கடந்த டிசம்பர் மாதம் காணாமல் போனதாகத் n;தரிவிக்கப்படும் லலித் மற்றும் குகன் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்..
லலித் மற்றும் குகன் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளதாகவும், வடக்கு இராணுவ முகாம் ஒன்றில் தற்போது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் முன்னணி சோசலிச கட்சி குற்றம் சுமத்தியிருந்தது.
இது தொடர்பில் உயர் இராணுவ அதிகாரிகள் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்திருந்தார்.
லலித் மற்றும் குகனை நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவின் போது கூட இவர்கள் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். லலித் மற்றும் குகன் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்யவில்லை எனவும், முகாமில் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ராஜபக்சக்களின் பயங்கரவாத ஆட்சியில் கடத்தப்பட்டுக் சாட்சியின்றி கொலைசெய்யப்பட்டவர்களின் பட்டியல் நீண்டது.
ஆமாப்பா சூரியனும் நேற்று உதிக்கல்ல 🙁
Nice names. Lalith and Kugan. 1952. D. A. Rajapakse. Political pluralism. He wants me to exercise and said that the Humanitarian Operation will continue a year ago.