நெடுமாறன் அறிக்கை
“ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதனைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது” என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.
ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்த ராஜபக்சவுக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டும் என தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார்.அதாவது உதைக்கிற காலுக்கு முத்தமிட வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.
கன்னடர்களுக்கு கோபமூட்டாமல் காவிரிப் பிரச்னையிலும், மலையாளிகளுக்கு கோபமூட்டாமல் முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நீக்குப் போக்குடன் கருணாநிதி நடந்து கொண்டதினால்தான் அப்பிரச்சினைகளில் தமிழகம் மிகப்பெரிய இழப்புகளுக்கு ஆளாக நேரிட்டது.
ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காங்கிரஸ் கட்சிக்கு கோபமூட்டி அதன் விளைவாக தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
அது மட்டுமல்ல, “தமிழீழத் தனிநாடு இனி சாத்தியமானது அல்ல.சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு வேண்டி சிங்களவரிடம் மண்டியிட வேண்டும்” என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
“கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும்.திராவிட நாடு கொள்கையை தி.மு..க. கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்தபோது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது.எனவே முதலில் கட்சிதான் வேண்டும் என்று முடிவு எடுத்ததாக”வும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.
பிரிவினை கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப்படவில்லை.பிரிவினை கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது.தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழிதோண்டி புதைக்கப்பட்டது.வரலாற்றுப் பூர்வமான இந்த உண்மையைத் திரித்து பேசுகிறார் கருணாநிதி.30 ஆண்டு காலம் அறவழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள்.எதுவுமே கிடைக்காத காலகட்டத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடித்தது.இந்தப் போராட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள்.15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தார்கள்.
தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை.இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உலகத்தின் பல நாடுகள் ராஜபக்ச அரசின் மனித உரிமை மீறல்களை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் அவருக்கு வெண்சாமரம் வீசும் வேளையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானதாகும்.இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ஒரு தவறானக் கண்ணோட்டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றி பெறப் போவதில்ல. ஈழத் தமிழரின் மன உறுதி ஒரு போதும் தளரப் போவதில்லை.அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் போரட்டங்களும் ஓயப் போவதில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
கதைதான் இராமாயணம். பெரியார் சொன்னது போல அது ஆரியரின் சூத்திரம். விபீசனர்கள் பட்டாபிசேகம் செய்யப்படுவார்கள். ஈழத்தில் சரவனப்பெருமாள்,கருணா,இன்னும் தமிழ்நாட்டிலும்
கருணா,கோழைமணிகளும் 2009லும் உள்ளார்கள்.ஒருநன்பர் சொன்னார் கதையில் விபீசனன் சாகா வரம் பெற்றவன் என்று சொன்னது தமிழினத்துரோகிகள் கருணா வடிவில் உளாவுகிறார்கள் என்று.
ஆனால் ஒவ்வொரு எனமும் தன் அடையாளத்தைக் காத்துக்கொள்ள அய். நாவே உறுதி தந்துள்ளது. தன் நாட்டின் ஒரு மாநில்ம் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டப்பின்பும் அந்த எனத்தின் கருத்துக்கள் செவிமடுக்காத இந்திய அரசு தமிழரின் அரசா என இப்போதாவது தோழர் நெடுமாறன் போன்றோர்
ஆய்ந்து முடிவு செய்ய வெண்டும்.
இந்த கருணாநிதிதான் ஈழத்தமிழனை அழிக்க உதவிய துரோகி எனறும மானமுள்ள் தமிழரகள் மன்னிக்கமாட்டாகள் சில திரைவுலக நடிகர்கள் வால் பிடிக்கலாம்
கருணாநிதியின் தொடக்க கால சொல் உதிர்ப்புகள் கண்டால் வானம் எகிறும் அளவுக்கு இருக்கும். தமிழ், தமிழர்க்காக வாழ்வேன் என்றும், என்னை கடலில் தூக்கி வீசினாலும், தமிழர்க்கு மிதக்கும் கட்டு மரமாக நான் இருப்பேன் என்றும், அடைத்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றார்.
