நவம்பர் பத்தொம்பதில் தொடங்கும் புதிய அதிர்ச்சியும் அச்சுறுத்தலும்.
‘கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
கடறியு மறவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்
போர் முகத்தை அறியானைப் புலியே றென்றேன்
–இது அந்தக் காலத்து ஏழாந்தர உமாவாசகத்தில் வந்த வினோதப் பாட்டு.
உலகமே ஒரு நாடக மேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள். இது ஷேக்ஸ்பியரின் கூற்று. பிரபாகரன் தேசியத்தலைவர் வேடம் போட்டு நடித்தார். ராஜபக்ஸ்ச ஜனாதிபதி வேடம் போட்டு நடிக்கிறார். ‘பரமசிவன் வந்து வந்து வரம் கொடுத்துப் போவார். பதிவிரதைக் கின்னல் வரும் பழையபடி தீரும்’
பிரபாகரனைப் பற்றிப் புழுகு புழுகென்று புழுகியே தமிழ்மக்கள் விடுதலைப் போராட்டம் பாழடிக்கப் பட்டது. இன்று ராஜபக்ஸ்சவைப் புழுகி இலங்கைத் தேசத்தையே பாழாக்க இருக்கிறார்கள்.
கடந்த முப்பது வருடமாக நடந்து முடிந்த தமிழீழ நாடகத்தின் திரைமறைவு இயக்குனர்கள் யார் என்பது கே.பி யின் சுய வெளிப்படுத்துகையால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சுய வெளிப்படுத்துகையானது டீ.பி.எஸ். ஜெயராயா என்ற ஏகாதிபத்திய ஏஜண்டும் படு பிற்போக்குவாதியுமான ஊடாகவிலாளர் கே.பியைச் செவ்விகண்டபாணியில் மிக நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்டு பத்திரிகைளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த டி.பி.எஸ்.ஜெயராஜா யுத்த காலங்களில் இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகளோடு உறவு வைக்கவும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்புரட்சித் தயாரிப்பு ஊடகமான பிபிசி க்கு செவ்வி வழங்கவும் திரு.ஆனந்தசங்கரியின் மரணசாசனத்தை வைத்திருக்கவும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியரான ராயன் கூல்லோட அன்னியோன்னியம் கொள்ளவும் இன்று கே.பியோடு தொடர்பு கொள்ளவும் வல்லவராக உள்ளார்.
இதிலிருந்தே கே.பி யோடான செவ்வி எந்த எதிர்கால அரசியற் தயாரிப்புக்காக மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டது என்பதை விளக்கும்.
அதன் நோக்கம் கே.பியைத் தமிழ் மக்களின் அரசியற் தலைவராக நிர்மாணிப்பதுதான் என்பது இலகுவில் விளங்கக் கூடியது. பழைய காலனித்துவ நாடுகளில் அரசியற் தலைவர்கள் அவர்களின் கெட்டித்தனத்தாலோ தியாகத்தாலோ அறிவியல் மேதாவிலாசத்தாலோ உரிமைப்போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்குகொண்டு மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து பெற்ற வெகுஜன அங்கீகாரத்தால் மாத்திரம் உருவாகி விடுவதில்லை. அவர்கள் காலாவாதியாகிப்போன முதலாளித்துவ ஆட்சி அமைப்பு முறையை ஏற்றுக்கொண்டு ஏகாதிபத்தியங்களுக்கு ஊசலாடாமல் சேவகங்செய்ய ஒத்துக் கொண்டால் மாத்திரம்தான் அவர்கள் அரசியல் வானுக்குப் பிரசித்தப் படுத்தப் படுவார்கள். கே.பி.யைத் திடீரென்று தமிழ் அரசியல்வானுக்கு அறிமுகப் படுத்திய நோக்கம் இதுதான்.
கே.பியும் ஏன் புலி இயக்கமும் ஏகாதிபத்திய கைப்பாவைகள்தான் என்பது எவருக்கும் விளங்கும். பெரும்பான்மையான தமிழ்மக்கள் தாங்களாகவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள் என்று சொல்வதில் பெருமை அடைவதால் புலியும் கே.பியும் ஏகாதிபத்தியங்களின் அடிவருடியாக இருப்பது ஏதும் புதுமையல்ல.
அது மாத்திரமல்ல புலிசார்பு தமிழ்மக்களின் அற்புதபுத்தி என்னவென்றால் சிங்களவர்கள் சோஷலிசத்திற்காகப் போராடவேண்டும் என்று பிரார்த்திப்பவர்கள். அப்பொழுதுதான் சோஷலிசவிரோத அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியோடு தமிழீழம் எடுக்கலாம் என்ற சாணக்கியம் தெரிந்தவர்கள்.
அப்படி இல்லாவிடில் புலியை இவ்வளவு காலத்திற்குத் தமிழ்மக்கள் சகித்திருக்க மாட்டார்கள்.
பிரச்சனை என்னவெனில் ராஜபக்ஸ்ச ஏகாதிபத்திய ஏஜண்டா அன்றேல் ஏகாதிபத்திய விரோதியா என்பதுதான். இதை முடிவெடுப்பது இப்பொழுதெல்லாம் மிக இலகுவாகும். இன்றய அரசியலை ஈறாக் ஆபுகானிஸ்தான் என்ற தொலைநோக்கு வில்லைகளின் மூலம் பார்க்காதவர்கள் எல்லோருமே ஏகாதிபத்திய முண்டுகள் என்ற முடிவுக்கு இலகுவாகவே வந்து விடலாம்.
இந்தாபிடி யூகோஸ்லாவியா மிலோசோவிச் மாதிரி ஜனாதிபதி ராஜபக்ஸ்சவையும் சர்வதேச நீதி மன்றம் அள்ளிக் கொண்டுபோகப் போகிறது என்று கூப்பாடுபோட்ட தமிழர்கள் எல்லாம் ராஜபக்ஸ்ச ஐ.நா கூட்டத்திற்கு வந்து போனதன் பின்பு வாயடைத்து இருக்கிறார்கள்.
‘எளியவன் பெண்டாட்டி எல்லார்க்கும் தோழி’ என்றது போல ராஜபக்ஸ்சவும் இந்தியாவுக்குக் கூட்டாளி, சீனாவுக்குக் கூட்டாளி, பாகிஸ்தானுக்குக் கூட்டாளி, றைஸ்சியாவுக்குக் கூட்டாளி, அமெரிக்காவுக்குக் கூட்டாளி, பாட்டாளிகளுக்குக் கூட்டாளி, முதலாளிகளுக்குக் கூட்டாளி.
‘எல்லாருக்கும் நண்பன் ஒருவருக்குமே நண்பன் இல்லை’ என்ற ஆங்கிலப் பழமொழிக்கு அருமையான எடுத்துக்காட்டு.
ராஜபக்ஸ்ச அமெரிக்க மற்றும் நேட்டோ ஆக்கிரமிப்புப் படைகள் நிபந்தனை ஏதுமின்றி ஈறாக்கையும் ஆபுகானிஸ்த்தானையும்; விட்டு வெளியேற வேண்டும் என்று இன்றுவரை கோராத ஏகாதிபத்திய விரோதியாகும். கே.பி பொட்டம்மான் சரணாகதி அடைந்த போதும் இன்று வரை இலங்கை அரசு புலிக் கொலைகளின் எந்தவொரு இரகசியத்தையும் வெளிவிடவில்லை என்பதை இலங்கை மக்கள் கவனிக்க வேண்டும்;. குறைந்த பட்சம் கோதாபாய ராஜபக்ஸ்ச கொலை முயற்சி, ராஜன் கதிர்காமர் கொலை, ரஜீவ் காந்தி கொலை போன்ற எந்த ஒரு இரகசியத்தையும் இன்றுவரை வெளிவிடவில்லை என்பதே புலியும் இலங்கை அரசாங்கமும் இலங்கை ஆயுதப் படைகளும் எந்த மட்டத்திற்கு உலக ஏகாதிபத்தியங்களோடு சேர்ந்து மூன்று தசாப்தமாக இலங்கையில் தமிழ் சிங்கள மக்களை மோதவிட்டு ஒருவரை ஒருவர் கழுத்தறுக்கவிட்டு மேய்ச்சுத் தண்ணிக்கு விட்டு இலங்கையின் சமூகநல அரசமுறையைத் துவாம்சம் செய்து ஏகாதிபத்தியங்களின் உபரி மூலதனங்களை நேரடியாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு உகந்த நாடாக மாற்ற முயற்சித்தார்கள்; என்;பது விளங்கும்.
