கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது 3 சிறிய கப்பலில் 30க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் வந்தனர்.
அப்போது, அவர்கள் தமிழக மீனவர்களை உடனே அங்கிருந்து செல்லும்படியும், மீறினால் படகை சிறைபிடிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு கரை திரும்பினர்.
எல்லை மீறுதல் சட்டப்படி குற்றமே…