அவுஸ்திரேலிய அரசால் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அகதிகள் நடுக்கடலில் வைத்து புலிகள் என அடையாளப்படுத்தி சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என தமிழ் அகதிகள் ஆணையகம் உறுதிப்படுத்துகிறது. அவுஸ்திரேலியாவால் அகதியாக அங்கீகாரம் பெற்றவர் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். உலகிலுள்ள மனிதாபிமானிகள், ஜனநாயாக சக்திகளுடன் கைகோர்த்து தமிழ் சமூகம் ஏகோபித்த குரலில் இதனை எதிர்க்கவேண்டும். எதிர்ப்புக்கள் இல்லையெனின் அவுஸ்திரேலியாவை முன்னுதாரணமாகக்கொண்டு ஒவ்வொரு புலம்பெயர் தமிழன் மீதும் அரசுகள் தமது கோர ஒடுக்குமுறையக் கட்டவிழ்த்துவிடும்.
இவற்றையெல்லாம் நாம் மௌனமாகப் பார்த்துகொண்டிருக முடியாது. நாம் விழிப்புடன் இருக்கிறோம் என உலகிற்குக் காட்டுவது இன்று எமது கடமை! ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் (UNHCR) ஆபத்திலுள்ள அகதிகளைப் பொறுப்பெடுக்கக் கோருவோம்!! அறிக்கைகள் மட்டும் விடுத்துவிட்டு அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு இனியும் எங்களை ஏமாற்ற முடியாது என்று உரக்கக் கூறுவோம்!!!
லண்டனில் அருகருகே அமைந்திருக்கும் அவுஸ்திரேலியத் தூதரகம் மற்றும் UNHCR இற்கு முன்பாக நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்போம்.
இனக்கொலை அரசை நோக்கி அப்பாவி அகதிகளைத் திருப்பியனுப்புவதை நிறுத்த அணிதிரள்வோம்.
Protest on Monday the 7th of July 2014 @4PM in front of Australian high commission and UNHCR which is next to it. Australia House, Strand, London WC2B 4LA, Nearest Tube Temple. Contact: 020 3752 3889
-தமிழ் அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழு
காலம் கடந்த பின்பும் உணரத்தவறினால் வரலாறு எம்மை மன்னிக்காது ஒரு இனவாத அரசாங்கம் வளர்வதற்கு காரணமான சிங்கள தேசத்தை .துவரை காலமும் வளர்த்து எமது மக்களின் அழிவுகள் தொடரப்பட்டுள்ளது. ஒரு இனம் ஒடுகப்படுவதற்கு காரணமான சிங்கள பெளத்த இனவாதக்கொள்ளையான மகாவம்சமும் சிங்கக் கொடியும் சிங்கள தேசம் தவறாக வளர்கப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளது. மக்களை பாதுகாத்தோம் என சமூக சேவை செய்தால் மட்டும் போதாது மக்களின் அவலத்திற்கு தமிழ் பேசும் மக்கள் தொட்டு சர்வதேசம் வரை காரணமாக இருந்துள்ளார்கள் என்பதனை அவரவரும் உணரவேண்டும். எமது தாயகம் பல் ஆயிரம் ஆண்டுகளாக மனிதவாழ்வை தொடர்ந்துள்ள போது மனிதாபிமானம் அற்ற போர் திணிகப்பட்டுள்ளது தமிழர்களுக்கு எமது வாழ்வை விட அடக்குமுறைக்கு எதிராக போராட நிர்பந்திக்கப்பட்டுள்ளோம் . அதனை அலட்சியப்படுத்தி புலம் பெயர் அமைப்புக்கள் தம்மை தாம் மதிப்பதற்காக ஒன்றுபட்டு போராடத்தின் நியாயத்திற்காக போராடத போது உலகம் எம்மை ஏமாற்றிக்கொண்டு தமது எதிர்பார்புக்களை திணிக்கின்றது.
காரணம் முள்ளிவாய்கால் அவலமும் உலகத்தமிழினத்தின் எதிர்காலும் நா.க.தமிழீழ அரசாங்கத்தின் நகர்வை எதிர்பார்துள்ள போது அமைப்புக்களால் பிளவுபட்டு உலகநாடுகளின் ஆதரவை தேடமல் அடையாளமாக கொண்டுள்ள நா.க.தமிழீழ அரசாங்கம் குறுகிய வட்டத்திற்கு தமது இருப்பை தேடிக்கொண்டுள்ளது. கொள்கை என பலமான பக்கத்தை கொண்டிருந்தாலும் அதனது அடையாளத்தை பலவுpனப்படுத்தி இருப்பதில் அமைப்புக்களை உன்றுபடுத்தி மக்கள் ஆதரவைத் தேடாமல் . இந்தியா என தமிழ் நாட்டு அரசியலில் மட்டும் தனது எதிர்பார்புக்களை திணிக்கின்றதே தவிர ஒரு சர்வதேச சமாதானத்தை முன்வைகஇகும் ஒரு அரசியல் கட்டமைப்பாக சமூகத்தில் வளர்கப்படவில்லை . தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தாயக மக்களின் விடுதலைக்கும் பக்கபலமாக வளர்கப்பட வேண்டிய நா.க.தமிழீழ அரசாங்கமானது அமைப்புகள் ஊடகங்களின் விமர்சனங்களுக்குள் மூள்கடிகப்படுவதற்கு பலர் காரணமாக இருக்கலாம். . அதற்கான உருவாக்கமானது கடந்த காலப்போராடத்தை முதன்மையாகக் கொண்டு ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு முக்கியத்துவம் பெற வேண்டிய அரசியல் நிலைக்கான வரலாற்றின் அடையாளமாக தமிழர்கள் ஏற்கப்படாதவரை சர்வதேசத்தை மட்டுமல்ல இந்தியாவரை பலரை குறை காண முடியுமே தவிர குறைகளை
மிக அருமை அன்னா