கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர், வலைகளை அறுத்து எறிந்துவிட்டு, மீன்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கடந்த 10 நாட்களாக வீசிய சுறாவளி காற்றால் கடலுக்கு செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று 550 படகுகளில் 2,500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 5 படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.
அப்போது மீனவர்களை துப்பாக்கியால் மிரட்டிய இலங்கை கடற்படையினர் வலைகளை அறுத்து எறிந்து கடலில் வீசினர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கொள்ளையடித்தனர்.
அங்கிருந்து விரட்டப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் உயிருக்கு பயந்து இன்று காலை கரை திரும்பினர்.
யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!
இந்திய மீனவரால் நஷ்டம்
யுத்தம் என்ற ஒன்றுக்கு அப்பாற்பட்டு, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் முள்மீது விழுந்த சேலையைப் போல், தீர்ப்பதற்கு சற்று சிக்கலாகவே இருந்து வருகின்றன.
பருத்தித்துறை மீனவர்களைச் சந்தித்தபோது நாம் அறிந்துகொண்ட சில விடயங்கள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஆம்! யாழ்ப்பாணம் பருத்தித்துறையின் முனை பகுதியிலுள்ள மீனவர்களுடன் சிலமணிநேரம் உரையாடும் வாய்ப்பு வீரகேசரி இணையத்தளச் செய்திப் பிரிவினருக்கு அண்மையில் கிடைத்தது.
யுத்தத்தின் போது தொழில் செய்வதில் தமக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அனுபவங்கள் குறித்து அனைத்தையும் எம்மோடு அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். துணிகரச் செயல்கள், மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவங்கள் என அவர்கள் கூறிய தகவல்கள் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
தற்போதைய தொழில் நிலவரம் குறித்து அவர்களிடம் நாம் கேட்டோம்.இப்போது சுதந்திரமாகத் தொழில் செய்கிறோம். இந்திய மீனவர்களால் அடிக்கடி பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது” என்கிறார் மரியகுணஸ்டீன் என்ற மீனவர்.
சங்கிலி அண்ணன் என முனைப்பகுதி மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், ஆரம்பகாலம் முதல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் கூறிய தகவல் குறித்து மேலதிகமாகத் தெரிந்துகொள்ள ஆர்வமாமோம் நாம் …..
“இது சிங்க இறால் பிடிக்கும் காலம். இந்தக் காலத்தில் தெற்கிலிருந்து சிங்கள மக்களும் முனைப்பகுதிக்கு மீன்பிடிக்க வருகிறார்கள். கடல்மார்க்கமாகவே வந்து, அந்த வழியிலேயே அவர்கள் செல்கிறார்கள்.
இந்திய மீனவர்களால் தான் தொழிலில் எமக்கு அதிகம் நஷ்டம் ஏற்படுகிறது. நாம் வலைவிரித்திருக்கும்போது விளக்குகள் எதுவுமின்றி வரும் அவர்கள் எமது வலைகளைக் கிழித்தெறிகிறார்கள். ரோலர் படகுகளால் எமது வலைகள் துண்டாக்கப்படுகின்றன.
இதன்காரணமாக நாம் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுக்கிறோம். கடந்த வாரம்கூட சுமார் ஒன்றரை லட்சம் ரூபா விரயமானது.
இதுகுறித்து நாம் அதிகாரிகள் பலரிடமும் முறையிட்டோம். ஆனால் சாதகமான எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருவேறு நாடுகள் எனச் சொல்லிப் பிரிவினைவாதத்துடன் நாம் பார்க்கவில்லை. மனிதாபிமானம் வேண்டும் என்பதையே நான் கூற விரும்புகிறேன்” எனத் தொடர்ந்தும் பேசினார்.
அங்கிருந்த ஏனைய மீனவர்களும் இதே கருத்தை முன்வைத்தனர்.
யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்! video
ஐயா மலையாக நண்பரே! இந்திய மீனவர்களால் ஈழத்து மீனவர்களுக்கு நஷ்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். மேலதிகமாக இப்போ தென் இலங்கையிலும் இருந்து வருகிறார்கள் ஆக இவர்கள் எவரையும் உள்ளூர் மீனவர்களின் வளங்களை அள்ளிச்செல்ல அனுமதிக்க முடியாது, இங்கு என்னவென்றால் வடபகுதி, தமிழக இரு பகுதியினரையும் மோதவிடும் சூழ்ச்சி ஒன்று நடக்கிறது அதை திட்டமிட்டு செய்கிறார்கள் இதை புரியாத மக்கு நீர் என்றால் நீர் உன்மையில் மலையாக நண்பன் இல்லை. யாருக்கோ ௬ஜா தூக்கும் அன்னக்காவடி…
தெரிவும் எனக்கு வட பகுதி மீனவர்களை பற்றி கவலை பட நான் இலங்கை குடிமகன் அல்ல இந்திய குடிமகன்