நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளராக இருந்த ரெக்சியன் கொலை சம்பவத்தில் முக்கிய சாட்சியாக இருக்கும் அவருடைய தங்கைக்கு தொலைபேசி ஊடாகவும், இரவு நேரங்களில் வீட்டிற்கு வரும் இனந்தெரியாத நபர்களினாலும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேற்படிச் சம்பவத்தில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்தவகையில் உள்ளது. கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல் எதும் பெறப்பட்டுள்ளதா என யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த எஸ்.எஸ்.பி:- சீருடை அணிந்த பொலிஸாருக்கு உயர் அதிகாரிகளின் உத்தரவினை பெற்றுக்கொண்டே நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.
எனவே மேற்படிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தினை நாடி தமக்கான பாதுகாப்பினை கோர முடியும். இவ்வாறு நீதிமன்றத்தினால் குறித்த நபருக்கான பாதுகாப்பினை வழங்குமாறு உத்தரவிட்டாலோ, அல்லது பொலிஸ் உயர் அதிகாரிகளினால் எமக்கு அவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டல் மட்டுமே அவருக்கான பாதுகாப்பினை பொலிஸார் வழங்குவார்கள் எனத் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாகாண சபையின் முன்னை நாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஈ.பி.டி.பி இன் பிரதான உறுப்பினருமான க.கமலேந்திரன் இக் கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைதானவரைக் கட்சி பாதுக்காக்க முற்படாமல் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதன் ஊடாக நீதிமன்றத்திற்கு முன்பதாகக் கொலையாளியைக் குற்றவாளியாக்கியுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளராக இருந்த ரெக்சியன் எனப்படும் ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினருக்கே அச்சுறுத்தல் விடுக்கபடும் போது தமிழ்ப் பகுதிகளில் சமாதானத்தை ஏற்படுத்தப்போவதாகக் கூறும் ஈ.பி.டி.பி அதுகுறித்து வழக்குகுத் தாக்கல் கூடச் செய்யாமல் மௌனமாயிருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.