லட்சக்கணக்கான தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சவை பொஸ்னிய அதிபர் மிலோசெவிக் போன்று சர்வேதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்ற பாலகனை இலங்கை இராணுவம் மிகக் கொடூரமாக சுட்டு கொன்ற புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இந்த செயல் மிக கொடூரமானது, மிருகத்தனமானது.
இந்த புகைப்படம் உண்மையானது என நிபுணர்களால் நிருபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இறுதிப்போரில் இலங்கை செய்த போற்க்குற்றமும், மனித உரிமை மீறலும் மீண்டும் ஒரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சவை பொஸ்னிய அதிபர் மிலோசேவிக் போன்று சர்வேதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா வின் மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை மிகவும் கடமைப்பட்ட இந்திய அரசு கொண்டு வர வேண்டும்.
நட்பு நாடு என்கிற பெயரில் இலங்கை செய்கிற அனைத்து ஒத்துழைப்புகளையும் இந்திய அரசு உடனே கைவிட வேண்டும்.
உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றிருப்பதை போல இலங்கையில் தமிழர்களின் பொது வாக்கெடுப்பின் மூலம் நிரந்தர தீர்வை ஏற்படுத்த இந்திய அரசும் சர்வேதேச சமூகமும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களின் பொது வாக்கெடுப்பின் மூலம் நிரந்தர தீர்வை ஏற்படுத்த இந்திய அரசும் சர்வேதேச சமூகமும் முன்வர வேண்டும்.
This was done in 1977. He said that in that famous press conferance in 2002. We have to get the elections to the Northern Provincial Council going.
அப்ப புலி பினாமிகளுக்கு பணம் கொடுத்து உசுப்பேத்தி கிடைக்க இருந்த தீர்வையும் தடுத்த வெளினாட்டு புலி பினாமிகளுக்கு சமாதான்நோபல் பரிசு கொடுக்கலாமோ?
இல்ல உமக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுக்கலாம்.