இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை நியாயப்படி வழங்கவும், டில்லி வரவிருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம், பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த வேண்டுமென அவருக்கு, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இதைதொடர்ந்து, தி.மு.க., எம்.பி.,க்கள் டில்லி சென்று, ராஜபக்ஷேவிடம் இலங்கை தமிழர் மறுவாழ்வு குறித்து வலியுறுத்த உரிய ஏற்பாடுகளை செய்ய, பார்லிமென்ட் தி.மு.க., குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவை, முதல்வர் கருணாநிதி டில்லி அனுப்பி வைத்துள்ளார்.
ராஜபக்ஷவிற்கு இலங்கை சென்று பொன்னாடை போர்த்தி மகிழந்த டீ.ஆர்.பாலு இப்போது மறுபடி அவரைச் சந்திக்கிறார். இனப்படுகொலையின் சூத்திரதாரி, போர்க் குற்றவாளி ராஜபக்ஷவிற்கும் படுகொலைகளின் பின்புலமாக அமைந்த கருணாநிதிக்கும் மனிதப் பாலமாக அமைபவர் இந்த டீ.ஆர்.பாலு. இவ்வேளையில் கிளிநொச்சியில் அபிவிருத்தி என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதலிடுவதற்கான அனுமதி டீ.ஆர்.பாலுவிற்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.