இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதா இல்லையா என்ற வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.
இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 25ம் திகதிக்குள் வழங்கப்படும் என இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜிவ் கொலையாளிகள் வழக்கில், அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து விசாரணை நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 25ம் திகதிக்குள் வழங்கப்படும்
ஊழல் மற்றும் பாலியல் வழக்குகளின் 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.