ரிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப் பட்ட மரண தண்டனை சவூதி அரசின் சட்டத்திற்க்கு உட்பட்டே வழங்கப் பட்டது என்று சவூதி அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
ரிசானாவின் கொலை இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு உட்ப்பட நடந்திருப்பதால் அதனைக் கண்டிக்கக் கூடாது என்று அடிப்படை வாதிகள் கொலை வெறியை எழை இஸ்லாமிய மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றனர். சிரியா உட்பட உலகின் பயங்கரமான இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு பணக் கொடுப்பனவு செய்யும் நாடுகளில் சௌதி அரேபியா முதலிடத்திலுள்ளது. சவுதி அரேபியாவிற்கு அடுத்தாக காட்டார், குவைத் போன்ற நாடுகள் இஸ்லாமிய அடிப்படை வாத்த்தைப் பரப்பும் நாடுகள்.
இந்த நாடுகள் அனைத்துமே அமரிக்காவால் சீண்டப்படாத அமரிக்க அரசால் ஆதரவளிக்கப்படும் நாடுகள். சிரியாவில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கிளர்ச்சிப்படைகளுக்கும் சவுதி அரேபியாவின் ஊடாகவே அமரிக்கா ஆதரவு வழங்கி வருகின்றது.
இஸ்லாமிய அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் அமரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பலம் சேர்க்கின்றது. அதனாலேயே அமரிக்கா இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை ஆதரிக்கின்றது.
அமரிக்க ஆதரவுப் படைகள் ஆக்கிரமித்து சீரழித்துக்கொண்ட்ருக்கும் லிபியாவில் ஷரியா சட்டம் என்பது வேறுவகையிலேயே காணப்பட்டது,
ஷரியா சட்டம் தனித்துவமானதல்ல வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாகக் காணப்படுகிறது. ஹன்பாலி சட்டப்பள்ளியைப் பின்பற்றும் சவுதி அரேபியா மிகப் பழமைவாத அடிப்படைகளைக் கொண்டுள்ளது. சவுதி அரேபியாவில் வேலைபார்ர்கும் ஐரோப்பியர்களுக்கும் அமரிக்கர்களுக்கும் இந்தச் சட்டம் வேறுவகையில் பிரயோகிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏழை முஸ்லீம்களை ஏமாற்றும் அரசியல் தலைமைகள் அவர்கள் மத்தியில் அடிப்படைவாதக் கருத்துக்களைப் பரப்பிவருகிறது. இலங்கையை தனது முழுமையாகத் தனது ஆதிக்கத்துக்கு உட்படுத்த முயலும் அமரிக்கா இலங்கையிலுள்ள அடிப்படைவாதக் குழுக்களுக்கு சவுதி அரேபியா ஊடாகப் பணம் வழங்கி வருகிறதா என்ற சந்தேகங்களை அண்மைக்கால கருத்துக்கள் ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையில் முஸ்லீம்கள் தனியான தேசிய இனம். ஒடுக்கப்படும் தேசிய இனங்களில் ஒன்று. அவர்கள் தமது சுய நிர்ணய உரிமைக்காக ஒடுக்கப்படும் பிரிவினரின் தலைமையில் போராடுவதனூடாகவே அழிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
nn/sn