மறுபக்கத்தில் ராஜபக்ஸ்ச அரசாங்கம் ஏதோ ஏகாதிபத்திய விரோத அரசாங்கம் என்றும் ராஜபக்ஸ்ச ஏதோ ஏகாதிபத்தியங்களின் எந்த நெருக்குவாரங்களுக்கும் பயப்படாமல் புலியைத் தொலைத்துக் கட்டினாரென்றும் தமிழ்மக்களிலே தம்மை இடதுசாரிகள் என்று சொல்பவர்கள் கூட இன்றுவரை ஓயாமற் கத்திக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் முள்ளிவாய்க்கால் நரபலி வேட்டைக்கு முன்னதாக ஐ.நா செயலாளர் பான்கிமோனும் ஐ.நா துணைச்செயலாளர் விஜை நம்பியாரும் வந்து நேரடியாகத் தலையிட்டு பிரபாகரனையும் புலிகளையும் சரணாகதி அடைய ஊக்குவித்த செய்திகளைத் தமிழ்மக்கள் இன்றுவரை கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரபாகரனின் சரணாகதி வரலாற்றை அவரது சர்வதேச எஜமானர்கள் எப்பாடுபட்டும் மறைக்கப் பார்க்கின்றனர். றாயபக்ஸ்ச அரசாங்கமும் இன்றுவரை புலியின் இரகசியங்கள் எதையும் வெளிவிடவில்லை. பொல்பொட கொன்றவர்களின் மண்டையோடுகளை எடுத்து மலைபோல் குவித்துக் காட்டினார்கள். போல்பொட் கொன்ற மண்டையோட்டுக் குவியல் 30000 என்றே கருதப் படுகிறது. புலி கொன்ற மண்டையோடுகளையெல்லாம் அரசாங்கமே தேடி எடுத்து எரித்துவிட்டது. புலியின் சித்திரவதைச் சிறைகளைக்கூட அரசாங்கம் தமிழ் மக்களுக்குக் காட்டாது மறைத்துவிட்டது. அப்படி அந்த வதை முகாங்களையும் கொல்லப்பட்ட தமிழர்கள் மண்டையோட்டுக் குவியல்களையும் தமிழ் மக்களுக்குக் காட்டியிருந்தால் இன்று புலியும் இல்லை. .பூனையும் இல்லை.
நாடு கடந்த தமிழீழமும் இல்லை. காடுகடந்த தமிழீழுமும் இல்லை. தமிழ்மக்கள் புலிக்கெதிராகக் கெம்பி எழுந்திருப்பார்கள்.
விசித்திரமான கேள்வி யொன்றுண்டு. இருவருக்குத் தெரிந்த இரகசியத்தை எப்படிக் காப்பாற்றலாம். விடை: ஒரேயொரு நிபந்தனைக்குள் மட்டும்தான் காப்பாற்றலாம். இரகசியம் தெரிந்த இருவரில் ஒருவர் இறந்தால் மட்டும்தான் காப்பாற்றலாம்.
புலியும் புலிப் பாசிசக் கும்பல்களும் வெள்ளைக் கொடியோடு பரிவாரம் புடைசூழ சரணா கதி அடைந்ததை நூறல்ல ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் கண்டிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கான இலங்னைப் படைகளைச் சேர்ந்தவர்கள் கண்டிருக்கிறார்கள். அது பலபேருக்குத் தெரிந்த பரம ரகசியம்.
அண்மையில் கே.பியோடு இலங்கைஅரசாங்கம் நன்நெறிபிறழ்ந்து மணம் செய்தததை சிங்களவர்கள் எல்லோருமே எதிர்த்தார்கள். அதைச் சமரசப் படுத்து முகமாக சிங்கப்பூர் பல்லகளைக் கழகத்தில் பயங்கரவாதம் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவரும் புலிகளின் முழு இரகசியங்களும் தெரிந்தவர் என்று கருதப்படுபவரும் சிங்கப்பூரில் பயங்கரவாதம் பற்றி பிறநாட்டவருக்கு விரிவுரை எடுப்பவருமான ஒரு சிங்களப் பேராசிரியர் சொன்னாராம,; புலிகளைக் கேபி என்ற தனிமனிதான் தோற்கடித்தார்.
புலிகளைப் பலவீனப் படுத்திய கருணாவுக்கு மந்திரிப் பதவி கொடுக்கலாமென்றால் ஏன் கே.பியை ஏற்றுக் கொள்ளக் கூடாது. கே.பி பில்லியன் கணக்கான டொலர்களை நிர்வகித்த அனுபவமுடையவர். இலங்கை மத்திய வங்கி முகாமையாளர்கூட இவ்வளவு தொகையை நிர்வகித்தது கிடையாது. அது மாத்திரமல்ல தசாப்தங்களாக புலம்பெயர் தேசங்களில் உள்ள லட்சக் கணக்கான படித்த தமிழர்களை ஆழுமை செலுத்திய ஒரு மனிதர். இரு என்ற இடத்தில் இருத்தி எழும்பு என்ற இடத்தில் எழுப்பிய மனிதர்.
இதிலிருந்தே தெரியும் இலங்கையின் உள் நாட்டு யுத்தத்தை இலங்கை அரசாங்கம் தோற்கடிக்க வில்லை என்பது. யுத்தத்தை அரசாங்கம் நாடாத்தினால் அல்லவோ அரசாங்கத்தால் தோற்கடிக்க முடியும். யுத்தத்தைப் புலியும் நடாத்தவில்லை. அரசாங்கமும் நடாத்த வில்லை. சர்வதேச ஏகாதிபத்திய எஜமானர்கள் புலியையும் அரசாங்கத்தையும் மூன்று தசாப்தமாக கைப்பாவையாக ஆட்டிப்படைத்தார்கள். எவ்வளவு அழிவு வந்தாலும் பறவாயில்லை. இலங்கையில் தேசியமயம், தேசிய மயமாக்கப்பட்ட உற்பத்திச் சாதனங்கள் , அரச உடமை, இலவசக்கல்வி, இலவச வைத்திய வசதி, தொழிற்சங்கப் போராட்டம் என்ற சொல்லே இருக்கக் கூடாது. இலங்கை பாட்டாளிகளின் நாடாக இருக்கக் கூடாது.
பண்டங்களைப் படைப்பவர்களின் நாடாக இருக்க வேண்டும். கடன்வேண்டும் நாடாக இருக்கக் கூடாது. வெளிநாட்டு நேரடி மூலதனத்தைக் கவர்ந்திழுக்கும் நாடாக இருக்க வேண்டும்.
முழுயுத்த காலங்களிலும் இலங்கை அரசாங்கத்தை அரச உடமையானவற்றைத் தனியார்மயமாக்கும்படியும் நாட்டின் பொருளாதாரத்துறையைத் தாரளமயமாக்கும் படியும் தொடர்ந்து ஏகாதி பத்தியங்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டே வந்தன. 1977 முதலாவது இனக்கலவரம் கூட கட்டுனாயக்காவில் சுதந்தர வர்த்தக நிலையத்தை ஏற்படுத்துவதற்கான பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் அமுல்நடாத்தும் சூழலைப் பிறப்பிப்பதற்காகும்.
ராஜபக்ஷசவுக்கும் சரத்பொன்சேகவுக்கும் இடையில் நடந்த வாக்குவாதங்களைக் கவனித்தவர்களின் கூற்றுப்படி சரத்பொன்சேகா, தான்தான் வன்னியில் மழையிலும் வெய்யிலும் நின்று போராடினேன். நீங்கள் அதாவது கோதபாய ராஜபக்ஷ்ஷவும் மகிந்தா ராஜபக்ஷ்சவும் ;குளிர்சாதன அறைகளில் இருந்து கட்டளை பிறப்பித்தவர்கள் என்;ற வாதத்திற்கு விடையிறுக்கும்பொழுது ராஜபக்ஷ்ச சொன்னாராம் ‘யுத்ததத்தை நீ தோற்கடிக்கவில்லை. யுத்தத்தைக் கே.பி தான் தோற்கடித்தார். கே.பி இல்லாவிடில் புலியின் தோல்வியை நினைத்தும்பார்க்க முடியாதென்று’. அதற்கு விடையிறுத்த சரத்பொன்சேகா ‘அப்படியானால் நீங்கள் யுத்தத்தை வென்றதாக ஏன் கொண்டாடுகிறீர்கள்’ என்று கேட்டாராம்.
பிரச்சனை என்னவென்றால் கே.பியையும் இலங்கை அரசாங்கத்தையும் இணைத்துக் கையாண்ட எகாதிபத்திய எஜமானர்கள் யார்? உண்மையில் முப்பது வருடமாகப் புலிகளும் இலங்கை அரசாங்கமும் ஆயுதப் படைகளும் ஏகாதிபத்தியங்களின் விசுவாசம் மிக்க ஊழியர்களாக நூற்பாவைகளாகச் செயற்பட்டு மாறிமாறி சிங்கள தமிழ் சகோதரக் கொலைகளைச் செய்து எமது தேசத்தையும் நாசமாக்கினார்கள் என்பதுவே உண்மை.
