Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ராஜபக்சேவும் மோடியும் கூட்டாளிதான் : திருச்சி, சென்னை ஆர்ப்பாட்ட படங்கள்

இனியொரு... by இனியொரு...
05/26/2014
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

1. திருச்சி
makaika-trichy-demo-05முதல் நாளே கழன்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி!
ஈழத் தமிழின அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சே மோடியின் அழைப்பு எதிர்பாராதது அல்ல ! வைகோ வகையறாக்கள் காட்டும் எதிர்ப்புதான் நாடகம்! பார்ப்பன பாசிசக் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம் !
தமிழின விரோத பா.ஜ.க-வை தமிழர்களின் காவலனாக சித்தரித்த வைகோ, நெடுமாறன் கும்பல் ஆர்.எஸ்.எஸ்-ன் அய்ந்தாம் படையே!
விஜயகாந்த், ராமதாசு, பாரிவேந்தர், உள்ளிட்ட பிழைப்புவாதிகள் தமிழ் மக்களின் விரோதிகளே!
என்ற தலைப்பில் தமிழகம் முழுக்க இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் இன்று, (26.05.2014) ஆர்ப்பாட்டமும், இராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பும் நடத்தப்பட்டது. இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள மோடி, தனது முடி சூட்டு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் தலைவர் என்ற வகையில் தமிழினப் படுகொலையாளன் ராஜபக்சேவை அழைத்ததன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ் மக்களுக்குத் தான் அளித்த நாடகத்தை கலைத்து விட்டு உண்மை முகத்தை காட்டியுள்ளார். வைகோ, நெடுமாறன், இராமதாசு போன்றோர் தேர்தலின் போது இவருக்கு மாட்டி விட்ட முகமூடி பதவியேற்புக்கு முன்பே கிழிந்து தொங்குகிறது.

பா.ஜ.க-வைப் பற்றி ஒன்றுமே தெரியாதவரைப் போல வைகோ உள்ளிட்டோர் இன்று நாடகமாடுகின்றனர். ஆனால், 2000-ம் ஆண்டில் புலிகள் யாழ்குடா நாட்டில் சிங்கள இராணுவத்தினர் 40,000 பேரை சிறை பிடித்து சிங்கள அரசு பணிய நிர்ப்பந்திக்கப் பட்டிருந்த நிலையில்,… கடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு சிங்களர்கள் இராணுவ வீரர்களை மீட்க வேண்டும் என்ற நிலைக்கு வந்த நிலையில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் புலிகளை மிரட்டி சிங்கள இராணுவ வீரர்களை விடுவித்தார் என்பதை அறியாதவரல்ல. அப்போதும் வாஜ்பாய் அரசுக்கு வக்காலத்து வாங்கியவர்தான் இந்த வைகோ.

வைகோ, நெடுமாறன்ஆகியோர் தாங்கள் என்னதான் பெரியாரின் பேரன் என்றும் தமிழினத்தின் காவலன் என்றும் சவடால் அடித்தாலும் இவர்கள் ஆர்.எஸ், எஸ்-ன் அய்ந்தாம் படையினரே என்பது அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. இவர்களை அம்பலப்படுத்தியும் தமிழ் மக்கள் இந்த விபீடணர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையிலும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாய்லர் பிளாண்ட ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலர் தோழர் சுந்தரராசு தலைமை வகித்தார். ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் தர்மராசு சிறப்புரையாற்றினார்.

காவல் துறை அனுமதியுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் சிங்கள இன வெறியன் இராஜபக்சேவின் கொடும்பாவியைக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி தோழர்கள் கைதாயினர். இந்த போராட்டத்திற்கு சட்டக்கல்லூரி மாணவரும் பு.மா.இ.மு மாவட்ட செயலருமான தோழர் சேக் தலைமை தாங்கினார்.

இராஜபக்சே கொடும்பாவியை எரித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியே வந்த ஊனமுற்ற நண்பர் ஒருவர் தானும் தன்னார்வத்துடன் இணைந்து முழக்கமிட்டார். போராட்டம் முடிந்து தோழர்களைக் கைது செய்யும் போது நீங்கள் ம.க.இ.க-வா, கைது செய்யப் போகிறோம். என்ற போது, “ நான் ம.க.இ.க இல்லை. ஆனால், கைது செய்வதென்றால் கைது செய்து கொள்ளுங்கள். சரியான விசயத்திற்காக கைதாவில் தவறில்லை” என்று கூறினார். எனினும் காவல் துறை அவரைக் கைது செய்யாமல் தவிர்த்தனர்.

விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்!
சிங்கள இனவெறி பாசிஸ்டு
ராஜபக்சேவை விரட்டியடிப்போம்!

கழண்டு போச்சு, கழண்டு போச்சு
முதல் நாளே கழண்டு போச்சு
இந்துத்துவ மோடியின் முகமூடி!
கழண்டு போச்சு, கழண்டு போச்சு!

கூட்டா..ளிதான் கூட்டா..ளிதான்
மத வெறியன் நரேந்திர மோடியும்
இனவெறியன் ராஜபக்சேவும்
கூட்டாளிதான் கூட்டாளிதான்!

