முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் இருந்து திடீரென சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி நளினி, தூக்குத் தண்டனை கைதி முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆயுள் தண்டனை கைதி ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்டடார். பின்னர் அதிமுக அரசு நளினியை மீண்டும் வேலூர் பெண்கள் சிறைக்கு மாற்றியது.
இந்த நிலையில், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் திடீரென சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
One Mr. Narayanasamy had written a book about the tigers. India did not anything diplomatically since 1991. They want a Permanent Seat in the Security Council?