முதலாளித்துவ அரசுகள் எல்லாமே ஒரு குடும்பங்கள் போன்றன. அவைகள் தங்களுக்குள் ஆயிரம் இழைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கிடையே சின்னச் சின்ன முரண்பாடுகள் எழுந்தாலும் தனிச்சொத்துடைமைக்கு ஆபத்துவரும் காலங்களில் அவர்கள் மிக வாஞ்சையோடு இணைந்து விடுவார்கள். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை நடாத்தியவர்கள் பான்கிமோன் விஜை நம்பியார் மற்றும் அமெரிக்க ஐரோப்பிய இந்திய சீன முதலாளித்துவங்கள் இணைந்தே நடாத்தின. இந்த நாடகத்தை வெளியில் கொண்டுவருவது ஏதும் கஷ்டமல்ல. கே.பியையும் கோதபாயா ராஜபக்ஸ்சவையும் யுத்தத்தின்போது கையிழந்து காலிழந்து நிரந்தர அங்கவீனர்களாகப் போன இராணுவத்தினரதும் மற்றும் கையிழந்த காலிழந்த நெருங்கிய குடும்ப அங்கத்தவர்களைப் பறிகொடுத்த, பலிகொடுத்த தமிழர்களதும் பகீரங்கப் பொது விசாரணைக்கு உட்படுத்தினால் இந்த உண்மை ஸ்தூலமாக வெளிவரும்.
ராஜபக்ஸ்ச ஒரு ஏகாதிபத்திய விரோதியானால் ஏன் இந்த ஏகாதிபத்திய அடிவருடிப் புலியான கே.பியை இராஜபக்ஸ்ச அரசாங்கத்திடம் இந்த ஏகாதி பத்தியங்கள் கையளித்தன. ஒரு உலகம் அறிந்த பயங்கரவாதி ஒரு நாட்டின் பாதுகாப்பச் செயலாளர் வீட்டுக்குப் போன புதுமை இலங்கையில் மாத்திரம்தான் நடந்திருக்கிறது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாயா வீட்டிற்குச் சென்று கே.பி கேக் சாப்பிட்டு தேனீர் அருந்தியது மாத்திரமல்ல அவரை ஒரு நல்ல மனிதர் என்று நற்சாட்சிப் பத்திரமும் வழங்கியுள்ளார். மாற்றுக்குக் கோதபாயா ராஜ பக்ஸ்சவும் கே.பிக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கி அவரைத் தமிழ் மக்களின் லட்சியத் தலைவராக்க முயற்சிக்கின்றார்.
கே.பியின் சொந்தக் கூற்றின்படியே கே பியைச் சர்வதேசப் பொலிஸ் கைது செய்யவில்லை. 2007 அளவில் கேபி சர்வதேச பொலிசால் கைது செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்திகள் சர்வதேச செய்தித் தாள்களில் வெளியானதைத் தமிழ் மக்கள் நன்கே அறிவர். பி.பி.சி போன்ற ஊடகங்கள் ஈறாக் யுத்தத்திற்கு முன்னர் ஈறாக்கில் பேரழிவுதரக் கூடிய ஆயுதங்கள் இருப்பதாகப் படம்காட்டிச் செய்தி வெளியிட்டபின்பே ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு ஈராக்குக்மேல் தொடுக்கப் பட்டது. அது போன்ற ஒரு சின்ன நாடகம்தான் கே.பியை சர்வதேசப் பொலீஸ் பிடித்த செய்தியாகும்.
ஆனால் கே.பி யின் சொந்தக்கூற்று சர்வதேசப்பொலிஸ் தன்னைக் கைது செய்யவில்லை என்பதாகும்.
இதோ கே.பி யின் செய்வியிலிருந்து:
‘உண்மையில் நான் 2007இல் கைது செய்யப்படவில்லை. என்னை கைது செய்ய ஒரு முயற்சி நடந்தது. சில அதிகாரிகள் அதிகாலை வேளையில் எனது வீட்டை சூழ்ந்துகொண்டனர். அதிஷ்டவசமாக நான் அங்கு இருக்கவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டுவிட்டதாக இலங்கையில் செய்தி கசிந்தது.’
கே.பி கைது செய்யப்பட்டுவிட்டதாகத் தமிழ் மக்ளை ஏமாற்றிவிட்டு கே.பி.யின் முழுக் காட்டிக்கொடுப்புடனேயே பெருந் தொகையான மக்களை வன்னி நிலப்பரப்பில் ஏகாதிபத்தியங்கள் இலங்கை அரசபடைகளைக் கொண்டு கொன்று குவித்தன. இலங்கை ராஜபக்ஸ்ச அரசாங்கமும் கே.பியோடும் மற்றும் உருத்திரகுமாரன் போன்ற உச்சியிலுள்ள புலிகளோடு உறவு ஏற்பட்ட பின்னர் கூட அந்த உண்மையச் சொல்லாமல், கிராமப்புறங்களிலிருந்து படைகளிற் சேர்ந்த பெரும்தொகையான இளைஞர்களைப் பலி கொடுத்தும் ஊனமாக்கியும் தேசத்தையும் நாசமாக்கி நாட்டையும் மீழாக் கடனில் ஆளாத் துயரில் அமிழ்த்தியுள்ளது.
போன ஜனாதிபதித் தேர்தலின்போது இன்னொரு அதிசயம் நடந்தது
இந்தியாவின் ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஜனாதிபதி ராஜபக்ஸ்சவுக்கு வாக்குப் போடும்படி இலங்கை டெய்லி நியூசினூடு வேண்டுகோள் விடுத்தார்.
சனி, 16 ஜனவர ஜனதாக் கட்சித் தலைவரான சுப்பிபரமணியன் சுவாமி சிறிலங்காத் தமிழர்களைக் கோருவது என்னவென்றால் எதிர்காலத்தில் இந்தியா உங்களுக்கு அனுதாபமாக இருக்க வேண்டுமானால் நீங்கள் தமிழ் பேசும் சிங்களத் தலைவரான மகிந்தா ராஜகப்ஸ்சவுக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்குங்கள்.
சுப்பிரமணியம் சுவாமி அடிக்கடி அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் வந்து வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு ராஜபக்ஸ்ச அம்பநாந்தோடi;டத் துறை முகத்தை சீனாவுக்குக் கொடுத்துவிட்டார். அவர் ஏதும் சேட்டை விட்டால் அவரையும் படிப்பிப்போம் என்றது போன்ற தோறணையிலேயே அவரது கூற்றுக்கள் அமைந்திருப்பது வழக்கம்.
திடீரென்று ராஜபக்ஸ்சவுக்கு வாக்குப் போடச் சொல்கிறார். எந்த இந்திய அரசியல் வாதியும் சொல்லாத ஒன்றை அவர் சொன்னார். ஏன்? ஆர் இந்த சுப்பிரமணியம் சுவாமி. இலங்கைத் தமிழர்களுக்கு அவரது வரலாறு நன்றாகவே விளங்கும்.
றைஸ்சிய மாக்ஸ்சியத்தின் தந்தையான பிளெக்கானெவ் சொல்லுவார். பத்திரிகைகளில் வரும் கருத்தை மாத்திரம் வாசித்தால் போதாது. அ;தக் கருத்தைச் சொல்பவரின் வர்க்க மற்ற வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் .அது தெரிந்தாற்தான் அவர் எந்த த்த்துவார்த்த அரசியற் திசைக்கு உங்களை இழுத்துக் கொண்டு போவார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். முகவரி இல்லாத இணைய உலகத்திலே இந்தக் கூற்று மிக அவசியம் ஆனாது. புலிப் பாசிசம் ஒழிந்த இந்த நேரத்தில் இந்த வழக்கத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
2009 மே 17 க்கு முந்திய சில நாட்களில் ஐ.நா வின்துணைச்செயலாளர் விஜை நம்பியார் மற்றும் ஐ.நா செயலாளர் பான்கிமோன் இலங்கைக்கு வந்து நின்றார்கள். அவர் வந்த சமிக்ஞையே பிரபாகரன் வெள்ளைக் கொடியோடு சரணாகதி அடையும் நம்பிக்கை ஊட்டப்பட்டது. பிரபாகரனும் அவரோடு சேர்ந்த உச்சியிலுள்ள புலிப் பாசிசக் கும்பலும் வெள்ளைக் கொடியோடு சரணாகதி அடையச் சென்றதை அப்பொழுது வன்னியிலிருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் கண்டிருக்கிறார்கள். அவர்களது சாட்சிகள் மெல்ல மெல்ல தமிழ் மக்களுக்கு வந்த சேர்ந்து கொண்டிருக்கின்றன.
அனேக சிங்கள சிப்பாய்களும் 57 வது படையணிச் சிப்பாய்கள் கூட தம்மோடு நெருங்கியவர்களுக்கு பிரபாகரன் சரணாகதி அடைந்ததைச் சொல்லி வருகிறார்கள்.
