பிரித்தானியத் தமிழர் பேரவையால் ஒழுங்குசெய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று 18.05.2014 மத்திய லண்டனில் ரபல்கர் சதுக்கத்தில் நடைபெற்றது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலி இலச்சனை பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றுவித்து இந்த இரங்கல் நிகழ்வை ஆரம்பிப்பது வழமை. இம்முறை நடைபெற்ற நிகழ்வில் புலி இலச்சனை பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றக்கூடாது என நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்திருந்தது. இதனால் நிகழ்வில் குளறுபடிகள் ஏற்பட்டன. ஏற்பாட்டாளர்களுக்கும் அங்கு வந்திருந்த இளைஞர்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நிலையை எட்டிய போது பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் விலகிக்கொள்ள எதிர்ர்புத் தெரிவித்தவர்கள் கொடியை ஏற்றினார்கள்.
பிரித்தானியத் தமிழர் பேரவை தோன்றிய காலத்திலிருந்து இக் கொடியையே அவர்கள் பிரதான அடையாளச் சின்னமாகப் பயன்படுத்தினார்கள். 2014 ஆம் ஆண்டில் மட்டும் கொடியை ஏற்றக்கூடாது என்ற முடிவிற்கு வந்து சேர்ந்தார்கள். தாங்களின் முன்னைய செயற்பாடு தவறானால், அது ஏன் தவறு என்று சுய விமர்சனம் செய்வதும் அதனூடாக புதிய செயற்பாட்டை முன்வைப்பதும் அரசியல் அமைப்பு ஒன்றின் கடமை.
பிரித்தானியத் தமிழர் பேரவை கொடியை ஏற்றக் கூடாது என்பதற்கு ஒரேஒரு காரணம் மட்டுமே சொன்னார்கள். அவர்களது எஜமானர்களான இனக்கொலையில் பங்களித்த பிரித்தானிய அரசு கொடியை விரும்பவில்லை என்பதே அது. இந்த வகையில் பிரித்தானிய அரசிற்கு எதிராகவும் போராடத் தயாரான இளைஞர்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையை விட முற்போக்கான பாத்திரத்தை வகித்திருக்கிறார்கள். சரி தவறு என்பதற்கு அப்பால் அவர்களின் போராட்ட உணர்வு பேரவையின் அடிமைத் தனத்தோடு ஒப்பிடும் போது மதிக்கத்தக்கது.
இளைஞர்களின் போராட்டம் என்பது அடிமைத் தனத்திற்கு எதிரான போராட்டமாகக் கருதப்படவேண்டும்.
தவிர, புலி இலச்சனை பொறிக்கப்பட்ட இந்தக் கொடி எவ்வாறு ராஜராஜ சோழன் காலத்து அடிமைத் தனத்தின் சின்னம் என்பதையும், அதன் அரசியல் எவ்வாறு தோற்றுப் போனது என்பதையும் முன்வைத்து புதிய அடையாளத்தை உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் இணைக்கும் வகையில் பிரித்தானியத் தமிழர் பேரவை முன்மொழிந்திருக்குமானால் அது புதிய போராட்ட அரசியலின் நுளைவாசலாக அமைய வாய்ப்புக்கள் இருந்திருக்கும்.
3 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்ட இந்த நிகழ்வில் வழமை போல பிரித்தானிய அரசியல் வாதிகள் ஒருவர் பின் ஒருவராகப் பேசி தமது வாக்குத் திரட்டும் களமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சார்ந்தவர்கள் பேசும் போது, 30 வருட ஆயுதப் போராட்டம், 30 வருட ஆயுதப் போராட்டம், இப்போது ராஜதந்திரப் போராட்டம் நடக்கிறது என்று கேலிக்கிடமாகப் பேசி தமது எஜமானர்களும் இனக்கொலையின் பங்காளிகளுமான பிரித்தானிய அரசியல் வாதிகளுக்குக் களம் அமைத்துக்கொடுத்தனர்.
