புலம்பெயர் நாடுகளில் தேசிய பிசினசுடன் சேர்ந்து கோவில்கள் செல்வம் செழிக்கும் இன்னொரு வியாபாரம்! கட்டடம், சாமி, ஐயர் என்பதை மட்டுமே முதலிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வியாபாரம் இப்பொழுது இலத்திரனியல் வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் வசதிபடைத்த மத்தியதர வர்க்கம் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த வேளையில் அவர்கள் தமது அழுக்குகளையும் சுமந்துகொண்டே வந்து சேர்ந்தனர். பிரதேச முரண்பாடுகள், சாதி முரண்பாடுகள், ஏனையோர் மீதான வெறுப்பு, வெள்ளையர்கள் மீதான அடிமைத்தனம், பெண்கள் மீதான ஒடுக்குதல் என்று நூற்றுகணக்கான அழுக்குகளோடு குடிபெயர்ந்தனர்.
ஈழத் தமிழர்களைப் போன்றே புலம்பெயர்ந்த பல்வேறு போராடும் தேசிய இனங்களைக் காணலாம். குர்தீஷ் தேசிய இனங்கள் புலம்பெர்ந்த போது, அவர்களின் பெரும்பகுதி புதிய கலாச்சார முகத்தை ஏனைய இஸ்லாமியர்களுக்கே அறிமுகப்படுத்தியது. கலை கலாச்சார நிகழ்வுகள் அவர்களின் அவலங்களையும் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் பிரதிபலித்தது.
புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் தமது அடையாளத்திற்காக நடத்திக்கொள்ளும் அரசியல் களியாட்ட விழக்களில் பணம் திரட்டிக்கொள்ள மக்கள் அரசியல் மயப்படுத்தபடாமல் பிற்போக்கான தமது பழக்கவழக்கங்களை மேலும் ஆழமாகப் பற்றிக்கொண்டனர்.
ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாட்டம், சாமத்தியச் சடங்கு, கோவில்கள், தென்னிந்திய சினிமாக் களியாட்டங்கள் போன்றனவே புலம்பெயர் கலாச்சாரமாகிவிட்டது. இக்கலாச்சாரத்தைத் தாங்கிப்பிடிக்க தொழில் நுட்படத்தைப் பயன்படுத்திக்கொண்ட வியாபாரிகள் அதனை மேலும் இருளுக்குள் தள்ளினர்.
இந்தவகையில் புலம்பெயர் தேசிய வாதிகள் பலராலும் கோவில்கள் கட்டப்பட்டன. இப்போது நாகபூசணி அம்பாள் கோவில் தொலைக்காட்சியையும் ஆரம்பித்துள்ளது. தேசியத்தை மூலதனமாக்கிய சிலர் அது காலவதியாகும் நிலையில் கோவில்களில் முதலிடுகின்றனர்.
தொலைகாட்சியில் பூசை வேறு நடக்கிறது. அதுவும் ஐ.பி தொலைக்காட்சி. விஜய் ரிவி இன் சுப்பர் சிங்கரை முடித்த கையோடு பட்டனைத் தட்டினால் அம்பாள் வரவேற்பறையில் வீற்றிருப்பார். லண்டன் என்பீல்ட் பகுதியில் நடைபெறும் நாகபூசணி அம்பாள் கோவில் நிகழ்வுகள் சிக்னல்களாகக் காற்றுடன் கலந்து தொலைக்காட்சியில் தெரிய பனிக்காலத்தில் வீட்டைச் சுற்றி பிரதட்டை செய்யலாம்.
மக்களிடமிருக்கும் சிறிய முற்போக்கான சிந்தனையையும் சிதறடித்து அவர்களைப் பக்திப் பேய் பிடிக்கவைக்கும் இந்தச் சமூகவிரோத வியாபாரிகள் சமூகத்தின் விச வித்துக்கள். கல்லில் காட்சி தந்த அம்பாளை எலக்ரோனிக் அம்பாளாக மாற்றிய இவர்களின் மீதான விமர்சனத்திற்கு எதிரான ஆயுதமாகப்பயன்படுவதும் தேசியமே.
அப்ப இனி எலக்ட்ரோனிக் தேரோட்டம் ,எலக்ட்ரோனிக் கொடியேற்றம் எல்லாம் நடக்குமோ!..
PayPal இல் பூசைக்கு காசு கட்டலாம். Courier இல் பிரசாதம் வரும். பெற்றோல் செலவு மிச்சம்.
தமிழில் அர்ச்சனை நடக்குமோ!..பார்ப்போம்.
இது ஒருவகையில் நல்லதே, பத்தோட பதினொரு நிகழ்ச்சியாக தேநீர் குடித்துக்கொண்டோ அல்லது கோழி பொரிச்சு சாப்புண்டுகொண்டோ பார்க்கலாம்… இனிவரும் காலங்களின் நெட்டி உருகுதலும், பத்திப் பரவரப்படுதலும் காலாவதியாகிவிடும்.
முன்பு ஒருகாலத்தில் கோவில் திருவிழாக்களில் மேளவாத்தியம்,சின்னமேளம்(நடனங்கள்) பாட்டுக்கச்சேரி அதன் பின்னர்
சுவாமி ஊர்வலம் அதன் முன்னால் பந்த வீச்சு,சிலம்படிகள் நடைபெறும்.
இவைகள் ஒவ்வொரு திருவிழாக்காரரின் செல்வந்த நிலமைமை
காட்ட பயன்படுத்துவார்கள். கடன் பட்டும் காட்டுவார்கள்.
இதனால் மக்கள் ஒவ்வொருவர் சந்திக்க பழக வாய்ப்பாக இருந்தது.
அதுவே புலம்பெயர் நாடுகளிலும் பரவியது.
தொலைக்காட்சி மூலம் கோவில் நடத்துவதும் பூசை செய்வதும்
மந்திரீகம் செய்வதும் நூல்கட்டுவதும் தமிழ்மக்களை வெளிச்சத்தில்
இருந்து அகற்ரி இருட்டுக்குள் வாழவைப்பதாகும். தங்களைத் தாங்களே
அடிமைகளாக்கி வாழும் தமிழினம் விடுதலை பற்ரி பேசினால்
அது அவர்களை அழிவின் வழிக்கே கொண்டு செல்லும்.