ஏகாதிபத்தியங்களும் ஏகாதிபத்தியத் திருடர்களின் குகையாக விளங்கும் ஐ.நாவும் புலியையும் இலங்கை அரசாங்கத்தையும் வௌ;வேறு விதமமாகக் கையாண்டு இந்த யுத்தத்தை நடாத்திக் கொண்டிருந்தனர். இந்த யுத்தத்தின் மத்தியிலேயே எகாதிபத்தியங்களும் ஐ.நாவும் சர்வதேசநாணயநிதியமும் இலங்கையில் பொருளாதார அமைப்புமுறையைத் தாரளமயமாக்கும்படி நிர்ப்பந்தத்தித்தன. ஒவ்வொரு பேச்சுவார்த்தைகளின்போதும் இந்த நிர்ப்பந்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. அரச உடைமையாக்கப்பட்ட நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதே உலக ஏகாதிபத்தயிங்களின் இலக்காக அமைந்திருந்தது. அதற்காகவே இந்த உள்நாட்டு யுத்தம் திட்டமிட்டு ஆத்திரமூட்டப்பட்டது.
2008 செப்டம்பர் 15 இல் அமெரிக்க லேமன் பிறதேர்ஸ் வங்கி திவாலானதைத் தொடர்ந்து ஏற்பட்ட வங்கிச் சரிவுகளின்போது மேற்கு நாடுகள் எல்லாமே வங்கிகளுக்கு ஏறத்தாள 14000 பில்லியன் டொலர்களை இறைத்து வங்கிகளைக் திவாலாக விடாமற் காப்பாற்றின. உலக மொத்த் உற்பத்தியின் கால்வாசிப் பங்கு பெறுமதியை கொடுத்துக் காப்பாற்றியதோடு தனியார் உடமை முறையே சொர்க்கமென்ற கருத்து திவாலாகவே இலங்கையிலும் தாராளமயமாக்கல் பிரச்சனை செல்லுபடியாகாதென்பதை அறிந்த ஏகாதிபத்தியங்கள் திடீரென்று இலங்கையில் யுத்தத்தை நிறுத்த முடிவெடுத்தன. அதுமாத்திரமல்ல மூன்று தசாப்த உள்நாட்டு யுத்தத்தால் சிங்கள தமிழ் மக்கள களை களையென்று களைத்து வெறிதாகிப் போனார்கள். நாடும் மீளாக்கடனில் மூழ்கித் திவாலாகும் நிலைக்குத் தள்ளப் பட்டது. இந்தக் களைப்பும் யுத்தத்தை திடீரென்று முடித்தது.
யுத்த முடிவின்போது இலங்கை அரசாங்கத்தின்மேல் ஏதோ யுத்தக்குற்றம் சுமத்தப் போவதாக ஜெனிவாவில் நாடகமாடி ஜெனிவாவில் பிரித்தானியாவால் கொண்டுவரப்பட்ட போர்க்குற்றத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது போல் நாடகமாடி ஏகாதிபத்தியங்களும் அந்தத் திருடர்களின் பாதுகாப்புக் குகையான ஐக்கியநாடுகள் சபையும்; தமிழ் சிங்கள மக்களின் கண்களிலே மண்ணைத் தூவினார்கள். இந்தநாட்களில் இலங்கையின் பாதுகாப்பபுச் செயலாளர் கோதபாய இராஜபக்ஸ்சவும் யுத்தத்தை நாடத்திய ஜெனரல் சரத்பொன்சேகாவும் அமெரிக்கா சென்று திரும்பிய போதும் போர்குற்ற நடவடிக்கைகள் ஏதும் நடக்க வில்லை.
ஐ.நா உயர் அதிகாரிகளான பான்கிமோனும் விஜை நம்பியாரும் இலங்கைக்கு வந்தே பிரபாகரனை வெள்ளைக் கொடியோடு சரணடைய வைத்தனர். சரணாகதி நாடகத்தின்போது ஜனாதிபதி ராஜபக்ஸ்ச ஜோடனுக்கும் ஜெனரல் பொன்சேகா சீனாவுக்கும் சென்ற போது இன்று இலங்கைக்காக ஐ.நா. வில் ;இருக்கும் அன்றய 57 வது படையணித் தளபதியாக இருந்த மேயர் ஜெனரல் சாவேந்திர டீ சில்வாவும் கோதாபாயாவுமே மிக இரகசியமாகச் செயற்பட்டு பிரபாகரனின் வெள்ளைக் கொடியோடான சரணாகதி நாடகம் மேடையேற்றப்பட்டது. பிராபகரனிடம் மே 15 ந்தேதியே ஆயுதக் கிடங்குகளை வெடிவைத்துத் தகர்த்துவிட்டு வெள்ளைக் கொடியோடு சரணாகதி அடையும்படியே கட்டளையிடப்பட்டு பிரபாகரனும் அவரோடான பாசிசக் கும்பலும் வெளிநாடொன்றுக்கு அகதியாகக் கப்பலிற்போகும் ஆயத்தங்களுடனேயே கடவுச்சீட்டுகள் சாரங்கள் சகிதமே சரணடைந்தனர்.
பிரபகரன் போரிலே கொல்லப் படவில்லை என்பதை பிரபாகரனது படங்களை ஆய்வு செய்த சட்ட மருது;தவம் தெரிந்த தமிழ் சிங்கள வைத்திய கலாநிதிகளும் ஏன் மற்றும் எண்ணற்ற உலக வைத்திய மேதைகளும் சட்ட மேதைகளும் ஓய்பெற்ற நீதியரசர்களும் மீண்டும் மீண்டும் ஊர்யிதம் செய்கிறார்கள்.
மிக நீண்ட கட்டுரையின் முதலாவது பகுதி இங்கே தரப்படுகிறது. இதன் தொடர்ந்த பகுதிகள் இனிவரும் நாட்களில் வரும்..
Good story teller…… you can write a short story instead of writing politics
ராஜபக்ஷசவுக்கும் சரத்பொன்சேகவுக்கும் இடையில் நடந்த வாக்குவாதங்கள் எந்தச் சந்தியில் நடந்தன? அவை யார் யாரால் கேட்கப்பட்டன அல்லது பதியப்பட்டன என்பதை,
கேபியின் சூழ்ச்சித் தொடர்பாளர்களுடன், கட்டுரை வரைஞர் கொண்டிருக்கும் உறவுகளை,
வெளியிட்டால்,
வாசகர்களுக்கும் சுமக்க வதியாயிருக்கும்.
அழகலிங்கம் அவர்கள் தேனியிலும்,சத்தியக் கடதாசியிலும் எழுதும்போது மகிந்தாவை ஜனநாயகக் காவலராக எழுதினார்.புலிகளது அழிவில் தொழிற் சங்கவுரிமை.பேச்சுரிமை எனப் பலவும் உருவாகும் இலங்கையாக மகிந்தாவினது ஆட்சி ஏற்படுத்துமென்றார்.இலங்கை ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுத்த அரசுவெனச் சொல்லி ,மகிந்தாவால் தமிழ்பேசும் மக்களுக்கான ஜனநாயகத்தைக்கொணர முடியுமெனச் சொன்னார்.இதை அம்பலப்படுத்தி இரயாகரனும் நானும் பல பத்துக் கட்டுரைகளை எழுதியிருக்கிறோம்.
இன்றிவர் கூறுவதை நாம் கடந்த நான்காண்டுகளுக்கு முன் இவரை எதிர்த்து எழுதியிருக்கிறோம்.
இவர் இதில் சொல்வதையெல்லாம் நாம் சொன்னபோது அன்று, இலங்கைக்கு ஜனநாய முகமூடிதயாரித்த அண்ணர் ,இன்று, பிளேட்டைப் புரட்டிப் போடுகிறார்.
ரொக்சியச் சரணாகதிகளில் இதுவும் ஒன்றுதாம்.
நாணற் புல்லினது கதை இன்று ரொக்சியத்துக்கு எவ்வளவு பொருத்தம் என்பதை காபர் மார்ஸ்சினது கொமினிக்கார்டீவ கான்டலிலும் (Theorie des Kommunikativen Handelns-Juergen Habermas) காணமமுடியும்.நோய்வாய்ப்பட்ட முதலாளியத்துக்கான வைத்தியர்களாகிப்போன ரொக்சியக் குழந்தைகள் இன்று, தாம்பூலத்தோடு மார்க்சியம்-கம்யூனிசம் சொல்கின்றனர்.நல்லது!-நல்ல முன்னேற்றம்.வாழ்க-வளர்க!
