பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதற்காக மதுரை மாவட்டத்துக்குள் பிப்ரவரி 21-ந் தேதி வரை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.மதுரையில் சாதி சங்கங்களை ஒருங்கிணைத்து காதல் திருமணங்களை எதிர்த்தும் தலித்துகளை விமர்சித்தும் சாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதால், மாவட்டத்துக்குள் நுழைய உங்களுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என்று ராமதாஸுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், வழக்கறிஞர்கள் மூலம் பதில் அளித்திருந்தார்.இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைய ராமதாஸ் உள்ளிட்ட சாதித் தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.தற்போது பிப்ரவரி 21-ந் தேதி வரை மதுரை மாவட்டத்துக்குள் நுழையவும் ராமதாஸுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.மேலும் ராமதாஸுக்கு தடை விதிப்பது தொடர்பாக மற்றொரு நோட்டீஸையும் அனுப்பி வைத்திருக்கிறார் மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா.
அனைத்து சமூகப் பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் ஆதிக்க சாதிஅமைப்புகளை சேர்த்துக் கொண்டு ஊர் ஊராக கூட்டம் போட்டு வரும் ஆதிக்க சாதி வெறியன் டாக்டர் ராமதாஸுக்கு எதிராக திருச்சியில் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.அனைத்து சமூக பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார் ராமதாஸ். இதில் இடம் பெற்றிருப்பது அனைத்துமே ஆதிக்க சாதி அமைப்புகள்தான். இவர்களைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராக கூட்டம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பேசி வருகின்றனர்.
மற்றவர்களும்.ஒவ்வொரு கூட்டத்திலும் தலித் மக்களுக்கு எதிராக மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
ராமதாசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய புரட்சிகர அமைப்பின் தோழர்கள் கைது
மனிதகுலத்தை அவமதிக்கும் சமூகவிரோதி ராமதாஸுக்கு எதிராக திருச்சியில் ஆர்ப்பாட்டம்
மனிதகுல அவமானமான உயர்சாதிவெறியைப் பரப்பும் ராமதாஸும் ஈழத் தலித் குழுக்களும்