லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் லசந்த கொலை தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார். ராஜபக்சவின் ஆட்சியில் நடைபெற்ற ஊடகங்க சுதந்திரத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் மேலும் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.
வன்னியில் மனித குலத்தின் ஒரு பகுதியே அழிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அழிவு தொடர்பான இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என இதுவரை யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. குறிப்பாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இக் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பிரித்தானிய அரசும், அமெரிக்க அரசுமே பின்னணியில் செயற்பட்டன. இந்த நாடுகளின் நிரந்த அடியாட்கள் போன்று செயற்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் இக்கோரிக்கையை முன்வைக்கவில்லை.