மாறும் பொருளகற்றி மாற்றந்தாம் நிகழ்வதால் ,இதுவெல்லாம் இயங்கியல்விதிக்குத் தோதானதுதாம்!என்றபோதும்,அழகலிங்கம் அவர்களை இன்னும் தோழரெனக்கொள்வதற்கு அவர் முகந்தொலைத்த அன்றைய பொழுதோ நமக்குமுன் அநாதவராக… தேனிக்குக் காவடியெடுத்து ,மகிந்தாவைக் கொலுவேற்றிய இந்த காவடியில் பாவத்துக்கான தேசிக்காய் தமிழரின் தலையென மாறியுள்ளதைச் சுட்டிக்காட்ட அழகலிங்கம் மிகச் சுணக்கமாக இனியொரு துவையல் வைக்கிறார்.இது,அழகலிங்கம் அவர்களது அன்றைய எழுத்துக்கள்மீதானதென்பதை இனியொரு வாசகப் பெருகுடிகள் கவனிக்கவும்.மற்றும்படி அழகலிங்கத்தாரின் தனிப்பட்ட வாழ்வுமீதல்ல!அவருடைய எளிமைக்கு முன் நாமெல்லாம் எங்கோ நிற்கிறோம்.என்றபோதும்,தேனிக்காலம் நம்மைப் பார்த்து அழகலிங்கம் இலங்கைக்கும்-மகிந்தாவுக்கும் மடிப்பிச்சை எடுத்தாரே எனப் புரட்டியெடுப்பதால்,இந்த எதிர்வினை.கூடவே,அறிவாய்வின் தகர்ப்புக்கு நிகராக இன்னுஞ் சொல்லப் போகும் அண்ணரின் அடுத்த நகர்வில் படுபரிதாபகரமாக முகம் தொலைக்கப் போவது எவரெனக் கேட்போருக்கு இன்னுஞ் சொல்ல அதிகமாக இருக்கு, வேர்னர் செப்மான் சொல்லும் Strategien der Wissenschftszerstoerung இதற்கு நிகராகவே இன்றைய அழகலிங்கத்தாரின் கதை.இதைச் சொல்லவா அண்ணா நீங்கள் மறுபிறவியெடுத்தீர்கள்?வசதிப்பட்டால் பீற்றர் சிமா மற்றும் வேறாய்வாளரும் எழுதிய Strategien der Verdummung நூலையொருக்கால் வாசியுங்கோ.
அழகலிங்கம் மனம் மாறியிருக்கலாமல்லவா.
அதற்காக அவரைத் திட்டுவது தகுமா?
வேன்டுமானால், அவரது மனமாற்றத்திற்கான காரணங்களைக் கேட்கலாம்.
பதில் சொல்லும் கடப்பாடு அவருக்குண்டு.
இதையே கேள்வியாகப் பாவித்து அவர் பதில் கூறுவாரென நம்புகிறேன்.
அது போக,
தடாலடியாக மனிதர்களைத் தாக்காமல் பண்பாகக் கேள்விகளை எழுப்பலமே.
எல்லாரையும் அம்பலப்படுத்தியே தீருவது என்று தொடங்கின “அம்பலத்தரசர்” இரயாகரன், இப்போது, தானே அம்பலப்பட்டுத் தவிக்கிறார்.
எனவே இந்த “அம்பலப்படுத்தல்களில்” செலவிடும் நேரத்தை ஆக்கமான விவாதங்களில் செலவிடலாம்.
பொய்களும் பொய்யர்களும் தாமே அம்பலப்படுவர்.
கைலாசபதி எழுதின மாதிரி,ரங்கனும் எழுதிறார்.டொச் பண்ணிறதா,டச் படிக்கிறதா என்பது நம்ம தலைவலி அல்லது தலைவிதி.
பண்பாகக் கேளுங்கள் என்று, கண்ணியமான கட்டுரையாக கரம்மசாலா பண்ணுகிறார்.
தேவைப்பட்டவர்களுக்கு மகிந்தா தேனியாய்,தேசமாய்த் திகழ்ந்தார்.
இனியொருவில் பொய்ம்மை அம்பலத்தாடினால்,பார்ப்பவர்களும் புனை சுருட்டை ஊதித் தள்ளட்டும்.
நான்காம் அகிலம் என்பது கடைசியில் அஞ்சாம் படை என்பது ட்ராஷ்கி’ வாழ்ந்து வழிகாட்டி விட்டர்.
இந்த அழகலிங்கமோ நாம் அழ ‘கலிங்கம்’ நடத்தி விட்டார்.
வாசித்தேன். இப்படிப் பல கதைகளை வாசிக்கும் காலமாயிற்று. “பிறகு சொல்லுங்கோ…”என்று காத்திருப்போம்.
அப்போ சிங்கள ,தமிழ் தொழிலாளி வர்க்கம் போராடி தமிழ் தேசியத்தை காக்கப்போகிறதா.????
ரங்கண்ணா நிறைய வாசிக்கிறார். டச்சு யாருக்கண்ணா புரியும்.
அண்ணா, நீங்க அழகலிங்கம் இல்லை….சுயம்புலிங்கம் அண்ணா, சுயம்புலிங்கம். ஆமா இப்டி எத்தினை பேரு கிளம்பிட்டிங்க. ஒரு வேளை ” ரூம் ” போட்டு ஜோசிப்பிங்களோ……..சோம்பேறிகள், கையாலாகாதவர்கள், பேசிக்கொண்டேயிருப்பார்கள், ஆனால் ஒன்றுமே செய்யமாட்டார்கள். போர் முடிந்து, உங்க கணக்குப்படி புலிகள் முடிந்து ,இன்றைக்கு ஒன்றரை வருடங்கள் ஆச்சு. நீங்கள் எல்லாரும் உயிரோடு இருந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள்.நீங்கள் சொன்னாலும் , சொல்லாடியும் ராயபக்ஸ்ச இன்று வரைக்கும் தமிழ் மக்களுக்கு என்ன செய்தானோ, அதைச் செய்தே இருப்பான். நீஙகள் உயிரோடு இருந்ததான் இதை எல்லாம் செய்கிறான் எண்டு சத்தியமாய்நம்பிடாதேங்கோ.
ரூம் போட்டு யோசித்து பிறகு மேச்சலுக்கு வந்த மாடுகளின் வசதியாலை “ரம்போ”
சுடுகணை வாங்கி விரல் அளவு தோட்டப்பட்டியையும் தோளில் மாட்டி தன்யினத்தையே வேட்டையாடிய 1986 மே யூன் மாதங்களையா நினைவு படுத்து கிறீர்கள் சோம்பேறியா இருக்காதீர்கள் என்று. வன்னியான் நீங்கள் புலியில்லை என்று சொல்வீர்கள் மற்றவனை குற்றம்சாட்டி வயிறுவளர்த்த அதே முட்டாள் தனமான இரத்தம் தான் உங்களிடம் ஓடுகிறது.
இரத்தம் பரிசோதித்து நோய்யை கண்டறிய தற்கால விஞ்யாணம் அனுமதித்தாலும்
எக்ஸ் வன்னியன் இரத்தத்தை பரிசோதிக்க விஞ்யாணம் இன்னும் வளர்ச்சி அடையவில்லை.
பொன்.இராமனாதன் யார் என்று தெரியுமா ராசா. அன்றைக்கு அந்த மகராசா, இங்கிலாந்து ராணியிடம் ஒரே ஒரு வார்த்தை கூறி இருந்தால் இன்றைக்கு இந்த துயரம் தமிழருக்கு வந்திருக்குமா சந்திரனுக்கு -ராசா. படித்த மேதாவிகள் எல்லாரும் எப்போது தமிழன் பக்கம்நின்றார்கள்: கதிர்காமர்,நீலன்திருச்செல்வம், யோகெஸ்வரன் என்று எல்லாரும் சிங்கள் அரசின் கைக்கூலியாய் இருந்து தமிழர் இரத்தம் உறிஞ்சிய அட்டைகள் தானே.ராசிக்குறூப், புளட்-மோகன் குறூப், ஈ.ன்.டி.எல்.எவ், வரதர்-அணி எண்டு இன்னொரு பக்கம் , புலிகளை அழிக்கிறேன் என்று தமிழருக்கு சங்கு ஊதினவர்கள் தானே இவெர்கள் எல்லாரும். இவெர்களை எல்லாம் போட்டுத் தள்ளாமல், மாலை போட்டு , கிடாய் வெட்டி, வீட்டுக்குக் கூப்பிட்டு விருந்தா வைக்க முடியும்!
மூடிமூடி மறைக்க முயன்றாலும் வாசம் இருப்பிடத்தை காட்டிக் கொடுக்கிறதே! அந்த அளவுக்கு நன்றி.
ஐரோப்பியனாகவும் அமெரிக்கர்களாகவும் மாறிப்போன உங்களுக்கு இனியென்ன இனயுணர்வு இங்குள்ள அரசியல்நிலமைக்காக போராடுங்கள்.அதற்கு தமிழன் என்கிற உணர்வு தேவையே இல்லை.அதற்கு வர்க்க உணர்வு அவசியமானது. அது எதுவென்று தெரியுமே?.
உங்களின் அகராதியில வர்க்க உணர்வு என்றால் என்ன எண்டு எழுதியிருக்கு? அதையும் ஒருக்கா இங்க விளங்கப்ப்டுத்துங்கோவன்!
அழகலிங்கத்திட்டைக் கேள்வி கேட்டால், chandran.raja முகமூடி ஏன் மறுமொழி சொல்லுது?
வன்னியன் முகமூடி எல்லாமே ஒரே ஆசாமி தானா? சொறித்தனமான கேள்விகள் இல்லாமல் வாசகர்களுக்கு பயன் படுவது போன்ற கேள்விகளை முன் வையுங்கள். அதுவே பொறுப்புள்ள வாசகன் ஆற்றும் காரியம.
