கொழும்பில் இலங்கை அரசின் சமூகவிரோதச் செயற்பாடுகளை விமர்சன அடிப்படையில் அணுகிவரும் லங்கா ஈ நீயூஸ் இணையத்தளத்தின் அலுவலகம் அரச குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தின் கதவை உடைத்து உள் நுளைந்த குழுவினர் அங்கிருந்த அனைத்து ஆவணங்கள், 3000 இற்கும் மேற்பட்ட நூல்கள் உட்பட அனைத்தையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.
இதே வேளை லங்கா ஈ நியூஸ் அலுவலகத்தின் முன்பாக நேற்று இருவர் நடமாடியதாகவும் அங்கு வேலை செய்வோர் குறித்து அருகிலுள்ளவர்களிடம் விசாரித்ததாகவும் இவ்விணையம் செய்தி வெளியிட்டுள்ளது. அதனுடைய ஆசிரியர் சந்துரவன் சேனாதீரவுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. மற்றும் சிலர் கொழும்பிலிருந்து இணையத்தை நடத்தி வந்தனர்.
கே.பி உட்பட முன்னை நாள் புலி உறுப்பினர்கள், டக்ளஸ் தேவனந்தா மற்றும் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த தமிழர்கள் ஆதரித்துவரும் மகிந்த ராஜபக்ச குடும்ப அரசின் ஆட்சியின் கீழ் இதுவரை 13 ஊடகவிலயாளர்கள் கொலைசெய்யப்படுள்ளனர். பல ஊடக அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
ஜானக பெரேரா மற்றும் பல அரசியல் கொலைகள் குறித்த தகவல்களையும் சாட்சிகளையும் வைத்திருந்த காரணத்தால் லசந்த விக்கிரமதுங்க அரசிற்கு எதிரான விமர்சனங்களை நேரடியாக முன்வைத்தவர். சரத் பொன்சேகா மற்றும் ராஜபக்ச சகோதரர்களால் இவர் கொல்லப்பட்டார்.
லசந்தவின் தொடர்புகள் பலவற்றை வைத்திருந்த காரணத்தால் லங்கா ஈ நியூஸ் ராஜபக்ச அரசின் நேரடியான கண்காணிப்பிற்குள் நீண்டகாலமாக உட்படுத்தப்பட்டிருந்தது.
ஆஹா என்னே கொலைவெறியன் மஹிந்தனின் சனநாயகம். வாய் கிழிய ஊடக சுதந்திரம் பற்றி பீற்றித் திரியும் அரசின் இந்தச் செயல் பயங்கரவாதமாக சர்வதேசத்திற்கு தெரியவில்லையா?
அறீவை அடகுக் கடையில் வைத்திருக்கும் ராஜபக்ஸ்வே,நீ செம்மறீ ஆடு உனக்கு மூள வேலை செய்யாது என்பது இதிலிருந்தே தெரிகிறது.அமெரிகா அள்ளீக் கொஞ்சிய மேற்கின் செல்லப் பிள்ளயே மக்கள் புரட்சியின் முன்னால் கையைப் பிசைகிறான் நீ எம்மாத்திரம்.இந்தியா எத்தனை நாளக்கு உனது மூத்திரத்தை தாங்கும்.யோசிச்சு இனியாவது திருந்தப் பார் இல்லை எனில் உன க்கு வேலிக் கதியால்தான் பேசும்.