வேறல்ல வேறல்ல
ஈழத் தழிழரை கொன்றொழித்து
இரத்தம் குடித்த இராஜபக்சேவும்
சிறு..பான்மை முசுலிம் மக்களை
கொலை செய்த மோடியும்
வேறல்ல வேறல்ல

வை.கோ, இராமதாசு, நெடுமாறன்
ஆர்.எஸ்.எஸ்-ன் அய்ந்தாம் படையே!
இந்த கும்பலின் எதிர்ப்பெல்லாம்
நாடகமே, நாடகமே!

பா.ஜ.க-வின் இராதாகிருஷ்ணனை
பார்ப்பன-பாசிஸ்டு இராதாகிருஷ்ணனை
முள்ளி வாய்க்கால் முற்றத்துக்கு
வரவைத்து…. நம்ப வைத்து
ஈழத்தமிழரின் நண்ப..னென்று
தமிழக மக்களை நம்ப வைத்தது
வை.கோ, நெடுமா கும்பலே!

தமிழக மக்களை மட்டுமல்ல
புலிகளை..யும் நம்ப வைத்து
கழுத்தறுத்தது அய்ந்தாம் படையே
வை.கோ நெடுமா அய்ந்தாம் படையே!

காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில்
ஆர்.எஸ்.எஸ்-க்கு வேலை செய்ய
தி.மு.க எதிர்ப்பு என்ற பெயரில்
பார்ப்பன கும்பலுக்கு சொம்பு தூக்கும்
வை.கோ, நெடுமா, – வோடு
தமிழருவி என்ற பெயரில்
கூவம் ஒன்று அலையுது!

கூடி நாம விரட்டாம
அசிங்கம் என்றும் அகலாது!

விஜயகாந்து, இராமதாசு
பாரி வேந்தர் உட்பட
பிழைப்புவாதிகளை இனம் காண்போம்!
தமிழின விரோதிகளை விரட்டியடிப்போம்!

வேறல்ல வேறல்ல
கய..வாளி காங்கிரசும்
மதவெறி கும்பல் பா.ஜ.க-வும்
வேறல்ல வேறல்ல!
காங்கிரசும் பா.ஜ.க-வும் வேறல்ல

இந்திய முதலாளிகள் கொள்ளைக்காக
தெற்… காசிய பிராந்தி…யத்தில்
மேலா…திக்கம் பெறுவதற்..காக
ஈழத் தமிழரை அழிக்கிறான்
தமிழக மீனவரக் கொல்லுறான்

கூட்டாளிதான் கூட்டாளிதான்
காங்கிரசும் பா.ஜ.க-வும்
டாடா அம்பானி நலனுக்காக
தமிழனக் கொல்வதில் கூட்டாளிதான்

நம்பாதீங்க, நம்பாதீங்க
காங்கிரசுக்கு மாற்றுன்னு
பா.ஜ.க-வை நம்பாதீங்க!
விரட்டியடிப்போம், விரட்டியடிப்போம்
கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளை
காங்கிரசை, பா.ஜ.க-வை
விரட்டியடிப்போம், விரட்டியடிப்போம்!

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

நாடுகடத்த்ப்பட்ட அகதிகள் கொழும்பில் கைது:புலிக்கொடி அமைப்புக்கள் எங்கே?

Comments 5

  1. Alex Eravi says:
    12 years ago

    All are politics…

    • Lala says:
      12 years ago

      If they did not come forward , you would say where are they ?

  2. mohanarajan says:
    12 years ago

    இப்பவாவது முன்பெ ஞானம் பிறந்தது தமிழ் மக்களுக்கு.

  3. K.SHANMUGAM says:
    12 years ago

    காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில்
    ஆர்.எஸ்.எஸ்-க்கு வேலை செய்ய
    தி.மு.க எதிர்ப்பு என்ற பெயரில்
    பார்ப்பன கும்பலுக்கு சொம்பு தூக்கும்
    வை.கோ, நெடுமா, – வோடு
    தமிழருவி என்ற பெயரில்
    கூவம் ஒன்று அலையுது!

    கூடி நாம விரட்டாம
    அசிங்கம் என்றும் அகலாது!

    -Very appropriate SLOGANS

    • Lala says:
      12 years ago

           ##K.ஸ்Hஆண்MஊGஆM
      Pஒச்டெட் ஒன் 05/30/2014 அட் 07:24
      காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில்
      ஆர்.எஸ்.எஸ்ஹ்கு வேலை செய்ய
      தி.மு.க எதிர்ப்பு என்ற பெயரில்
      பார்ப்பன கும்பலுக்கு சொம்பு தூக்கும்
      வை.கோ, நெடுமா, – வோடு
      தமிழருவி என்ற பெயரில்
      கூவம் ஒன்று அலையுது! ##

        இவர்கள் எல்லோரையும்  னாம் எதிர்க்கிறோம்  என்ற  பெயரில் தமிழர் ஆதரவு சக்திகள் , தமிழர்க்காக குரல் கொடுப்போர் என அனைவரையும்   தமிழ் மக்களிலிருந்தி  அன்னியப்படுத்தி விட்டால் , 

      ராஜபகஷ  தமிழின  அழிப்பை  மேற்கொள்ள  வசதிதியாக இருக்கும் . இதனை   ராஜபக்ஷவை  திட்டிக்கொண்டே செய்ய  வேண்டும் .அப்போதுதான் தமிழ்  மக்களுக்கு  சந்தெகம் வராது >
      ஆனால்  தமிழ் மக்கள் உங்களைப்போன்றவர்களை நன் கு புரிந்து  வைத்திருக்கிறார்கள்..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...