உங்கள் நேரத்தையும் வீணாகி மற்றவர்கள் நேரத்தையும் பாழ்ழடிக்கிறீர்கள்?.
ஜயா ,சந்திரனுக்கு ராசாவே..தென்னை மரத்துக்கு தேள் கொட்டினால், பனை மரத்துக்கு ஏன் வலிக்கும் என்ற ரகசியத்தை இப்போது புரிந்துவிட்டேன்.முதலில் உப்புசப்பில்லாத உமது தமிழ்மக்களுக்கான அறிவுரையைநீர் முதலில் நிறுத்தும். முதலில் நீர் தெளிந்த பிறகு மக்களுக்கு அறிவுரை சொல்லலாமே.எல்லாரும் முதலாளி என்றால் தொழிலாளி யாரோ… கிராமசங்கத்துக்கே தலைவர் ஆகத் தகுதி இல்லாத உங்களைப்போன்றவர்கள் எல்லாம், ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் தலைவர் ஆக வேண்டும் என்று வெளிக்கிட்டதின் விளைவே இன்று எமது போராட்டம் இந்த அழிவுநிலைக்கு வந்திருக்கிறது. தயவு செய்து உமக்கும் எனக்கும் இல்லாட்டியும் ,தமிழ் இனம் என்ற பொதுஇலக்குக்காவது, குறைந்தபட்சம் வீட்டில் இருந்தாவது விடுதலைக்கு உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஜயா.”நாடு எனக்கு என்ன செய்தது என்று கேக்காதே,நாட்டுக்கு நான் என்ன செய்தேன் என்று நீ உன்னையே கேட்டுப் பார்”
தானே மூக்கால் வடித்துக் கொண்டு “நீ தான் மூக்குசளி பாப்பா” என்பது போல் இல்லையா? உங்களுக்கு ஒரு அரசியல் கருத்தென்று
ஒன்றும் உண்டோ..? சொல்லுங்கள் பாப்பாக்களே..!.
கொஞ்சம் முதல் தான் ஒரு முகமூடி என்றதை மறந்து ஆராரருக்கோ முகமூடிப் பட்டம் வழங்கப் போன பொய்ப்பேர்ப் பாப்பா இப்ப தனக்கு “மூக்குச் சளிப் பாப்பா” என்றுமல்லவா பேர் சூடிக் கொண்டுள்ளது.
இந்த லட்சணத்தில் கனதியாகப் பின்னூட்டமிடவும் ஒரு கட்டளை.
எல்லாம் தெரிந்த மாதிரி வேடம்போடுகிற முட்டாள்களுக்கு அவர்களுக்கு விளங்குகிற மறுமொழி தானே எழுதலாம்.
அழாதே பாப்பா அழாதே
அம்மா வருவா ஓடோடி வருவா
உடைஞ்ச உந்தன்
மூக்கைத் துடைப்பா
அழாதே பாப்பா அழாதே.
“வன்னியன் முகமூடி எல்லாமே ஒரே ஆசாமி தானா?” –chandran.raja Posted on 11/26/2010 at 10:50 pm
இது சொறித்தனமான கேள்வி இல்லையா?
கேள்வியின் படி, வன்னியனும் chandran.raja என்ற முகமூடியாரும் ஒரே ஆளா?
எல்லாமே புதிராயிருக்கிறதே!
ச்பாச் மிக அருமையான் கர்ட்பனை, ரும் போட்டு யோசிப்பிங்கலொ
சரணடைதல் அவமானதல்ல அவ்வாறூ சிந்திப்போன் மனித ஈரம் இல்லாதவர்கள் ஆனால் அவர்கள கொன்றோர் விலங்கு இனத்தைச் சேர்ந்தோர்.புலிகளது குழந்தைகள் கொல்லப்பட்டதை அழகுலிங்கம் ரசிக்கலாம் ஆனால் மனித இனம் ரசிக்காது.சரணடைந்தவர்கள கொல்வது சிங்கள நாகரீகமா?இந்த அழகுலிங்கத்தின் நோக்கம் நம் மீது ஆணீ அடிப்பது அதை ரசிப்பது நமது நோக்கம் அதுவல்ல நாம் இங்கிலாந்து மண்ணீன் மனித ஈரம் உணர்ந்தோர் அந்தப் பாரம்பரியத்தில் நம்மை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளோம்.தெருச் சண்டியர் போல தெருவில் நின்றூ சண்டைக்கு இழுப்பது இந்த மண்ணீல் தண்டனைக்குரியது.
யார் யாரோ எங்கிருந்தோ இணையத்தளங்களை ஆரம்பிக்கிறார்கள் யாருக்கு சேவை செய்வதற்கு இவையெல்லாம் என்பது அந்த ஆண்டவனிற்கே வெளிச்சம் அதில் பலா் தாம் யாவும் அறிந்தவா்கள் போன்று தம் திறைமைகளை,வாசித்த புத்தகங்களிருந்தும் பாதி கற்பனையாகவும் எழுதி நானா அல்லது நீயா படுசுட்டி என்று வெளிப்படுத்த துடிக்கின்றார்கள்,நிச்சயமாக இவைகளை படிப்பவா்கள் விரைவில் குழம்பித்தான் போவார்கள்.
ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது //பணத்தின் முன்னால் கொள்கைகள்,கலாச்சாரங்கள்,கற்பு,அன்பு,நம்பிக்கை,நட்பு இவையாவுமே அடிபட்டுப்போய்விடும்//. வருங்காலங்களில் எதையும் கண்மூடித்தனமாக நம்பி ஏமாறாமல் இருப்பவனே இந்தப்பூமியில் நிலைக்கக்கூடும்.
தமிழ் மாறன் – “இந்த அழகுலிங்கத்தின் நோக்கம் நம் மீது ஆணீ அடிப்பது அதை ரசிப்பது, நமது நோக்கம் அதுவல்ல.”
குமார் – “யார் யாரோ எங்கிருந்தோ இணையத்தளங்களை ஆரம்பிக்கிறார்கள் யாருக்கு சேவை செய்வதற்கு இவையெல்லாம் என்பது அந்த ஆண்டவனிற்கே வெளிச்சம்.” “வருங்காலங்களில் எதையும் கண்மூடித்தனமாக நம்பி ஏமாறாமல் இருப்பவனே இந்தப்பூமியில் நிலைக்கக்கூடும்.”
உண்மை! உண்மை!
வம்புலிங்கம், டி.பி.எஸ்.ஜெஜராஜுக்கு பொழிப்புரை எழுதுகிறார். நீலன் திருச்செல்வம் கருவா தோட்டத்து மேட்டுகுடி இவர்கள் தமது மேட்டுக்குடி எஜமானர்களுடன் சேர்ந்து செய்யும் பொழுது போக்குகளில் ஓன்று கீ மாத்துதல் என்பது. அது என்ன தெரியுமா? அட நீலனின் நண்பர் ஜெஜராச் இதனை அறியாதவரா? .
நாடு கடந்த அரசு முன்னால் உள்ள முதல் வழக்கு!
விடுதலையை விரும்பியவர்களிற்கெல்லாம் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு மேலாக எப்போதுமே மனதில் இந்த விடுதலை சார்ந்த விடயங்களே ஓடிக்கொண்டிருக்கும்.
நாங்கள் ஒரு போராட்டத்தை ஆத்மார்த்தமாக யாசித்ததாலே என்னவோ அதையொத்த கோபம் நியாயங்கள் தவறுமிடமெல்லாம் ஏற்படும்.
அப்படித்தான் நாங்கள் ஜனநாயக வழியைத் தேர்ந்தெடுத்த போதும். 100 பேர் உள்ள சபையில் 51 பேர் ஒரு விடயத்தை ஆதரித்தால் அதுவே பெரும்பாண்மை என்பதே ஜனநாயக விழுமியம்.
அந்த 100 பேரில் 49 பேரின் கருத்து மறுதலிக்கப்படுகிறது என்று யாராவது கூப்பாடு போட்டால் அதை ஏறெடுத்துப் பார்க்க வேண்டிய தேவை ஜனநாயகத்திற்கு இல்லை. அந்த நூறு வாக்குகளில் 50ல் இருந்து ஒரு வாக்குக் கூடினாலும் அதுவே பெரும்பாண்மை.
எனவே இந்த ஜனநாயகப் பண்புகளை ஏற்கமுடியாதபடி உள்ளவர்களிற்கே இப்போதும் 98.9 வீத விழுக்காடு ஆதரித்தால் தான் அது ஜனநாயகம் என்ற புதியதொரு போர்வை தேவைப்படுகிறது.
இப்போது இதைவிடுவோம். நான் சொல்ல வருகிற விடயம் நெஞ்சுக்கு நீதி தேடி உங்களின் முன் சமர்ப்பிக்கப்படுகிறது.