இன்றோ தலைகீழ் . எல்லாம் தன்னலம், தனது குடும்ப நலன்களையும், தன்னால் வளர்த்த சன் தொலைக்காட்சியின் உலகளாவிய பண பலத்தையும் கட்டி காக்கும் பொறுப்பு அவருக்கு தரப்பட்டுள்ளது. தனது குடும்பத்தார்களின் பிரச்சனைகளை தன் வாழ்நாளில் யாருக்கும் எந்த விட மனக்குறைகள் இல்லாமல் தீர்ந்து விட்டு செல்வதைத்தான் தற்பொழுது நோக்கமாக கொண்டுள்ளார். எல்லாம் சரி, எதற்கு உமக்கு தமிழ் இன தலைவன் என ஒரு பட்டம், குடும்பத்தின் குலவிளக்கு என வைத்து கொள்ளுங்கள். பணம், பதவிக்காக பல்லிளித்து உம் பின்னால் வரும் கரை (வே) வெட்டிகளுக்கு நீர் தலைவன்தான்; எம் போன்ற மெய் தமிழனுக்கு நீர் ஒரு பேடி, துரோகி.
தமிழக தமிழனே ! உலக தமிழனுக்கு நிழலாக வேண்டிய நீயே அனல் கொதிக்கும் தழலாக மாறி விட்டாய்!
புறம்போக்குகளை களைய புயலென புறபடு! காலம் செல்லவில்லை, நாம் ஒவ்வொரு செயலும் வரபோகும் வசந்தத்தை நோக்கி செல்ல வேண்டும்.
If Rajapakse really ready to change the basic constitution by doing abolish the clause” only SriLankan Budist Singhalese can become Sri Lanka’s top executive”,by change any one of the Sri Lankan Citizen who can become the Top CEO of the country?Wil he realiy to do this?then Sri Lanka’s Problem will be End forever?
கருநாநிதி இன் சுயரூபம் இதுவே. மக்கள் எல்லொருக்கும் தெரியும். தெரிந்தும் அவரே தேர்தலில் வெற்றி பெறுகிறார். இதுவே நம்முடைய தவறு. கடந்த தேர்தலில் நம் சகோததார் கண்நீர் உணர்வு எதுவும் முடிவகளை பாதிக்க வில்லை. வெட்க பட வேண்டியது நாம் தான். தேர்தலில் காசோ பொருள் வாங்கிய ஒவ்வொரு தமிழைன்யும் எந்த சமுதாய்மும் மதீக்காது
பார்ப்பன எதிர்ப்பு என்ற கொள்கையை முனை மழுங்கடிக்க 50 ஆண்டுகாலம்நாடகம் ஆடிய கருணாநிதியை புரிந்துகொள்ளாதது தமிழனின் தனிநபர் துதி எனும் மூடநம்பிக்கை. ஈழத்தில் ஒரு கருணா தமிழ்நாட்டில் ஒரு கருணாநிதி. ஈழத்தமிழர் துயரின் பின் பதவி எனும் சுகத்தை இருவருமே சப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஈழப்பிரச்சனையை காரணம் காட்டி இரண்டரைகால என் ஆட்சியை கவிழ்க்கப்பார்க்கிறார்கள் எனும்போதேநாம் கருணாநிதியை புரிந்திருக்க வேண்டும்.
ஈழத்தமிழர் விசயத்தில் சோனியாவையும் கருணானிதியையும் தோலுரித்துக் காட்டியதற்காக த.பெ.தி.க. வை ஒழித்துக் கட்ட இன்னும் நியாயத்திற்கு எதிராக பொய் வழக்கை கருணாநிதியின் துறை போட்டுக்கொண்டேயிருக்கிறது. இன்னும் நிறையப் பேரை பழிவாங்க காத்துக்கொண்டிருக்கிறது. துரோகிகளின் துரோகம் வெளிப்பட்டு அவர்கள் அவமானப்படும் போது கோபம் கொள்வார்கள். அந்த இடத்திலே கருணாநிதி இருக்கிறார்