கொடி இழுபறி தொடர்பாக இணையம் ஒன்றில் வெளியாகியிருந்த காணொளி:
இளைஞர்களின் போராட்டம் என்பது அடிமைத் தனத்திற்கு எதிரான போராட்டமாகக் கருதப்படவேண்டும்.
தவிர, புலி இலச்சனை பொறிக்கப்பட்ட இந்தக் கொடி எவ்வாறு ராஜராஜ சோழன் காலத்து அடிமைத் தனத்தின் சின்னம் என்பதையும், அதன் அரசியல் எவ்வாறு தோற்றுப் போனது என்பதையும் முன்வைத்து புதிய அடையாளத்தை உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் இணைக்கும் வகையில் பிரித்தானியத் தமிழர் பேரவை முன்மொழிந்திருக்குமானால் அது புதிய போராட்ட அரசியலின் நுளைவாசலாக அமைய வாய்ப்புக்கள் இருந்திருக்கும்.
Beautiful what else need commenting.
தங்களது கட்டுரையில் வேண்டுமென்றே புலிக்கொடி என அழைத்து அதனை அவமரியாதை செய்வதன் மூலம் தங்களது உள்நோக்கத்தை அறியக்கூடியதாக உள்ளது. அது போக இக்கொடி எமது தேசியக்கொடி. விடுதலைப்புலிகளின் இயக்ககொடி மஞ்சள், கருப்பு நிறத்திலமைந்த பெயர் பொறிக்கப்பட்ட வேறு ஒரு கொடி.
இந்த தேசியக்கொடி தான் போராடும் எமது மக்களது அடையாளம். எந்த தேசிய இனமும் தமக்கென ஒரு கொடி அமைத்து அதன் கீழ் ஒன்றுபட்டு ஓரினமாக ஒற்றுமையாக சமய சாதி பேதங்களை மறந்து வேற்றுமைகளை களைந்து போராடும் உன்னதத்தை தருவது இத்தேசியக்கொடியே! 50,000 வரையான போராளிகளும் 250000 வரையான மக்களும் தமது உயிர்களை விடுதலைக்காக கொடுத்து உருவாக்கிய மகோன்னதமான கோடி எமது தேசியக்கொடி. எமது தமிழ் வீரர்கள் செய்த உலகம் வியக்கும் தியாகங்களை எடுத்து உலகுக்கு காட்டுவதும் எமது தேசியக்கொடியே. எனவே அதனை மதிக்காதவர்கள் மானிடர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள். தேசியக்கொடியை ஏந்த வேண்டாமென கூற இவ்வுலகில் யாருக்கும் உரிமையில்லை. 300,000 தமிழர்களின் உயிரை விலையாய் கொடுத்து உருவாக்கிய தேசியக்கொடியை விமர்சிக்கவும் எவருக்கும் இவ்வுலகில் தகுதியில்லை. இதை செய்ய முனைபவர்கள் அக்கொடியின் நோக்கமான தமிழர்கள் தேசிய இனம் எனும் ஒருமைப்பாட்டை குலைக்க முற்படும் சதிகாரர்கள் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இச்சதியை எதிரி மட்டுமே விரும்புவான். அப்படியானால் கோடியை ஏந்த வேண்டாமென கூறும் அமைப்புகளும் தனி நபர்களும் எதிரியின் ஆட்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்கத் தேவையில்லை. இக்கூறு பிழையானால் தேசியக்கொடியை விமர்சிக்கும் கொடியவர்கள் தாம் முன் வைக்கும் கொடிக்காக முதலில் தமது உயிர்களை கொடுத்து போராடி விட்டு (குறைந்தது 300.000 பேராவது) விமர்சிக்கட்டும்.
