தெற்காசியாவின் அரச பயங்கரவாதங்களின் பின்புலத்தில் செயற்படும் இந்திய அரசு குறைந்தபட்ச மனிதாபிமானக் கோரிக்கைகளைக் கூட நிராகரிக்கின்றது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைபட்டுள்ள முருகன்,சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் 2002- பாராளுமன்றத் தாக்குதல் குற்றவாளியான அப்சல் குரு உள்ளிட்ட தண்டனைக் கைதிகள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு கருணை காட்டுமாறு மனுக் கொடுத்திருந்தனர். இந்த மனு தொடர்பாக உரிய அறிவுரை கேட்டு இந்த கருணை மனுக்களை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார் இந்திய ஜனாதிபதி. இநிநிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், அப்சல் குரு உள்ளிட்ட நால்வருக்கும் கருணை காட்டக் கூடாது என்றும் அவர்களை உடனடியாக தூக்குலிட வேண்டும் என்றும் என்றும் உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருக்கிறது.