அண்மைக்காலத்தில் “லஸ்கார் இ-கொய்தா அமைப்பானது இலங்கையைத் தளமாகப் பயன்படுத்தி பயிற்சிகளைப் பெற்றுள்ளது” என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. முக்கியமாக பூனே குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இத்தகவலை இந்திய பாதுகாப்பு முகவரமைப்புகள் இலங்கையின் கவனத்திற்கும் முன்வைத்திருந்தன.
இந்த நிலையிலேயே ஜி.எல்.பீரிஸ் இந்தியாவில் வைத்து, ‘இந்த விடயம் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை எமது பாதுகாப்பு அதிகாரிகள் பரிசீலித்துருந்தனர். ஆனால், அது தொடர்பாக நாம் எதனையும் கண்டறிந்திருக்கவில்லை” எனத்தெரிவித்திருக்கிறார்.