போராட்டம் எப்படித் தோற்றது, ஏன் தோற்றது என்பனவற்று அப்பால் இந்தப் போராட்டத்தின் உளவுகளே அதன் அந்திமத்திற்கு வழிவகுத்தது என்பதை செய்த ஒருவரே சொன்னால் அதை ஏற்பதா இல்லையா என்பதையே உங்கள் முன் கேள்வியாக வைக்கிறேன்.
தலைமைப்பீடத்தின் அழைப்பையேற்று 2008ம் ஆண்டு மலேசியாவிற்குச் சென்று கடமையாற்றத் தொடங்கிய கே.பி.யை எதற்காக அவர் தலைமையை ஏற்பதாக அறிவித்த மூன்றாம் நாள் கைது செய்ய எது உந்தியது என்பதற்கான விடைக்காக உங்களை நாடுகிறேன்.
கே.பி. மலேசியாவிற்கு சென்றவுடன் அவருக்கு வெளியுலகிற்கான தொடர்பிற்கான தொலைபேசியொன்று விடுதலைப் புலிகளின் மலேசியப் பொறுப்பாளரான மலேசியா ராஜனால் வழங்கப்படுகிறது. அது கணணியில் இணைத்து விட்டுக் கதைக்கும் தொலைபேசி.
அந்தத் தொலைபேசியே கே.பி வன்னி மற்றும் இதர நாடுகளிற்கான அழைப்பை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும். கைத்தொலைபேசி “அவசர அழைப்பிற்கு” மாத்திரம்
அந்தத் தொலைபேசியில் தான் கே.பி. நடேசன் ஊடாக தலைவரிற்கான தகவல்களைப் பரிமாறினார். மேற்குலகின் நிலவரங்களைத் தெரிவித்தார். இந்தியாவின், தமிழகத்தின் நிலைமையைத் தெளிவுபடுத்தினார்.
போர் நிறுத்தத்திற்கு இந்திய அரசு முயற்சி செய்கிறது என்ற கே.பி.யின் செய்தியை நடேசன் தலைவரிடம் கொண்டு செல்ல முன்பே கஸ்ரோ நெடுமாறனினதும், வை.கோவினதும் போர் நிறுத்தம் வேண்டாம் என்ற செய்தியைத் தலைவருக்கு தெரிவித்தார்.
புலிக்கொடியை மாத்திரம் முன்னிலைப் படுத்த வேண்டாம். மக்களின் அவலங்களை மாத்திரம் இப்போது முன்னெடுப்பொம் என்று நடேசனினூடக கே.பி. தெரிவித்த அடுத்த நிமிடமே, அந்தத் தகவல் தலைவருக்குத் தெரியப்படுத்த முன்னே, சகல நாடுகளிற்கும் கஸ்ரோ உத்தரவிடுகிறார்… புலிக்கொடி தான் முக்கியம். அதனை முன்னிலைப்படுத்திப் போராடுங்கள்.
காயப்பட்ட்டவர்களையும், ஏனைய இயலாத பொதுமக்களையும் விடுவிப்பதாக அறிவித்தால் அவர்களை ஏற்றிச் செல்ல அமெரிக்கக் கப்பல் வரத் தயார் என்ற அறிவிப்பை நடேசனிடம் சொல்ல, அதற்கு பதிலடியாக வணங்காமண் என்ற முடிச்சுப் போடப்பட்டது.
அதிலும் கேவலமாக தலைவரின் குடும்பத்தை காப்பாற்ற மகன் சாள்ஸ் அன்ரணி விடுத்த வேண்டுகோளையும் நெடியவன் கஸ்ரோ சொன்னால் காசு தரலாம் என்று நிராகரிக்கிறார்.
இவ்வாறு கே.பி. சமர்ப்பித்த சகல திட்டங்களும் தலைவரிற்கே தெரியாமால் முறியடிகப்பட்டதற்கு காரணம் என்ன என்பதை கே.பி. கைது செய்யப்பட்ட அடுத்த தினம் கே.பி.யின் முகாமில் இருந்த மிகவும் முக்கியமான இருவருக்கு மலேசியா ராஜன் ஒப்புதல் வாக்குமூலமாகத் தெரிவிக்கிறார்.
“இவர் இவ்வளவு நாளும் கதைச்சதை நாங்கள் ஒட்டுக் கேட்டு கொண்டுதானே இருந்தனாங்கள். நாங்கள் கொடுத்த தொலைபேசி. அதற்கு இரண்டு இணைப்பு. இவர் என்ன செய்ய வெளிக்கிட்டாரோ அதற்கு மறுத்தான் கொடுத்துக் கொண்டு தானே இவ்வளவு நாளும் இருந்தனாங்கள்” ஒருவரிடமல்ல… பரந்தன் ராஜன் இரண்டு முக்கியமான நபர்களிடம் இதைத் தெரிவித்தார்.
இந்த இரண்டு பேரும் இப்போதும் மேற்குலகில் தான் இருக்கிறார்கள். சாட்சியமளிக்கவும் தயாராக இருக்கிறார்கள். பாருங்கள். ஒரு சிறுபிள்ளைத் தனமான நெடியவன் தரப்பின் போட்டி போராட்டத்தை எவ்வாறு அழித்திருக்கிறதென்று?
இப்போது சிந்தியுங்கள்….
கே.பி. எனப்படுபவர் தலைமையை ஏற்பதாக அறிவித்த அன்றே நெடியோன் தரப்பைச் சார்ந்த அனைவரும் ராஜினாமாச் செய்வதாக அறிவிக்கிறார்கள். இராஜீனாமா கே.பி.யால் ஏற்கப்படுகிறது.
இவர் இராஜீனாமாச் செய்து எண்ணி மூன்றாம் நாள் கே.பி. மலேசியாவில் வைத்து ஒரு தொலைபேசி அழைப்பால் கைது செய்யப்படுகிறார். மீண்டும் நெடியோன் தரப்பு இராஜங்கத்தைக் கைப்பற்றுகிறது.
டி.பி.எஸ். ஜேயராஜ் என்ற மூத்த பத்திரிகையாளனின் தகவலின் படி நெடியோன் தரப்பின் கட்டுப்பாட்டிலுள்ள கனடா சி.எம்.ஆர் என்ற ஊடகத்தின் ராகவன் என்பவர் நீண்ட நேரம் ஒரு முக்கியமான விடயத்தைக் கதைத்துக் கொண்டிருந்தே போதே மலேசியாப் பொலிசார் புடைசூழ்ந்து கைது செய்துள்ளனர்.
தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது என்பதை மலேசியா ராஜன் தம்பட்டமாகச் சொல்கிறார்…
முதலாலி துவம் என்டும், பாசிசம் என்டும், தமிழர் ஒற்றுமய குலைகும் ஆக்கம் இது. மக்கள் முன் பொல் இல்லை என்பத இவர் புரிந்துகொள்ளவன்டும்
Chandran-Raja எங்கே?
ஆளையே காணோம்!
ராஜபக்சவை இப்படி நிந்திப்பதைக் கேள்விப்பட்டால் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டாரா?
மிகுதியை பார்த்துக் கொண்டிருகிறேன் தோழர். ஒரேயடியாய் தீர்ப்பு வழங்கலாம் என்று
இருக்கிறேன்.அது யாருடைய சான்றிதழுக்காகவும் அல்ல.அதை விட இன்னுமொரு
பெரிய விஷயம் என்னவென்றால் வ.அழகலிங்கம் நீண்டகால எனது ஆசாணும் கூட.
எதையும் நான் பவுத்திரமாகத் தான் அணுக வேண்டும்.
உங்கள் தாபத்திற்கு நன்றி.
நீங்கள் தான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவராயிற்றே. உங்களுக்கேன் சான்றிதழ்?
ஆர்ப்பாட்டம் எப்போது?
வண்ணத்தைக் கண்டவுடன் எண்ணத்தைக் கைவிட்ட ! வாழிய தமிழீழம். ஆண்டுகள் 30 த் தாண்டியும் இன்னும் உங்களுக்கு ஞானம் பிறக்காதது கண்டு வருத்தம். உங்கள் பாசையில் சொல்வதானால் தமிழனைக் கடவுள்தான் காப்பற்ற வேண்டும்.
முதலாளித்துவம் மற்றும் பாசிசம் போன்ற சொற்களைத்தளமாக்கிக்கொண்டு தமிழரை ஏமாற்றவது அவ்வளவு இலகுவல்ல ஏனென்றால் நீங்களே குட்டிப்பூசுவா என்பது உங்களுக்குக்கு மட்டும் தெரிந்த உண்மையில்லையே. !! ?? ….;
கருத்தோடு மோதுவதே! அரசியல் இது கல்லெறிதல்-சேறுறடித்தல்.ஆகக் குறைந்து
இதையாவது புரிந்துகொள்ளுங்கள் மேரு!.நீங்களும் அரசியலுக்கு உட்பட்ட சக்தியே.
