ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 650 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 4 கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டினர்.
இதனால் பயந்து அங்கிருந்த தலைமன்னார் பகுதியில் அதிகாலை 2 மணிக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்னர். இதில் ஒரு படகு எரிந்தது. மீனவர் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
உயிர் பிழைத்தால்போதும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர். ஆனால் இது குறித்து மீனவர்கள் எந்த புகாரும் இதுவரை கொடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஆழப்படுத்தி இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்ப போன்றவற்றை மறைக்கும் இலங்கை இந்திய அரசுகள் இத் தாக்குதல்களின் பின்புலத்தில் இருக்கலாமோ என பலத்த சந்தேகங்கள் எழுந்த்துள்ளன. இதேவேளை தமிழகக் கரையோரப் பகுதிகளில் பதற்றம்நிலவுகிறது.
காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்டும், கற்களை கொண்டு தாக்குதல் நடத்தி வந்த இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் தற்போது பெட்ரோல் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வு ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.