ராஜிவ் காந்தி கொலை வழக்கை 5 அல்லது 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுவதாக நிர்ணயித்து அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றியுள்ளது.சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். அத்துடன் இவர்களது விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் கூறியது.
இதைத் தொடர்ந்து இந்த மூவர் மற்றும் ஏற்கெனவே ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேர் என மொத்தம் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
தேர்தல்கால நலன்களுக்காக தமிழக அரசு ஏழுபேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக
அரசு முன்னதாக நளினியைப் பிணையில் செல்வதையே நிராகரித்திருந்தது.
இந்த அரசியல் சாசன அமர்வு 3 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
5 அல்லது 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதனை விசாரிக்கும். இதுபோன்ற ஒரு வழக்கை உச்சநீதிமன்றம் முதன்முறையாக சந்திப்பதாக கருத்து தெரிவித்துள்ளது.
Jai! for Jayalalitha…
All credits for Jayalalitha.