லண்டனில் இளயோர் பேசுகிற ஆங்கிலம் ஒரு மாதிரியாக இருக்கிறதாம் அது போல விடுதலை என வெளீக்கிட்ட நமது தமிழும் மாறீப் போயிற்றூ இதைப் நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் பகிடி பண்ணக் கூடாது.ஆங்கிலத்திலும்தான் இசங்கள் பேசுகிறார்கள் நாம் பேசினால் அது தவறாகுமா?
மேரு
கடும் எச்சரிக்கை!
சோஷலிசத்தின் பேரால் கல்லெறிதல் சேறடித்தல் என்பன சந்திரன்-ராஜா(பக்ச)வின் பிறப்புரிமை.
தயவு செய்து அதில் பங்கு கோராதீர்கள்.
சோஷசலிசத்தை உச்சரிக்கிற முகமூடிக்கு தொழில்சங்கங்களும்
விவசாயசங்கங்களும் முன்நிபந்தனையாக வேண்டுமென்கிற சிறு
விஷயம் கூடத் தெரியாமல் இருப்பது ஏனோ? இருபதுவருடத்திற்கு மேலாக இருந்த “புலிசங்சங்கங்களை” தொழில்
சங்கங்கள் ஆக்கித்தந்தது யாரோ? எவனோ?? சமத்துவத்தை- சோசலிஸத்தை கதைப்பதற்கு இல்லை உச்சரிப்பதற்கு முகமூடிக்கு ஏதாவது தகமையிருக்குமா? தகமையிருந்தால் துணிகரமாக தொடர்ந்து உயிரோடமுள்ள கருத்தாக வாசகர்களுக்கு முன்வையுங்கள் “கறிகடை” இரைச்சல் போடாதீர்கள்.
உங்கள் கருத்துக்கள் செத்த பிணத்தையும் எழுப்பதே! எப்படி மற்றவர்களிடம் கேட்கிறீர்கள் உயிரோட்டமுள்ள கருத்துக்களை?நீங்கள் போடும் இரைச்சல் கசாப்புக் கடைக்காரன் இறைச்சிக்கு களுத்தை வெட்டும்போது கத்தும் ஆட்டுக்கடா போல் இருக்கிறது.
சந்திரன்-ராசா பக்ச மாத்தயாவுக்குக் தான் போட்டிருக்கிற முகமூடி விளங்கேல்லை.
இப்ப மனிசர் கதைக்க லயிசென்சுமெல்லோ கேக்குது.
சோசலிசம் எண்டு வாயிலை வந்ததை உளம்ப மட்டும் மாத்தயாவுக்கு லயிசன்ஸ் தேவையில்லைப் போலை.
இத்தளத்தில் அடக்கியொடுக்கப் மக்களுக்களுக்கு குரல் கொடுப்பதில் இந்தியாவில் முண்ணனியில் நிற்பவராக புக்கார் பரிசு பெற்ற அருந்ததி ராவ் முண்ணனியில் நிற்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்க படவேண்டும். அதையே இனியொரு செய்கிறது என்பதில் மகிழ்சியும் கூட.
மாக்ஸியத்தை கற்பதில் பொறுமையில்லாதவர்கள் குறைகாண்பவர்கள் அவர்சொல்லும்
தத்துவத்தையாவது ஏற்றுக் கொள்ள கடமைப் பட்டவர்கள். தமிழ்யினத்தில் இருந்து பெருக்கெடுத்து வந்த சுயநலஎண்ணங்கள் சுயநல எண்ணம் இல்லாதவர்களையும் பலிகொண்டு இரத்தவெறி அடங்காமல் இன்னும் இன்னும்மென்று ஓலமிடுகிறது. அதுவே இங்குவரும் பின்னோட்டங்கள் அடையாளப் படுத்துகின்றன.
குறைந்தது அருந்ததிராவ்வை கற்றுதேர்ந்திருந்தாலும் ஏகாதிபத்தியமும் முதாலித்துவமே உழைப்பாளி மக்களுக்கு பகைமையானது மட்டுமல்லாமல் பாட்டாளிகள் உழைப்பாளிமக்கள் போர் தொடுக்காமல் தமது வாழ்வை பேணமுடியாது என்பதை கண்டுகொள்வார்கள். நடப்பதோ தமிழினத்தில் வந்த பழைய
பிற்போக்கு தனமான சுயநலக்கூட்டங்களின் கருத்துக்களே! இங்கு எக்காளமிட்டு வெறித்தனத்தோடு குரைத்துக் கொண்டிருக்கும் முகமூடியான எக்ஸ்சோ வன்னியனோ கூரண்டலை நிறுத்தப்போகிறார் இலங்கையில் சோஸலிசத்தை கொண்டுவரப் போகிறார் மகிந்தாராஜாபக்சா என்று எங்கேயாவது எழுதியிருக்கிறேனா?
மகிந்தாராஜா பக்சா இலங்கை தழுவியரீதியில் தொழிலாளர் அமைப்புகளை கட்டி வளர்கவும் சிங்கள தமிழ் முஸ்லீம்களின் தொழிலாளர் உறுவுகளை பேணிக்கொண்டு ஏகாதிபத்தியம் முதாலித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒருநெடும் பாதை துப்பரவாக்கியிக்கிறார்.அதுவே அவரின் முக்கியத்துவம். சிங்களஇனவெறியையும் தமிழ்வெறியர்களையும் தனது நடவடிக்கைகள் மூலம் முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார். இதை புரிந்து கொள்ள முடியாதவர்ககளே மாறி மாறி தம்முகத்தில் சேறை அப்பகிக்கொள்ளுகிறார்கள்.மகிழ்சியும் அடைகிறார்கள். புலிகளால் விடிவுவரும் சோசலிஸம் சமதர்மம் மலரும் தமிழருக்கு வாழ்வுகிடைக்கும் என்று தமிழ் ஏமாளிகள் போல் அழகலிங்கம் கருதியதில்லை இந்த சந்திரன்.ராஜாவும் கருதியதில்லை. ஏகாதியபத்தியதிற்கான முதாலித்துவதிற்கெதிராக ஒரு தத்துவார்தரீதினாலான போரை நடத்துவதால் மட்டுமே
இது சாத்தியமாகும் இதுவே தோழர் அழகலிங்கத்தின் எண்ணமும் எனது விருப்பமும் கூட. இதற்காகவே வாழ்நாள் முழுவதும் மூச்சு விட்டோம். சரியும் பிழையும் நிறைவே இருக்கிறது. அதன் அணுவைக்கூட கண்டு பிடிப்பதற்கு உங்களுக்கு தகுதியிருக்கிறா? என்பதை உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
“மகிந்த இலங்கை தழுவியரீதியில் தொழிலாளர் அமைப்புககள் உருவாக்கி வளர்க்கவும், இனஒற்றுமையை பேணிக்கொண்டு ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்துக்கும் எதிரான போராட்டத்திற்கு நெடும்பாதையை துப்பரவாக்கியிருக்கின்றார். இனவெறியர்களை முடிவுக்குகொண்டுவந்திருக்கின்றார்.” பிதற்றலுக்கு அழவேயில்லையா? கூடவே உலகத்தொழிலாளரையும், மாக்சிசத்தையும் எண்ணி மூச்சு விட்டோம், மூக்குமுட்ட குடித்தோம், சல்லாரி அடித்தோம், சாமி ஆடினோம் என்ற புலம்பல் வேறு. அப்போ விவாதத்திற்கு ஈராக்கிலும், ஆப்கானிலும் இவ்வாறான பாதையைத்தான் ஏகாதிபத்தியங்கள் போட்டு கொடுத்திருக்கின்றனவா? மனிதப்படுகொலைக்கு புத்திசாலித்தனமான வியாக்கியானம். நாம் முதலில் புரட்சியாளர்களாக, மாக்சிஸ்டுகளாக கருதிக்கொள்வதற்கு முன் மனிதர்களாக உணரவேண்டும். கட்டுரையாளரின் எழுத்துக்களில் வணிகத்தன்மை தெரிகின்றது. பரபரப்பூட்டி வாசகர்வட்டத்தை உருவாக்கி அதற்கு தீனி போடும் முயற்சி வெள்ளிடைமலை.
மகிந்த கோவிக்கப்போகிறார், அவரின் சிந்தனையை விட உங்கள் கற்பனை வளம் பெரிதாக இருக்கிறதென்று. அவருக்கு எங்க நேரமிருக்கு, பாட்டாளிகள், உழைப்பாளிமக்கள், தொழிலாளர், ஏழைகள், வேலையற்றோர், வறியவர்கள் இன்னும் பலபிரிவினருக்காக பாதை அமைக்க? இதைக்தான் சொல்கிறது, புண்ணாக்குக் கதை என்று.
யரையா அது “அருந்ததி ராவ்”?
பேரைக் கூடச் சரியாகத் அக்கறையாகத் தெரிந்து வைக்கக் கூடாதா?
உங்களை முட்டாளாக்க யாரும் முயலவில்லை.
அதை நீங்களே வெகு சிறப்பாகச் செய்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.