2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் ஒரு ஆண்டுக்குமேல் இருக்கும் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் ஜாமீன் மனு மீது இன்று சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.
நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய ஊழல் வழக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடன் கைதான 12 பேரும் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.
தன்னையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று, வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீது கடந்த 11ஆம் தேதி நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணை நடந்தது.
ஆ.ராசா தரப்பு வழக்கறிஞர், சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் ஆகியோரின் வாதங்களை கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் 15ஆம் தேதி (இன்று) தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசா விற்கு ஜாமீன் வழங்கி தில்லி சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்த ராஜா திகார் சிறையில் இருந்து விடுதலையாகிறார்.
கடந்த வாரம் சிபிஐ நீதிமன்றத்தில் ராசா சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, ராஜாவுக்கு ஜாமீன் தரக் கூடாது என்று சிபிஐ மறுத்த நிலையிலும், ராசாவிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
All of them from Tamil Nadu are corrupt. The Sri Lankan Tamils have made Tamil Nadu into another West Bengal in the Indian Union.