சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை நேரில் கண்டதாகக் கூறப்படும் சாட்சி ஒருவரை குற்றத் தடுப்புப் பிரிவினர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தினர்.
சாட்சி தொடர்பில் இரகசியங்களைப் பேணுவதற்கான தேவையுள்ளதாக கல்கிசை நீதிமன்ற நீதவான் ஹர்ஷ ஹேதுங்கவிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்கான அனுமதியையும் கோரியுள்ளனர்.
லசந்த விக்கிரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ராஜகிரியவில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பிரபல ஊடகவியலாளரான லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஊடகவியலாளர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
உண்மை வெளி வருமா?பார்க்கலாம்!
உண்மை பேசி உண்மைக்கு உயிரைடத் தந்தவர்.பத்திரிகை தர்மம் தழைக்க தளராமல் பாடுபட்ட செம்மல் இன்றூமுதல் பத்திரிகையாளன் குரல்.
பத்திரிகையாளன் குரல் என்ற பட்டம் எங்கள் தேசியத் தலைவரால் வழங்கப்படும்.
உங்கள் தேசியத் தலைவர் யார்?
எங்கே இருக்கிறார்?
அவர் யாருடைய கனவில் வந்து போகிறார்?
அடடே! அப்படியா!! எமலோகத்திலுமா பட்டங்கள் வழங்கப்படவிருக்கிறது? அப்படிப்போடுங்க தமில்மாறன்