//இந்த தேசியக்கொடி தான் போராடும் எமது மக்களது அடையாளம். எந்த தேசிய இனமும் தமக்கென ஒரு கொடி அமைத்து அதன் கீழ் ஒன்றுபட்டு ஓரினமாக ஒற்றுமையாக சமய சாதி பேதங்களை மறந்து வேற்றுமைகளை களைந்து போராடும் உன்னதத்தை தருவது இத்தேசியக்கொடியே! //
அன்பரே அது முற்றுமுழுதாக உண்மை. யார் எப்போது எங்கே இந்தக் கொடியை அமைத்தார்கள் என்று கூற முடியுமா? இதற்கு வாக்கெடுப்பு என்று எங்காவது எப்போதாவது நடந்ததா?
//50,000 வரையான போராளிகளும் 250000 வரையான மக்களும் தமது உயிர்களை விடுதலைக்காக கொடுத்து உருவாக்கிய கோன்னதமான கோடி எமது தேசியக்கொடி//
இந்த உயிர்கள் பலியானது கொடியைக் காப்பதற்காகவா? உண்மையான விடுதலைக்கு என்று சொல்லலாம்.
//எமது தமிழ் வீரர்கள் செய்த உலகம் வியக்கும் தியாகங்களை எடுத்து உலகுக்கு காட்டுவதும் எமது தேசியக்கொடியே//
அதே உலகம் ஒரு நாளும் வியக்கவில்லை. புலி முலாம் பயங்கரவாத முலாம் பூசி இறுதியில் சதி செய்து அழித்துவிட்டார்கள். நீங்கள் எந்த உலகில் இருக்கிறீர்கள்.
//எனவே அதனை மதிக்காதவர்கள் மானிடர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள். //
உங்கள் கொடியை பிரித்தானிய அரசு தடைசெய்தது அப்ப அவர்கள் மனிதர்கள் இல்லையா?
//தேசியக்கொடியை ஏந்த வேண்டாமென கூற இவ்வுலகில் யாருக்கும் உரிமையில்லை. 300,000 தமிழர்களின் உயிரை விலையாய் கொடுத்து உருவாக்கிய தேசியக்கொடியை விமர்சிக்கவும் எவருக்கும் இவ்வுலகில் தகுதியில்லை.
//அது மிகவும் உண்மை. ஒத்துக்கொள்கிறேன்.
அவர்களது உயிர்கள் கொசுக்கள் அல்ல இவர்களுக்கு அள்ளி வீசும் போது கவனமாக வீசுங்கள்(300 000- ஆதாரம்)
//இதை செய்ய முனைபவர்கள் அக்கொடியின் நோக்கமான தமிழர்கள் தேசிய இனம் எனும் ஒருமைப்பாட்டை குலைக்க முற்படும் சதிகாரர்கள் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். ///இல்லை நீங்கள் தான் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர். நாங்கள் பசுத்தோல் போர்த்த புலிகளாக நடிக்கும் காலமிது. எனவே நீர் அதை உடைக்கப்பார்க்கிறீர்.
//இச்சதியை எதிரி மட்டுமே விரும்புவான். அப்படியானால் கோடியை ஏந்த வேண்டாமென கூறும் அமைப்புகளும் தனி நபர்களும் எதிரியின் ஆட்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்கத் தேவையில்லை.// ஆம் உம்மைப் போன்றவர்கள் கோத்தாபயவினால் கையாளப்பட்டு வன்முறையாளர்களாக இறக்கிவிடப்பட்டுளீர்களோ?
//இக்கூறு பிழையானால் தேசியக்கொடியை விமர்சிக்கும் கொடியவர்கள் தாம் முன் வைக்கும் கொடிக்காக முதலில் தமது உயிர்களை கொடுத்து போராடி விட்டு (குறைந்தது 300.000 பேராவது) விமர்சிக்கட்டும்.//
இல்லை நடைமுறை தெரிந்த நீர் எம்மை நடுக்கடலில் தள்ளப்பார்க்கிறீர்.
கொடிக்காகவும் வேண்டாம் யாருக்காகவும் வேண்டாம் நீர் கோத்தபயவின் அறிவுறுத்தலில் வந்து ஆடும் ஆட்டத்தை நிறுத்தவும்.