மேற்கு நாடுகள் குறித்து புனையப்பட்டுள்ள விம்பம் இலங்கை போன்ற பல மூன்றாம் உலக நாட்டவர்களை அந்த நாடுகள் மீது மோகம் கொள்ள வைக்கிறது. பல மாணவர்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து சிறிய கல்விக் கூடங்களில் பதிவிசெய்துவிட்டு மாணவர் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டு பிரித்தானியா போன்ற நாடுகளுக்குப் படையெடுக்கிறார்கள்.
இவ்வாறான கல்வி நிலையங்கள் பல இன்று மூடப்படுகின்றன. இந்த வகையில் ஒரு பல்கலைக் கழகமாகத் தரம் உயர்த்தப்பட்ட லண்டன் மெற்றோ பொலிதேன் பல்கலைகழகத்திற்கான வெளி நாட்டவர்களை சேர்த்துக்கொள்ளும் அனுமதிப்பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பல்கலைக் கழகத்திற்கு கற்பதற்கென பிரித்தானியாவிற்கு சென்ற 2000 மாணவர்கள் திருப்பி அனுப்பபடும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளனர். அதே வேளை வெளி நாட்டு மாணவர்களின் பணத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்தப் பல்கலைகழகமும் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
They will try to fix loopholes as and when necessary.