கத்தையும் திணிக்கும் சூழலை உருவாக்கியது.அது,கொங்கோ முதல் அங்கோலா,நைஜீரியாவெனத் தொடரும்.
சீனா, ஆபிரிக்காவின் கட்டுமானப்பணிகளில் பெரும் பங்கெடுத்தபடி அரேபியத் தேசங்களில் இருஷ்சியவோடிணைந்து இதுவரை காரியமாற்றியது.ஈரானில் முதலீடுகளைத் தவிர்ப்பதிலிருந்து இன்றைய அமெரிக்க மூலதனத்தின்அதிர்வுகளிலிருந்து சீனா தன்னைத் தக்கவைக்க அமெரிக்காவினது விருப்புக்குத் தலையசைப்பதாகவே உண்மை நம்முன் எழுகிறது.
புதிய ஆதிக்கத் தெரிவுகளின்வழி,அமெரிக்கா-ஐரோப்பியக் கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் நகர்வுக்கான அங்கீகாரமே சீனா ஈரானில் முதலீடுகளை மெல்லக் குறைப்பதாக அமைகிறது.இந்தத் ததிரோபாயமானது “தி கிரான்ட் செஸ்போர்ட்டை” [The Grand Chessboard: American Primacy and Its Geostrategic Imperatives ]எனக்குள் ஞாபகப்படுத்துகிறது.இதன் சூத்திரதாரி சீப்பினிக் பிரசென்ஸ்கியின் [http://sandiego.indymedia.org/media/2006/10/119973.pdf ]அடுத்த நகர்வுகள் இங்ஙனம் அமைக்கப்படுகிறது:
1:உலக மூலவளத் தேவைக்கான போட்டியில் யுத்தத்தைச் சமாதான எல்லையில் வைப்பது,
2:வளர்ந்துவரும் பொருளாதார நகர்வில் ஐரோஆசியன் வலயத்தில் தனது நிலையைத் தக்வைத்து அதன் எண்ணை வளத்தைக் குறைந்தளவாவது மேற்குலகக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்வது,
3:அர்டிக்ஸ்-வடதுருவப் பனிவலயத்தில் கரையும் பல சதுரக் கிலோமீட்டர் கடல் நிலப்பரப்பில் பதுங்கிக்கிடக்கும் போட்டி வள அவகரிப்பில், அமெரிக்கா முதன்மையாக இருக்க முனைதலில் நடந்தேறும் அரசியலில் இருஷ்சியாவை தனிமைப்படுத்தல்.அல்லது அதனோடு[http://www.spiegel.de/wirtschaft/unternehmen/0,1518,783449,00.html ] இணைந்து [Russen und Amerikaner starten Mega-Ölprojekt in der Arktis]எதிர்ப்பைத் தணித்தல்,பின் தனிமைப்படுத்தல்.
4:தென்கிழக்காசிய வலயத்தில் மாறிவரும் சீனா-இருஷ்சியப் பொருளாதார ஆதிக்கம் மற்றும் கடற்போக்குவரத்து முரண்பாடுகளில் குறைந்தளவாவது அமெரிக்க நலனைப் பாதிக்காத நட்பு-பகை அரசியல்-ஆதிக்க வியூகத்தைக் கொண்டியங்குதல்.இதன் முரண்பாட்டில் சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கத்தையும் அதன் உறுப்பு நாடுகள் தவிர்ந்த செல்வாக்குக் உட்பட்ட பார்வையாளர்கள் தகுதிபெற்ற ஈரானைத் தாக்குவதற்கான தகுதியை அவ்கானிஸ்த்தானைத் தளமாக்கி எடுத்துபடி, இருஷ்சிய-சீன ஒப்பந்தத்துக்கு யுத்த நிர்ப்பந்தம் வழங்குவது,
5:இத்தகைய யுத்தத்தை, சமாதானத்தின் மூலமாக இருக்கும் அமெரிக்காவினது தலைமைப்பாத்திரத்தில் தவிர்க்கமுடியாது மனிதகாப்புக்கான நிபந்தனைகளில் ஒன்றாக்குவது.
