இலங்கையின் 7ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது தெரிவினை பிரதமர் தி.மு. ஜயரட்ன முன்மொழிந்தார். எதிர்க்கட்சியின் உப தலைவர் கருஜயசூரிய வழிமொழிந்தார்.
இன்று காலை 8.00 மணிக்கு நாடாளுமன்ற முதலாவது அமர்வின் கூட்டத்தொடர் ஆரம்பமான போதே மேற்படி தெரிவு இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, பிரதி சபாநாயகராக பிரியங்கர ஜயரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதே வேளை அடுத்த பாராளுமன்றத் தெரிவின் போது பசில் ராஜபக்ச பிரதமராகலாம் என கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர்.
அமைச்சர்கள் விபரம்
1. பிரதமர் தி. மு. ஜெயரட்ன : பௌத்த, மத விவகாரங்களுக்கான அமைச்சர்
2. சுசில் பிரேமஜயந்த : எரிபொருள், கனியவள அமைச்சர்
3. ரட்ணசிறி விக்ரமநாயக்க : அரச உள் நாட்டலுவல்கள் அமைச்சர்
4. ஜீ.எல்.பீரிஸ் : வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
5. நிமல் சிறிபால டி சில்வா : பெருந்தெருக்கள், நீர்வள அமைச்சர்
6. திஸ்ஸ கரலியத்த : சிறுவர், மகளிர் விவகார அமைச்சர்
7. ராஜித சேனாரத்ன : கடற்றொழில் அமைச்சர்
8. மைத்திரிபால சிறிசேன : சுகாதர அமைச்சர்
9. தினேஷ் குணவர்த்தன : நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர்
10. டக்ளஸ் தேவானந்தா : பாரம்பரிய, சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்
11. டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன : பொது நிர்வாக அமைச்சர்
12. ரிஷாட் பதியுதீன் : கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு
13. பசில் ராஜபக்ஷ : பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
14. ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ : கூட்டுறவு, நுகர்வோர் விவகார அமைச்சர்
15. மில்ரோய் பெர்னாண்டோ : மீள் குடியேற்ற அமைச்சர்
16. குமார் வெல்கம : போக்குவரத்து அமைச்சர்
17. ஜனக பண்டார : காணி விவகார, காணி அபிவிருத்தி அமைச்சர்
18. டியூ. குணசேகர சிறைச்சாலை, புனர்வாழ்வு அமைச்சர்
19. பந்துல குணவர்த்தன : கல்வி அமைச்சர்
20. சம்பிக்க ரணவக்க : மின்சக்தி எரிபொருள் அமைச்சர்
21. விமல் வீரவன்ச : வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
22. மஹிந்த யாப்பா அபயவர்த்தன : விவசாய அமைச்சர்
23. டளஸ் அழகபெரும இளைஞர், வேலை வாய்ப்பு அமைச்சர்
24. சி.பி.ரத்நாயக்க : விளையாட்டு அமைச்சர்
25. சுமேதா டி ஜெயசேன : நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
26. அநுர பிரியதர்சன யாப்பா : சுற்றாடல்துறை, பாதுகாப்பு அமைச்சர்
27.அத்தாவுத செனவிரத்ன : நீதி அமைச்சர்
28.மஹிந்த சமரசிங்க : பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
29.ஜீவன் குமரதுங்க : தபால்துறை அமைச்சர்
30.பவித்ரா வன்னியாராச்சி : தேசிய மரபுரிமைகள், கலாசார அமைச்சர்
31.காமினி லொக்குகே : வேலைவாய்ப்பு, ஊக்குவிப்பு அமைச்சர்
32.பியசேன கமகே : சுதேச வைத்தியத்துறை அமைச்சர்
33. எஸ்.பி.நாவின்ன : தேசிய மொழி, சமூக நல்லிணக்க அமைச்சர்
34.பீலிக்ஸ் பெரேரா : சமூக சேவைகள் அமைச்சர்
35.ஏ.எச்.எம்.பௌசி : இடர் முகாமைத்துவ அமைச்சர்
36. ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் : பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
37. பி. ஜெயரட்ன :
பிரதி அமைச்சர்கள் விபரம்
1. சாலிந்த திசாநாயக்க
2. டிலான் பெரேரா
3. சுசந்த புஞ்சிநிலமே
4.லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன
5. சந்ரசிறி கஜதீர
6. ஜெகத் புஷ்பகுமார
7. டி.பி.ஏக்கநாயக்க
8. மஹிந்த அமரவீர
9. ரோஹித்த அபயகுணவர்தன
10. எஸ்.எம்.சந்திரசேன
11. குணரத்ன வீரகோன்
12. மேர்வின் சில்வா
13. பண்டு பண்டாரநாயக்க
14. ஜெயரட்ன ஹேரத்
15. தயாசிறி டி திசேரா
16. துமிந்த திஸாநாயக்க
17. ரஞ்சித் சியம்பலாபிட்டிய
18. லசந்த அழகியவண்ண
19. எம்.ஆர்.மித்ரபால
20. நிர்மல கொத்தலாவல
21. பிரேமலால் ஜெயசேகர
22. கீத்தாஞ்சன குணவர்த்தன
23. விநாயகமூர்த்தி முரளீதரன்
24. இந்திக பண்டாரநாயக்க
25. முத்து சிவலிங்கம்
26. சிறிபால கம்லத்
27. டபிள்யூ.பி.ஏக்கநாயக்க
28. சந்ரசிறி சூரியாராச்சி
29. நியோமால் பெரேரா
30. சரத் குணரத்ன
31. நந்தமித்ர ஏக்கநாயக்க
32. நிரூபமா ராஜபக்ஷ
33. நவீன் திஸாநாயக்க
34. சரத் குணவர்த்தன
35. ரெஜினோல்ட் குறே
36. விஜித் விஜேமுனி சொய்சா
37 எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
38. ரோகண திஸாநாயக்க
39. வீரகுமார திஸாநாயக்க
புதிய அமைச்சரவை நியமணத்தின் போது மலையக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அமைச்சுப் பதவி வழங்கப்படாமையினாலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஆறுமுகம் தொண்டமான் அமைச்சுப் பதவியைப் பெறவில்லையெனெ இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.
மலையக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அமைச்சுப் பதவியொன்றை ஆறுமுகம் தொண்டமானுக்கு மிக விரைவில் வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபஸ உறுதியளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று வழங்கப்பட்ட அமைச்சரவை நியமணத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கத்திற்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமண வைபவத்தில் ஆறுமுகம் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார்.
post war cabinet
1. mervin silva – media
2. only one Tamil cabinet minister – Duglus !!
3. 3 MPs from one family holding
Finance, Defence, Media(cabinet), Economic development, Ports ministries and Parliament speaker + presidency
Idi Amen is better
How can Idi Amin be better? He had no Tamil ministers!
Give MR a chance. Tamil MPs are queuing up to join.
The TNA too could get a post if the Indian patrons can persuade MR.