6:இவற்றைச் செய்வதற்காக பனிப்போர் முகாந்திரத்தில் மையமாக இருந்த போலன்-செக்காய் ஏவுகணைப் பாதுகாப்பைத் [http://www.ag-friedensforschung.de/themen/ABM-Vertrag/obama3.html ]தற்காலிகமாகக் கிடப்பில் போடுவது,
7: ஆர்மேனியாவுக்கும்,துருக்கிக்குமிடையிலான நட்புணர்வு-அரசியல் உறவு ஒப்பந்தத்தில் [http://www.welt.de/politik/article4803006/Tuerkei-und-Armenien-beenden-ihre-Feindschaft.html ]அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை முதன்மைபடுத்துவது,
8:இதனூடாக துருக்கியை ஊடறத்துவரும் நபுக்கா[http://de.wikipedia.org/wiki/Nabucco-Pipeline ] எண்ணைக் குழாயை இருஷ்சியாவிடமிருந்து தனிமைப்படுத்தியும், இருஷ்சியாவினது எரிபொருளில் தங்கியிராத (South Stream எண்ணைக் குழாய்க்கு எதிராக) மேற்குலகச் சார்பான சுதந்திரத்தை எரிவாயுப் பொருளாதாரத்தில் நபுக்காவை நிலைப்படுத்துவது.இதன்தொடரில் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துள் உள்வாங்கும் நெகிழ்வை மரபுசார்ந்த ஐரோப்பிய மேன்மைக்குள் மெல்ல உருவாக்குதல்,அதற்காகத் துருக்கிய அரசியலையும், இஸ்லாமிய மதவாத அடிப்படையையும் தனிமைப்படுத்திவிடத் தேவையான பண்பாட்டுக் கருத்தியலைத் தகவமைப்பது,நீண்டகால நோக்காக இருந்துவந்தபோதும்,லிபியாவின் எண்ணையைக் குறுகியகாலத்தில் கொள்ளையிடுவதற்காக ஜேர்மனிய அரசு,இருஷ்சியாவுக்கு விட்டுக்கொடுத்து South Stream எண்ணைக் குழாய் ஒப்பந்தம் கைச்சாத்தாயபோதும்[http://www.merkur-online.de/nachrichten/wirtschaft-finanzen/oesterreich-russland-abkommen-ueber-gas-pipeline-731193.html ],லிபியாவை அம்போவெனவிட்ட இருஷ்சியவோ இழக்கப்போது பலமடங்கு என்பதை ஈரானிய யுத்தத்தில் இரஷ்சியாவின் சார்பிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.
9:இதற்காக இருஷ்சியாவை நேட்டோவுக்குள் உள்வாங்க [http://www.ag-friedensforschung.de/themen/Raketen/russ2.html ] முனைவதும்,சீன-இருஷ்சியப் பலக்கூட்டை உடைப்பதும்,ஆப்பிரக்காவிலிருந்து சீனாவைத் தனிமைப்படுத்துவதும்,இதன் விளைவாக நடந்தேறிய லிபிய யுத்தம் அதைத் தக்கபடி நகர்த்துவதின் உண்மையை ஆதாரமாகக்கொள்ளலாம்.
10:உலகத்தின் எப்பாகத்தில் இனவிடுதலைப் போராட்டம் நிகழினும் அவற்றைத் துடைத்தெறியும் முயற்சியில் சங்காய் கூட்டுழைப்பு இயக்கத்துக்கும்,நேட்டோவுக்கும் இடையில் பாரிய முரண்பாடில்லை.எனினும்,சீனாவைத் தனிமைப்படுத்துவதற்கு இருஷ்சியாவை மேற்குலகச் சார்பாக்குவது,மேற்குலக நபுக்கா எரிவாயுக்கு குழாயை இதற்காகப் பயன்படுத்துவது(இது,ஒரு கட்டத்தில் யுத்தமாக வெடிக்கும்போது இருஷ்சியா சீனாவிடமிருந்து அந்நியப்பட்டிருப்பதும் அவசியமான அமெரிக்கத் தெரிவாக இருக்கிறது.இனவிடுதலைப் போராட்டங்கள் தத்தமது பொருளாதார நிலைகளுக்கமைய ஆதிரித்தும்-அழித்தும் வருவது சமீபகால நிகழ்வாக இருப்பினும்,இப்போதைய நிலைமையில் புதிய தேசங்களை உருவாக்குவதை ஏகாதிபத்தியங்கள் தமது வேலைத்திட்டத்திலிருந்து பின்தள்ளுகின்றன).
இந்நிலையில்,ஈரான்மீதான அமெரிக்க-ஐரோப்பிய அத்துமீறிய போரொன்றை எங்ஙனம்,இருஷ்சியா-சீனா அணுகப் போகின்றன வென்பதற்கு அவர்களது மூலதனத்தின் தொங்கு நிலைகளே தீர்மானிக்க முடியும்.எனவே,ஈரானிய அதிபர் தனது இன்றைய நட்பு நாடுகளாலேயே காலை வாரப்படுவார் என்பது கண்கூடாக மலாந்துவிடப்போகும் இன்னுஞ் சில காலத்தில்.
இன்றைய அதீத தேவையாக மேல்காணும் நிகழ்சிநிரல் அமெரிக்க மூலதனத்துக்கு இருக்கிறது.இதை உறுதிப்படுத்தும் அமெரிக்க மூளை[http://en.wikipedia.org/wiki/Zbigniew_Brzezinski ] சீப்பினிக் பிறசென்ஸ்கி [Zbigniew Brzezinski ]என்பது உலகறிந்த உண்மை.
ப.வி.ஸ்ரீரங்கன்
04.09.2011